test

Thursday, December 29, 2016

பாலஸ்தீன விவகாரத்தில் ஐ.நாவின் நிலைப்பாடு ...?

பாலஸ்தீன விவகாரத்தில் சர்வதேச சமூகம் இஸ்ரேலின் சட்ட விரோத குடியிருப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும். அதனைத் தொடர்ந்து அதன் சட்ட விரோத குடியிருப்புக்கு எதிராக ஐ. நா வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதற்கு அமெரிக்கா அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் அதே நேரத்தில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருந்தது. வழக்கம் போல நம் அப்பாவி மக்கள் முக நூல் முழுவதும் தக்பீரால் நிரப்பி புழங்காகிதம் அடைந்திருந்தனர்.

Sunday, January 3, 2016

தமிழ் நாட்டை கருமாதியாக்க துடிக்கும் கல்யாணங்கள்!

காவிகள்  மிகப்பெரும்  திட்டத்துடன்   இருந்தனர். 

அது  குஜராத்  மாடலில்  இங்கு ஒரு மிகப்பெரும்  கலவரத்தை   ஏற்படுத்தி,  ஆளும்  அதிமுகவுடன்  கூட்டு  வைத்து  தங்களுக்கு  என்று  முஸ்லிம் வெறுப்பு  வாக்கு வங்கி ஒன்றை  ஏற்படுத்த காத்து  கிடந்தனர்.  அதற்கான  தளம்  அமைக்கும் நோக்கில் தான்  கள்ளக்காதல், ரியல் எஸ்டேட்  காரணமாக  நடந்த கொலைகளை   அனைத்தையும்  முஸ்லிம்கள்  செய்ததாக  பழி சுமத்தினர்.

Monday, February 23, 2015

ஆடை மறைப்பதற்கா? திறப்பதற்கா?

(விடியல் வெள்ளியில் வந்த இம்பாக்ட் இன்டர் நேஷனல் என்ற பதிவு)
 மனித இனத்தின் பெரும்பகுதி இரண்டு உந்துதல்களுக்கிடையே சிக்கியுள்ளது

1. தன்னை மறைக்க வேண்டும் என்ற வெட்க உணர்வு

2.தன்னை வெளிக்காட்ட வேண்டும் என்ற உணர்வு

அதாவது தன்னை மறைப்பதா? அல்லது திறப்பதா?

இது ஏன் ? என்ன நடந்துகொண்டிருக்கிறது?


Saturday, June 14, 2014

இந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்: பகுதி 5

இப்பகுதி வைகறை வெளிச்சம் ஜூன் 2014 இதழிலி
நன்றி மில்லிகெஜட்
ருந்து .........

மோடிக்கான திட்டங்கள் முதல் பிரச்சாரம் முதற்கொண்டு அனைத்தையும் திட்டமிட்டு வருபவர்கள் ஆப்கோ என்ற இஸ்ரேலிய நிறுவனத்தினரே. 

இஸ்ரேலியர்கள் இந்தியாவில் ஒரு யூத நாட்டை உருவாக்கிட திட்டங்களை தீட்டி வருவதை நாம் முன்னரே சுட்டிக்காட்டியுள்ளோம்.

Monday, May 19, 2014

மோடியின் கேடிகளின் அட்டூழியங்கள் : தொடரும் இஸ்லாமிய வழிப்பாட்டு தளங்களின் மீதான தாக்குதல்கள்

மோடியின் வெற்றிக்கு பின்னர் காவிகளின் வெறியாட்டங்கள் தொடங்கிவிட்டன. ஆங்காங்கே முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் மெல்ல தொடங்கிவிட்டன. இது மேலும் இனிவரும் காலங்களில் அதிகரிக்கலாம் என்பதை சமீப கால சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது. இதனை எதிர்கொள்வதற்கு முஸ்லிம்களிடம் சரியான தலைமையோ செயல்திட்டங்களோ இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

ஹைதராபாத்தில் மின்கசிவு காரணமாக எரிந்துபோன சீக்கியர்களின் கொடியை முஸ்லிமகள் எரித்துவிட்டதாக பரப்பப்பட்ட வதந்தியால் மூன்று அப்பாவி முஸ்லிமகள் கொல்லப்பட்டனர். அங்கு வன்முரையாளர்களுடன் போலீசாரும் சேர்ந்து முஸ்லிம்களை தாக்கிய புகைப்படங்கள் இனி நடக்கப்போகும் சம்பவங்களுக்கான ஒரு முன்னோட்டம்தான்.

