test

Thursday, February 14, 2013

அப்சல் குரு படுகொலை - நாடாளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்பு படைகளின் பங்கு :பகுதி 2


தொடரும் சித்திரவதை 

அடிக்கடி அவர்கள் அப்சலை அழைத்து சென்று சித்திரவதை செய்தார்கள். ஒரு நாள் இரவு டி எஸ் பி வினை குப்தாவும் டி எஸ் பி டாரிந்தரும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அனைவரையும் வாய்க்கு வந்தபடி வைதார்கள். அப்சலை அழைத்துச் சென்றார்கள். மீண்டும் பணம் கேட்டார்கள். மிச்சம் மீதி இருந்தனவற்றை விற்று தந்து தான் அப்சலை மீட்டிட  முடிந்தது. 

இந்த கொடுமைகள் தாழாமல் அவர் டெல்லிக்கு வந்துவிடுவது என்று முடிவு செய்தார். அங்கே தனது வியாபாரத்தை தொடர்ந்தார். டெல்லி பல்கழைகழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். படித்து பட்டமும் பெற்றார்.

முஹம்மத் : 

ஒரு முறை அவர் குடும்பத்தவர்களைப் பார்க்க வந்த போது சிறப்பு படையினர் அவரை அழைத்து சென்றனர். ஹூம்ஹாமா என்ற இடத்திலுள்ள சிறப்பு படையின் முகாமில் வைத்து முகம்மத் என்பவரையும் தாரிக் என்பவரையும் அறிமுகப்படுத்தினார்கள் அதில் முகம்மத் என்பவரை டெல்லிக்கு அழைத்துச் சென்றிடவேண்டும்  எனக்கேட்டுக்கொண்டார்கள். அந்த முஹம்மத் யார் என்பதோ அந்த முஹம்மத்தை STF  என்ற சிறப்பு படையினர் ஏன் டெல்லிக்கு அழைத்துச்செல்ல கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதோ அப்சலுக்கு தெரியாது.  

இந்நிலையில் அவர் இனி காஷ்மீரிலிருந்து தன் குடும்பத்தவர்களை டெல்லி அழைத்து வந்திட வேண்டும் என முடிவு செய்தார். அவருக்கோர் மகனும் பிறந்திருந்தான்.

டெல்லியில் இந்திரவிகாரின் ஒரு வீட்டுக்கு ஏற்பாடு செய்தார். பெருநாளுக்கு காஷ்மீருக்கு வந்து குடும்பத்தோடு பெருநாள் கொண்டாடிவிட்டு குடும்பத்தோடு டெல்லி சென்றிட காஷ்மீர் சென்றார்.
ஸ்ரீநகர் பஸ் நிலையத்தில் இறங்கினார். தயாராக இருந்த காஷ்மீர் சிறப்பு படையினர் அவரை கைது செய்தார்கள். நாடாளுமன்ற தாக்குதலில் அவரை இணைத்தார்கள். இப்போது தூக்கிலே போட்டுவிட்டார்கள்.


அப்சல் குருவிடம் வாக்குமூலம் வாங்கியவரின் வாக்குமூலம் 

நமது நாட்டில் அப்பாவி முஸ்லிம்களை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வாக்குமூலங்களை வாங்கிடுவதற்கென ஐந்து சித்திரவதை கூடங்கள் இருக்கின்றன. 

இந்த வழியிலேயே STF ஐ சேர்ந்த டிரேவிந்தர் சிங் என்பவர் அப்சல் குருவையும் சித்திரவதை செய்து வாக்குமூலம் வாங்கி இருக்கிறார். இவர் தான் சித்திரவதை செய்ததை பர்வேஷ் புகாரி என்ற பத்திரிக்கையாளரிடம் இப்படி கூறுகின்றார்.

