test

Thursday, September 26, 2013

பசுமைவளங்கள், நீர்வளங்கள், ஆற்றல்வளங்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு?

பசுமைவளங்கள், நீர்வளங்கள், ஆற்றல்வளங்கள் ஆகியமூன்றையும் மக்கள் பங்கிட்டுக்கொள்வார்கள் அவற்றிற்கு விலை நிர்ணயம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் உப்பளங்கள் போன்ற இயற்கைவளங்கள் நிறைந்த நிலங்களை அளவுக்கு அதிகமாக வைத்திருந்தவர்களிடமிருந்து அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நிலங்களை திரும்பப்பெற்றிருக்கிறார்கள்.

Wednesday, September 25, 2013

ஆல்கஹால் கலந்துள்ள வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவது கூடுமா?

வாசனைத் திரவியங்களில் பெரும்பாலானவை ஆல்கஹால் கலந்து செய்யப்படுபவையாக இருக்கின்றன. ஆல்கஹால், முக்கியமான கரைப்பானாகவும், எளிதில் ஆவியாகவும், காற்றில் இலகுவாக கலக்கவும், இன்னும் சில பயன்பாடுகளின் அடிப்படையில் வாசனைத்திரவியங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆல்கஹால் என்பது அறியப்பட்ட போதைப்பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். இஸ்லாம் போதைப்பொருள்களை முழுமையாக தடை செய்திருக்கும் நிலையில், ஆல்கஹால் கலக்கப்பட்ட வாசனைத்திரவியங்களை பயன்படுத்துவது கூடுமா என்ற கேள்விக்கு விடை காண்பது அவசியமாகும்.

அமெரிக்காவுடனான ஈரானின் கடும்போக்கு குறித்த உண்மை நிலை என்ன? (பகுதி 02)
ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோதும், அங்குள்ள மக்கள் உணவு, மருந்து இல்லாமல் மடிந்தபோதும் ஈரான் என்ன செய்தது? ஈரான் நினைத்திருந்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியிருக்கலாமே. அமெரிக்காவிற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் அறிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்துக்கொண்டிருக்கும் ஈரான், எப்போதாவது அதை செயலில் காண்பித்தது உண்டா?

அமெரிக்காவுடனான ஈரானின் கடும்போக்கு குறித்த உண்மை நிலை என்ன? (பகுதி 01)ஈரான் எப்போதுமே அமெரிக்காவை எதிர்க்கக் கூடிய ஒரு தன்மானமுள்ள நாடு என்ற சிந்தனை முஸ்லிம்களிடம் பரவலாக இருப்பதை மறுக்க இயலாது. ஈரான் அமெரிக்காவை பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்த்து பேசுவதே இவ்வாறு நம்புவதற்கான காரணம் என்பதை அவதானிக்க முடிகிறது. உண்மையில் ஒரு நாட்டுடன் மற்றொரு நாடு கொண்டுள்ள வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் அளவுகோல் இது கிடையாது. ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் கொண்டுள்ள உறவை, அந்த இரு நாடுகளுக்குமிடையேயான தூதரக உறவு, ஒப்பந்தங்கள் போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்காமல், வெறுமனே அந்த நாட்டை எதிர்த்து அறிக்கை விடுவதைக் கொண்டு மாத்திரம் தீர்மானிக்க இயலாது. ஈரானில் 1979 இல் ஏற்பட்ட புரட்சிக்கு பிறகு, ஈரான் அமெரிக்காவின் எதிரி என்பதாக பரவலாக முஸ்லிம்களை ஏமாற்றி வருவதால், ஈரானிய புரட்சியிலிருந்து நாம் ஆராய்வோம்..

Tuesday, September 24, 2013

துனீஷியப் பெண்களைக் குறித்து இழிவாகப் பரப்பப்படும் செய்திக்கு மறுப்பு…

செக்ஸ் ஜிஹாத் என்ற பெயரில் துனீஷியப் பெண்களைக் குறித்து இழிவாகப் பரப்பப்படும் செய்திக்கு மறுப்பு வெளிவந்துள்ளது. 

சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சிரியப் போராளிகளுக்கு பாலியல் சுகம் அளிக்க துனீஷியாவிலிருந்து பெண்கள் செக்ஸ் ஜிஹாத் என்ற பெயரில் புறப்பட்டுச் செல்வதாக, தமிழ் ஊடகங்கள் உட்பட சில இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்களில், வதந்திகளை அடிப்படையாகக் கொண்ட செய்திகள் வெளியிடப்பட்டன. 

Wednesday, September 4, 2013

இன்று செப்டம்பர் 4 - ஹிஜாப் தினம் : ஹிஜாபிற்காக வீர மரணம் அடைந்த வீர மங்கை டாக்டர் மர்வா ஷெர்பினிஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக 31 வயதான டாக்டர் மர்வா ஷெர்பினி என்ற முஸ்லிம் சகோதரி ஜெர்மனியில் நீதிமன்ர ரூம்மில் பலர் முன்னிலையில் ஆக்ஸெல் என்பவனால் கொடூரமான முறையில் 18 தடவைகள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொடூரம் ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் நடந்துள்ளது. இவர் படுகொலை செய்யப்படும்போது மூன்று மாத கருவைத் தன் கருப்பையில் சுமந்தவராக இருந்தார் என்பதும் ஏற்கனவே மூன்று வயதுள்ள ஒரு குழந்தைக்குத் தாய் என்பதுடன் நீதிமன்றத்திலேயே மூன்று வயது மகனின் கண்ணெதிரேயே இவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.இந்தக் கொடூரக் கொலையைச் செய்த ஆக்ஸெல் என்பவனால் போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.