test

Thursday, February 21, 2013

காவி தீவிரவாத பேச்சு மன்னிப்புகேட்ட ஷிண்டே: உண்மை நிலவரம் என்ன

பிரங்க்யா தாகூர் 
சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே காவி தீவிரவாதத்தைப்பற்றி கருத்து தெரிவித்திருந்தார். 

அது 

ஆர்.எஸ்.எஸ், பி.ஜெ.பி போன்ற இந்துத்துவ அமைப்புகள் பயங்கரவாத பயிற்சிகளை அதன் தொண்டர்களுக்கு அளிப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.   அதற்கு இந்துத்துவ அமைப்புகள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து ஒரு பெரிய ஆர்பாட்டமே செய்துவிட்டார்கள் . பின்னர் அவரை மன்னிப்பு கேட்கும் வரையிலும் வந்து நிறுத்திவிட்டனர்.

அப்படி அவர் என்ன தவறாக சொல்லிவிட்டார் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு. சிலர் இதனை கருத்து சுதந்திரத்தோடு முடிச்சுப்போடுகிறார்கள். இப்படி சொல்வதன் மூலம் இது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று நிறுவ முயல்கிறார்கள். உண்மைதான் என்ன?

 2001 இருந்து நடந்த குண்டுவெடிப்புகள் அபினவ் பாரத், ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று நம் அனைவருக்கும்  தெரியும். சிலர் கேட்கலாம் , மீதம் உள்ள குண்டுவெடிப்புகள் யாரால்? முஸ்லிம்கள்தானே செய்திருப்பார்கள்.

இதனை காந்தி கொலையிலிருந்துதான் அணுகவேண்டும் . அயோக்கியன் கோட்சே காந்தியை கொல்லும் சமயம்  தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி  இருந்தான்  ,சுன்னத் செய்திருந்தான் ஏன்?எதோ தெரியாமலா செய்துவிட்டான் ஆர் எஸ் எஸ்ஸின் சிந்தாந்தமே அப்படித்தான்.

அதுபோல மற்ற குண்டுவெடிப்புகள் மீண்டும் பாரபட்சமற்ற முறையில் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் உண்மை தெரியவரும்.


சரி இந்துத்துவ வாதிகள்  தீவிரவாத பயிற்சி பெறுகிறார்களா இல்லையா?


நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளிகளுக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் ஒரு அப்பாவியை தூக்கில் போட்டது இந்திய ஜனநாயகம். அதே நேரத்தில் இந்திய நாளுமன்றத்தை கவிழ்த்துவிட்டு இந்துத்துவ அரசை அமைக்க சதித்திட்டம் தீட்டி செயல்பட்டுவரும் இந்துத்துவ பயங்கரவாத கும்பல்களிடம் மன்னிப்பு கேட்டு மண்டியிடுகிறது.

கர்னல் புரோகித் தெரியுமா?. அவன் என்ன விதமான செயல்திட்டங்களில் செயல்பட்டான் என்று தெரியுமா?.

நாட்டை நிர்மூலமாக்கிட திட்டம் போட்டவர்களின் செயல்வீரராக பணியாற்றிவந்தான் இந்த பிரசாந்த் புரோகித். இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே, நாட்டுக்கெதிராக சதிகளை நிறைவேற்றிய சதிகாரன். 

இவனின் இந்த இந்துத்துவாவினரின் சதிகளை கண்டெடுத்தவர் ஹேமந்த் கர்கரே என்ற மராட்டிய காவல் துறை அதிகாரி.  இதற்காகத்தான் 26/11 என்ற மும்பை தீவிரவாத தாக்குதல் மூலம் அபினவ் பாரத் சார்ந்தவர்களின் வழி  இவர் கொலைசெய்யப்பட்டார். இந்த மும்பை தாக்குதல் சம்பவமே இவரை கொல்வதற்காகத்தான் என்று சொல்லப்படுகிறது.

நாட்டுக்கெதிரான சதிகளை  ஹேமந்த் கர்கரே, கர்னல் புரோகித்தின் லேப்டாப் மூலமே அறிந்தார். மொத்தம் அவர் கண்டெடுத்தது 20 லேப்டாப்கள். அதில் இரண்டின் பதிவுகளே நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.

அதிலிருந்து சில ஆவணங்கள்.....

ஆவணம் எண் :78 பெயர் குறிப்பிடவில்லை: ஒரு சாட்சி கூறுகிறார்.

காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேயை கொலை செய்தவர்கள் சாதாரண சாட்சி சொல்பவர்களை கொல்லமாட்டார்களா என்ன? எனவே அவருடைய பெயர் மறைக்கப்படுகிறது. 

