test

Sunday, February 23, 2014

மீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா?

 ஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சில வாழிவியல் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அதில் பதிந்திருந்தார்கள். அதற்கு அவர்கள் "கருப்பாயி என்ற நூர்ஜஹான்" என்ற நாவலை துணைகொண்டே நிறுவ முயன்று இருந்தனர்.  

இந்நாவளிற்கு டி எம் உமர் பாரூக் அவர்கள் கொடுத்த மறுப்பு. (வைகறை வெளிச்சம் இதழில் வந்த கட்டுரை சற்று சுருக்கமாக)


மீனாட்சிபுரம் மதம் மாற்றம் பற்றி வி டி ராஜசேகர் அவர்கள் எழுதிய கட்டுரைலிருந்து சில வரிகள்:

தமிழகத்தில் மீனாட்சிபுரம் என்ற ஊரில் தலித் மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவிய மதமாற்றம் இந்து இந்தியாவை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது காத்மேன் சங்கராச்சாரி  முதல சாய்பாபா வரை பல வகை ராகம்பாட ஆரம்பித்துவிட்டனர்.

ஆர்.எஸ் எஸ் தலைவர் கே ஆர் மல்கானி இந்திய நாட்டின் அதிகார மாற்றத்திற்குப்பின் நாடு சந்தித்த மாபெரும் நெருக்கடி இம்மதமாற்றமே என்றார் அடல் பிகாரி வாஜ்பாய் மேற்படி மீனாட்சிபுரம் ரஹ்மத் நகராகிய கதையை நேரில் சென்று பார்வை இட்டு பிதமர் இந்திரா  காந்திக்கு ஒரு அறிக்கையை நேரில் சமர்ப்பித்தார்.

தீண்டத்தகாதவன் முத்திரை இட்டு விலங்கினும் கேவலமாய் நடத்தப்பட்டு வாழ்நாளெல்லாம் இந்துக்களின் கொடுமைகளை எதிர்  கொண்டே சாவதை விட மவுடீக இந்து மதச்சங்கிலியை உடைத்தெறிந்து உலகம் தழுவிய பவுத்த கிருஷ்த்துவ முஸ்லிம் மதத்தினை ஏற்று எந்த மதத்தில் சுயமரியாதையும் சமத்துவமும் உறுதி அளிக்கப்படுகிறதோ அமத்தத்தை ஏற்றுகொள்ளுங்கள் என்றார்  அண்ணல் அம்பேத்கர் .

பௌத்தம் இந்நாட்டில் பரிவிரகத்தை நிலைத்திருக்க செய்திடும் என்பதால் பௌத்த சங்கங்களில் பார்ப்பனர்கள் ஊடுருவி அம்மார்கத்தையே மங்கிட செய்திட்டனர். உழைக்கும் மக்களுக்கு உயவளிக்க வல்ல மார்க்சியமும் இந்நாட்டு பார்ப்பனர்களின் ஏகபோகச் சொத்தாகிவிட்டது. இக்காலக்கட்டத்தில் பிறப்பிலேயே போற்குனமிக்க  தலித் மக்கள் இந்து பார்ப்பனீயத்தை  எதிர்த்து தனிமைப்போர் நடத்திகொண்டிருப்பதைவிட மதம்மாற்றத்தின் மூலம் உலக சகோதரர்களிடையே ஒன்றாகி விடுவஹ்டே உகந்த வழி என்று அண்ணல் அம்பேத்கர் கூறினார் .

மேற்கண்ட வரிகள் எவ்வளவு தத்துவார்த்தமானது என்பதை விளங்கி இருப்பீர்கள். அந்த மீனாட்சிபுரம் மக்கள் இந்துக்களுக்கு கொடுத்த அந்த எச்சரிக்கையை கொச்சைப்படுத்துகின்ற வகையில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டது என்பது போல் தழர் அன்வர் பாலசிங்கம் அவர்கள் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்ற நூல் எழுதியிருந்ததுதான். என் அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் காரணமாகி இருந்தது.


