test

Wednesday, January 30, 2013

எமது நெருப்பில் குளிர் காயும் எதிரிகள்!

இதுவரை நடந்தவை யாவும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடந்தது . இப்போது நடப்பவைகளும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடக்கின்றது . நேற்று 'துப்பாக்கியை ' தூக்கிப் பிடித்து இந்த உம்மத்தின் நியாயமான உணர்வுகளை விளம்பரமாக்கி இலாப கரமாக ஓட்டிய 'ரீல் ' இன்று 'விஸ்வரூபமாக ' தன்னை 'மெகா ஹிட் ' ரீலாக்க 'போஸ்டர்' ஓட்டத் தொடங்கியுள்ளது .


இஸ்லாத்தின் மீதான இறை நிராகரிப்பாளர்களின் காழ்ப்புணர்வுகள் இஸ்லாத்தின் வரலாற்றோடு தொடர்ந்தும் வந்துள்ளது . அந்த வகையில் முஹம்மத் (ஸல் ) அவர்களின் சந்ததியாகிய எம்மையும் அது தொடர்கின்றது . இந்த நிகழ்வுகளில் முஸ்லீம் உம்மாவின் எதிர் நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு மீள் பரிசீலனை அவசியமானது . உண்மை என்னவென்றால் இந்த 'தாகூதிய ' சோழியர்கள் தமது துர்நாற்றமான குடுமியை ஆட்டுவதற்கு எமது கைகளையே எம்மை அறியாமல் பயன் படுத்துகின்றார்களா ? என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது .

இது தொடர்பில் வரலாற்றின் முன்னைய நிகழ்வுகளை நாம் எவ்வாறு எதிர் கொண்டோம் என்பதை வஹியின் வெளிச்சத்தில் சுன்னாவில் இருந்து வரையறுப்பது இந்த இடத்தில் மிக முக்கியமான பணி . ஆனால் இங்கு உணர்வுகளுக்கு அதி கூடிய முக்கியத்துவம் கொடுக்கும் போது எதிரியின் கருத்துச் சுதந்திர 'சினைப்பர்' குறிக்கு நாமே நெற்றியை காட்டுவது போல் ஆகி விடாதா ?'சாம் பாசில்' 'யூ டியூபில்' விட்ட அசிங்கமான குப்பை முஸ்லீம்களின் உள்ளங்களில் பயங்கரமான பூகம்பத்தை உண்டு பண்ண, ஒவ்வொரு முஸ்லிமும் கண்களில் கண்ணீரோடும் எதிர்க்கும் உணர்வோடும் வீதிக்கு இறங்கினார்கள் . அந்த மறக்க, மன்னிக்க முடியாத வலி மீது பிரான்சின் 'சார்லி ஹெப்டோ ' கார்டூன் தாக்குதல் நடத்தியது ! பின் 'பெல்ஜியம் , பின் பிரான்ஸ் என இந்த மீடியா தாக்குதல் தொடரும் வரிசையில் இந்தியாவும் 'துப்பாக்கியோடு ' தனது மீடியா 'பிஸ்டல் ' குழுவை களமிறக்கியது . உண்மையில் இந்தியாவின் சோசியல் மீடியா இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் அவமானப் படுத்துவது இதுதான் முதற் தடவையல்ல . அந்த வரிசையில் இப்போது விடயம் 'விஸ்வரூபம் 'எடுத்துள்ளது .காஸ்மீரையும் , பாகிஸ்தானையும் காட்டி தேசப்பற்று ரீல் விடும் இவர்களது வழமையான பணியை நாம் மறந்து விடக்கூடாது . 'இரத்தம் சொட்டும் கத்தி ' ,கீறிக் கிழிக்கப் பட்ட உடல்,இப்படிக்காட்டி சமூகப் பார்வையை திருப்புவதை விட முஸ்லிமின் உணர்வு என்ற 'செப்டரில்' , நிறைய இலாபம் இருப்பது முதலாளித்துவம் அனுபவித்த உண்மை . அது தொடர்கிறது .எண்ணத்திலும் வழிமுரையிலும் சிலுவை சுமந்து உடையில் காவி உடுத்திய இந்த சண்டாளர்கள் கருத்துச் சுதந்திரம் எனும் போலித் தனத்தில் அரசியல் இராஜ தந்திர வலிமை அற்றிருக்கும் முஸ்லீம் உம்மத்தை சீண்டிப்பார்க்க நினைக்கிறார்கள் ! நாம் சாத் வீகமாக சென்றால் ஆர்ப்பாட்டம் , ஊர்வலம் ,மகஜர் ,மனு என சட்டத்தில் உள்ளிருந்தே 'போலிஸ்' பாதுகாப்போடு எமது எதிர்ப்பை ஜனநாயக முறையில் சொல்ல முடியுமாம் (எமது கருத்துச் சுதந்திரம் ) ! வன்முறையை செய்தால் அதே 'போலிஸ் ' 'என்கவுண்டர் ' பண்ணுமாம் ! சபாஸ் சரியான போட்டி என முதலாளித்துவ மேட்டுக்குடி பார்த்து ரசிக்குமாம் . இது அதிகாரம் கையில் இருக்கின்றது ; என்ற ஆணவம் தவிர வேறில்லை . அமெரிக்கா முதல் இந்தியா வரை இதுதான் நிலை .சரி கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது என ? அவர்களிடம் கேட்டால் அதிலும் அவர்களது அப்பட்டமான செயல்களைச் ஆதாரத்தோடு சொல்லி அடிமடியில் யாராவது கைவைத்தால் ,பாவம் அவன் தனது கருத்துச் சுதந்திரத்தை சிறைச் சுவர்களுக்கு முன்னால் தான் சொல்ல முடியும் .மேற்குக்கு ஒரு தாரிக் பின் சியாதும் , சிந்துவுக்கு ஒரு முஹம்மது பின் காசிமும் மீண்டும் வரவேண்டிய நியாயத்தை இந்த முஸ்லீம் உம்மா உணர்ந்து உழைக்காத வரை எமது போராட்டங்கள் எதிரியின் கட்டுப்பாட்டில் அவனது நியாயங்கள் சகிதம் தான் தொடரப் போகின்றது .எமது நெருப்பில் எதிரி குளிர் காய்வான் அவ்வளவுதான் .


