test

Thursday, February 21, 2013

காவி தீவிரவாத பேச்சு மன்னிப்புகேட்ட ஷிண்டே: உண்மை நிலவரம் என்ன

பிரங்க்யா தாகூர் 
சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே காவி தீவிரவாதத்தைப்பற்றி கருத்து தெரிவித்திருந்தார். 

அது 

ஆர்.எஸ்.எஸ், பி.ஜெ.பி போன்ற இந்துத்துவ அமைப்புகள் பயங்கரவாத பயிற்சிகளை அதன் தொண்டர்களுக்கு அளிப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். 

Tuesday, February 19, 2013

அப்சல் குரு மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் போலீசார் தாக்குதல்அப்ஸல் குருவுக்கு நிறைவேற்றப்பட்ட அநியாய மரணத்தண்டனையை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய கஷ்மீர் மாணவர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் போலீஸ் உதவியுடன் பஜ்ரங்தள் தீவிரவாதிகள் தாக்கினர். (13.02.13) காலை 11 மணியளவில் கஷ்மீர் மாணவர்களும், 
என்.சி.ஹெச்.ஆர்.ஓ, பி.யு.டி.ஆர் போன்ற மனித உரிமை அமைப்புகளும் ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அப்பொழுது போலீஸ் உதவியுடன் பஜ்ரங்தள் வெறியர்கள் ஆக்ரோஷத்துடன் அவர்களை தாக்கினர்.

Saturday, February 16, 2013

மக்களால் மக்களுக்காக மக்களே....!


                                                                                                  
 ஜனநாயகம் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது 
  " மக்களுக்காக மக்காளால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி முறையை கொண்டு மக்களே நடத்தும் ஆட்சி "

 ஆனால் நிதர்சனத்தில் அது முற்றிலும் உண்மைக்கு  புறம்பானது . எந்த ஒரு முதலாளித்துவ நாட்டிலும் மக்களே மக்களை அட்சி செய்வது இல்லை . உண்மையில் மக்கள் சில செல்வாக்கு உள்ள (?)  மனிதர்களால் (முதலாளிகளால்) ஆளப்படுகிறார்கள் . 

அப்சல் குரு படுகொலை - நாடாளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்பு படைகளின் பங்கு :பகுதி 3

Thursday, February 14, 2013

அப்சல் குரு படுகொலை - நாடாளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்பு படைகளின் பங்கு :பகுதி 2


தொடரும் சித்திரவதை 

அடிக்கடி அவர்கள் அப்சலை அழைத்து சென்று சித்திரவதை செய்தார்கள். ஒரு நாள் இரவு டி எஸ் பி வினை குப்தாவும் டி எஸ் பி டாரிந்தரும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அனைவரையும் வாய்க்கு வந்தபடி வைதார்கள். அப்சலை அழைத்துச் சென்றார்கள். மீண்டும் பணம் கேட்டார்கள். மிச்சம் மீதி இருந்தனவற்றை விற்று தந்து தான் அப்சலை மீட்டிட  முடிந்தது. 

இந்த கொடுமைகள் தாழாமல் அவர் டெல்லிக்கு வந்துவிடுவது என்று முடிவு செய்தார். அங்கே தனது வியாபாரத்தை தொடர்ந்தார். டெல்லி பல்கழைகழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். படித்து பட்டமும் பெற்றார்.

Wednesday, February 13, 2013

அப்சல் குரு படுகொலை - நாடாளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்பு படைகளின் பங்கு

PUDR( People's for Democratic Rights) பற்றி தெரியுமா? .  அவர்கள் நாடாளுமன்ற தாக்குதல் பற்றி வெளியிட்ட ஆவணத்தொகுப்பு என்ன கூறுகிறது தெரியுமா?

PUDR என்பது ஜனநாயக உரிமைக்கான ஒரு அமைப்பாகும் . இவ்வமைப்பு  ஆவணத்தொகுபொன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்திற்கு  டிசம்பர் 13 ஜனநாயகத்தின் மேல் தீவிரவாதம் என தலைப்பிட்டிருந்தது.