ஆவணம்: (சுருக்கமாக) சுவாமிஜி சுதாகர் திரிவேதி (எ) அமிர்தானந் தேவ தீர்த் என்னிடம், போன்சாலா இராணுவ பள்ளியில் ஒரு கூட்டத்தில் கலந்திட சொன்னார்கள். நான் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் குண்டுகளை வைத்து வெடிக்க செய்ய வேண்டும். இதற்காக பெரிய அளவில் நிதி திரட்டியாகவேண்டும்.

ஏப்ரல் -11,2008ல் நான் போப்பால் சென்றிருந்தேன் அங்கே ஒரு கலந்தாலோசனை கூட்டம் நடைப்பெற்றது. அதில் சுவாமிஜி அவர்களும் டாக்டர் ஆர்.பி.சிங் ( இவர் மகாராஷ்டிரா மிலிட்டரி ஃபவுண்டேஷன் என்ற இந்துத்துவ ரானுவப்பள்ளியை நடத்தி வருபவர்) அதே நேரத்தில் அபினவ் பாரத் என்ற அமைப்பிலும் அங்கத்தினராக இருப்பவர்.  பிரக்கியா சிங் தாகூர், கலோனல் புரோகித், மேஜர் உபாத்யாயா பாரத். ஷமீர் குல்கர்னி , ஹிமானி சாவர்கர்.  ஆகியோர் கலந்துகொண்டார்கள். 

இதில் முஸ்லிம்களை பழிவாங்கவேண்டும் என்றும் அதற்கு உரிய இடம் மாலேகான் என்றும் அங்கு முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்வதால் பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்றும்  , அதுவே சரியான இடம் என்று கலோனல் புரோகித் கூறினார். அதற்கு அனைவரும் ஒத்துக்கொண்டார்கள்.

இதற்கான் ஆட்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பை பிரங்க்யா சிங் தாகூர் ஏற்றுக்கொண்டார்.

மேலும் சில ஆவணங்களிலிருந்து 

வெளியிலிருந்து செயப்படும் இந்து அரசு 

சாட்சியம் 121 : புரோகித் இந்தியாவிற்கு வெளியிலிருந்து இயங்கும் இந்து அரசாங்கம் பற்றி மேலும் கூறுகிறார். அதில் புரோஹித் பல தகவல்களை சொன்னார். அதில் புரோகித ஆயுதங்களை வாங்கிடும் அமைச்சகம்(MINISTRY OF PRECAREMENT) பற்றி பேசினார். ஆயதங்கள்  வாங்கும் அமைச்சகத்தின் வழி இஸ்ரேலுடனும் தாய்லாந்துடனும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.

 இன்னொரு அமைச்சகத்தப்பற்றியும் கூறினார். அதன் பெயர்( MINISTRY OF OUTSOURCING) இந்த  அமைச்சகம் நமது அமைப்பில் அங்கம் வகிக்காதவர்களை எப்படி நமது தாக்குதல்களில் பயன்படுத்திடலாம் என்பதை ஆலோசிக்கும் உத்திகளை கண்டுபிடித்து செயல்படுத்தும். 

மேலும் இந்து அரசை எதிர்க்கும் இந்துக்களை அரசியல் பகிஷ்காரம் செய்திட வேண்டும் என்றும் கலோனல் புரோகித் கூறினார். நாம் அரசியல் பகிஷ்காரம் எனச்சொல்வது அவர்களை பூமியிலிருந் அப்புறப்படுத்துவதாகும் என்றார் . 

இந்துத்துவாதிகள் இஸ்ரேல்  உள்ளிட்ட வெளிநாடுகளுடன் தொடர்பு :

சாட்சியம் 128 :

கலோனல் புரோகித்: நான் வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்தியுள்ளேன் அவற்றை பற்றி வெளிப்படையாக பேசலாமா?

எஸ்.திரிவேதி : சர் சொல்லுங்கள்.