" நான் என்னுடைய முகாமில் வைத்து அப்சல் குருவை பல நாட்கள் சித்திரவதைச் செய்தேன். விசாரித்தேன். அவனை கைது செய்ததை நாங்கள் எந்த பதிவேட்டிலும் பதிந்திடவில்லை. அவனை எங்களுடைய முகாமில் வைத்து எப்படியெல்லாம் சித்திரவதை செய்தோம் என்பதை விளக்கியிருக்கின்றானோ அத்தனையும் உண்மை. அன்றைய நாட்களில் அதுதான் எங்கள் வழக்கம். நாங்கள் அவனுடைய மலத்துவாரத்தில் பெற்றோலை ஊற்றினோம். நான் அவன் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்தேன். ஆனாலும் அவனுடையை உறுதியை என்னால் உடைத்திட முடியவில்லை. அவனை நாங்கள் எவ்வளவு குரூரமாக சித்திரவதை செய்திட இயலுமோ அவ்வளவு குரூரமாக சித்திரவதை செய்தோம்.  ஆனாலும் அவன் கொஞ்சமும் விட்டுக்கொடுக்கவில்லை. நாங்கள் எங்களால் இயன்ற அவ்வளவு குரூரங்களையும் கட்டவிழ்த்துவிட்டோம். அவன் எதையும் ஒத்துக்கொள்ளவில்லை. காசிபாபா என்ற பாக்கிஸ்தான் உளவுத்துறை ஏஜென்டுக்கும் அவனுக்கும் இடையை தொடர்பு இருப்பதாக அவனை சொல்ல சொன்னோம். ஆனாலும் சிஞ்சிற்றும் அவன் விட்டுக்கொடுக்கவில்லை. அவன் மலைப்போல் நின்றுவிட்டான். நான் சித்திரவதை செய்வதில் கடுமையானவன். யாரை வேண்டுமானாலும் பணிய வைத்திடுபவன் என்ற பெயரையும் புகழையும் பெற்றவன். என்னுடைய சித்திரவதைக்குப்பின்னும் ஒருவன் குற்றமற்றவனாக வருகின்றான் என்றால் எவனும் அவனை சீண்டிட முடியாது. அவனை நல்லவன் என்றே மொத்த காவல் துறையும் எடுத்தொக்கொள்ளும்".

பர்வேஷ் பாரி இந்த பேட்டியை பேட்டி என்ற அளவில் அல்லாமல் தனிப்பட்ட சம்பாஷனை என்ற பெயரில் டிரேவிந்தர் சிங் என்ற காஷ்மீரின் சிறப்பு படையின் தலைவரிடமிருந்து கறந்த தகவலாகும்.

இதனை தெஹெல்கா பாணி என்றும் சொல்வார்கள்.


டிரேவிந்தர் சிங் தான் கொடுமையானவன் சித்திரவதை செய்பவன் என்பனவற்றை ஓர் எள்ளளவும் மறைப்பவன் அல்ல. ஒரு தொலைக்காட்சியில் இப்படி பேட்டி கொடுத்தான். சித்திரவதை தான் தீவிரவாதத்தை தடுக்கும்  ஒரே வழி நான் அதை நாட்டுக்காக செய்கின்றேன்.

உண்மையில் அப்பாவிகளை இவன் செய்யும் தீவிரவாத செயல்களை ஒத்துக்கொள்வதற்கே இவன் சித்திரவதைகளை செய்கின்றான். பதவி உயர்வும் பணமும்தான் இவனது குறிக்கோள்.

இதே அப்சல் குருவின் குடும்பத்தில் இருந்த கடைசி காசு வரைக்கும் கறந்து எடுத்தவன் இவன். இறுதியில் தூக்கு மேடைக்கே கொண்டு வந்து நிறுத்திவிட்டான்.

அப்சல் குருவே இலக்கு 

அப்சலை குருவை தூக்கிலே போட்டுத்தான் எல்லா உண்மைகளையும் மண்மூடிப்போகச் செய்திட வேண்டும் என்பதை இன்னொரு நிகழ்வு உண்மைப்படுத்தும். 

