test

Tuesday, March 26, 2013

பொதுவுடமை தத்துவத்திலிருந்து தோன்றிய கம்யூனிஸம் தானாக அழிவைத் தேடிக்கொண்டது போல் முதலாளித்துவமும் தானாகவே தனது அழிவைத் தேடிக்கொள்ளும்.

உலகப் பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கும் பொருளாதார சீரழிவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் இஸ்லாத்திற்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது.

Thursday, March 21, 2013

மீடியா ' பூச் சுத்தலும் சிரிய விவகாரமும் .

'சிரிய விவகாரத்தில் அசாத் படைக்கு எதிராக போராடும் இயக்கங்களுக்கு அமெரிக்க இராணுவ உதவி !! என்ற தலைப்பு இப்போது அநேகமான மேற்கின் 'மீடியாக்களால்' வெளிவிடப்படுகின்றது . இந்த விடயத்தில் சரி பிழை ஒருபக்கமிருக்க மீடியா யுத்தத்தில் 'அம்புஸ் ' தனமான 'கெரில்லா'உத்திகளையும் செய்ய முடியும் என்பதை மேற்கின் மீடியாக்கள் மீண்டும் ஒருமுறை இத்தகு செய்திகள் மூலம் நிரூபித்துள்ளன .

Wednesday, March 20, 2013

பலஸ்தீன் பெண் விடுதலைப் போராளி மர்யம் ஃபர்ஹாத் மரணம்
உயிர் தியாகிகளின் அன்னை’ என்றழைக்கப்படும் பலஸ்தீன் விடுதலைப் போராளியும், பாராளுமன்ற உறுப்பினருமான மர்யம் பர்ஹாத்(வயது 64) மரணமடைந்தார். ஞாயிற்றுக் கிழமை காஸ்ஸா மருத்துவமனையில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் சிகிட்சைப் பெற்றுவந்தார் மர்யம்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி போராளியான மர்யம் தனது தீரமிக்க உரைகளின் மூலம் பலஸ்தீன் மக்களின் உள்ளங்களில் விடுதலைப் போராளியாக நீங்கா இடம் பிடித்துள்ளார். 17 வயது மகனை இஸ்ரேலியர்களை கொலைச் செய்ய போர்க்களம் அனுப்பியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார் மர்யம் ஃபர்ஹாத்.

Tuesday, March 19, 2013

குஜராத்தில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம்! முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன!

குஜராத்தில் 2002 இல் நடைப்பெற்ற இனப்படுகொலைக்கு பிறகு அங்கு எந்த வித கலவரமும் நடைப்பெறவில்லை என சில மோடியின் ரசிகர்கள் பதிவுலகில் விஷம் கக்கி வருவது நாம் அறிந்ததே. உண்மையில் அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும் அவர்களின் வியாபரத்தளங்கள் அழிக்கப்பட்டும் வருகிறது என்பது திட்டமிட்டு ஊடகங்களாலும் உலவுத்துரையினராலும் மறைக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் குஜராத்திலிருந்து அகதிகளாக வெளியேறி பக்கத்து மாநிலங்களில் தஞ்சம் புகுவது ஒரு தொடர் கதையாகி வருகிறது.

இலங்கையின் மோடியும் இந்தியாவின் ராஜபக்சேவும்மோடி இந்தியாவில் முஸ்லிம்களை இந்துக்களின் எதிரிகளாக சித்தரித்து முஸ்லிம்களுக்கு எதிரான இனப் படுகொலைகளை நிகழ்த்தினான் .

Monday, March 18, 2013

பங்களாதேஷின் தற்போதைய நிலை

தற்போதைய குழப்பத்திற்கு என்ன காரணம்?


வங்காளத்தில் ஆளும் அவாமி லீக் கூட்டணி கட்சிகளின் ஆட்சி  இந்த வருடம் டிசம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்திய துணை கண்டத்தில் இருப்பது போன்ற வங்காளத்திலும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அரசியலில் ஈடுப்பட்டவர்களின் பரம்பரை ஆட்சியே வங்காளத்திலும் நிலவுகிறது. இந்த குடும்பங்களே அங்கே நடக்கும் அரசியலில் ஆதிக்கம் .செலுத்துகின்றன. வங்காளத்தை பொருத்தவரை ஜியாவுர்ரஹ்மான் மற்றும் ஷேய்க் முஜிபுர்ரஹ்மான் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

Sunday, March 17, 2013

‎'இலாபம் மற்றும் ஆதாயம் அடிப்படையில் ' நடக்கும் பக்கா 'முதலாளித்துவ அரசியல் ' நீதியும் கலீபா உமர் (ரலி ) காட்டிய உண்மை நீதியும் . 
விஸ்வரூபம் திரைப்பட விடயத்தில் நடிகர் கமலுக்கோ கோடிக்கணக்கில் இழப்பாம் .
தமிழ் நாட்டு அரசுக்கு அத் திரைப்படத்தை வெளியிடுவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டும் தானாம் ! மொத்தத்தில் நடப்பு நிலவரம் எல்லாம் 'புரோபிட் அண்ட் பெனிபிட் 
பேசில் ' நடக்கும் பக்கா 'கபிடலிச பொலிடிக்ஸ் '

இலட்சக் கணக்கான மனித உள்ளங்களின் நியாயங்களை விட இலாபாங்கள் தான் முன்னுரிமை பெரும் . இந்த கிரிமினல் பொலிடிக்ஸ் தான் இன்று உலகெங்கும் புகுந்து விளையாடுகின்றது . அநீதிகளில் நீதி காண்கிறது . ஆள்வோரைக் காக்கவே இங்கு சட்டமும் ஒழுங்கும் . கீழே வரும் விடயத்தையும் கொஞ்சம் படியுங்கள்
ஒரு ஆட்சியாளனின் வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்

Saturday, March 9, 2013

"தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி 
[அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட பின்னணியில் அமெரிக்காவினால் பழி சுமத்தப்பட்ட, தாலிபான்களைச் சந்திக்க புறப்பட்ட நங்கை நல்லாள் பிரிட்டன் நாட்டைச் சார்ந்த பத்திரிகையாளர் யுவான்னி ரிட்லி தாலிபானால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட பின்லேதன்அவர்களைச் சந்திக்க வேண்டும், அவரைப்பற்றி எழுத வேண்டும் அதன் மூலம் பத்திரிகை உலகில் சாதனையை நிகழ்த்த வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டவர் தாலிபானின் கையில் சிக்கி, சிறைப்பட்டார்.