Tuesday, February 12, 2013

விஸ்வரூபம் - அமெரிக்க அடிமையின் விசுவாசம் . மு . குலாம் முகம்மது அவர்களின் உரை .

விஷவரூபம் திரைப்படம் தொடர்பாக மு. குலாம் முகம்மது அவர்கள் ஆற்றிய உரை :


பாய்ஹான் அல் காம்தி விவகாரம் !

விசுவாசிகளே, தீயவன் எவனும் உங்களிடம் யாதொரு செய்தியை கொண்டுவந்தால் , ( அதன் உண்மைத்தன்மையை அறியும்பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்துக்கொள்ளுங்கள். (இன்றேல், அவனுடைய சொல்லை நம்பிய உங்கள்) அறியாமையால் யாதொரு ஜனங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டு பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்து கவலைப்படுபடியும் நேர்ந்துவிடும் (அல்குர் -ஆன் 49:6).

Tuesday, February 5, 2013

ஒரே வானம் ஒரே பூமி , ஒரே ஜாதி ,ஒரே நீதி , உலக மக்களே ஓரினம் என்று சொன்னானே உங்கள் கென்னடி அன்று !!! - Abu Rukshan

சியோனிசக் கழுகின் சர்வதேச நரவேட்டை போதாமல் பலத்த காவலோடு ஒரு சித்திரவதைக் கூடத்தையும் வைத்துள்ளது என்றால் அது குவாண்டனோமோ என்று பால்குடிக் குழந்தை கூட நடுக்கத்தோடு கூறும் . இந்த உண்மைகளை அமெரிக்கரின் வாய் வழியாக கேட்கும் போதாவது உலகம் உணருமா ? இதோ கீழே சில உண்மைகள் .

Sunday, February 3, 2013

சவுதியில் மகளை கொன்றவனுக்கு தண்டனை குறைப்பு ?

பாய்ஹான் காம்தி என்பது கொல்லப்பட்ட ஐந்து வயது பெண்ணின் தந்தையின்(?) பெயர். இக்குழந்தையை சித்திரவதை செய்து கொன்றுவிட்டதாக அக்குழந்தையின் தாய் காம்தியின் முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட காம்திக்கு சில கால சிறை வாசத்திற்கு பிறகு இரத்த பணம் கொடுத்ததன் பேரில் விடுதலை செய்யபட்டுள்ளார். இந்நிகழ்வு அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Friday, February 1, 2013

அமெரிக்காவை தாக்கிட ஈராக் தயாராகிறது?

அமெரிக்காவை கையகப்படுத்தினால்தான், ஆயுத பலம் பொருந்திய ஈராக் அமெரிக்க கண்டத்தை முழுமையாகக் கையகபடுத்திட இயலும் எனக்கருதுகிறது. அமெரிக்க கண்டத்தை முழுமையாக கையகப்படுத்தினால்தான்  அத்தனை இயற்கை வளங்களையும் ஏகபோகமாக அனுபவிக்க இயலும் எனவும் கருதுகின்றது வல்லரசு ஈராக்.

ஆசிஷ் நந்தியின் சாதி வெறிப் பேச்சு கண்டுக்கொள்ளாத தமிழகம்!

இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளதற்கு காரணம் எஸ் சி , எஸ் டி பிரிவினர் அரசியில் அதிகாரத்திற்கு வந்ததுதான் காரணம் என்று ஆஷிஷ் நந்தி என்ற சமூக ஆர்வலர் என்ற போர்வையில் உலவிக்கொண்டிருக்கும் ஒரு சாதி வெறியர் உளறிக்கொட்டி இருக்கிறார்.

ஐ சப்போர்ட் கமல் என்றும், கமல் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டால் எங்கள் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம் என்றும் நீலி கண்ணீர் வடிக்கும் பக்தர்களுக்கு இந்த அவதூறான பேச்சைப்பற்றிய எந்த ஒரு சொரணையும் இல்லை.