test

Saturday, March 1, 2014

தாழ்த்தப்பட்ட இந்துக்கள் மதம் மாறியே ஆகவேண்டுமா?அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்கிறார்?


தீண்டத்தகாதவர்களின் தாழ்த்தப்பட்ட நிலை நாற்றமெடுக்கும் பெயருடன் இணைந்திருக்கிறது அந்தப் பெயர் மாற்றப்படாத வரை சமூக நிலையில் உயர்வதற்கான வாய்ப்பே இல்லை . 

இந்து மதத்தில் இருந்துகொண்டு பெயரை மாற்றிக்கொள்வது பயனளிக்காது பெயரில் ஏராளமான செய்திகள் அடங்கியுள்ளன. அது பல மாற்றங்களை செய்யும். பெயர் மாற்றம் தீண்டத்தகாதவர்களின் நிலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். ஆனால் அந்த பெயர் இந்து மத வட்டத்திற்கு வெளியே இருக்க வேண்டும். மேலும் அது இந்து மதத்தால் களங்கப்படுத்தி தாழ்வடைய செய்ய முடியாத சமூக குழுவின் பெயராக இருக்க வேண்டும்  இத்தகைய பெயரே தலித்துகளின் சொத்தாக இருக்க முடியும். மத மாற்றத்தின் மூலமே இது சாத்தியப்படும். இந்து மதத்திற்குள்ளேயே பெயர்மாற்றம் செய்யும் கள்ளத்தனம் எவ்வித பலனையும் தராது. 


மதமாற்றத்தினால் என்ன நன்மை கிடைக்கும் என்பது தேர்ந்தெடுக்கும் மதத்தையும் அந்த மதத்தினுடைய ஆதரவாளர்களின் சமூக தன்மையும் பொறுத்தது. ஆகவே மதமாற்றம் மட்டுமே தீண்டாமையை ஒழிக்கும்.

பின்னர் ஏன்  அம்பேத்கர் அவர்கள் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்காமல் பௌத்த மதத்தை தேர்ந்தெடுத்தார். அதற்கு இந்துத்துவ வாதிகள் தான் காரணம்.  

டாக்டர் அம்பேத்கர் அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதிலிருந்து வழி மறித்தது யார் ? . வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

வழறிஞர் ஆர் . எஸ்  ஆதில் அவர்கள் உத்திர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற ஜாதி ஒழிந்தது நூல் வெள்யீட்டு விழாவில் ஆற்றிய உரை ( இவரை பற்றிய குறிப்புகள் பின்னர் இடம்பெறும் )


டாக்டர் மூஞ்சே ( ஆர் எஸ் எஸ்  என்ற சித்பவன் பார்ப்பன தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர்). பின்வரும்  கடிதத்தை டெல்லியிலிருந்து 1936 ஆம் ஆண்டு ஜூன் 30  ஆம் நாள் ராவ் பகதூர் எம்.பி இராஜா அவர்களுக்கு எழுதினர்.

அன்புள்ள ஐயா  எனது நண்பர்கள் சிலரிடமிருந்தும் அம்பேத்கரின் சம்மதத்துடன் ஸ்ரீமான் செத் ஜீகால் கிஷோர் பிர்லா அவர்களிடமிருந்தும் எனக்கு வந்த அவசர அழைப்புகளின் பின்னணியில் நான் 18 ஆம் தேதி பம்பாய் போக நேர்ந்தது . அங்கெ டாக்டர் அம்பேத்கர் என்னுடன் மூன்று நாள்கள் தொடர்ந்து நீண்ட நேரம் உரையாடினார். முடிவில் அவரது இந்து மதத்திற்கெதிரான கிளர்ச்சிக்கு ஓர் அமைதியான முடிவு எடுக்கப்பட்டு எழுதப்பட்டது . டாக்டர் அம்பத்கர் அதனை முழுமையாக ஒத்துக்கொண்டார்,


அந்த முடிவு பின்வருமாறு :

