test

Monday, March 18, 2013

பங்களாதேஷின் தற்போதைய நிலை

தற்போதைய குழப்பத்திற்கு என்ன காரணம்?


வங்காளத்தில் ஆளும் அவாமி லீக் கூட்டணி கட்சிகளின் ஆட்சி  இந்த வருடம் டிசம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்திய துணை கண்டத்தில் இருப்பது போன்ற வங்காளத்திலும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அரசியலில் ஈடுப்பட்டவர்களின் பரம்பரை ஆட்சியே வங்காளத்திலும் நிலவுகிறது. இந்த குடும்பங்களே அங்கே நடக்கும் அரசியலில் ஆதிக்கம் .செலுத்துகின்றன. வங்காளத்தை பொருத்தவரை ஜியாவுர்ரஹ்மான் மற்றும் ஷேய்க் முஜிபுர்ரஹ்மான் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.


தற்போதைய ஆளும் அவாமிலீக் அரசு ஊழல் மற்றும் நிர்வாக தகுதியின்மை காரணமாக நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. அதன் முக்கிய கூட்டணி கட்சியான ஜாட்டியா கட்சி முற்றிலுமாக தனது உறவை முறித்துக்கொண்டதுடன் தனது கட்சியை உடைக்கும் முயற்சியில் அவாமி லீக் முயற்சிப்பதாகவும்  அதன் தேர்தல் சின்னத்தை பறிக்க சதி திட்டம் தீட்டுவதாகவும்  அதன் தலைவர் எர்ஷாத் குற்றம் சாட்டி உள்ளார்.

இதன் காரணமாக அவாமி லீக் கட்சி 1971 ஆம்  ஆண்டு நடந்த சுதந்திர போரின்போது இனப்படுகொலைகளில் ஈடுப்பட்டதாக கூறி சில தனிநபர்களின் மேல் அவதூறுகளை கூறி பிரச்சாரமும் செய்து வருகிறது. இதன் மூலம் எதிர்கட்சிகளை ஒடுக்கவும் மக்களிடையே நீதியை நிலைநாட்டியதாக நாடகமும் ஆடி தனது கட்சி இமேஜை தூக்கி நிறுத்த முயற்சித்து வருகிறது. இந்த அவதூறுகளை பரப்புபவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்(ICT) அவாமி லீக்கால் பணியமர்த்தப்பட்டவர்கள். 

நாடு இரண்டு பகுதிகளாக பிரிந்து கிடக்கின்றது. ஒரு பக்கம் மத சார்பற்ற இடது சாரி குழுக்களாலும் மறுபக்கம் இஸ்லாமிய குழுக்கள் மற்றும் ஆலிம்களாலும் பிரிந்து கிடக்கின்றது.

இஸ்லாமிய ஆர்வலர்களுக்கும் அவாமி லீக் குண்டர்களுக்கும் இடைய சண்டைகள் தெருக்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவாமி லீக் குண்டர்களுடன் போலீசாரும் இணைந்து இஸ்லாமிய ஆர்வலர்களை தாக்கி வருகிறார்கள்.

அவாமி லீக் அரசு வங்காளத்தை ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு சூழ்நிலையில் வைக்க முயற்சி செய்கிறது. மேலும் அதனை அதிகரித்து BNP மற்றும் ஜமாத்தே இஸ்லாமி இயக்கங்களை பலவீனப்படுத்தவும் பல கீழ் தரமான செயல்களில் அது இரங்கி உள்ளது.

  சில வலைப்பதிவாளர்கள் , கடவுள் மறுப்பாளர்கள், இடதுசாரிகள் அவர்களை கொண்டு இஸ்லாத்தை தாக்கவும் அல்லாஹ்வையும் ரசூலையும்  கேலி செய்யவும் வழி வகுத்துள்ளது ஆளும் அரசு  .  shahbagh இயக்கம். இதுதான் இஸ்லாத்தை தீவிரமாக வெறுக்கும் கடவுள் மறுப்பாளர்கள் , மத சார்பற்றவர்கள் , இடது சாரிகள் ஆகியோர்களை வழி நடத்துகிறது. அதற்கான நிலையினை அவாமி லீக் ஏற்படுத்தியுள்ளது.

தேசிய வாதத்தினை கொண்டு மக்களின் உணர்ச்சிகளை கிளப்பிவிட்டு தேர்தலில் ஆதாயத்தை அடைய அவாமி லீக்கின் திட்டம் அதற்கு வெற்றி அளிக்கலாம். ஆனால் இதன் மூலம் நாட்டின் முக்கியமான பிரச்சினைகளிலிருந்து மக்களை அது திசை திருப்பியதில் தற்காலிக வெற்றியடைந்துள்ளது. 
கிலாபா ஆட்சிக்கான போராட்டத்தில் வங்காள தேசத்தின் முஸ்லிம்கள் 


வங்காள தேசி கட்சி ( BNP) ஒன்றும் தனி தன்மை வாய்ந்த கட்சி அல்ல. அதுவும் அவாமி லீக் போன்று ஒன்றுதான். வங்காள தேசத்தின் வரலாற்றில் அவாமி லீக்கும் BNPயும் தான் பெரும்பாலும் ஆட்சி செய்துவந்துள்ளன . அவை இரண்டுமே நாட்டின் பிரச்சனைகளை தீர்ப்பதில் தோல்வியையே கண்டுள்ளன.

பெரும்பாலான முஸ்லிம்கள் வாழும் நாடுகளைபோன்றே வங்காள தேசமும் மேற்கத்திய இஸ்ரேலிய சதிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.   அந்நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியாவின் தலையீடும் மறுப்பதற்கில்லை.

ஜமாத்தே இஸ்லாமிய பொருத்தவரை இஸ்லாமிய ஷரியாவை பற்றி பேசினாலும் அது குஃபார்களின் வழி அதாவது ஓட்டெடுப்பின் மூலம் சாத்திக்க நினைத்ததே அதன் தோல்விகளுக்கு காரணம்.

சில பொய்யான காரணங்களை கூறி அங்குள்ள இஸ்லாமிய விரோத கட்சிகள் இஸ்லாத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தாலும் அங்கு தூய இஸ்லாமிய அரசை நிருவத்துடிக்கும் ஏராளமான மக்கள்  போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

அரசு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் அவதூறு பிரச்சாரத்தின் பயன் மக்கள் சில இஸ்லாமிய தலைவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார்களே ஒழிய இஸ்லாத்திற்கு எதிராக அல்ல . தங்களது நாட்டை மட்டுமல்ல இவ்வுலகை இஸ்லாமே ஆளவேண்டும் என்று போராடும் வங்காள தேச முஸ்லிம்கள் இதோ கீழே .
சில அவதூறு பிரச்சாரத்தின் வழி இஸ்லாமிய தலைவர்களை தண்டிக்க துடிக்கும் இவர்கள் ( ஊடகங்கள்) ஏனோ பர்மா , குஜராத் கலவர சாத்தான்களுக்கு எதிராக குரல் கொடுப்பத்தில்லையே . இது ஒன்று போதாது அது ( ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு)அவதூறு பிரச்சாரம்தான் என்பதை புரிந்துகொள்ள .2 comments:

Anonymous said...

அடப்பாவிகளா உண்மையே பேச மாட்டீர்களா?

Adirai Iqbal said...

அப்போ நீங்க உண்மையை சொல்லுங்கள்

Post a Comment