test

Tuesday, April 16, 2013

இந்தியன் முஜாகிதீன் ? அதன் தலைமையகம் எங்கே?- மத்திய அமைச்சர் கேள்வி


இந்து தீவிராத அமைப்பான அபினவ் பாரத்தின்
தலைவர் ஹிமானி சாவர்கர் 
இந்தியன் முஜாகிதீன்களின் தலைமையகம் எங்கே?



இப்படி நமது இந்திய அரசை பொட்டில் அறைந்தாற்போல் கேட்டிருப்பவர் முன்னாள் மத்திய வேளாண்மை மற்றும் உணவு விநியோகத்துறை அமைச்சர் தாரீக் அன்வர் அவர்கள்தாம்.


அவர் அண்மையில் ஊடகங்கள் வழியாக பிரதமரை நோக்கி இந்த கேள்வியை வைத்தார். அத்தோடு இன்னும் பல கேள்விகளை கேட்டிருக்கின்றார். அவை:

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் யார்?


அதன் தலைமையகத்தை ஏன் இன்னும் சீல் வைத்திடவில்லை?

1992 இல் இந்தியாவில் இஸ்ரேலின் தூதரகம் திறக்கப்பட்டது.  அதன் பின்னர்தான் முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் - துவம்சம் செய்யப்படுகின்றனர். இதில் யூதர்களின் பங்கென்ன? சதியென்ன?

(source : Rashtriya Sahara 14th Feb, 2013, M.G. 16-31 March 2013)

மராட்டிய மாநில, தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர். ரகுவான்கூ, மாலேகானில் 2006/2008 இல் குண்டு வைத்த இராணுவ தளபதி புரோகித்துடன் இணைந்து குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார். அவர் மீது ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் நேரடியாக தொடர்பு உண்டு என்பது ஐயங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்ட பின்பும் ஏன் அந்த அமைப்பை தடை செய்யவில்லை? அரசு பதில் சொல்லுமா? ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பின் இந்திய பொது செயலாளர் எஜாஸ் அஸ்லம் அஹ்மத் அவர்களும், அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதே வினாவை எழுப்பு உள்ளார்கள். 

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!

இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான் பெரும் போரில் அரசு அலுவலர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் பலர் பதவி இழந்தார்கள். அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணம் கூடக் கிடைக்கவில்லை.

அனால் இராணுவத்திலிருந்து RDX ஐ திருடி நாடு முழுவதும் குண்டு வெடிப்புகளை நடத்திய ராணுவத் தளபதி - ' மாலேகான் குண்டு வெடிப்பு புகழ் ' பிரசாந்த் புரோகித் இராணுவத்திலிருந்து தனது சம்பளத்தை சல்லிக்காசு கூட குறையாமல் இன்றளவும் வாங்கி கொண்டிருக்கிறார்.

இதை அண்மையில் டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் , ஜமாத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் எஜாஸ் அஸ்லம் அவர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார்கள்.

இதனால்தான் கூறுகின்றோம் இந்தியாவில் நடப்பது ' இந்து ஜனநாயகம்' என்று 

Source : M.G : 16-31 March 2013
நன்றி :வைகறை வெளிச்சம் 



No comments:

Post a Comment