கலோனல் புரோகித் : நான் இஸ்ரேலை தொடர்புகொண்டேன். நமது தளபதிகளில் ஒருவர் இஸ்ரேலிலிருந்து திரும்பி வந்திருக்கிறார். அவரிடம் இஸ்ரேலிய ராணுவத்தினர் எதையாவது நடத்திக்காட்டுங்கள் எனக்கூறி இருக்கிறார்கள். நீங்கள் உங்களது இணையத்தளத்தை கூட இன்னும் முறையாக செயல்பட வைக்கவில்லை என்ற பொருளில் பேசி இருக்கிறார்கள். நாம் அவர்களிடம் நமது திட்டங்கள் அடங்கிய காகிதங்களை கொடுத்தோம். அவர்கள் ஆறு மாதங்கள் பொறுங்கள் எனக்கூறி உள்ளார்கள்.
கலோனல் புரோகித் 

நாம் இஸ்ரேலிடம் நான்கு விஷயங்களை கேட்டிருக்கிறோம் 

1. இடையூறே இல்லாமல் தொடர்ந்து ஆயுதங்களும், பய்ற்சிகளும் நமக்கு தந்திட வேண்டும்.

2. காவிக் கொடியுடன் நமது அலுவலகத்தை நாம் டெல் அவிவ் (இஸ்ரேலின் தலை நகர்) அமைத்து இயக்கிட அனுமதிக்க வேண்டும்.

3. இந்தியாவில் நமக்கு நெருக்கடி ஏற்படும்போது இஸ்ரேலில் நமக்கு அரசியல் புகலிடம் வழங்க வேண்டும். 

4. நமது இலட்சியங்களுக்கும் இந்து அரசுக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் ஆதரவு பெற்று தந்திட வேண்டும். உலக அரங்கில் இந்து நாடு பிறந்துவிட்டது எனக்கூறி  அங்கீகாரம் பெற்றுத் தந்திட வேண்டும்.

இஸ்ரேலியர்கள் இரண்டை ஏற்றுக்கொண்டார்கள் இரண்டை ஏற்றுக்கொள்ளவில்லை. 

அவர்கள் நமது இந்து அரசின் தேசியக்கொடி டெல் அவீவில் பறப்பதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் தற்போதைய இந்திய அரசின் உறவு பாதிக்கும் எனவும் கூறினர்.

உலக அரங்கில் நமது இயக்கத்திற்கு ஆதரவு சில ஆண்டுகள் வரை தர இயலாது எனவும் தெரிவித்திளனர்.

ஆயுந்தங்களும் பயிற்சிகளும் தங்கு தடையின்றி கிடைக்கும். ஆனால் அவ்வப்போது (தீவிரவாத தாக்குதல்களை நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்து அவர்களிடம் காட்ட வேண்டும்.

இன்னும் சில முன்னேற்றங்கள் உண்டு .....

நேபாள மன்னர் கஜேந்த்ரருடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தேன். 2006 ஜூன் ஜூலை ஒரு முறையும் பின்னர் 2007 இல் ஒரு முறையும் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்திருந்தேன். இவையெல்லாம் சிறப்பாக நடந்தன. 
ஹேமந்த் கர்கரே 


நமது ராணுவத்தில் கலோனல் போரஜ்பால் என்றொருவர் இருக்கிறார். இவர்தான் இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கிறார். அவருக்கு இப்போது நமது இந்திய இராணுவத்தின் உளவுத்துறையோடு பணியாற்றிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதையும் நன்றாக பயன்படுத்திகொலள்கின்றோம் 

நாங்கள் மன்னர் கஜெந்திரரை சந்தித்தபோது நான் அவரிடம் நமது கோரிக்கையை வைத்ததேன். அவர் அதனை ஏற்றுக்கொண்டார். இஸ்ரேலுக்கு பணம் தரும் பொறுப்பு அவருடையது. இஸ்ரேல் நமக்கு தங்கு தடையின்றி ஆயுதமும் பயிற்சியும் தந்திடவேண்டும். நான் இருபது இளைஞர்களை நமது அமைப்பிலிருந்து பயிற்சிக்கு அனுப்புவேன். ஆறு மாதத்தில் அவர்கள் எல்லா பயிற்சியையும் முடித்து வருவார்கள். இதன் மூலம் 40 பேரை ஒவ்வொரு வருடமும் நான் பெறுவேன். அவர்களை இங்கே அதிகாரிகளாக நியமித்து இங்குள்ளவர்களுக்கு பயிற்சி தருவேன். என்னுடையவர்களில் 200 பேர் தேறியவுடன் அவர்களை கொண்டு 400 பேருக்கு பயிற்சி தருவேன். 

நான் செக்கோஸ்லாவியா நாட்டுடனும் தொடர்பு வைத்துள்ளேன். அங்கிருந்து நமக்கு ஏ.கே ரக துப்பாக்கிகள் கிடைக்கும். இதற்கான பணத்தை நாமே கொடுத்துவிடலாம். 

