test

Thursday, December 29, 2016

பாலஸ்தீன விவகாரத்தில் ஐ.நாவின் நிலைப்பாடு ...?

பாலஸ்தீன விவகாரத்தில் சர்வதேச சமூகம் இஸ்ரேலின் சட்ட விரோத குடியிருப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும். அதனைத் தொடர்ந்து அதன் சட்ட விரோத குடியிருப்புக்கு எதிராக ஐ. நா வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதற்கு அமெரிக்கா அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் அதே நேரத்தில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருந்தது. வழக்கம் போல நம் அப்பாவி மக்கள் முக நூல் முழுவதும் தக்பீரால் நிரப்பி புழங்காகிதம் அடைந்திருந்தனர்.



சில ஆட்சியாளர்களைத் தவிர்த்து இஸ்லாமிய உலகம் இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. கிடைத்தே போதும் என்ற அளவில் முஸ்லிம் உலகை நிர்பந்திக்கவே இந்த நாடகம் அரங்கேறியுள்ளது.
தனது எல்லைகளை உறுதி செய்யாமல் இருக்கும் இஸ்ரேலுக்கு, ஷாமில் ஏற்பட்டு வரும் எழுச்சி ஆபத்தை விளைவிக்க கூடும் எனும் நோக்கிலேயே பாலஸ்தீன் இஸ்ரேல் என்ற இரட்டை தேச கோட்பாடு இப்பொழுது அதிகமாக எழுப்பட்டு வருகிறது.
நம்மைப் பொறுத்த வரை இஸ்ரேல் என்பது ஒரு கற்பனை தேசம். அப்படி ஒரு தேசம் எங்கேயுமே இல்லை என்பதுதான். அந்த யூதர்கள் பாலஸ்தீன் விலாயத்தை ஆக்கிரமித்திருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள்.
வேறு வழியில்லை என்று இந்த இரட்டை நாடு கோட்பாட்டை ஏற்று கொள்ளலாமே என்று சொல்வோருக்கு கலீபா அப்துல் ஹமீது II அவர்களின் யூதர்களுக்கு அளித்த பதிலே போதுமானது ....
அது
பாலஸ்தீன் எனது சொத்து அல்ல , முஸ்லிம் உம்மத்தின் சொத்து ஆகும். இந்த பூமிக்காக எனது சமுதாயத்தினர் அந்த மண்ணில் இரத்தத்தால் பயிரிட்டிருக்கிறார்கள். என்னுடைய உடலின் ஒரு பகுதியை துண்டித்து உங்களுக்கு தருவது எனக்கு எளிதானதே. ஆனால் பலஸ்தீனில் ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டு தர மாட்டேன். அது என் வாழ்நாளில் நடக்காது.

No comments:

Post a Comment