test

Tuesday, February 25, 2014

முஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா?

 காஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம்.

இப்படி ஒரு செய்தியை "தி இந்து" நாளிதழ் வெளியிட்டது 20.01.2014 அன்று.

செய்தியைக் கூர்ந்து கவனித்தோம் இரண்டு வினாக்களுக்கு விடை கண்டிட!

1. காஷ்மீர் பண்டிட்டுகள் எங்கேனும் தங்களை வெளியேற்றியவர்கள் முஸ்லிம்கள் என்றோ அல்லது முஸ்லிம் போராளிகள் என்றோ குறிப்பிடுகின்றார்களா?.

2. இப்போது முஸ்லிம்கள் தங்களை காஷ்மீர் திரும்பக்கூடாது என்கிறார்களா?. என்றொரு புகாரையாவது வைக்கிறார்களா?.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் 'இல்லை" என்பதே தெளிவான பதில். இதை இந்து நாளிதழின் 20.01.2014 செய்தி தெளிவுப்படுத்திற்று .

இவை அல்லாமல் மோடியை சந்தித்த பண்டிட்டுகள் சுயப்பிரசவமாக ஓர் உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார்கள். அது, தங்களை 1990 இல் ஜக்மோகன் கட்டாயப்படுத்திதான் வெளியேற்றினார் என்பதே!.

Forced to leave their homeland- அவர்கள் அன்று வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இதை மோடியே மொழிந்திருக்கிறார்.

அன்று  1990 களில் காஷ்மீரின் கவர்னராக ஜக்மோகன் நியமிக்கப்பட்டதே பண்டிட்டுகளை வெளியேற்றி பழியை முஸ்லிம்களின் மீது போட்டு, முஸ்லிம்களை அழிக்க வேண்டும்; முஸ்லிம்கள் இல்லாத காஷ்மீர் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். இதனை அன்றைய காஷ்மீரின் அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து இராம் ரட்டன் சேட்டர்ஜி வெளியிட்டுள்ளார்கள்.  இதனை விரிவாக ' காஷ்மீரின் பாதி விதைவைகள்" என்னும் நாளில் விரிவாக காணலாம்.

சரி, ஒரு மாநிலத்திலிருந்து எப்படியெல்லாம் ஆட்களை வெளியேற்றலாம் வகுப்பு கலவரங்களை நடத்தி என்பதில் நிறைவான தேர்ச்சியை பெற்றவர் நரபலி மோடி . அன்று 2002 இல் குஜராத்தில் அவர் இதை நடத்தி காட்டியபோது அது இந்துத்துவா பரிசோதனை கூடம் என்றனர்.

பிறகு அதை இந்தியா முழுவது கொண்டு சென்றிட  எனப் பீற்றினார் அப்போதைய இந்துத்துவா பிரதமர் ' வாஜ்பேயி' இந்த வாஜ்பேயிபோன்ற நல்லவர்கள்(?) இப்போது மோடியின் கட்சியில் இல்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டார் நம்ம ஊர் கலைஞர். அந்த வாஜ்பேயின் அடிவருடிகளில் ஒருவர்தான் கலைஞரின் நாக்கை அறுப்பேன் என நர்த்தனமாடினார். அதைக் கூட கலைஞர் மறந்துவிட்டு மோடியின் கட்சியில் நல்லவரைத் தேடினார். கலைஞர் பாவம்!

இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது நமது டெல்லி நண்பர்களுடன் பேசினோம். காஷ்மீர் பண்டிட்டுகள் மோதிய சந்தித்த விவகாரத்தைக் கேட்டோம்.

அதற்கு அவர்கள் இது பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்த ஒரு நாடகம். மோடியை சந்தித்தவர்கள் காஷ்மீர் பாரதீய ஜனதா கட்சியினரே என்றார்கள். அதன் பின்னரே உண்மை விளங்கியது.

இப்படி சந்தித்த பாரதீய ஜனதா கட்சினரிடம் கூட மோடி உங்களை மீண்டும் குடியமர்த்துவேன் எனக் கூறிடவில்லை.

காஷ்மீர் மகளை இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் பிரித்து, பிளந்து போடும் கட்சியை நாம் முடிந்தவரை தடுத்தே தீருவோம்- இன்ஷா அல்லாஹ்!

மோடி முதலில் குஜராத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மறு குடியேற்றம் செய்யட்டும். அதன் பின்னர் காஷ்மீர் கனவுகளை காணட்டும்.

காஷ்மீர் முஸ்லிம்கள் பண்டிட்டுகளை வரவேற்கவும் , பாதுகாக்கவும் , வாழ வைத்திடவும் தயாராக இருக்கிறார்கள். மோடியைபோன்ற இனப்படுகொலையாளர்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

                                                                                      மு.குலாம் முகமது 
நன்றி: வைகறை வெளிச்சம் 1 comment:

VANJOOR said...

பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை.

ஆனால் பண்டிட்கள் X முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

பிரிவினைக் கலவரங்களின் போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம்.

கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம்.

ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும்.

காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார்.

அதேசமயம் 1990இன் தொடக்கத்தில் இம்மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஜக்மோகன்

ஏராளமான பண்டிட்களை அச்சுறுத்தியும் தூண்டிவிட்டும்
வெளியேறுவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தும் அகதிகளாக்கினார்.

ஆர்.எஸ்.எஸ். காரரான ஜக்மோகன் தேச விடுதலைப் போராட்டத்தை மதவாதப் போராட்டமாகச் சித்தரிக்க மைய அரசின் துணையுடன் அச்செயலில் ஈடுபட்டார்.

ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள் தான் பண்டிட்கள்.

இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள்.


குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை.

இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள்.

காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல.

அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். - அ.மார்க்ஸ் (a.marx)

Post a Comment