நன்றி:http://khaibarthalam.blogspot.in/2013/01/blog-post_9658.html#more

11 comments:

Anonymous said...

Why dont you add a picture of suadi king.KSA is the main ally of US in the gulf region and helps to destroy the shia minority

Regards,
senthil

Adirai Iqbal said...

சவூதி மன்னர் மட்டுமல்ல . பெரும்பாலான முஸ்லிம் நாட்டு தலைவர்கள் அமெரிக்க அடிவருடிகள்தான். ஷியாக்களை விடுங்கள் . தங்களது சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க வழிக்காட்டுதலின் அடிப்படையில் வதைப்பவர்களாகத்தான் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் உள்ளனர்.

நீங்கள் நினைப்பதுப்போல் சவுதியில் இஸ்லாமிய ஆட்சி என்பதெல்லாம் இல்லை . அங்கு இஸ்லாமிய முலாம் பூசப்பட்ட ஒரு முதலாளித்துவ ஆட்சிதான் நடக்கிறது . ஈரானிலும் துருக்கியிலும் எகிப்திலும் முதலாளித்துவ ஆட்சிகள்தான்.

இஸ்லாமிய ஆட்சி என்பது இதிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டது.

நீங்கள் சவுதியை குறை கூறுவதன் மூலம் இஸ்லாத்தை விமர்சிக்க பார்கிறீர்கள் .அப்படி அல்ல அங்கு நடப்பது முதலாளித்துவ ஆட்சிதான் .ஒரு சில குற்றவியல் சட்டங்களைத்தவிர.

Anonymous said...

I do have a lot of respect in Islam and iam residing in a Muslim country. I just wanted to know your stand on KSA since my muslim firends always support KSA irrespective of their US support

Regards
Senthil

Shueib's Corner said...

///I do have a lot of respect in Islam and iam residing in a Muslim country. I just wanted to know your stand on KSA since my muslim firends always support KSA irrespective of their US support///

WE NEWER SUPPORT KSA. WE SUPPORT ONLY SHARIA. MOST OF THE PEOPLE MISUNDERSTOOD OUR STAND.

Anonymous said...

Fuck you Bastered
Runaway to Pakistan

DiaryAtoZ.com said...

"சவூதி மன்னர் மட்டுமல்ல . பெரும்பாலான முஸ்லிம் நாட்டு தலைவர்கள் அமெரிக்க அடிவருடிகள்தான்."