காவல் துறையினர் நீதிமன்றங்களில் அவனுடைய குற்றங்களை நிரூபிக்க வேண்டும் என்பதைவிட மக்கள் மன்றத்தில் அவனை குற்றவாளியாக காட்டிட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள். இதற்காக ஒரு பெரும் ஏற்பாட்டை செய்தார்கள். அது அப்சல் குருவை பிடித்து வந்து நான்தான் குற்றவாளி என தொலைக்காட்சியின் முன் சொல்லிட வைத்தார்கள்.

தொலைக்காட்சிப்பேட்டி :

  ........................................................................  இன்ஷா அல்லாஹ் தொடரும் 

நன்றி: வைகறை வெளிச்சம் , மு.குலாம் முகம்மது

9 comments:

Anonymous said...

your are supporting pakistan

Adirai Iqbal said...

நண்பரே

நமது நோக்கமெல்லாம் உண்மையான குற்றாவளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே.

அப்சல் குரு ஒரு அப்பாவி என்பதும் இந்த நாடாளுமன்ற தாக்குதல்களை நிகழ்த்தியதில் STF என்ற பாதுகாப்பு படையினருக்கும் பங்குண்டு என்பதை ஆதாரத்துடன் தந்துள்ளனர் PUDR அமைப்பினர் .

மேலும் குஜராத் இனப்படுகொலை குற்றாவளிகள் தாம்தான் முஸ்லிம்களை கொன்றோம் கற்பழித்தோம் என்று தெகல்கா ஊடகத்தில் கொடுத்த பேட்டியினை சாட்சியாக ஏற்க மறுத்த நீதிமன்றம் அப்சல் குரு விஷயத்தில் சமூகத்தின் கூட்டு மனசாதியை திருப்தி படுத்த என்று தூக்கில் போட்டுள்ளது.

இதில் எங்கு பாக்கிஸ்தான் சப்போர்ட் உள்ளது என்பதை அனானிதான் விளக்க வேண்டும்.

R.Puratchimani said...

//ஹூம்ஹாமா என்ற இடத்திலுள்ள சிறப்பு படையின் முகாமில் வைத்து முகம்மத் என்பவரையும் தாரிக் என்பவரையும் அறிமுகப்படுத்தினார்கள் அதில் முகம்மத் என்பவரை டெல்லிக்கு அழைத்துச் சென்றிடவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்கள். அந்த முஹம்மத் யார் என்பதோ அந்த முஹம்மத்தை STF என்ற சிறப்பு படையினர் ஏன் டெல்லிக்கு அழைத்துச்செல்ல கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதோ அப்சலுக்கு தெரியாது. //

பாதுகாப்பு படையினர் ஒன்றும் அறிமுக படுத்தவில்லை. அங்கே அந்த முகாமில் தாரிக்கும் இருந்துள்ளார்.
இருப்பினும் அப்சலும் தாரிக்கும் அப்பொழுது பேசிக்கொள்ளவில்லை.
பிறகு முகாமிலிருந்து வெளியே வந்த பிறகு இருவரும் சந்தித்துள்ளனர்.

முகமதுவை டெல்லிக்கு அழைத்து செல்ல சொன்னது தாரிக்....பாதுகாப்பு படையினர் அல்ல .
பக்கம் 154,155,156

http://books.google.co.in/books?id=PeVW26gYhsYC&pg=PA208&source=gbs_toc_r&cad=4#v=onepage&q&f=false

உண்மையை உரைப்பதே எனது நோக்கம். மற்றபடி அப்சல் குற்றவாளியா இல்லையா எனபது எனக்கு தெரியாது என்பது உண்மையே. இந்த வழக்கில் மூவருக்கு தூக்களிக்கப்பட்டது,இருவரை வாதாடி வெளியே கொண்டுவந்து விட்டனர். இவரை மட்டும் ஏன் அவர்கள் வெளியே கொண்டுவரவில்லை என்ற கேள்வி எழுகிறது.(நன்றி:வவ்வால்)

Adirai Iqbal said...

I was to com to delhi.Tariq told me that mohammed has to go to delhi. I should take him to delhi. He would stay Delhi for some days and he has to go to abroad . So MOhd come with me, he himself arranged accomodation.

சகோ புரட்சி மணி தகவலுக்கு நன்றி !