Monday, May 5, 2014

தீவிரவாதிகளை உருவாக்கும் இராணுவக் கல்லூரி

 “இந்துக்களின் இராணுவ குணத்தை மீண்டும் உயிர் தந்து எழுப்பிட வேண்டும். இந்துக்கள் தங்கள் தாய் நாட்டின் பாதுகாப்புக்கான முழு பொறுப்பையும் ஏற்றிடச் செய்திட வேண்டும். அவர்களை சனாதன தர்மத்தில் பயிற்றுவித்திட வேண்டும். அவர்களுக்கு தேசியப் பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பு, இவற்றின் கலை மற்றும் விஞ்ஞானப் பயிற்சிகளை வழங்கிட வேண்டும்.” ( AIM OF CENTRAL HINDU MILITARY EDUCATION SOCIETY NMML. MUNJE PAPERS; SUBJECT files N: 24.1932-36 = ஆதாரம் மத்திய இந்து இராணுவ கல்விச் சங்கத்தின் இலட்சியம். மூஞ்ஜே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.24,1932-36.) 
bholsala
இந்தப் பயிற்சியில், சுட்டு, கொலைகளைச் செய்யும் விளையாட்டில் வெற்றிகளை ஈட்டிடும் இலக்குகளை நோக்கி நமது பையன்மார்களுக்கு பயிற்சி தந்திட வேண்டும். இந்தக் கொலை செய்யும் விளையாட்டுகளில் அவர்கள் முடிந்த அளவுக்கு நிறைய இழப்புகளை ஏற்படுத்திட வேண்டும். எதிரிகளில் மடிந்தவர்களும் நொடிந்தவர்களும் பிணக்காட்டின் கோலங்களாகக் காட்சித் தந்திட வேண்டும். (Source: Preface to the scheme of the central Hindu Military Society, And its Military School. NMML: MUNJE PAPERS. Subject files : N:25.1935) ஆதாரம்: மத்திய இந்து இராணுவப்பள்ளி சங்கத்திற்கான திட்டங்களின் முன்னுரையிலிருந்து மூஞ்சே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.25:1935.

Tuesday, March 25, 2014

மாணவர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி தோல்வி! - மக்களின் போராட்டத்தால் விடுவிப்பு!


தேர்தலை சீர்குலைக்க சதி என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை கைது செய்து தீவிரவாத வழக்கில் சிக்க வைப்பதற்கான டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் முயற்சி தோல்வியை தழுவியது.


நேற்று முன்தினம் இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டி டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு கைது செய்த இரண்டு மாணவர்கள் உள்பட 3 பேர் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டனர்.

Saturday, March 1, 2014

தாழ்த்தப்பட்ட இந்துக்கள் மதம் மாறியே ஆகவேண்டுமா?அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்கிறார்?


தீண்டத்தகாதவர்களின் தாழ்த்தப்பட்ட நிலை நாற்றமெடுக்கும் பெயருடன் இணைந்திருக்கிறது அந்தப் பெயர் மாற்றப்படாத வரை சமூக நிலையில் உயர்வதற்கான வாய்ப்பே இல்லை . 

இந்து மதத்தில் இருந்துகொண்டு பெயரை மாற்றிக்கொள்வது பயனளிக்காது பெயரில் ஏராளமான செய்திகள் அடங்கியுள்ளன. அது பல மாற்றங்களை செய்யும். பெயர் மாற்றம் தீண்டத்தகாதவர்களின் நிலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். ஆனால் அந்த பெயர் இந்து மத வட்டத்திற்கு வெளியே இருக்க வேண்டும். மேலும் அது இந்து மதத்தால் களங்கப்படுத்தி தாழ்வடைய செய்ய முடியாத சமூக குழுவின் பெயராக இருக்க வேண்டும்  இத்தகைய பெயரே தலித்துகளின் சொத்தாக இருக்க முடியும். மத மாற்றத்தின் மூலமே இது சாத்தியப்படும். இந்து மதத்திற்குள்ளேயே பெயர்மாற்றம் செய்யும் கள்ளத்தனம் எவ்வித பலனையும் தராது. 

Tuesday, February 25, 2014

முஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா?

 காஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம்.

இப்படி ஒரு செய்தியை "தி இந்து" நாளிதழ் வெளியிட்டது 20.01.2014 அன்று.

செய்தியைக் கூர்ந்து கவனித்தோம் இரண்டு வினாக்களுக்கு விடை கண்டிட!

Sunday, February 23, 2014

மீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா?

 ஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சில வாழிவியல் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அதில் பதிந்திருந்தார்கள். அதற்கு அவர்கள் "கருப்பாயி என்ற நூர்ஜஹான்" என்ற நாவலை துணைகொண்டே நிறுவ முயன்று இருந்தனர்.  

இந்நாவளிற்கு டி எம் உமர் பாரூக் அவர்கள் கொடுத்த மறுப்பு. (வைகறை வெளிச்சம் இதழில் வந்த கட்டுரை சற்று சுருக்கமாக)

Sunday, February 9, 2014

மேற்குலகு விரும்பும் மலாலாவும் வேண்டாத நபீலாவும்


நபீலா  பாக்கிஸ்தானின் சுவத் பள்ளத்தாக்கு இந்த பகுதியை சேர்ந்த மலாலா என்ற சிறுமி தாலிபான்களால் அவரது பெண்கல்விக்கு ஆதரவான நிலைப்பாட்டினால் தாக்குதலுக்கு ஆளானதாக கூறி மேற்குலகு முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்புது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.