test

Monday, May 19, 2014

மோடியின் கேடிகளின் அட்டூழியங்கள் : தொடரும் இஸ்லாமிய வழிப்பாட்டு தளங்களின் மீதான தாக்குதல்கள்

மோடியின் வெற்றிக்கு பின்னர் காவிகளின் வெறியாட்டங்கள் தொடங்கிவிட்டன. ஆங்காங்கே முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் மெல்ல தொடங்கிவிட்டன. இது மேலும் இனிவரும் காலங்களில் அதிகரிக்கலாம் என்பதை சமீப கால சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது. இதனை எதிர்கொள்வதற்கு முஸ்லிம்களிடம் சரியான தலைமையோ செயல்திட்டங்களோ இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

ஹைதராபாத்தில் மின்கசிவு காரணமாக எரிந்துபோன சீக்கியர்களின் கொடியை முஸ்லிமகள் எரித்துவிட்டதாக பரப்பப்பட்ட வதந்தியால் மூன்று அப்பாவி முஸ்லிமகள் கொல்லப்பட்டனர். அங்கு வன்முரையாளர்களுடன் போலீசாரும் சேர்ந்து முஸ்லிம்களை தாக்கிய புகைப்படங்கள் இனி நடக்கப்போகும் சம்பவங்களுக்கான ஒரு முன்னோட்டம்தான்.


நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை அருகில் வள்ளம் என்கின்ற ஊரில் 18.05.2014 அன்று மதரசுன்நூர் என்ற பள்ளிவாயில் பாசிச கும்பலால் தாக்கப்பட்டுள்ளது . லோக்கல் போலீசாரும் எந்த ஒரு வழக்கும் பதிவுசெய்யாமல் இழுத்தடித்துள்ளனர் . பத்திரிக்கையாளர்களையும் தடுத்துள்ளனர்.


மங்களூரில் ப.ஜ.க வேட்பாளர் நளின் குமார் வெற்றி ஊர்வலத்தின்போது நான்கு பள்ளிவாயில்கள் மீதும் தொழுதுக்கொண்டிருந்த முஸ்லிம்களின்மீதும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் காவிகள். வாகனங்களோடு பள்ளிவாயில் மீது மோதியுள்ளனர்.


ஹைதராபாத் முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர் அக்பருதீன் உவைசி அவர்களை கொலை செய்யவந்த காவி தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் சிலர் தப்பி ஓடிவிட்டனர்.


மேற்கண்ட சம்பவங்கள் இனி வரும் காலங்கள் முஸ்லிம்களுக்கு சோதனைகள் தரக்கூடியதாக இருக்கும் என நம்மால் அறியமுடிகிறது. அதனை எதிர்கொள்ள நமக்கு சிறந்த தலைமையும் செயல் திட்டங்களுமே தேவை. 






4 comments:

kdei said...

மோடி பேர சொல்லிக்கிட்டு அடுத்த ஆட்டத்த ஆரம்பிங்கடா நீங்க..ஒங்களுக்கும் காரணம் வேணுமில்ல??
பாலாரும் தேனாறும் ஓடுற பாகிஸ்தான் , ஆப்கான், சிரியா இங்கெல்லாம் நீங்க ஏன் குடியேறக்கூடாது?

boss said...

appa pakistanla hinduggalukkum christianskkum enna nadakkuthu??????
whatz happening in middle east.....

Kripa said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

chandrasekharan said...

May I infer that before Modi , Muslims in India were seldom attacked? Modi or no Modi, hardened elements in every religion resort to violence. Blaming recent incidents on Modi is juvenile.

Post a Comment