test

Saturday, February 16, 2013

மக்களால் மக்களுக்காக மக்களே....!


                                                                                                  
 ஜனநாயகம் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது 
  " மக்களுக்காக மக்காளால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி முறையை கொண்டு மக்களே நடத்தும் ஆட்சி "

 ஆனால் நிதர்சனத்தில் அது முற்றிலும் உண்மைக்கு  புறம்பானது . எந்த ஒரு முதலாளித்துவ நாட்டிலும் மக்களே மக்களை அட்சி செய்வது இல்லை . உண்மையில் மக்கள் சில செல்வாக்கு உள்ள (?)  மனிதர்களால் (முதலாளிகளால்) ஆளப்படுகிறார்கள் . 

முதலாளித்துவ வாதிகள் அமெரிக்காவையும் ,பிரபுக்கள் வழி வந்த மேட்டுக்குடியினர் இங்கிலாந்தையும் , ரிலையன்ஸ் அம்பானி ,டாட்டா ,பிர்லா, கிங் பிஷெர் விஜய் மல்லையாக்கள் , மற்றும் ஆதிக்க வெறி பிடித்த பார்ப்பன பண்டாரங்கள் இந்தியாவையும் ஜனநாயகம் என்ற பெயரில் ஆள்கிறார்கள் . இவர்களே இந்த நாடுகளில் சட்டம் இயற்றும் ஏக போக அதிகாரத்தை மறைமுகமாக கொண்டிருக்கிறார்கள் . இவர்களின் நலன் கருதியே சட்டங்களும் இயற்றபடுகின்றன .அமல்படுத்தப்படுகின்றன .இவர்களின் நலன் கருதியே அரசியல் நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன .


ஜனநாயகத்தில் நீதி  ,சமத்துவம் ,ஆட்சியாளர்களை விசாரணை செய்யும் அதிகாரம் எல்லாம் மக்களுக்கு இருக்கிறது என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காதான் .
உண்மை நிலைகளுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது . அமெரிக்காவை எடுத்துகொண்டால் இந்த நாட்டில் சமத்துவம் நீதி  அரசை விசாரணை செய்யும் அதிகாரம் இவையெல்லாம் இனம் நிறம் மதம்  செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறப்பிட்ட மனிதர்கள் மட்டும்தான் வைத்திருக்கிறார்கள்  என்பது தெளிவான உண்மையாகும் . 

இந்தியாவை எடுத்துக்கொண்டால் பாபர் மசூதி தீர்ப்பே போதுமானது இங்கே நீதி சமத்துவம் ,அரசை கேள்விகேட்கும் அதிகாரம் அறவே இல்லை என்பதை விளக்க .
எந்த ஒரு ஆதாராமும் இல்லாத நிலையில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட ( பார்ப்பனர்கள் ) நலனுக்கு ஆத்தராவகவே தீர்ப்பை எழுதினர் . எந்த ஒரு குண்டு வெடிப்பு நிகழ்தாலும் எளிதாக முஸ்லிம்களை குற்றம் சுமத்தும் அரசியல் வாதிகள் , ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டபோது தனது சந்தேகத்தை பார்ப்பன தீவிராதிகள் மீது  சொன்ன குற்றத்துக்காக அந்துலே பட்டப்பாடு எல்லோர்க்கும் தெரிந்த ஒரு விடயமாகும் . ஆக இந்தியாவில் அரசை கேள்வி கேட்கும் உரிமை கண்டிப்பாக பார்ப்பனர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது .

அதுப்போலவே அப்சல் குரு தூக்கு சம்பவமும் மோடியின் பிரதமர் கனவும்.


அப்சல் குரு: எந்த ஒரு ஆதாராமும் இல்லாத நிலையில் நாட்டின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தும் நோக்கில் அவரை தூக்கில் போட்டது இந்திய ஜனநாயகம்.


