test

Friday, February 1, 2013

அமெரிக்காவை தாக்கிட ஈராக் தயாராகிறது?

அமெரிக்காவை கையகப்படுத்தினால்தான், ஆயுத பலம் பொருந்திய ஈராக் அமெரிக்க கண்டத்தை முழுமையாகக் கையகபடுத்திட இயலும் எனக்கருதுகிறது. அமெரிக்க கண்டத்தை முழுமையாக கையகப்படுத்தினால்தான்  அத்தனை இயற்கை வளங்களையும் ஏகபோகமாக அனுபவிக்க இயலும் எனவும் கருதுகின்றது வல்லரசு ஈராக்.

இப்போது ஈராக் அமெரிக்காவின்மீது குண்டு மழைப்பொழிய காரணம் தேடுகின்றது. அந்தக்காரணங்கள்  ஓரளவுக்காவது உலகம் ஏற்றுக்கொள்பவையாக இருந்திட வேண்டும் எனவும் கருதுகின்றது வல்லரசு ஈராக்! 

ஆகவே அமெரிக்காவை ஆக்கிரமிக்க ஈராக் இப்படி அறிவிக்கின்றது.

அமெரிக்காவின் நிறவெறி இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் அப்படியேதான் இருக்கின்றது. அங்கே கறுப்பர்களுக்கு எந்த சுதந்திரமும் இல்லை. அவர்களை ஆப்பிரிக்க நாடுகளான அவர்களின் சொந்த நாட்டிலிருந்து கடத்தி வந்துவிட்டது அமெரிக்கா. அவர்களை இன்றளவும் ஆடுமாடுகளைப்போல்தான் நடத்துகின்றது. ஆகவே கறுப்பர்களும் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால் அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பிடவும் அனுமதிக்கப்படவேண்டும்.  கறுப்பர்களுக்கு இந்த சுதந்திரத்தை பெற்றுத்தருவது ஈராக். இந்தக் கடமையை நிறைவேற்றிட- இந்த உரிமைய கறுப்பர்களுக்கு பெற்றுத்தரவேண்டும். இதற்காக அமெரிக்கா மீது போர் தொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை.( இப்படி அறிவிக்கின்றது வல்லரசு ஈராக்)


போரிலிருந்து தவிர்த்துக்கொள்ள அமெரிக்கா விரும்பினால் நாளை மறுநாள் 9.05 மணிக்குள் கறுப்பர்களுக்கு  எதிரான குற்றங்களுக்கெல்லாம் நீதி வழங்கப்படவேண்டும். மேலும் ஜப்பானில் அணுகுண்டு வீசி இலட்சக்கணக்கான மக்களை கொன்றுகுவித்த குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.  

இதனை அமெரிக்க அரசு செய்யத் தவறினால் அல்லது அவர்களுக்கு மனமில்லை என்றால் அவர்கள் எங்கள் முன் சரணடைந்துவிட வேண்டும்.

இல்லையேல் நாளை மறுநாள் 9.06 மணிக்கு அமெரிக்கா மீது ஆயுத தாக்குதல் நடைப்பெறும்.

அமெரிக்காவுடன்  நாங்கள்(ஈராக்)தாக்குவதற்கு இதுமட்டும் காரணமல்ல. அமெரிக்காவிடம் மனித இனத்தையே ஒட்டுமொத்தமாக அழிக்கும் அணு ஆயுதங்கள் நிரம்பி வழிகின்றன. அவற்றை அமெரிக்கா உடனேயே அழிக்கவேண்டும். இல்லையேல் நாங்கள்(ஈராக்) உள்ளே புகுந்து அவற்றை அழிக்கவேண்டிவரும்.

நாங்கள் இதை ஈராக்கின் ஆதிக்கம் நிலைக்க வேண்டும் என்பதற்காகச் செய்திடவில்லை. மாறாக மனித இனத்தின் நன்மைக்காகவே செய்கின்றோம். அமெரிக்காவை இப்படியேவிட்டால் இது உலக மக்கள் அனைவரையும் அழித்துவிடும் அபாயம் உண்டு. மனித இனத்திற்கே ஒருபெரும் அபாய அறிகுறியாக அமெரிக்கா இருந்துவருகின்றது. 