.............இவற்றியெல்லாம் கைக்கு கொண்டுவந்து செயல்கலத்தில் செயல்படுத்திட ஓர் அமைச்சகத்தை ஏற்படுத்தி இருக்கிறேன் . அதை பாதுகாப்பு அமைச்சகம் (MINISTRY OF DEFENCE)  என்று அழைக்கவில்லை அதற்கு போர் அமைச்சகம் ( WAR MINISTRY)  எனப் பெயர் வைத்திருக்கிறேன். நாம் நம்மை பாதுகாப்பது என்பது அல்ல நாம் தாக்குதல்களை நடத்திட இருக்கிறோம்.

நமது ராணுவத்திலும் இதர பாதுகாப்பு படைகளிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். எனக்கு நன்றாக தெரியும் நமது பட்டாளத்திற்கும் நமது எல்லை பாதுகாப்பு படையினர்க்கும் இடையில் நிரம்ப கருத்து வேறுப்பாடு உள்ளது. அதேபோல் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் நல்லுறவு இல்லை. பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த மத்திய பாதுகாப்பு படையினருக்கும் போலிஸ் என்ற காவல் படைக்கும் எந்த தொடர்புமில்லை. நாம் இந்த சூழ்நிலையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.


இதை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டை சொல்லிட வேண்டும் என்றால், நான் நம்மிடமிருக்கும் ஒரு வாகனத்திற்கு இராணுவ வாகனம்போல் சாயமடிக்கிறேன், அதில் நமது இளைஞர்களை ராணுவ உடை அணியசெய்து மீரட்( முஸ்லிம்கள் அதிகமாக வாழும்) பகுதியில் தாக்குதல்கள் நடத்துகிறேன் என வைத்துக்கொள்வோம். இதனால் நமக்கு எந்த பிரச்சினையும் வராது. அந்த வாகங்கள் பத்திரமாக திரும்பி வரும். மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். மக்கள் என்ன பேசிக்கொள்வார்கள் எறால் ராணுவம் வந்தது தாக்குதல் நடத்திற்று ஏன் எதற்கு என்று தெரியவில்லை  நாட்டில் குழப்பங்கள் மிகைத்து நிற்கின்றன என்பார்கள்.

நாம் இந்த குழப்பங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

டாக்டர் ஆர்.பி.சிங்:  ஆமாம்! செய்வோம்.


புரோகித் மேலும் தொடர்கின்றான் .... 
               ...............................இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் முற்றுபெறும் 

நன்றி:
1. http://www.indianexpress.com/comments/Purohit-planned-Israel-based-Hindu-govt-in-exile-support-from-Thai-contacts-ATS-chargesheet-today/412947/2

2. http://expressindia.indianexpress.com/latest-news/ATS-files-chargesheet-in-Malegaon-blast-case/413034/

3. http://dnasyndication.com/dna/article/DNPUN20465

4. http://articles.timesofindia.indiatimes.com/keyword/purohit

5. மு. குலாம் முஹம்மத் ஆசிரியர் வைகறை வெளிச்சம் 
                                                          

2 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.இக்பால்,

விபரமான பதிவு. நன்றி சகோ.

அப்புறம்... saffron terrorism, hindu terrorism, hindutva என்று கூகிள் இமேஜில் தேடினாலே பக்கம் பக்கமாக ஹிந்துதுவா இயக்கத்தினரின் காவியும் இரத்தமுமாகவே உள்ளது..!

உண்மையை சொன்னவரை மன்னிப்பு கேட்க வைத்து விட்டதாலேயே பாஜகவும் ஆர்எஸ்எஸ் வும் மற்றும் பல ஹிந்துதுவா இயக்கங்கள் ஏதும் பயங்கரவாத பயிற்சி தரவில்லை என்று ஆகிவிடாது.

ஏதோ, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும், "ஹெலிகாப்டர் ஊழல்" பிரச்சினை விவாத்தத்திலும் பாஜாகவினர் அமைதி காப்பார்களே என்ற நப்பாசையில் காங்கிரஸ் அப்படி அமைச்சர் ஷிண்டேவை மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தி இருந்திருக்கலாம்.

Adirai Iqbal said...

அலைக்கும் சலாம் சகோ !

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

//ஏதோ, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும், "ஹெலிகாப்டர் ஊழல்" பிரச்சினை விவாத்தத்திலும் பாஜாகவினர் அமைதி காப்பார்களே என்ற நப்பாசையில் காங்கிரஸ் அப்படி அமைச்சர் ஷிண்டேவை மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தி இருந்திருக்கலாம்.//

நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்.

ஷிண்டே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கேள்விப்பட்டேன் . அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை

Post a Comment