test

Sunday, May 26, 2013

தமிழக முஸ்லீம் தலைவர்களை சிக்க வைக்க சிறைகைதிகளைச் சித்ரவதை செய்யும் பெங்களூரு காவல்துறை!


கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு முன் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் தமிழக முஸ்லீம் தலைவர்களை சிக்க வைக்க சிறைகைதிகளை காவல்துறை சித்ரவதை செய்வதாக கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர், பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 16 நபர்கள் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சா புகாரி மற்றும் கோவையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். தமிழக காவல்துறையின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்ட இவர்கள் கர்நாடகா சிறை காவலில் உள்ளனர்.

இவர்களைக் கைது செய்து ஒரு மாதம் ஆகியும் இது வரை, பெங்களூரு குண்டு வெடிப்பில் அவர்களுக்குத் தொடர்புடையதாக எவ்வித ஆதாரத்தையும் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களோ இவர்கள் அப்பாவிகள் என்றும் கோவை சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்குப் பாடுபடுவதாலே அநியாயமாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

சிறையில் இருந்தவர்களைப் பார்த்து விட்டு வந்த அவர்களது குடும்பத்தினர், இக்குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக ஒத்து கொள்ள சொல்லி காவல்துறையினர் சித்ரவதைப்படுத்துவதாக புகார் கூறியுள்ளனர். மேலும் இக்குண்டுவெடிப்புகளை செய்ய தூண்டியது பெங்களூரு அக்ரஹார சிறையில் மற்றொரு வழக்கு தொடர்பாக சிறையிடப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானிதான் என்று ஒத்து கொள்ளுமாறும் தமிழகத்தில் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் அதற்கு உதவி செய்ததாக வாக்குமூலம் தரக்கூறி கடும் சித்ரவதைகள் செய்வதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் சிறை காவலில் தினந்தோறும் மது அருந்தி விட்டு காவலர்கள் குழு கீழ்கண்ட முறையில் சித்ரவதை செய்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

1. பஞ்சாப் கட் - கால்தொடைகள் மீது காவலர்கள் ஏறிக்கொள்ள சிலர் முதுகை சுவற்றின் மீது சாய்த்தவாறு வைத்து விட்டு கால்களை சுவற்றின் பக்கம் வளைப்பார்கள்.

2. எரோப்லன் மெதட் - கை கால்களை கட்டி மாட்டுக்கு லாடம் கட்டுவது போல் அந்தரத்தில் தொங்கவிட்டு அடிப்பது. இப்படி அடித்தபோது சில நேரங்களில் சிறுநீர், பேதி வெளி வந்து விடும்.

3. நிர்வாணப்படுத்தி விட்டு பிறப்புறுப்பில் தொடைகளில் பெற்றோலை ஊற்றி மிளகாய் பொடி தூவியுள்ளனர். அந்த வேதனையைப் பார்த்து ரசித்து சிரித்துள்ளனர்.

4. குடிகார காவலர்கள் அடிக்கும்போது வலியில் எவ்வளவு கத்தினாலும் விடமாட்டார்கள். மயக்கமடைந்தால் பல்ஸ் பார்த்து சுடு நீர் ஊற்றி எழுப்பி, வலி நீக்கும் ஸ்ப்ரே அடித்து விட்டு மீண்டும் அடிப்பார்கள்.

5. அடிக்கும் போது வலி தாங்காமல் அல்லாஹ் என்று கத்தினால் "கூப்புட்றா உன் அல்லாவை, வரானா பாப்போம்" என்று கிண்டல் செய்கின்றனர்.

கைது செய்து ஒரு மாதமாகியும் எந்த ஆதாரமும் இன்றி தொடர்ந்து கஸ்டடியில் வைத்து சித்ரவதை செய்யும் காவல்துறையின் அராஜக போக்கை அரசு தடுத்து நிறுத்தவேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். ஆனால், எந்த ஆதாரமும் இன்றி நிர்பராதிகள் சித்ரவதை செய்யப்படுவதும் அநியாயமாக வழக்குகளில் சிக்க வைக்கப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட்டே ஆகவேண்டும். இல்லையேல், அது ஆளும் அரசுகளின்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையினைப் பொய்த்துப்போக வைக்கும் என்பதை அரசுகள் உணர்ந்து வேக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே அப்பாவி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

- ஃபெரோஸ்கான்


1 comment:

Anonymous said...

இஸ்லாம் மார்க்கத்தைச் சார்ந்தவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பது இந்து மதவாத அரசுகளின் நீண்டகாலத் திட்டமாக இருப்பதை இதுவரையில் நடந்த நிறைய சம்பவங்களினால் உணரலாம். மக்களினால், மக்களின் நன்மைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்ளும் அரசுகள் இவ்வாறு தவறான நோக்கில் செல்லும்போதுதான் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தீவிரவாதிகள் ஆகிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை. நேரான வழியில் நிம்மதியாக வாழ விரும்புபவர்களைத் தீவிரவாதியாக்குவது இம்மாதிரி கேடுகெட்ட அரசுகள்தான் என்பதை உணர்ந்து போராடினால்தான் வழிபிறக்கும்...


சிவா,
தெற்கு சூடான்.
nirmalshiva1968@gmail.com

Post a Comment