test

Wednesday, December 11, 2013

அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன? : T.M.மணி (உமர்பாருக்) part 1

நான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொண்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டேன் பெரும் பாலும் நான் எழுதிய " ஜாதி ஒழிந்தது" புத்தக அறிமுக விழாவும், "செந்தமிழ் நாட்டுச் சேரிகள்" என்னும் புத்தக அறிமுக  விழாவும் தமிழகத்தில் பல பகுதிகளில் மட்டுமுல்லாமல் சாதி ஒழிந்தது புத்தக ஆங்கில பதிப்பு வெளியீடு டெல்லியிலும் இந்தி  பதிப்பு லக்னோவிலும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சில உயரதிகாரிகள் கூட அம்பேத்கர்  பௌத்த மதத்திற்கு தானே மாறினார். நீங்கள் என் இஸ்லாம் மதத்திற்கு மாறினீர்கள்? என்ற கேள்வியை சிலர் விருப்பத்துடனும் சிலர் வினயமாகவும்  கேட்டார்கள். இப்படி கேட்பவர்கள்  அம்பேத்கரைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள் என்றே கருதுகிறேன்.


1936இல் அம்பேத்கர் மதம் மாறப்போகிறேன் என்ற செய்தியை அறிவித்த பிறகு அவர் எப்படிப்பட்ட இடர்பாடுகளையும் , இன்னல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதை அறியாதவர்கள் என்றே நினைக்கிறேன். மனிதன் உலகில் வாழ்வதற்கு மதம் ஒன்று இன்றியமையாததாக இருக்கிறது. மதம் என்பது மனிதனுக்கு எதோ ஒரு அடையாளம் மட்டுமல்ல வாழ்வின் ஆதாரமாகவும் இருக்கிறது.

இந்தியாவில், எல்லா மதங்களும் குற்றமுடையது என்கின்ற, காரல்மார்க்சின் தத்துவத்தை சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள் . தான் ஒரு மார்கிச வாதி , பொதுவுடைமை வாதி என்பதை காட்டிகொள்வதற்கே அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் எதோ ஒரு மத வட்டத்திற்குள் அடங்கியிருப்பார்கள். மதம்தான் மனிதனின் கூட்டு வாழ்கைக்கு அங்கீகாரம் அளிக்கிறது. ஆனால், இந்து மதம் அதற்கு விதி விலக்காக  இருக்கிறது. ஓர் இந்துவுக்கு மதம் என்ற ஒற்றை அடையாளம் மட்டும் போதாது . ஒவ்வொருவரின் சாதியுமே ஒரு மதவட்டமாக இருக்கிறது.   இந்து மதம் என்னும் ஒரு பெரு வட்டத்திற்குள் ஒவ்வொரு சாதியையும் பல குருவட்டங்களாக அடங்கி கிடக்கின்றன . சாதி என்னும் இந்த குறு  வட்டத்தை கடக்க நினைப்பவர்கள் மதம் என்னும் அந்த பெரு  வட்டத்தையும் கடந்தாக வேண்டும்.

சாதியை ஒழிப்பதற்காக கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள்; கலப்பு திருமணமே போதும் என்று நினைத்தவர்கள் , இன்று தன சாதியைவிட்டு வேறு ஒரு சாதி வட்டத்திற்குள் முடங்கிவிட்டார்கள்.

இதற்கெல்லாம் காரணம் இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடேயாகும். சாதி என்பது கடவுளால தோற்றுவிக்கப்பட்டது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இறைவன் ஏற்றத்தாழ்வாகவே படைத்தான் என்பதற்கான ஆதார ஆன்மீக நூல்கள் அவர்களிடத்தில் ஏராளமாக இருக்கின்றன. அந்த ஆதாரங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்வியலை அமைத்துகொண்டார்கள். கலை இலக்கியம், கலாச்சாரம். பண்பாடு, சிற்பங்கள், ஓவியங்கள், உணவு, இருப்பிடம் உட்பட அனைத்தையும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே வடிவமைத்துக்கொண்டார்கள். இந்து மதத்தில் பார்ப்பனர்களே அதிகப் பயன் அடைகிறார்கள். இதில் கடைநிலையில் இருப்பவர்கள் சூத்திர சாதிகள்.


இந்து மத ஆதாரங்களின்படி அவர்கள்தான் கடைசிச் சாதி. இந்து மதக்கொள்கையின்படி அவர்கள் மற்ற சாதியினருக்கு தொண்டு செய்ய கடமைப்பட்டவர்கள்.  பகவத்கீதையின் கூற்றுப்படியும், மனுஸ்மிருதியின் ஆதாரப்படியும் தீண்டப்படாதவர்கள் இந்துக்களே அல்ல. மிக அண்மைக்கால இந்துக்கள் , தங்கள் தேவைகளைப் பொறுத்து படிப்படியாக இந்துக்களாக ஆக்கிகொண்டார்கள். ஆனால் இது ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. தங்கள் வேதங்கள் சொளிரப்படி ஒதுக்கி வைத்த நிலையிலேயே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எந்த இடத்தில் ஒதுக்கி வைத்தார்களோ அதே இடத்தில் இன்றளவும் வைத்துள்ளார்கள் என்பதை நான் கவனத்தில் கொள்ளவேண்டும். தீண்டப்படாத மக்கள் இந்துக்கள் விதித்த எல்லையை மீறுகிறபோது, கொலை கொள்ளை, தீ வைப்பு, துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் இன்றளவும் நடந்துகொண்டே இருக்கிறது.
                                                                                          
                                                                                            தொடரும்...............

நன்றி : வைகறை வெளிச்சம் 


1 comment:

Anonymous said...

சாதியம் இந்தியாவில் மதங்கள் கடந்து வேரூன்றிக் கிடக்குது. அதனால் தான் அம்பேத்கார் இந்து மதத்தை விட்டு வெளியேறி சாதியமற்ற மதத்தில் இணையக் கருதி, பவுத்த மதத்தில் சேர்ந்து கொண்டார். அத்தோடு அது இந்தியர்களை மொழி, கலாச்சார, வாழ்வியலில் இருந்து அந்நியப்படுத்தவும் செய்யாது என்பதையும், உலக அரசியலில் இந்தியர்களை சிக்கவும் செய்யாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். !

Post a Comment