test

Friday, February 1, 2013

ஆசிஷ் நந்தியின் சாதி வெறிப் பேச்சு கண்டுக்கொள்ளாத தமிழகம்!

இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளதற்கு காரணம் எஸ் சி , எஸ் டி பிரிவினர் அரசியில் அதிகாரத்திற்கு வந்ததுதான் காரணம் என்று ஆஷிஷ் நந்தி என்ற சமூக ஆர்வலர் என்ற போர்வையில் உலவிக்கொண்டிருக்கும் ஒரு சாதி வெறியர் உளறிக்கொட்டி இருக்கிறார்.

ஐ சப்போர்ட் கமல் என்றும், கமல் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டால் எங்கள் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம் என்றும் நீலி கண்ணீர் வடிக்கும் பக்தர்களுக்கு இந்த அவதூறான பேச்சைப்பற்றிய எந்த ஒரு சொரணையும் இல்லை. 


இப்பொழுது இருக்கும் ஒட்டுக்கட்சியில் அது எந்த கட்சியாக இருந்தாலும் யாரும் ஊழல் செய்வதில் சளைத்தவர்கள் இல்லை. தங்களை தேசப்பகதர்கள் என்று அடிக்கடி சொல்லிகொள்ளும் பி.ஜே.பி கார்கில் போரின்போது சவப்பெட்டியில் ஊழல் செய்து தங்களது தேசப்பக்க்தியை நிரூபித்தவர்கள் அவர்கள் . அந்த கட்சியே உயர்சாதி என்று சொல்லிக்கொள்பர்களுக்காகத்தான்  என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று . அக்கட்சியில் அதிகமானோர் உயர் சாதியினரே.

இந்த பி.ஜே.பி ஆட்சியின்போது இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை கூறுப்போட்டு விற்க தனியாக ஒரு இலாகவையே ஒதுக்கினார்கள்.

காங்கிரஸ் அவர்கள் வழியில் பிசகாமல் நடந்து அணைத்து பொதுத்துறைகளையும் நாட்டு பற்றுடன் பன்னாட்டு நிறுவங்களுக்கு தாரை வார்த்தது.

காங்கிரஸ் என்ற இந்த மாபெரும் ஒட்டுக்கட்சியிலும் அதிகமானோர் உயர்சாதியினரும், ஆதிக்க சாதியினரும்தான். இவர்கள் செய்த ஊழல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தலித் மக்களை மட்டும் குற்றம்சாட்டுவதன்மூலம்  இவர் என்ன சொல்ல வருகிறார்?.

நேரு குடும்பங்கள் செய்யாத ஊழலா, தமிழ் நாட்டின் முதலமைச்சர்கள் செய்யாத ஊழலா . அவர்கள் எல்லாம் தலித்துக்களா என்ன?

பொறம்போக்கு மனு நீதியின் படி உயர்சாதியினர் செய்யும் ஊழல் ஊழல் ஆக்காது .அதன்படிதான் இவர் பேசியிருக்க கூடும்.

மேலும் ஊழலில் அதிகமாக பாத்திக்கப்படுபவர்கள் எஸ்.எஸ்.டி, சிறுபான்மையினர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள்தான் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கமல் ஹாசன் என்ற ஒரு கலை வியாபாரிக்காக உருகி உருகி எழுதும் பதிவர்கள் இதனை கண்டுக்கொள்ளாததின்  மர்மம் என்னவோ 

No comments:

Post a Comment