test

Saturday, January 26, 2013

குண்டு வெடிப்புகளுக்கான சதித்திட்டங்கள் ஆர். ஆர் . எஸ் என்ற பார்ப்பன தீவிரவாத அலுவலகங்களில்தான் தீட்டப்பட்டன- தேசிய புலனாய்வு நிறுவனம்(NIA)

இந்தியாவில் ஏதேனும் ஒரு இடத்தில் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடைப்பெற்றுவிட்டால் உடனே ஊடகங்களும் உளவுத்துறையினரும் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்தினர் என்று சில வினாடிகளிலேய அறிவித்துவிடுவார். 

அடுத்த சில மணிநேரங்களில் சந்தேகத்திற்கு இடமான முஸ்லிம் தீவிரவாதி கைது என்று ஒரு செய்தியை காட்டுவர். பின்னர் அவன்தான் இந்த குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என்று ஊடகங்களில் செய்தியை பரப்பி அத்துடன் அதை ஊத்தி மூடிவிடுவர் . பத்து ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட நபர் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்படுவார் . அதற்குள் அவனுடைய வாழ்வும் அவன் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்வும் சிதைந்து போயிருக்கும் .


இந்த களேபரத்தில் ஊடகங்கள் முஸ்லிம் தீவிரவாதத்தினைப் பற்றி தொண்டைகிழிய விவாதங்களை நடத்தி தங்களது கடமையை (?)  செவ்வன செய்து தங்களது அரிப்பை தீர்த்துகொள்வர்.

ஆனால் சில ஆண்டுகள் கழித்து அந்த தீவிரவாத கொடூரங்களை அரங்கேற்றியவர்கள் முஸ்லிம்கள் அல்ல .  இந்து தீவிரவாதிகளே என தெரிய வரும்போது அதை ஒரு வினாடி செய்தியாக கூட காட்டமாட்டார்கள். அப்படியே ஒரு சில ஊடகங்களில் வெளிவந்தாலும் அது எதோ அரசியல் காழ்புனர்ச்சியால்தான் பரப்பபடுகிறது என்பதுபோலவே செய்திகளை வெளியிடுவர்.

தற்பொழுது வெளிவந்திருக்கின்ற செய்திகள் தீவிரவாத தாக்குதல்கள் ஆர் எஸ் எஸ் அலுவலகங்களில்தான் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்செய்திய தேசிய புலனாய்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆர் எஸ் எஸ்ஸின் பிரச்சாரர்களில் ஒருவன் சுனில் ஜோஷி. இவன் மர்மமான முறையில் திடீரென கொல்லப்பட்டான். இவன் 2006 ஆம் ஆண்டு மே மாதம் மூத்த ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவனான இந்திரேஷ் குமாரை நாக்பூரில் உள்ள ஆர் எஸ் எஸ் தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளான்.
சுனில் ஜோஷி 


அந்த சந்திப்பின்போது  ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் வாங்குவதற்கு ரூபாய் 50 ஆயிரம் இந்திறேஷ்குமாரிடமிருந்து பெற்றுள்ளான் . அச்சந்திப்பின்போது  அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு குற்றவாளியும் , சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டுவெடிப்பு வழக்கின் சாட்சியுமான பரத்தும் உடன் இருந்திருக்கிறான். இதனை பரத் தீவிரவாதி அசீமானந்தாவிடம் தெரிவித்துள்ளான். விசாரணையின்போது இதனை பரத்தும் ஒப்புக்கொண்டுள்ளான்.
இந்திரேஷ் குமார் 


இதேபோன்று 1999 ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மாநிலம் துங்கர்காவோனில் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் ஜோஷியும் இதர இரண்டு  நண்பர்களும் சேர்ந்து டெட்டனேட்டர்களை சோதனை நடத்தியதற்கும் சாட்சிகள் உள்ளன.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பந்தாமான அனைத்து கூடங்களும் ஜார்கண்டில் உள்ள மிஹிஜாம் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் வைத்து நடைப்பெற்றுள்ளது.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி சுனில் ஜோஷியை கொலை செய்த பிறகு துப்பாக்கிகளும் , எலெக்ட்ரிக் வயர்களும் அடங்கிய இரண்டு பைகளை மத்தியப்பிரதேச மாநிலம் தேவாசில் உள்ள ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் பாதுகாத்து வைத்திருந்தற்கும் சாட்சிகள் உண்டு.
அசீமானந்தா 


