test

Tuesday, March 19, 2013

இலங்கையின் மோடியும் இந்தியாவின் ராஜபக்சேவும்



மோடி இந்தியாவில் முஸ்லிம்களை இந்துக்களின் எதிரிகளாக சித்தரித்து முஸ்லிம்களுக்கு எதிரான இனப் படுகொலைகளை நிகழ்த்தினான் .


இராஜபக்க்ஷே இலங்கையில் தமிழர்களை சிங்களவர்களின் எதிரிகளாக சித்தரித்து தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை நிகழ்த்தினான்.

இருவருமே தங்களது சொந்த மக்களுக்கு எதிராகவே இனப்படுகொலைகளை நிகழ்த்தினர் . அதன்  மூலமே ஆட்சியையும் பிடித்தனர்.

இதில் மிகச் சிறந்த கதாபாத்திரம் வகிப்பது அமெரிக்காதான் . உலகம் முழுவதும் அப்பாவிகளை கொன்று குவித்து இனப்படுகொலைகளை செய்த அமெரிக்காதான் மோடிக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் வண்ணமாக தனது நாட்டிற்குள் நுழைய தடை விதித்தது.

அதே போலவே ராஜபக்சேவிற்கு எதிராகவும் தீர்மானத்தை கொண்டுவந்து தனது ரொம்ப நல்லவன் வேடத்தை தொடர்கிறது .

குஜராத் கலவரத்தின்போது உபயோகிக்கப்பட்ட ஒரு சில வேதிப்பொருட்கள் அமெரிக்காவின் கள்ள குழந்தை இஸ்ரேலில் இருந்து தருவிக்கப்பட்டன . 

ஈழத்தின் இறுதி கட்டப்போரை சீர்குலைத்ததில் இந்தியா , சீனா , பாக்கிஸ்தான் , இஸ்ரேலுடன் அமெரிக்காவின் பங்கை உலகறியும். அமெரிக்க தனது செயற்கை கோள் மூலம் ஈழப்போராளிகள் நிலைகள் பற்றிய தகவல்களை வழங்கியதாக எழும்பிய குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கில்லை.

இதற்கிடையில் பி, ஜே பி ராஜபக்சேவை குற்றவாளியாக அருவிக்க முடியாது என அறிவித்துள்ளது. ஒரு பாசிஸ்ட்டின் மனத இன்னொரு பாசிஸ்ட்டுகள் தானே அறிவர்.

No comments:

Post a Comment