test

Wednesday, February 13, 2013

அப்சல் குரு படுகொலை - நாடாளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்பு படைகளின் பங்கு

PUDR( People's for Democratic Rights) பற்றி தெரியுமா? .  அவர்கள் நாடாளுமன்ற தாக்குதல் பற்றி வெளியிட்ட ஆவணத்தொகுப்பு என்ன கூறுகிறது தெரியுமா?

PUDR என்பது ஜனநாயக உரிமைக்கான ஒரு அமைப்பாகும் . இவ்வமைப்பு  ஆவணத்தொகுபொன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்திற்கு  டிசம்பர் 13 ஜனநாயகத்தின் மேல் தீவிரவாதம் என தலைப்பிட்டிருந்தது.


வழக்கம்போலவே ஊடகங்கள் அதனை ஏறெடுத்தும் பார்த்திடவில்லை.

அதில் பக்கம் 47 இல் 

அப்சல் குரு நீதிபதியின் முன் கொடுத்த வாக்குமூலத்தின் ஒரு பகுதியையும் இதர தடயங்களையும் தொகுத்து ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் நாடாளுமன்றத் தாக்குதல் சதியில் பாதுகாப்பு படைகளும் தங்கள் கைவரிசையை காட்டி இருக்கின்றன என்ற கசப்பான உண்மை வெளிவருகின்றது.

நமது நாடாளுமன்ற தாக்குதல் அதை தாக்கிட நடந்த முயற்சியில் நமது பாதுகாப்பு படைகளின் பங்கு என்பவை எத்துனை பாரதூரமான பதிவு. இதில் இன்றளவும் எந்த விசாரணையும் இல்லை அரசு தரப்பிலிருந்து.

ஆனால் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம் ஒரு பெரும் ஆய்வை நடத்தி ஆவணத் தொகுப்பொன்றை மக்கள் மன்றத்தில் வைத்திருக்கின்றது. அதில் இந்த வரிகள் ஒரு பெரும் சவாலை தொடுத்துக்கொண்டே இருக்கின்றன. 

அதனை மீடியாக்கள் கண்டுக்கொள்ளவே இல்லை.

மொத்தத்தில் காஷ்மீரின் STF என்ற சிறப்பு படையும் ராஜ்பிர்சிங் என்ற டெல்லி காவல் துறை ஆணையரும் ஏற்பாடு செய்ததே இந்த நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி என அந்த PUDR ஆவணம் உணர்த்திற்று.

இதில் கைதிகளாக காவல் துரையின் கட்டுப்பாட்டிலிருந்த பல காஷ்மீர் முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.

அப்சல் குருவின் விவகாரத்திலும் இதுவே நடந்தது.

அப்சல் யார்?

முஹம்மத் அப்சல் வறுமையில் வாடிய ஓர் ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய தந்தை அவருடையை இளம் பருவத்திலேயே இறந்து போனார். அவருடைய அண்ணன் ஏஜாஸ் அகமத் தான் அவரை வளர்த்தார். ஏஜாசால் நன்றாக படித்திட இயலவில்லை. அதனால் அவன் தன் தம்பியை படிக்க வைக்க விரும்பினார். தம்பி அப்சல் குரு படிப்பதில் ஆர்வம் காட்டினான். அப்சல் குரு நன்றாக படித்து தான் ஒரு மருத்துவராக விரும்பனான். இந்த இலட்சியத்தை அடைய ஏஜாஸ் உதவி செய்தார்.

காஷ்மீரில் போர் 

அப்சல் மருத்துவ படிப்பில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தான். அப்போது தான் காஷ்மீரின் இளைஞர்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அந்த போராட்டம் 1987 இல் காஷ்மீரில் நடந்த பொது தேர்தலுக்கு எதிரான போராட்டம். இந்த தேர்தலில் ஜெயித்தவர்கள் சிறையிலடைக்கபட்டார்கள். மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் சட்ட சபைக்கு அனுப்பப்பட்டார்கள். (ஒரு பெரும் ஜனநாயக படுகொலை நடந்தது)

இந்த போராட்டம் காலாகாலமாக காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஒடுக்குமுறை இவற்றிற்கு எதிராக எழுந்தது. தாமாக மக்கள் படை திரண்டு பல பத்தாண்டுகளாக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடத்திய போராட்டம். இந்தப் போராட்டத்தில் நடந்த ஊர்வலங்கள் பல மைல் நீளம் கொண்டவை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெகுண்டெழுந்தார்கள்.