ராம்ஜி கல்சங்கரா என்ற ஆர் எஸ் எஸ் தலைவன் இதில் ஒரு பையை நர்மதா ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டதாக தேசய புலனாய்வு நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்திரேஷ் குமார் என் ஐ ஏ வின் தீவிர கண்பாநிப்பில் உள்ளதாக என் ஐ எ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுவரையிலும் தீவிரவாத தாக்குதல்   குண்டுவிடிப்புகளில் தொடர்புடைய பத்து ஆர் எஸ் எஸ் தலைவர்கள் உள்ளனர் என மத்திய உள்துறை செயலாளர் ஆர் கே சிங் கூறியள்ளார்.

10 comments:

சார்வாகன் said...

ஸலாம் அதிரை இக்பால்
அருமையான பதிவு!!

இந்துத்வ இயக்கங்களிலும் தீவிர பற்றாளர்கள், தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை ஏற்கிறேன். நீங்கள் சொன்ன அனைவரையும் இந்திய காவல்,உளவு துறையே கைது செய்து விவரம் வெளியிட்டது என்பதில் உலகின் மிகப்பெரிய ஜன்நாயக,மத சார்பற்ற இந்திய குடியரசின் குடிமகனாக பெருமிதம் கொள்கிறேன்.

உங்களை சில‌ கேள்விகள் கேட்கிறேன்.
.
1.இதே போல் இஸ்லாமியர்களிலும் தீவிரவாதிகள் இருப்பார்களா?
ஆம்/இல்லை

2. அல்கொய்தா,தலிபான் தீவிரவாதி இயக்கங்களா?
ஆம்/இல்லை

3. அல்கொயதா/தலிபான்களை திரைப் படத்தில் காட்டுவது சரியா?
ஆம்/இல்லை

4.கோவைக் குண்டு வெடிப்பை நடத்தியது அல்_உம்மா இயக்க்மா? ஆம்/இல்லை

5. கோவைக் குண்டு வெடிப்பில் கைது செய்யப்படோருக்கு மரண தண்ட்னை வழங்க வேண்டுமா? ஆம்/இல்லை

நன்றி!!

UNMAIKAL said...

சுட்டிகளை சொடுக்கி படியுங்கள்


>>>> 1.நீ ஒரு இந்து என்றால் சொல். சம்மதமா?
நீங்கள் ஒரு இந்து என்றால் உங்கள் பெயரால் தான் செய்கிறார்கள். நீங்கள் ஒரு பக்தரென்றால் உங்களின் கடவுளின் பெயரால் தான் செய்கிறார்கள். சம்மதமா? சம்மதமா?


>>>> 2.
இந்தியாவின் உண்மையான பயங்கரவாதம் இந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்>>>> 3.
ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை.. இந்தியாவின் ஒரு முன்னணி பத்திரிகையான "இந்தியா டுடே" யில் வெளியான
“அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள்." விடியோக்க‌ள்>>>> 4. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ


UNMAIKAL said...

இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்.

கீற்று இணைய தளத்தின் விடியோவை முழுதுமாக காணுங்கள்.

படத்தொகுப்பு செல்லையா முத்துசாமி.


குறிப்பாக கடைசியாக வரும் புனித பாண்டியன் அவர்கள் , புகழேந்தி அவர்கள் ஆகியோரின் கருத்துரை கேட்டு சிந்தியுங்கள்.

சுட்டி சொடுக்கி விடியோவை காணுங்கள்

>>>>>> SITE 1. இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்

>>>>>> SITE:2. இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்
.

THANKS TO : செல்லையா முத்துசாமி
http://www.chelliahmuthusamy.com/2013/01/blog-post_21.html

THANKS TO : KEETRU.COM

.

Adirai Iqbal said...