அமெரிக்கா உலகில் உள்ள மக்கள் தொகையில் 6 சதவிகிதம்தான் வாழ்கிறார்கள். ஆனால் அமெரிக்காவோ உலகில் உள்ள இயற்கை வளங்களில் 23% சதவிகிதத்தை சுரண்டிகொள்கின்றது. இந்த சுரண்டலிலிருந்து உலகை விடுவிக்கவும் அமெரிக்காவை பிடித்து அதை சுரண்டலில் ஈடுப்படாத நாடாகவும் மாற்றிடவேண்டும். இதையே அமெரிக்க மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு அங்கே சுரண்டலை விரும்பாத ஒரு ஆட்சியாளரை ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஆகவே அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் அவசியம். அதற்கு ஈராக் அமெரிக்காவை கையகப்படுத்தியாக வேண்டும்.

இதற்காக நாளை மறுநாள் அமெரிக்கா மீது குண்டு மழைப் பொழியப்பட வேண்டும்.

இந்த குண்டு மழையிலிருந்து அமெரிக்கா தப்பிட விரும்பினால் நாளை நண்பகலிற்குள் அது உலக நாடுகளிலிருந்து கொள்ளை அடித்த இயற்கை வளங்களை திருப்பி கொடுத்திட வேண்டும். இல்லையேல் அதிர்ச்சியும் அச்சமும் தரும் தாக்குதல் ஒன்றை அமெரிக்கா சந்தித்தே ஆக வேண்டும். அமெரிக்கா மீது நடக்கவிருக்கும் தாக்குதலுக்கு ஆகும் செலவை சுரண்டளுக்குள்ளான நாடுகள் ஏற்றிட வேண்டும். அப்படி ஏற்க மறுக்கும் நாடுகள் சுரண்டலுக்கு துணைப்போகும் நாடுகள் என்றுதான் பொருள்படும். ஆகவே அவற்றையும் தாக்கிடும் அவசியம் ஈராக்கிற்கு ஏற்படும். இதை ஈராக் தான் நிறைவேற்றிட வேண்டிய சர்வதேச கடமை எங்களுக்கு இருக்கிறது.

அமெரிக்காவை பிறிதொரு மனித உரிமை காரணத்திற்காகவும் ஈராக் தாக்கிட நினைக்கின்றது. காரணம், அண்மையில் அமெரிக்காவில் இயற்றப்பட்ட தேசப்பக்தி சட்டம் வெளிநாடுகளிலிருந்து பிழைப்பு நடத்திட அமெரிக்கா செல்பவர்களின் உரிமையை அடியோடு நசுக்குகின்றது. அவர்களை காரணம் சொல்லாமல் பல ஆண்டுகள் காவலில் வைக்க வகை செய்கின்றது.

இந்த சட்டத்தால் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கு வயிறு பிழைக்க சென்ற உழைப்பாளர் வர்க்கம் சித்திரவதைகளுக்குள்ளாகி சின்னாபின்னமாகி வருகிறார்கள்.

இவர்களை மீட்கவும் அமெரிக்காவை மனித நேயத்தோடு குண்டுபோட்டு தகர்த்தாக வேண்டும்.

வியட்நாமிலும் இன்னும் உலக நாடுகள் பலவேற்றிலும் அமெரிக்கா காரணமின்றி குண்டுப் போட்டுள்ளது. அதற்காக அமெரிக்கா இன்றளவும் தண்டிக்கப்படவில்லை. அந்த தண்டனையை ஈராக் தர விரும்புகிறது. உலக நாடுகளுக்காக அமெரிக்காவை தண்டிக்கும் பொறுப்பு ஈராக்கிற்கு உண்டு. இந்த தண்டனையிலிருந்து அமெரிக்கா தப்பிக்க விரும்பினால் உடனேயே 20,00000 பில்லியன் டாலர்களை ஈராக்கின் வங்கியில் சேர்த்திட வேண்டும்.


இல்லையேல் 24 மணி நேரத்திற்குள் குண்டு மழை பொழிவதைத் தவிர ஈராக்கிற்கு வேறு வழி இல்லை. 

இவை மட்டுமல்ல மனித குளத்தை காப்பாற்றிட அமெரிக்காவை தாக்கியாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இன்று ஆபாசம், ஒருபால் புணர்ச்சி, எயிட்ஸ் இவையெல்லாம் அமெரிக்காவிலிருந்தே ஏற்றுமதியாகின்றது. இந்த ஆபாசம் விபசாரத்தை ஊக்குவிக்கின்றது. குடும்ப வாழ்கையை குலைக்கின்றது. இதனால் முதியோர் இல்லங்களும் , கைம்பென் இல்லங்களும் அதிகரித்து வருகின்றது. இவர்கள் எந்த சமுதாய பாதுகாப்புமின்றி அல்லல்பட்டுக்கொண்டிருக்கிரார்கள். இவர்களை காப்பாற்றிட அமெரிக்காவை ஈராக் கையகப்படுத்தியாக வேண்டும். உலகை ஒழுக்க கேடிலிருந்து காப்பாற்றிட அமெரிக்காவை அன்பாய் அழகிய பண்பாய் அழித்து தான்  ஆக வேண்டும் 