நீங்கள் சுட்டியக்காட்டியது இதுதானே . இது தாரீக்கும் அப்சல்குருவும்
முகாமில் அறிமுகமானதற்கு பின்பு அவர் முகம்மதை பற்றி சொல்கிறார். ஆனால் தடுப்புக்காவலில் இருக்கும்போதுதான் முஹம்மதை டெல்லிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று பாதுகாப்பு படையினர் அப்சல் குருவிடம் சொல்கின்றனர். இதனை அருந்ததிராய் அவர்கள் தனது 13 டிசம்பர் எ ரீடர் என்னும் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கான ஆதாரத்தை பின்னர் தருகிறேன்.

//இந்த வழக்கில் மூவருக்கு தூக்களிக்கப்பட்டது,இருவரை வாதாடி வெளியே கொண்டுவந்து விட்டனர். இவரை மட்டும் ஏன் அவர்கள் வெளியே கொண்டுவரவில்லை என்ற கேள்வி எழுகிறது//

இவரை தூக்கில் போடுவதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்கத்தான் இருக்கும் என்று நான் கருதுகிறேன்

R.Puratchimani said...

சகோ ஆதிரை இக்பால்,
//இதனை அருந்ததிராய் அவர்கள் தனது 13 டிசம்பர் எ ரீடர் என்னும் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கான ஆதாரத்தை பின்னர் தருகிறேன்.//

The STF told my husband to bring one man Mohammad to Delhi from Kashmir. He met Mohammad and one other man Tariq there at the STF camp. He did not know anything about the men and he had no idea why he was being asked to do the job. He has told all this to the court but the court chose to believe half his statement about bringing Mohammad but not the bit that he was told to do so by the STF.
http://www.indiaresists.com/afzal-guru-wifes-letter-an-appeal-that-remained-unheard/
நீங்கள் இதுபற்றித்தான் கூறுகிறீர்கள் என நினைக்கின்றேன்.


//இவரை தூக்கில் போடுவதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்கத்தான் இருக்கும் என்று நான் கருதுகிறேன்//
மேற்கூறியது உண்மையாக இருப்பின் அதை உச்ச நீதிமன்றத்தில் அவர் கூறி இருக்கலாமே ஏன் கூறவில்லை? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை
நான் கேட்பது தூக்கு வழங்கப்பட்ட இருவரை காப்பாற்ற வாதாடிய வாக்கீல்கள் ஏன் இவருக்காக வாதாடி வெற்றி பெற முடியவில்லை என்பதே.
. இருப்பினும் அவருக்கு நேர்ந்தது வருத்தத்தையே அளிக்கிறது.
வாய்மை வென்றே தீரும். அவர் தவறு செய்யவில்லை எனில் உண்மை நிச்சயம் உலகிற்கு தெரியவரும், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.

நன்றி

Adirai Iqbal said...

//மேற்கூறியது உண்மையாக இருப்பின் அதை உச்ச நீதிமன்றத்தில் அவர் கூறி இருக்கலாமே ஏன் கூறவில்லை? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை//

அவருக்கு அந்த வாய்ப்பே வழங்கப்படவில்லை. நீண்ட போராட்டத்திற்குபிறகுதான் அவருக்கென்று ஒரு லாயரை நியமிக்க நீதி மன்றம் அனுமதி அளித்தது. அவர் இறுதிவரை அப்சல் குருவை சந்திக்கவே இல்லை. அது மட்டுமல்ல சாட்சிகளை குறுக்கு விசாரணையும் செய்யவும் இல்லை.

இன்னொரு கூத்தும் நடந்தது அந்த வக்கீல் நீதிமன்றத்தில் இப்படி சொன்னார்: அப்சல் குரு தனது குற்றத்தை ஒத்துக்கொண்டார் எனவே அவரை தூக்கில் போடாமல் விஷ ஊசி போட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Adirai Iqbal said...

//வாய்மை வென்றே தீரும். அவர் தவறு செய்யவில்லை எனில் உண்மை நிச்சயம் உலகிற்கு தெரியவரும், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.//

நிச்சயமாக !