டாக்டர் அம்பத்கரும் அவரை பின்பற்றுபவர்களும்  இஸ்லாத்திற்கோ கிறிஸ்தவத்திற்கோ போவதை விடுத்து சீக்கிய மதத்தை தழுவுவார்களேயானால்  அத்தோடு அவர்கள் இந்துக்களோடும்  சீக்கியர்களோடும் நேர்மையோடும் அக்கரையாடும் ஒத்துழைத்து அவர்களது கலாச்சாரத்தை பிரச்சாரம் செய்திடவும் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்ட மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக நடத்தும் இயக்கத்திற்கு எதிராக செயல்படுவத்தற்கும் ஒத்துழைப்பார்கள் என்றால் இந்து மகா சபை அவர் இந்து கலாச்சாரத்திலேயே இருக்க ஒத்துகொண்டிருப்பதால் பின்வரும் விஷயங்களை எதிர்காது .

 1. ஒடுக்கப்பட்ட மக்கள் சீக்கிய மதத்தை தழுவுவது .

 2. புதிய சீக்கியர்களை பட்டியலின மக்களோடு இணைப்பது.

 3 பூனை ஒப்பந்தத்தின் அரசியல் உரிமைகளை  சீக்கியர அல்லாதவர்களும் ( பழங்குடியினரும்) புதிய சீக்யர்களுக்கு இடையே போட்டியின்றி அனுபவிப்பது ( இதனை இந்து மகா சபை எதிர்காது ).

இந்து மகா சபையின் முன் முறையாக சமர்பிக்கும் முன் நண்பர்களோடு இது குறித்து விவாதிக்க நான் இன்று அதிகாலையில்தான் டெல்லி வந்தேன் . நான் பண்டித மாளவியாவையும்  முடிந்தால் ஹெச்.ஹெச்  பாடியாலா மகாராஜாவையும் சந்திக்க முயற்சி செய்கிறேன் .

இது மிகவும் உணர்ச்சிபூர்வமான விஷயம் . ஆதலால் இது குறித்து நீங்கள் சிந்தித்து உங்கள் கருத்துக்களை எனக்கு அறிய தாருங்கள் . நாம் ஏதேனும் ஒரு முடிவு எடுக்கும் வரை இந்த விஷயங்கள் முழுக்க முழுக்க ரகசியமாகவும் தனிப்பட்ட விவகாரமாகவும் இருந்திட வேண்டும் .

இதிலிருந்து பெறப்படும் உரிமை :

 1. டாக்டர் அம்பத்கர் அவர்கள் இஸ்லாத்திற்கு அல்லது கிருஷ்தவத்த்ற்கு செல்ல தயாராக இருந்திருக்கின்றார்கள் .


2. அவர் அவ்வாறு செல்வதை தடுக்க நரிமன் செத் ஜீலால் , கிஷோர் , பிர்லா ஆகியோர் டாக்டர் மூஞ்சேவை அனுப்பியிருக்கின்றார்கள் .


3. இதற்கு மூன்று நாட்கள் தொடர்ந்து இடைவிடாமல் அம்பேத்கருக்கு நெருக்கடிகளை கொடுத்திருக்கின்றார்கள் . அதாவது டாக்டர் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்கள் .


4.முடிவில் அம்பேத்கருக்கு சலுகைகளை போல சில வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் .


கடிதம் சொல்லும் நீதி முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்ட மக்களை இன்றைய சொல்லாட்சியில் தலீத் மக்களை இஸ்லாத்தில் இணைத்து அவர்களை முழுமையாக விடுவிக்க தாங்களால் ஆனவற்றை செய்திருக்கின்றார்கள் .டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முயற்சியில் பயங்கர முட்டுக்கட்டைகள் போடப்படிருக்கின்றன . அவர்கள் பயங்கர நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் .


வழக்கறிஞர் ஆதில் அவர்களின் கூற்றுப்படி அம்பத்கர் அவர்கள் ஒரு சுதந்திரமான சூழ்நிலையில் விடப்பட்டிருந்தால் அவர்கள் இஸ்லாத்தை தழுவியிருப்பார்கள் .

நன்றி: வைகறை வெளிச்சம் , சாதி ஒழிந்தது நூல் டி எம் உமர் பாரூக் 

No comments:

Post a Comment