மோடி உள்ளிட்ட கும்பல்கள்: தெஹெல்கா என்னும் ஊடகத்தில் நாங்கள் தான் இனப்படுகொலைகளை அரங்கேற்றினோம் , பெண்களை கற்பழித்து பின்னர் அவர்களை எரித்து கொன்றோம் என்று கொடுத்த பேட்டியை சாட்சியாக ஏற்க முடியாது என்று சொன்னது அதே இந்திய ஜனநாயகம் 


ஜனநாயக ஆட்சி முறையின் முக்கியமான அம்சம் மனிதனை படைத்த இறைவன்தான் மனிதனுக்கு வழிக்காட்ட சட்டங்களை இயற்ற முடியும் என்பதற்கு மாற்றாக மனிதர்களே தங்கள் வாழ்வுக்குரிய சட்டங்களை இயற்றிகொள்ளலாம் என்பதாகும் .அதாவது சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனை படைத்த இறைவனுக்கு இல்லை மாறாக மனிதனுக்கு உரியதாகும் என்ற கருத்து இதனுள் அடங்கி இருக்கிறது .இது கண்டிப்பாக இணை வைக்கும் செயல்தானே அன்றி வேறு இல்லை .

முஸ்லிம்களை பொறுத்த மட்டில் ஜனநாயகத்தை கடைபிடிப்பது என்பது இஸ்லாத்தின் அனைத்து அம்சங்களையும் நிராகரிக்கும் செயலாகும் . அநேக குர் ஆன் வசனங்கள் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் சட்டங்களை மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்பதையும் மற்ற அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்பதனையும் கட்டளை இடுகின்றன . மேலும் இந்த வசனங்களில் எந்த ஒரு மனிதன் அல்லாஹ்வின் சட்டங்களை ஏற்றுக்கொள்ளவில்லையோ அல்லது அதை அமல்படுத்தவில்லையோ அவனை நிராகரிக்கும் காபிர் என்றும் அநியாயக்காரன் என்றும் பாவி என்றும் கூறுகின்றன .

  " அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் ஆட்சி      செய்யவில்லையோ அவர் நிராகரித்த காபிர் ஆவார் " ( 5:44
  
 "மேலும் எவர் அல்லாஹ் வெளிப்படுத்தியதை  கொண்டு ஆட்சி  செய்யவில்லையோ அவர் அக்கிரமக்காரர் ஆவார் "(5:45)

"மேலும் எவர் அல்லாஹ்  வெளிப்படுத்தியதை கொண்டு ஆட்சி செய்யவில்லையோ அவர் வரம்பு மீறிய பாவியாவார் "(5:47)

  ஆகவே யாரெல்லாம் அல்லாஹ் வெளிப்படுத்திய சட்டங்களை கொண்டு ஆட்சி செய்யவில்லையோ அவர் அல்லாஹ்வின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மறுத்தவர் ஆவார் .
                                                                                       உங்கள்  சகோதரன் 
                                                                                                 Adirai Iqbal
குறிப்பு: நம் சகோ எதிர்குரல் ஆஷிக் அகமது .அ    தனது பதிவுகளின் இறுதியில் உங்கள் சகோதரன் எனப்போடுவது எனக்கு பிடித்துள்ளது எனவே நானும் இனி.....

5 comments:

R.Puratchimani said...

சகோ அதிரை,
குரான் மட்டும்தான் அல்லாவால் அருளப்பட்டது என்று மார்க்கபந்துகள் மூலம் அறிய நேர்ந்தேன்.
இப்பொழுது நீங்கள் (மற்றும் பிறர்) ஷரியா சட்டமும் அல்லாவால் அருளப்பட்டது என்கிறீர்கள்.
எனக்கு என்ன சந்தேகம் எனில் அல்லா ஏன் ஷரியா சட்டத்தை குரானுடன் இணைக்க (விரும்ப)வில்லை?
நீங்களும் பல மார்க்கபந்துக்களும் அறியாமையில் உள்ளதாகவே நான் உணர்கிறேன். ஒருவேளை நான் அறியாமையில் இருப்பதாக தாங்கள் நினைத்தால் புரியும்படி விளக்கம் அளிக்கலாம். எனக்கு மட்டும் சுவன கன்னிகள் வேண்டாமா என்ன? :)
(மக்கள் ஆட்சியில் உள்ள குறைகளை மக்களாகிய நாம் நிச்சயம் சரி செய்யலாம். நம்பிக்கை கொள்ளுங்கள்)
நன்றி

Adirai Iqbal said...

