test

Sunday, February 3, 2013

சவுதியில் மகளை கொன்றவனுக்கு தண்டனை குறைப்பு ?

பாய்ஹான் காம்தி என்பது கொல்லப்பட்ட ஐந்து வயது பெண்ணின் தந்தையின்(?) பெயர். இக்குழந்தையை சித்திரவதை செய்து கொன்றுவிட்டதாக அக்குழந்தையின் தாய் காம்தியின் முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட காம்திக்கு சில கால சிறை வாசத்திற்கு பிறகு இரத்த பணம் கொடுத்ததன் பேரில் விடுதலை செய்யபட்டுள்ளார். இந்நிகழ்வு அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


முதலில் அந்த மிருகத்திற்கு எதிராகவும் , சவூதி அரசுக்கு எதிராகவும் எமது கண்டனங்களை பதிவு செய்கிறேன். 

சவூதி அரேபியாவில் இஸ்லாமிய நடைமுறைகள் கடுமையாக பின்பற்றபடுவதாக மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் சவூதி ஆதரவாளர்களால் கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல.

பரம்பரை ஆட்சி, முதலாளித்துவ ஆட்சி , வீட்டில் பணிப்பெண்கள் , மகரம் அல்லாத வேலை ஆட்கள் அனுமதிக்கப்படுவது இஸ்லாத்திற்கு விரோதமானதாகும். 

சில சட்டங்கள் ஷரியா வடிவில் இருந்தாலும் முழுமையான அளவில் இல்லை . மேலும் தீர்ப்புகளில் பாரபட்சங்கள் காட்டப்படுகின்றன என்பதையும் கடந்த கால நிகழ்வுகளில் காணலாம்.


அமெரிக்க, ஐரோப்பியர்களுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப் படுவதில்லை, ஏழை தென்னாசிய நாட்டவர்களுக்கு மட்டுமே மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதும் ஒரு கசப்பான உண்மையாகும். 

சவூதி அரேபியாவில்  எண்ணெய்  கண்டுப்பிடிக்கப்பட்டப்பிறகு அங்கு நிறைய தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இதனால் சவுதிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதியின் சட்டப்படி மேற்கத்தியர்களை தண்டிக்க முடியாது.  இப்படி வளைந்து கொடுப்பது இஸ்லாமிய ஷரியாவில் அனுமதியே இல்லை அவன் யாராக இருந்தாலும் ஏன்  அவன் ஒரு ஆட்சியாளராக கலீபாக இருந்தாலும் சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் இந்த நடைமுறை சவுதியில் பின்பற்றபடுவதில்லை. உண்மை இவ்வாறு இருக்க அங்கு ஷரியா ஆட்சி நடக்கிறது என்ற கூப்பாடு ஒரே நேரத்தில் சவூதி ஆதரவாளர்களாலும் இஸ்லாத்தின்  விரோதிகளாலும் ஒரே நேரத்தில் எழுப்படுகின்றன. 

இதுப்போன்ற நிகழ்வுகளை வைத்து இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்கிறார்கள் இஸ்லாத்தின் விரோதிகள்.

மேலும் விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம் ... இன்ஷா அல்லாஹ்

4 comments:

Ethicalist E said...

"இதுப்போன்ற நிகழ்வுகளை வைத்து இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்கிறார்கள் இஸ்லாமிய விரோதிகள்."
இதை விமர்சிப்பவர் சகல மதங்களிலும் நடக்கும் அநீதிகளை விமர்சிப்பவராக இருந்தால் எப்படி அவரை இஸ்லாமிய விரோதிகள் என்று குறிப்பாக நீங்கள் குற்றம் சாட்ட முடியும்.

Adirai Iqbal said...

சவூதி அரசின் ஆட்சி நடைமுறைகள் இஸ்லாத்தின் வழியில் இல்லை. அங்கு ஒரு வகையான முதலாளித்துவ ஆட்சிதான் நடைப்பெருகிறது என்பதனை அனைவரும் அறிவர். ஆனால் சவூதி அரசு நிகழ்த்தும் தவறுகளை இஸ்லாத்தோடு முடிச்சுப்போடுவது என்பது எவ்வாறு நியாயமாக இருக்க முடியும். அங்கு ஆட்சி முதலாளித்துவ ஆட்சியை ஒத்து இருக்கும்போது முதலாளியம்தானே அங்கு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

Anonymous said...

After reading your blog, I gain confidence in Islam and respect your neutral views..

சார்வாகன் said...

சகோ அதிரை இக்பால்,

உங்களின் நடுநிலைக்கு நம் வாழ்த்துக்கள்,பாராட்டுகள்!!

உங்கள் போல் தாவா பதிவர்கள் எழுதினால் நாங்கள் ஏன் விமர்சிக்கப் போகிறோம்?

சவுதி நடைமுறை சட்டத்தை விமர்சித்தால் இஸ்லாமை விமர்சித்ததாக திசை திருப்பும் சகோக்களுடன் மல்லுக் கட்டி மாளவில்லை!!

பாருங்க ஆசிட் அடித்தால் ஆசிட் அடி அதுதான் ஷரியா என ஒரு பதிவு!!!


இவர்களால் இஸ்லாமுக்கு கெட்ட பெயர் வருகிறது என்கிறேன்!!

நன்றி!!!

Post a Comment