இப்படி உலகில் ஒரு பெரும் நாச சக்தியாக விளங்கும் அமெரிக்காவை அழிக்கும் செலவை உலக நாடுகள் ஏற்க வேண்டும் ஈராக் உலக நாடுகளின் சார்பில் தான்தோன்றி தனமாக தன்னிச்சையாக போரில் இறங்கும்.

இதை அமெரிக்கா மீதான ஆக்கிரமிப்புப்போர் என எவரும் கருதக்கூடாது. அது மனித இனத்தை காப்பாற்றும் முயற்சி என்றே எல்லோரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலே சொன்ன காரணங்களுக்காக அமெரிக்காவை நாம்(ஈராக்) தாக்கிடும்போது . இலட்ச்சக்கனக்கான குழந்தைகள் இறந்து போகலாம். பல்லாயிரக்கணக்கானவர்கள் ஊனப்படலாம். வயோதிகர்கள், வக்கற்றோர், திக்கற்றோர் இவர்களெல்லாம் கொலை செய்யப்படலாம். இதனை உலகம் பொருத்துதான் ஆகவேண்டும். மொத்த உலகையும் காப்பாற்றிடும்போது சில அப்பாவி அமெரிக்கர்கள் இறப்பதில் தவறில்லை எனபதை அனைவரும் உணர்ந்திட வேண்டும். இவ்வாறு ஈராக் அதிபர் உலக நாடுகளுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.


குறிப்பு : இது விடியல் வெள்ளி இதழில் குலாம் முகம்மது அவர்கள் கற்பனையாக ஈராக்கை வல்லரசாகவும் , அமெரிக்காவை சாதாரன வளம் கொழிக்கும் நாடாகவும் கற்பனை செய்து எழுதிய கட்டுரையை  சில மாறுதல்களுடன்  இங்கு பதிந்துள்ளேன்- Adirai Iqbal




16 comments:

UNMAIKAL said...

மொத்த திரையுலகமும்,

எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.

>>>>>> Click to Read
விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர‌ விபசாரங்களும்.


.

Anonymous said...

ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது? குலாம் முகம்மது மட்டும் என்ன விதி விலக்கா?

Adirai Iqbal said...

//ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது? குலாம் முகம்மது மட்டும் என்ன விதி விலக்கா?//

இக்கட்டுரையின் நோக்கத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இல்லை.

அமெரிக்கா ஒவ்வொரு முறையும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும்போது சொல்லும் காரணங்களை நீங்கள் அறிவீரா .
இயற்கை வளங்களை ஏகபோக கொள்ளை அடிக்க அது சொல்லும் பொய்யான காரங்கள் நிறைய

அதே போன்று பொய்யான காரணங்களெல்லாம் தேவை இல்லை . மேலே கூறிய உண்மையான காரங்களை வைத்தே அமெரிக்க நியாயத்தின்படி அந்நாட்டை ஆக்கிரமிக்க இயலுமா இயலாதா.

இக்கட்டுரையின் நோக்கம் அமெரிக்காவின் ஓர் உலக ரவுடி என்பத நிறுவுவதுதான்,

Anonymous said...

நகைச்சுவையாகத்தான் அந்த பின்னூட்டம் போட்டேன். அமெரிக்க ரவுடி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதே அமெரிக்காவுக்கு முண்டு கொடுக்கும் சவுதியை ஏன் பலர் கண்டிக்க மறுக்கின்றார்கள்.

Adirai Iqbal said...

//அதே அமெரிக்காவுக்கு முண்டு கொடுக்கும் சவுதியை ஏன் பலர் கண்டிக்க மறுக்கின்றார்கள்.//

உண்மைதான் . முஸ்லிம் நாடுகளின் இந்நிலைக்கு இதுவும் ஒரு காரணம்தான்

UNMAIKAL said...

முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.

விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள்.

கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன்.

அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது.

என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும்.

தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன்.

விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது.

நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது.

அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்?

அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்?

அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள்.

ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்?

கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும்,

கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான்.

கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை. பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.


இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.

ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன்.

நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும்.

அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன்.

அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது.

வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது.

சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில்.

ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை.

ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது.

ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள்.

அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்?

நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன.

ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம்களை அவமதித்து,

அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன்,

நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.

மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது - சாரு நிவேதிதா


SOURCE: http://charuonline.com/blog/?p=167

சார்வாகன் said...

ஸலாம் சகோ

அருமையான் பதிவு!!

அமெரிக்காவைத் தாக்கும் முன் அதன் அல்லக்கை சவுதி தாக்கப்பட வேண்டும் என்பதை மறந்து விட்டீர்கள் என ஞாபகப் படுத்துகிறேன்.

சவுதியை அழிக்காமல் அமெரிக்காவை அழிக்க முடியாது!!

இன்ஷா அல்லாஹ்!!

நன்றி!!!

Anonymous said...

கதைன்னு முதல்லயே போடுய்யா என் டுபாக்கூரு.

Adirai Iqbal said...

சகோ சார்வாகன் !

சவுதியை தாக்க வேண்டியதில்லை. அமெரிக்காவின் அல்லக்கையும் நொல்லக்கையுமான நேட்டோ , உங்களுக்கு மிகவும் பிடித்தமான தற்போது ஏரியா ரவுடியாக வளர்ந்து வரும் பிரான்ஸ் , இஸ்ரேலை தாக்கினால் போதுமானது. உலக ரவுடியை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். உலக ரவுடியின் மிரட்டல் காரணமாகவே பெரும்பாலான நாடுகள் திக்கு தெரியாமல் தவிக்கிறார்கள்

Adirai Iqbal said...

//கதைன்னு முதல்லயே போடுய்யா என் டுபாக்கூரு.//

உணமையான பெயரில் வராத நீதான் டுபாக்கூர்

Nasar said...

அட ....!!! இந்த பதிவு நல்லாத்தான் இருக்கு ..
சகோ அந்த விடியல் பத்திரிக்கையின் லிங்க் கொடுக்க முடியுமா ??

சார்வாகன் said...

சகோ அதிரை இக்பால் ஸலாம்,

உங்களுக்கு விடயமே புரியமாட்டென் என்கிறது. ஈராக்கில் பெரும்பானமை ஷியா மூமின்கள், ஷியா மூமின்களை எதிர்க்க அமெரிகாவோடு இணைந்து போராடுவது சுன்னி மூமின்கள் என தெரியாதா!!.

அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை இபோது ஈரானுக்கு மட்டுமே உண்டு!!

ஈரானுக்கு இரஷ்யா,சீனா ஆதரவு இருக்கும் படியினால் ,சுன்னி மூமின் ஆன சதாம் ஹுசனை அழித்த‌து போல் முடியவில்லை!!

சிரியாவில் சிறுபானமை அல்லாவி மூமின்க்ளை ஒழிக்க அமெரிக்க உதவினாலும் சுன்னி மூன்களால் முடியவில்லை!!. சிரியாவில் அமெரிக்கா நுழைந்தால் , இரஷ்ய,சீனாவும் நுழையும்!!

சதாம் ஹுசேனை போட்டுத் தள்ள உதவியது சவுதி என்பதை மறக்கலாமா!!


ஆகவே சவுதியை தங்கள் வழி காட்டியாக நினைத்து, இத்ர முஸ்லிம் பிரிவுகளை அழிக்க நினைக்கும் வஹாபிய போக்கை மாற்றாத் வரையில் முஸ்லிம்களுக்கு விடிவு கிடையாது!!


மீண்டும் மீண்டும் சொல்கிறென் வஹாபிகள் எப்போதும் மேலை நாடுகளின் கைக்கூலிகளே!!

இதை மறந்து அனைத்து முஸ்லிம் பிரிவுகளையும் ஒன்று படுத்துதலே புத்திசாலித் த்னம் ஆகும்!!

இதில் சிந்திப்பவர்களுக்கு அதாட்சிகள் உள்ளன!!

நன்றி!!

Adirai Iqbal said...

அப்பாவி சார்வாகனார் !

ஆப்கானிஸ்தான் , பாக்கிஸ்தான் எல்லையோரங்களில் அமெரிக்காவிற்கு எதிராக போர் செய்பர்கள் யார் என்று நினைக்கிறீர்கள் சுன்னி முஸ்லிம்கள். இவர்களுடன் ஷியா முஸ்லிம்களின் சில பிரிவினரும் சேர்ந்தே அமெரிக்க மற்றும் அமெரிக்க அடிவருடி பாக்கிஸ்தான் இராணுவத்தை தாக்கி வருகிறார்கள் என்பது அப்பாவியான் தங்களுக்கு தெரிந்திருக்க் வாய்ப்பில்லை.