சகோ புரட்சிமணி !

இந்த பின்னூட்டம் இஸ்லாத்தை பற்றிய உங்கள் அறியாமையை காட்டுகிறது. குர்ஆனில் உள்ளதுதான் ஷரியா. ஷரியா சட்டம் என்பது அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட சட்டம் . இஸ்லாமிய ஆட்சியை பொருத்தவரையில் சட்டங்களை குர்ஆன் மற்றும் சுன்னா அடிப்படையிலே அமைக்கவண்டும்.

ஷரியத் சட்டம் என்றால் கொடூரமானது என்ற பிரச்சாரம் மேற்கத்திய ஊடகங்கள் பறப்படுகின்றன. ஆனால் உண்மை அவ்வாறல்ல.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கில் பாருங்கள் http://samuthayaarangam.blogspot.in/2013/01/blog-post_26.html

விஜய் said...

//அதாவது சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனை படைத்த இறைவனுக்கு இல்லை மாறாக மனிதனுக்கு உரியதாகும் என்ற கருத்து இதனுள் அடங்கி இருக்கிறது .இது கண்டிப்பாக இணை வைக்கும் செயல்தானே அன்றி வேறு இல்லை//

சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனுக்கு இல்லை என்றால் தண்டனை கொடுக்கும் அதிகாரமும் மனிதனுக்கு இருக்க கூடாது. மனிதன் தன்னுடைய விருப்பத்துக்கேற்ப சட்டம் இயற்ற வாய்ப்புள்ளது போல தண்டனையும் தவறாக வாய்ப்புள்ளது. எதுவாக இருந்தாலும் மறுமையில் பார்த்துக்கொள்ளலாம்.

R.Puratchimani said...

சகோ அதிரை இக்பால்,
யார் அறியாமையில்? நான் இருக்கலாம் மறுக்கமாட்டேன் ஆனால் உங்கள் அறியாமையை ஏற்ப்பதும் ஏற்க்காததும் உங்களை பொறுத்தது.

//இஸ்லாமிய ஆட்சியை பொருத்தவரையில் சட்டங்களை குர்ஆன் மற்றும் சுன்னா அடிப்படையிலே அமைக்கவண்டும்.//
இது நீங்க சொன்னது....

அடுத்ததும் நீங்க சொன்னதுதான்
//
ஜனநாயக ஆட்சி முறையின் முக்கியமான அம்சம் மனிதனை படைத்த இறைவன்தான் மனிதனுக்கு வழிக்காட்ட சட்டங்களை இயற்ற முடியும் என்பதற்கு மாற்றாக மனிதர்களே தங்கள் வாழ்வுக்குரிய சட்டங்களை இயற்றிகொள்ளலாம் என்பதாகும் .அதாவது சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனை படைத்த இறைவனுக்கு இல்லை மாறாக மனிதனுக்கு உரியதாகும் என்ற கருத்து இதனுள் அடங்கி இருக்கிறது .இது கண்டிப்பாக இணை வைக்கும் செயல்தானே அன்றி வேறு இல்லை .//

இப்பொழுது சொல்லுங்கள் குரான் சுன்னா அடிப்படையில் நீங்கள் சட்டம் இயற்றுவதும் இணை வைத்தல்தானே?அப்பொழுது உங்களுக்கு சுவனம் இல்லையா?

உங்கள் கூற்றில் உள்ள முரணை நீங்களே சிந்தித்து பாருங்கள்.

Adirai Iqbal said...

ஓ நீங்கள் அவ்வாறு புரிந்துகொண்டீர்களா? . அதாவது குர் ஆனில் உள்ள சட்டங்களை அமல்படுத்துவது என்பதைத்தான் இயற்றுவது என்று உள்ளேன். சில பிரச்சினைகளுக்கு குர் ஆன் சுன்னாவிற்கு மாற்றம் இல்லாமல் சட்டம் இயற்றவும் அனுமதி உண்டு ( கவனிக்க மாற்றமில்லாமல், அதாவது அதற்கு உட்பட்டு)

Post a Comment