உங்க நேர்மைய பாராட்டுறேன்.

"இஸ்லாமிய ஆட்சி என்பது இதிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டது."

தாலிபான் செஞ்ச ஆட்சிய சொல்றீங்களா?

இப்போது தமிழ்நாட்டு இஸ்லாமியர்களை நன்றாகவே புரிந்துகொண்டோம்.

Ethicalist E said...

இந்த ஜெய்னுலாப்தீன் தான் தொலைக்காட்சிகளில் அன்பையும் அமைதியையும் பொழிபவர். இஸ்லாம் இனிய மார்க்கம் என்ற பேரில் இனித்து இனித்து உருகுபவர். அவர்களுடைய ஒரு கூட்டத்தில் அவர் பேசும் மொழியில் உள்ள மூர்க்கமும் கசப்பும் அநாகரீகமும் அவர் உண்மையில் எவரெனக் காட்டுகின்றன

கமலஹாசன் -சுருதி பற்றிய அவரது பேச்சு தமிழ்ச்சமூகத்திற்கே அவமதிப்பு. இந்த மனிதனை இஸ்லாமின் பிரதிநிதியாக எண்ணுபவர்கள் இஸ்லாமை அவமதிக்கிறார்கள்

jeyamohan

Ethicalist E said...

"நீங்கள் சவுதியை குறை கூறுவதன் மூலம் இஸ்லாத்தை விமர்சிக்க பார்கிறீர்கள் .அப்படி அல்ல அங்கு நடப்பது முதலாளித்துவ ஆட்சிதான்"

முதலாளித்துவ ஆட்சி என்பதை விட தங்கள் குடும்ப ஆட்சிக்கு பங்கம் வந்து விடாமல் இருக்க என்ன விளைஎனும் கொடுக்க தயாராக இருக்கும் ஒரு மன்னர் குடும்ப ஆட்சி என்று கூறலாம் என்று நினைக்கின்றேன்.

Ethicalist E said...

அங்கு நடப்பது உண்மையான இஸ்லாமிய ஆட்சி இல்லை என்று தெரியும். ஆனால் பல இஸ்ல்லாமிய பதிவர்கள், நண்பர்கள் அங்கு பூவுலக சொர்க்கம் அங்குதான் இருப்பதாக கூவுகிறார்கள்.
அதுதான் முதலில் பின்னூட்டம் இட்ட நண்பர் சவுதி விடயத்தை தொடர்ச்சியாக கேட்கின்றார் என்று நினைக்கின்றேன்

Adirai Iqbal said...

ஆப்கானிஸ்தானை சோவியத் ரஷ்யா ஆக்கிரமித்திருந்த காலங்களில் அந்த மக்களிடம் இயல்பாக தோன்றிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்ட குணத்தை அமெரிக்கா பாக்கிஸ்தான் ஆட்சியாளர்கள் மூலமாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

சோவியத் ரஷ்யாவின் தோல்விக்கு பின்னர் போராளி குழுவினரிடையே ஏற்பட்ட அதிகாரப்போட்டி போர்கள் இவைகளை பயன்படுத்தி அமெரிக்கா ஆப்கானிஸ்தானை தனது பிடிக்குள் வைத்திருக்கக் பாக்கிஸ்தானிய ஆட்சியாளர்களுடன் தீட்டிய திட்டத்தில் மாறியவர்கள் தான் இந்த தாலிபான் அமைப்பினர் .

பின்னர் அமெரிக்காவின் திட்டங்கள் இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை தெரிந்துக்கொண்ட தாலிபான் அமைப்பினர் அமெரிக்கர்களுக்கு ஒத்துழைக்க மறுத்ததாலும் , சாமுவேல் பி ஹன்டிங்க்டன் என்பவருடைய புத்தி உலகு அமைப்பிற்கான திட்டத்தின் அடிப்படையிலும் உதித்ததுதான் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட் நாடகம்.

Adirai Iqbal said...

//Fuck you Bastered
Runaway to Pakistan//

இங்கு உள்ள திராவிடர்களான நாம் பாக்கிஸ்தானிலிருந்து ஆரியர்களால் விரட்டப்பட்டவர்கள்தாம் . நான் ஹரப்பா நாகரிகத்தை சொன்னேன். இன்னும் பலுசிஸ்தானில் திராவிடர்கள் உள்ளனர் முஸ்லிம்களாக.

Post a Comment