மேலும் சிரியாவை பற்றி கூறியுள்ளீர்கள்! இப்பொழுது அமெரிக்கா சிறிய போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லிவருவதை நீங்கள் அறியவில்லையோ?. சிறிய சுதந்திர இராணுவ போராளிகள் அமெரிக்கர்களின் கைகளைவிட்டு நழுவி சென்றுவிட்டார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாது . இன்னும் ஒன்று சொல்கிறேன் . சிரியாவில் முஸ்லிம்களுடன் கிருஸ்தவ அரபுக்களும் சேர்ந்து போராடி வருவதையும் தங்களுக்கு தெரியாது என்று நம்புகிறேன் .ஏனென்றால் தாங்கள்தான் அப்பாவி ஆயிற்றே!.

Adirai Iqbal said...

//அட ....!!! இந்த பதிவு நல்லாத்தான் இருக்கு ..
சகோ அந்த விடியல் பத்திரிக்கையின் லிங்க் கொடுக்க முடியுமா ??//

என்னிடம் விடியல் பத்திரிக்கையின் லிங்க் எதும் இல்லை . என்னிடம் இருந்த விடியல் வெள்ளி புத்தகத்திலிருந்து இதனை டைப் செய்தேன்

சார்வாகன் said...

சகோ அதிரை

//ஆப்கானிஸ்தான் , பாக்கிஸ்தான் எல்லையோரங்களில் அமெரிக்காவிற்கு எதிராக போர் செய்பர்கள் யார் என்று நினைக்கிறீர்கள் சுன்னி முஸ்லிம்கள். இவர்களுடன் ஷியா முஸ்லிம்களின் சில பிரிவினரும் சேர்ந்தே அமெரிக்க மற்றும் அமெரிக்க அடிவருடி பாக்கிஸ்தான் இராணுவத்தை தாக்கி வருகிறார்கள் என்பது அப்பாவியான் தங்களுக்கு தெரிந்திருக்க் வாய்ப்பில்லை.//

காஃபிரான எனக்கு எப்படிங்க சகோ தெரியும்!!

பாகுஸ்தான் இராணுவம் முனாஃபிக்குகளே!!

அல் கொய்தா,தலிபானே மார்க்கப் போராளிகள்!!

சகோ சு.பி முல்லா ஓமருக்கு தமிழில் பதிவுக் கடிதம் எழுதிய போதே ,அவருக்கு ஆஃப்கன் பற்றி ஏதோ தெரிந்து இருக்கிறது என உணர்ந்தேன்!!.

உங்களுக்கும் தெரியுமா!!

அல்லாஹ் அக்பர்!![ இப்படி சொல்லனுமாம் அண்ண‌ன் பி.ஜே கூட்டம் போயிட்டு வந்தேன்!!!]

கிலாஃபா அமையும் நாள் வெகு தூரம் இல்லை!!

அல்லாஹ் அக்பர்{ ஒட்டிக்கிச்சு விட முடியலை!!!]

நன்றி!!

Adirai Iqbal said...

அமெரிக்க அடிவருடியான தங்களுக்கு அமெரிக்காவைபற்றி உண்மைகளை சொல்லும்போது தங்களுக்கு கோபம் வருவது புரிந்துக்கொள்ள முடிகிறது.

அமெரிக்காவின் பண்பான அன்பான குண்டுவீச்சு படுகொலைகளை ஆதரிக்கும் உங்களின் இழகிய மனசும் எமக்கு புரிகிறது.

உங்களுக்கும் அமெரிக்க சர்காருடன் நேரடி தொடர்பு உள்ளதா. சொல்லவே இல்லை .

ஈராக், சீனா , அமெரிக்கா என்னமாய் புட்டு புட்டு வைக்கிறீர்கள் போங்கள் .

ஒன்று தெரியுமா காபிர் சார்வாகன் அவர்களே ! . இந்தியா உட்பட எல்லா நாடுகளும் முதலாளித்துவம் என்ற சகதிக்குள் சிக்கி தவிக்கிறது. அதன் தலைவனாக அமெரிக்கா உள்ளது.

முதலில் உலகில் அமைதி நிலவ ஒழித்துக்கட்ட வேண்டியது முதலாளித்துவம்தான்.
பாவம் அப்பாவி காபீரான சாமுவேல் ஹன்டிங்க்டன் போன்று நீங்களும் அப்பாவி காபீர் ஆதலால் அது பற்றிய அறிவு உங்களுக்கு கம்மிதான்

Post a Comment