1981 இல் மீனாட்சிபுரம் மதம் மாறிய சுமார் 800 குடும்பங்களைப் புதிய முஸ்லிம்கள் என்று காரணம் காட்டி இஸ்லாமியர்கள் ஒதுக்கிவிட்டதாகவும் தற்போது அங்கு தொழுகை நடைப்பெறவில்லை என்றும் 30 வயதுக்கு மேற்பட்ட 60 பெண்கள் திருமணம் ஆகாமல் கிடப்பதாகவும் பழைய முஸ்லிம்கள் எவரும் பெண் எடுக்க வருவதில்லை என்றும் உழைத்துச் சாப்பிட்டு கவலை இல்லாமல் இருந்த அந்த மக்கள் இன்றைக்கு குமரிக்களைப் பெற்று வைத்துக்கொண்டு வேதனையில் ஆழ்ந்து கிடப்பதாகவும் எத்தனை இலட்சம் வேண்டுமானாலும் வரதட்சணையாக கொட்டிகொடுக்க தயாராக இருந்தும் பழைய முஸ்லிம்கள் யாரும் பெண் எடுக்க வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அந்நாவலின் சுருக்கம் 

1981 இல் மதமாற்றம் நடைபெற்ற அந்தக் காலத்தில் இருந்து அந்த ஊரைக் கட்டி காத்தவரும், மார்கத்தை வளர்த்தவருமான ஜனாப் காதர்  பாய் என்பவரின் மகள் கருப்பாயி என்ற நூர்ஜஹான் தாம் மார்க்கக் கல்வி முறையாகப் படித்திருந்தும் பட்டப்படிப்பு படித்திருந்தும் மாப்பிள்ளைக்காக தன தந்தை ஊர் ஊராக அலைவதைக்கண்டு சகிக்காமல் தன தந்தஈகு உருக்கமான கடிதத்தை எழுதிவைத்துவிட்டு தனது நாற்பதாவது வயதில் தற்கொலை செய்து கொள்கிறார் 

இதனால்  மனம் உடைந்து போன கதறும் அவருடைய மனைவியும் சேர்ந்து அன்றைக்கே  விஷம்  குடித்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் .

இந்த வேதனை தாளாமல் மேற்படி கருப்பாயியின் சித்தி தெரு முனையில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இதற்கு முன்னாள் பச்சை துண்டு பஷீர் என்பவருடைய பெண்ணை நெல்லையிலிருந்து பெண்பார்க்க வந்தவர்கள் புதிய முஸ்லிம்கள்  என்று கேள்விப்பட்டு பாதியிலேயே திரும்பி போய்விட்டதாகவும் ஊரை க்கூட்டி பிரியாணி எல்லாம் சமைத்து வைத்திருந்த பஷீர் பாய் செய்தி அறிந்து அவரி மாடி வீட்டிலேயே தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவருடைய மகள் பாவ்த்தியம் பிடித்து நீண்ட காலமாக அவரது வீய்யு அறையில் அடைந்து கிடப்பதாகவும்   எழுதியிள்ளார்.

அதாவது ஒருகாலத்தில் சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழ்ந்த மீன்னட்சிபுரம் மக்கள் இன்று வேதனையில் ஆழ்ந்து கிடப்பதாக நூலில் சொல்லப்படுகிறது.

இந்த நூலில் ரஹ்மத் புரத்தை பிலால்புரம் என்றும் மீனாட்சிபுரத்தை காமாட்சி புரம் என்றும் அன்வர் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

கள ஆய்விற்காக டி .எம் . உமர் பாரூக் அவர்களும் வைகறை ஆசிரியர்   மு .  குலாம் முகமது அவர்களுடன் மீனாட்சிபுரம் சென்றுள்ளனர் அங்கு அவர்கள் திரட்டிய உண்மை தகவல்கள்:

.....மறுநாள்  புறப்பட்டு ரஹ்மத் நகரை அடைந்தோம் ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் இமாம்சலாஹுதீன் அவர்கள் சுமார்  இருபது பிள்ளைகளை வைத்துக்கொண்டு பாடங்களை நடத்திகொண்டிருந்தார்கள். கேரளாவிலிருந்து வந்திருந்த தப்லீக் ஜமாத்தார்களுக்குச் சமையல் நடந்துகொண்டிருந்தது . அசர் தொழுகைக்கு பிறகு இமாமை சந்தித்தோம்.

சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டவர்கள் யார் என்று அவர்களிடத்தில் விசாரித்தோம் அவர் அதிர்சிக்குல்லாகிப் போனார். ஊர் நாட்டாண்மை ஜனாப் அப்துல் ரஹீம் அவர்களைச் சந்தித்தோம் மேற்சொன்ன விவரங்களை அவரிடத்தில் கேட்ட பொது முஸ்லிம்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி உண்டா என அவர் திருப்பிக்கேட்டார்.

நாங்கள் கேட்ட தகவல்கள் அனைத்தும் தவறானவை என்றும் மாப்பிள்ளை தேடி எந்த பெண்ணும் ரஹ்மத் நகரில் இல்லை என்றும் சில பெண்கள் படித்துக்கொண்டு இருப்பதாகவும் மாப்பிள்ளை வந்தால் திருமணம் செய்து கொடுப்பது பெற்றோரின் விருப்பம் என்றும் கூறினார்.

ஜனாப் மைதீன் என்பவரை சந்தித்தபோது தனது தந்தை மர்ஹூம் இஸ்மாயில் மீரான் மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியபோது போலீசார் அவரை சிறையில் அடைத்து வெடிகுண்டு வழக்குப்போட்டு இரண்டு ஆண்டுகள் கொடுமைப்படுத்தியதாகவும் தனது ஒரே மகளை நல்ல ஈமான் தாரிக்கு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தன்னை கேட்டுக்கொண்டதாகவும் அண்மையில் இஸ்மாயில் காலமாகிவிட்டதாகவும் தன தந்தையின் வேண்டுகோள்படி தன தங்கைக்கு அண்மையில் திருமணம் செய்து வைத்ததாகவும் கூறினார்.

தற்கொலைப் பற்றி மைதீனை கேட்ட பொது 1981 இல் பசியும் பட்டினியுமாக கிடந்தோம் எவ்வளவோ துன்பங்களை எதிர்கொண்டோம் அப்போதேல்ல்லாம் தற்கொலை செய்து கொள்ளாத நாங்கள் இப்போது மச்சு வீடு மாடி வீடுகளில் ஆல்லாஹ்வின் கிருபையாலும் எங்கள் முன்னோர்கள் மதமாற்றத்தின் பொது செய்த தியாகத்தாலும் நல்ல வாழ்கை வாழிறோம் இந்த நேரத்தில் அல்லாஹ்வுக்கு விரோதமான காரியங்களை செய்வோமா என்று கேட்டார்.

அந்த சமயத்தில் அங்கு வந்த இந்திய யூனியன் முஸ்லிம்லீக் பகுதி செயலாளர்  ஜனாப் சலீம் அவர்கள் சமீபத்தில்தான் சேட்டு வீட்டு  கதீஜா, ஹம்சா ஆகிய இரண்டு பெண்களை பூலான் குடியிருப்பு பழைய முஸ்லிம்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் என்றும்  கலங்காத கண்டியை சேர்ந்த அன்வர் பாலசிங்கம்  என்பவர் தன்னை வந்து விசாரித்ததாகவும்  தான் இப்படியெல்லாம் அவதூறான செய்தியை சொல்லவில்லை என்றும் மீனாட்சிபுரத்தப் பற்றி அவதூறான நூல் ஒன்று வந்திருப்பதாக முன்பே தெரியும் என்றும் பாலசிங்கம் மீது அவதூறு வழக்குப்போட வேண்டும் என்றும் தங்கள் மாவட்டத் தலைவரிடம் சொல்லியிருப்பதாகவும் கூறியதோடு உடனடியாக தொலைப்பேசியில் மாவட்டத்தளைவரிடம் பேசினார்.

அவர் புத்தகத்தை கேட்பதாகவும் எங்களிடம் கூறினார் 

நூலில் கண்டப்படி மீனாட்சிபுரம்பெங்களுக்கு திருமணம் நடக்காதிருப்பது உண்மையானால் தென்காசியில் ஒரு அலுவலகம் அமைத்து திற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு சென்ற எங்களுக்கு சம்பவம் உண்மையில்லை என்பதை அறிந்தவுடன் ஒரு மன அமைதி ஏற்பட்டது.2 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ. இக்பால்,
சரியான நேரத்தில் அருமையான தொகுப்புடன் கூடிய சிறப்பான இடுகை.
ஜசாக்கல்லாஹு க்ஹைரன் சகோ.

Adirai Iqbal said...

அலைக்குமுஸ்ஸலாம் சகோ முஹம்மத் ஆஷிக்

Post a Comment