Adirai Iqbal said...

சகோ புரட்சி மணி!

இங்கு அருந்ததி ராய் அவர்கள் தனது நூலான டிசம்பர் 13 இல் எழுப்பிய கேள்விகளில் தாரிக் என்பவரை பற்றியும் அந்த முஹம்மத் என்பவரை பற்றியும் தருகிறேன். அதில் கேளிவி எண் பத்திலிருந்து ...

10) லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஷே முஹம்மது போன்ற அமைப்புகள் காஷ்மீரின் சிறப்பு காவல் படையின் கீழ் இருந்த ஒருவரை நம்பி அதிலும் குறிப்பாக சிறப்பு காவல் படையினரால் சித்திரவதைகளுக்கு ஆல்லாக்கப்பட்ட ஒருவரை நம்பி நாடாளுமன்ற தாக்குதல் போன்ற பெரும் பணிகளில் இறங்குவார்களா?

11) தன்னுடைய வாக்குமூலத்தில் அப்சல் என்பவர் தனக்கு முஹம்மது என்பவரை அறிமுகப்படுத்தியவர் தாரீக்தான் என்று கூறியுள்ளார். இந்த தாரீக் என்பவர்தான் முஹம்மதை டெல்லிக்கு அழைத்து வரும்படி கூறியதாகவும் கூறுகிறார். தாரீக் என்பரின் பெயர் காவல் துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திர்க்கையிலும் இடம்பெற்றுள்ளது. இந்த தாரீக் என்பவர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கிறார்?.

12) 2001 டிசம்பர் மாதம் 19 ஆம் நாள் அதாவது நாடாளுமன்ற தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் உள்ள தானே மாநகர காவல் துறை ஆணையர் எஸ். எம் . சங்காரி என்பவர் ஓர் அறிவிப்பை செய்தார். அந்த அறிவிப்பில் நாடாளுமன்ற தாக்குதலின்போது சுட்டுக்கொல்லப்பட்ட முஹம்மத் யாசின் ஃபதா முஹம்மத்(என்ற அபூ ஹம்சா) என்பவர் லஷ்கர் இ தொய்பாவைச் சார்ந்தவர். அவரை நான் மும்பையில் நவம்பர் 2000இல் கைது செய்தேன் கைது செய்தவுடன் அவரை ஜம்மு காஷ்மீர் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன் என்று கூறினார். தன்னுடைய வாக்குமூலத்தை உறுதிப்படுத்தும் வகையிலான வலுவான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார் மஹாராஷ்டிரா காவல் துறை ஆணையர் சங்காரி சொல்வது உண்மையானால் ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முஹம்மத் யாசீன் எப்படி நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுப்பட்டிருக்க முடியும்?

காவல் துறை ஆணையர் சொல்வது பொய்யாக இருந்தால் முஹம்மத் யாசீன் என்பவர் எங்கே இருக்கிறார்?

நாடாளுமன்ற தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட 5 பெரும் யார் யார் என்பதை இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லையே ஏன்?

R.Puratchimani said...

//அவருக்கு அந்த வாய்ப்பே வழங்கப்படவில்லை. நீண்ட போராட்டத்திற்குபிறகுதான் அவருக்கென்று ஒரு லாயரை நியமிக்க நீதி மன்றம் அனுமதி அளித்தது. அவர் இறுதிவரை அப்சல் குருவை சந்திக்கவே இல்லை. அது மட்டுமல்ல சாட்சிகளை குறுக்கு விசாரணையும் செய்யவும் இல்லை. //
மற்ற இருவருக்காக வாதாடிய வக்கீல்கள் இவருக்கு ஏன் வாதாடவில்லை சகோ?

அருந்ததியின் கேள்விகள்...சிந்திக்க வைக்கின்றது...உண்மைகளை மேலும் அறிவதன் மூலமே நம்மால் ஒரு முடிவிற்கு வரமுடியும்...தொடர்ந்து அறிவோம்

Post a Comment