தாங்கள் உலகில் வைத்திருந்த அபிலாஷைகளை புறந்தள்ளிவிட்டு தங்களது இல்லங்களை துறந்து பணிமண்டலங்களை கடந்து பாக்கிஸ்தான் வசமுள்ள காஷ்மீருக்கு சென்று ஆயுத பயிற்சி எடுக்க சென்றார்கள். அப்சல் குருவும் அவர்களில் ஒருவன்.

மூன்று மாதங்களுக்கு பின் அவன் திரும்பி வந்துவிட்டான். காரணம் பாக்கிஸ்தானும் தன அரசியல் விளையாட்டுக்காக காஷ்மீர் இளைஞர்களை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டான். அதனால் அவனது சிந்தனைகள் மாறின. அவன் திரும்பி வந்தான். நமது எல்லை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தான். அவன் சரணடைந்ததற்கு நமது எல்லை பாதுகாப்பு படையினர்  விதித்த நிபந்தனை அவன் இன்னும் இரண்டு பேரை சரனைந்திட செய்திட வேண்டும். இந்த நிபந்தனையையும் அவன் நிறைவேற்றிடவே செய்தான். 

அப்சல் வேலை தேடினான் வாழ்வதற்கு. மருத்துவ உபகரங்களை விற்பனை செய்யும் வேலை ஒன்று அவனுக்கு கிடைத்தது. இது அவனுடைய மருத்துவராக வேண்டும் என்ற ஆசையை ஓரளவுக்கு ஈடு செய்வதாக இருந்தது. இதில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வருவாயாக கிடைத்தது. அவன் திருமணம் செய்துகொண்டான்.

திருமணமான இரண்டு நாள் கழித்து காஷ்மீரின் சிறப்பு படையைச் சார்ந்த சிலர் அப்சல் குரு வீட்டுக்கு வந்தார்கள். அவரை அவர்களுடைய முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அவரை அவர்கள் ஏறத்தாழ ஒரு மாதம் வைத்திருந்தனர். ஒவ்வொரு நாளும் குரூரமான சித்திரவதைகளுக்கு அவர் ஆளாக்கப்பட்டார்.


அவருடைய மலத்துவாரத்தில் பெற்றோலை ஊற்றினார்கள். குளிர்ந்த நீரில் பல நாள் வைத்தனர். கடுமையான உதைகளுக்கும் அடிகளுக்கும் ஆளாக்கப்பட்டார்.

அவரை இந்த சித்திரவதைகளிலிருந்து விடுவித்து வெளியே விடவேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாயை தந்திட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்கள் STF என்ற காஷ்மீர் சிறப்பு படையினர். இந்த சிறப்பு படையினர் காஷ்மீர் மக்களிடம் தண்டால் வசூல் செய்வதில் மிகவும் பிரசித்திப் பெற்றவர்கள்.

அப்சல் குருவின் மனைவி தபசும் தன்னிடமிருந்த எல்லா அணிமணிகளையும் விற்ற பின்தான் இந்த ஒரு லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்திட முடிந்தது. அப்சல் பயன்படுத்திகொண்டிருந்த ஸ்கூட்டரை அவனுடைய தாய் விற்றுவிட்டார். இந்த ஒரு லட்சம் ரூபாய் என்ற இலக்கை அடைந்திட.

ஒரு லட்சம் ரூபாயை தந்தார்கள். அப்சலை மீட்டார்கள். ஆனால் அவரை ஒரு நடைப்பிணமாகவே குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்கள்.

அப்சல் சிறப்பு படைகளின் வசம் இருந்த நாள்களை அந்த குடும்பத்தினரால் மறக்க முடியவில்லை.

மக்கள் எழுச்சி

அடுத்து அப்சல் சிறப்பு படையின் தகிடுதத்தங்களை வெளியே சொன்னால் என்ன நடக்குமோ, இந்த சிறப்பு படையினர் என்ன செய்வார்களோ என்ற பீதியும் பயமும் அப்சலின் குடும்பத்தைதொற்றிக்கொண்டது. 


