test

Wednesday, May 29, 2013

“நான் ஈராக்கியர்களை மனிதர்களாகவே கருதவில்லை” - 14 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொலை செய்த அமெரிக்க சிப்பாய்



“நான் ஈராக்கியர்களை மனிதர்களாகவே கருதவில்லை” -14 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொலை செய்த அமெரிக்க சிப்பாய் 

வூல்விச்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய சிப்பாய் பற்றி பிரித்தானிய மதகுரு ஒருவர் சொன்னார் “இஸ்லாமியர்கள் கொலை வெறியர்கள். இவ்வளவு மிருகத்தனமாக எல்லோர் முன்பும் துடி துடிக்க ஒருவரை கொல்வது ஏற்று கொள்ள முடியாத கொடூரம். முஸ்லிம்களை இங்கிலாந்தை விட்டு விரட்டியடிக்க வேண்டும்”. (dailymail.co.uk) . சரி அவர் பார்வையிலேயே பார்ப்போம். 14 வயது பெண் குழந்தையை கதற கதற கற்பழித்து, அதுவும் அவள் தாய் தந்தையரின் கண்முன்னே. பின்னர் அவளை சுட்டு கொன்று விட்டு “நான் ஈராக்கியர்களை மனிதர்களாகவே கருதவில்லை” என கொக்கரித்து அவளது குடும்பத்தினரையும் படுகொலை செய்த அமெரிக்க சிப்பாய் பற்றி இந்த மதகுரு என்ன சொல்லப் போகிறார்? வெள்ளை தேசத்தில் பிறந்த வெள்ளையர்கள் முஸ்லிம் தேசங்களில் செய்யும் கொலைகளிற்கு இது ஒரு சாம்பிள் வார்த்தைகள் மட்டுமே!! (இது பற்றி கடந்த வருடம் நாம் ஏற்கனவே ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளோம்)

Sunday, May 26, 2013

தமிழக முஸ்லீம் தலைவர்களை சிக்க வைக்க சிறைகைதிகளைச் சித்ரவதை செய்யும் பெங்களூரு காவல்துறை!


கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு முன் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் தமிழக முஸ்லீம் தலைவர்களை சிக்க வைக்க சிறைகைதிகளை காவல்துறை சித்ரவதை செய்வதாக கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

Saturday, May 25, 2013

Qushair சண்டை களங்களில் Shaykh Ahmad al-Asir!! - லெபனானிய சுன்னி முஸ்லிம்களின் இமாம் விடுத்த வரலாற்று பிரகடனம்



by: Abu Hamza 

Shaykh Ahmad al-Asir. லெபனானிய சுன்னி முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர். அவர் கடந்த மாதம் ஏப்ரல் இறுதியில் (04/30/2013) விடுத்த பிரகடனம் ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் நஸ்ருல்லாவின் பீ.பீ.யை உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது. அல்-ஆசிரின் அறிக்கை, ஹுசைரில் வாங்கிய அடி என கோபத்தின் உச்சத்தில் லெபனான் சுன்னி முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை தொடுக்க கட்டளையிட்டுள்ளார் நஸ்ருல்லாஹ். அது என்ன பிரகடனம்?...

Sunday, May 5, 2013

அஸ் – ஸாம் (சிரியா): நடப்பது என்ன?


குறிப்பாக நான் இங்கு பேச விரும்புவது அஸ் – ஸாம் (சிரியா) பற்றிய செய்திகளைத்தான். பெரும்பாலும் முஸ்லிம்கள் சிரியாவில் நடைபெறுகின்ற உள்நாட்டுப் போரை ஒரு சாதாரன கண்ணோட்டத்திலேயபார்கின்றனர்.