//2. அல்கொய்தா,தலிபான் தீவிரவாதி இயக்கங்களா?
ஆம்/இல்லை//
இதற்கு ஆம் இல்லை என்ற அளவில் பதில் சொல்ல இயலாது.

அல்காய்தா மற்றும் தாலிபான் ஆகிய இரு இயக்கங்களுக்கும் சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக போரிட அமெரிக்கா ஆயுத உதவிகள் அளித்ததை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.
அப்பொழுது இவ்வியக்கங்கள் சுதந்திரத்திற்காக போராடுகின்ற இயக்கம் என அமெரிக்காவால் அப்பொழுது வர்ணிக்கப்பட்டது . சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப்பிறகு அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக இவ்வியக்கங்கள் திரும்பின என்பது வரலாறு.

அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் ஊடகங்கள் பரப்பும் செய்திகள் அமெரிக்க நலன்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்பதால் அல்காய்தா,தாலிபான் இயக்கங்களின் தீவிரவாத பிம்பத்தை ஏற்பதற்கில்லை. அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் அந்நாட்டு மக்களைத்தான் தீவிரவாதிகள் என்று அழைக்கிறார்கள்.

Adirai Iqbal said...

// 3. அல்கொயதா/தலிபான்களை திரைப் படத்தில் காட்டுவது சரியா?//

திரைப்படத்தில் காட்டுவது என்பது தவறல்ல. ஆனால் காரணம் அமெரிக்க நேட்டோ படைகளின் ஆக்கிரமிப்பின் எதிர்விளைவே அவர்களின் போராட்டங்கள் . ஆதலால் அவர்களை தீவிரவாதிகளாகவும் அமெரிக்கர்களை இவ்வுலகை காப்பாற்ற வந்த தியாகிகள் போலவும் காட்டுவதுதை ஏற்க முடியாது. அதாவது விளைவை பற்றி மட்டும் கவலை படுவது மூலத்தை விட்டுவடுவது என்பது ஏற்க கூடிய செயலா?

Adirai Iqbal said...

கோவைக் குண்டு வெடிப்பை நடத்தியது அல்_உம்மா இயக்க்மா? ஆம்/இல்லை

ஆம்

Adirai Iqbal said...

//கோவைக் குண்டு வெடிப்பில் கைது செய்யப்படோருக்கு மரண தண்ட்னை வழங்க வேண்டுமா?//

கோவை குண்டுவெடிப்பு கைதிகளில் பெரும்பாலோர் அப்பாவிகள் . எந்த சாட்சியும் இல்லாத காரணத்தால்தான் அவர்கள் இன்று வரையிலும் விசாரணை கைதிகளாக சித்திரவதைகளை அனுபவித்து வருகிறார்கள். இதிலும் இதற்கு முன்னர் நடைப்பெற்ற கொலை வெறித்தாக்குதலில் 19 அப்பாவி முஸ்லிம் கொல்லப்பட்டனரே அதனை அரசு நல்ல முறையில் கையாண்டு இருந்தால் இந்நிலை வந்திருக்காது. இதற்காக நான் அதனை ஆதரிக்கிறேன் என்ற அர்த்தமல்ல.

Adirai Iqbal said...

//நீங்கள் சொன்ன அனைவரையும் இந்திய காவல்,உளவு துறையே கைது செய்து விவரம் வெளியிட்டது என்பதில் உலகின் மிகப்பெரிய ஜன்நாயக,மத சார்பற்ற இந்திய குடியரசின் குடிமகனாக பெருமிதம் கொள்கிறேன்.//

இதில் சாத்தியமானது ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரியால்தான் சாத்தியமானது .

சுதந்திர இந்தியாவின் அனைத்து தீவிரவாத தாக்குதல்களும் காய்தல் உவத்தல் இன்றி மறு விசாரணை செய்யப்படல் வேண்டும். அதுவரையிலும் முழுமையான நீதி கிடைத்துவிட்டதாக நம்புவதற்கில்லை.

Adirai Iqbal said...

சகோ உண்மைகள்!

தங்களது வருகைக்கும் தகவல்களுக்கும் ஜசாக்கல்லாஹ்

Bala Mugundan said...

ullagathil theeveravathi yaar yenna makkallukku therium

Post a Comment