இந்த பயம் அப்சலை விட அவருடைய அண்ணன் ஏஜாசை அதிகமாக தொற்றிக்கொண்டது மொத்த குடும்பமும் பீதி வயப்பட்டது .

இந்த சிறப்பு படையை அகற்றிட வேண்டும். அது நடத்தும் சித்திரவதை கூடங்கள் அகற்றப்பட வேண்டும். என்றும் மக்கள் போராடினார்கள். உலகெங்கிலுமிருந்து காஷ்மீரை பார்வையிட வந்த மனித அமைப்புகள் போராடின. ஆனால் நம் நாட்டு ஊடகங்களோ இதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

நம் நாட்டு மனித உரிமை அமைப்புகள் காஷ்மீர் மக்களை சித்திரவதை செய்தால் அது நாட்டுப்பற்று என எடுத்துக்கொள்கிறார்கள் என்று நந்திதா ஹாக்சர் ஆதங்கப்படுகிறார்.
நந்திதா ஹாக்சர் 


இந்த நந்திதா ஹாக்சர் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பிரதான குற்றவாளி SAR ஜீலானிக்காக வாதாடியவர்.

STF என்ற  காஷ்மீர் சிறப்பு படையின் மீது மக்கள் எந்த அளவுக்கு வெறுப்புக் கொண்டார்கள், அந்த வெறுப்பால் எவ்வாறு ஒருமுகப்பட்டு நின்றார்கள் என்றால் இந்த சிறப்பு படையை அகற்றிடுவேன் என்று வாக்குறுதி கொடுத்தால் தேர்தலில் வென்றிடலாம் என்ற நிலை இருந்தது.

உண்மையில் இப்படி ஒரு வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கித்தான் மு ஃ தி செய்து என்பவர்  காஷ்மீர் தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தார்.

சில நாட்கள் கழித்து இந்த சிறப்பு படையினர் அப்சலிடம் அவர்கள் சொல்லும் நபர்களை வேவு பார்த்து தந்திட கட்டாயப்படுத்தினார்கள்.  இராம் மோகன் ரான் என்ற 22 ராஷ்டிரிய ரைபிள் படையை சார்ந்தவர் அப்சலை அழைத்துச் சென்று அவனுடைய மறைவிடங்களில் மின்சாரத்தைப் பாய்ச்சினார். அவரை அவமானப்படுத்தினார்கள். வதைத்தார்கள் வைதார்கள்.

                                                                                இன்ஷா அல்லாஹ் தொடரும் .......

நன்றி: வைகறை வெளிச்சம் , மு.குலாம் முகம்மது 

        
                                                                                    

1 comment:

R.Puratchimani said...

//மூன்று மாதங்களுக்கு பின் அவன் திரும்பி வந்துவிட்டான். காரணம் பாக்கிஸ்தானும் தன அரசியல் விளையாட்டுக்காக காஷ்மீர் இளைஞர்களை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டான். அதனால் அவனது சிந்தனைகள் மாறின. அவன் திரும்பி வந்தான். நமது எல்லை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தான்.//
இந்த கூற்றில் சில உண்மை சில பொய். பலர் பயிற்சிக்கு சென்று வந்தது பாதுகாப்பு படையினருக்கு தெரிந்துவிட்டது.அவர்களிடமிருந்து தப்பிக்க அப்சல் 25 நாட்கள் வீட்டுக்குள்ளே இருந்துள்ளார். பிறகு டெல்லி சென்றுள்ளார். (இது நடந்தது 89-90 என தெரிகிறது)

டெல்லியில் பிழைப்புக்கு பல வேலைகள் செய்த அப்சல் படித்து பட்டமும் பெற்றார். இது மிகவும் பாராட்டத்தக்க விடயம். பிறகு 93-94 இல் அவர் காஷ்மீருக்கு சென்று சரணடைந்துள்ளார்.
பக்கம் 154

http://books.google.co.in/books?id=PeVW26gYhsYC&pg=PA208&source=gbs_toc_r&cad=4#v=onepage&q&f=false

Post a Comment