test

Tuesday, February 12, 2013

பாய்ஹான் அல் காம்தி விவகாரம் !

விசுவாசிகளே, தீயவன் எவனும் உங்களிடம் யாதொரு செய்தியை கொண்டுவந்தால் , ( அதன் உண்மைத்தன்மையை அறியும்பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்துக்கொள்ளுங்கள். (இன்றேல், அவனுடைய சொல்லை நம்பிய உங்கள்) அறியாமையால் யாதொரு ஜனங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டு பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்து கவலைப்படுபடியும் நேர்ந்துவிடும் (அல்குர் -ஆன் 49:6).


இந்நிலைதான் எனக்கு ஏற்பட்டிருப்பது. செய்தியின் உண்மை நிலை தெரியாமல் நான் கண்டன பதிவிட்டது தவறு என்பதை உணர்கிறேன் .   எனது வருத்தத்தையும் இங்கு பதிவு செய்கிறேன். பேரண்பும் கருணையும் கொண்ட அல்லாஹ்(சுபு) என் பாவங்களை மன்னிப்பானாக .

இனி வரும் காலங்களில் செய்தியின் உண்மை நிலையை அறிந்த பிறகே நாம் பதிவிட வேண்டும் என்பதை இந்நிகழ்வு எனக்கு பாடமாக்கியுள்ளது . 


நான் எனது பதிவில் தந்தை மகளை கொன்றதாக மட்டுமே பதிவிட்டேன் . ஆனால் ஊடகங்களில் கற்பழிக்கப்பட்டதாக வந்த செய்தியை  நான் நம்பவில்லை ஏனெனில் இதற்கு முன்பு நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தை எதிர்க்கும் விதமாக நடந்த போராட்டங்களின்போது லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது . அப்பொழுது தூதரகத்தில் இருந்த ஒரு பெண் கற்பழிப்பட்டதாக இதேபோன்றே  அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன.

குறிப்பு: எனது வேலை விடயமாக ஊர் சென்று இருந்ததால் என்னால் இந்த மறுப்பை வெளியிட முடியவில்லை . 



No comments:

Post a Comment