test

Friday, January 18, 2013

தனது ஒரே மகனை கொலை செய்தவனை மன்னித்த சவூதி அரேபிய நாட்டு தாய் !

இது இரண்டாண்டுகளுக்கு முன்னர் நடந்த மனதை  உருக்கும் நிகழ்வு.அவர் ஒரு மிகவும் வறிய நிலையில் தனது ஒரே மகனுடன் மூன்று மகள்களுடன் வாழ்ந்து வந்த தாய் . மர்சூக்கா அல் பிலேவி என்பது அவரது பெயர்.

இறந்து போன கணவரின் ஓய்வூதியம் 2000 ரியால்களும் , சவூதி அரசின் சமூக காப்பிட்டு நிபுவனம் வழங்கும் 1000 ரியால்களும்தான் அவர்களுடைய வாழ்வாதாரம்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக தனது மகனை எதிர்பார்த்து காத்திருந்தார் மர்சூக்கா .  ஆனால் வந்த செய்தியை  அவர் கொல்லப்பட்டுவிட்டதாக இருந்தது.

அதன் பிறகு கொலையாளி பிடிப்பட்டுவிட மரணத்தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டது.

கொலையாளியின் உறவினர்கள் மர்சூக்காவிடம் கொலையாளியை மன்னித்துவிடும்படியும் . அதற்கு பகரமாக இரத்த பணம் தந்துவிடுவதாகவும் கோரினர்.

ஆனால் மர்சூக்கா அந்த கொலையாளியை நேரடியாக சந்திக்க விரும்பினார்.
நேரடியாக் சந்தித்தவுடன் அவரை மன்னிப்பதாகவும் மேலும்  இரத்த பணம் ஏதும் தனக்கு தேவை இல்லை எனவும் தெரிவித்தார் அந்த ஏழைத் தாய் . தனது மகனின்  மரணம் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடந்ததாக தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரிசானா விவகாரத்தில் சவூதி அரசு செய்த தவறுக்கு சிலர் ஷரியத்தையும் அங்குள்ள மக்களையும் குறை கூறி வரும் நிலையில் இதுபோன்ற நிகழ்வுகளை அவர்கள் புறம் தள்ளுகின்றனர்.

மோடியை தலையில் தூக்கிவைத்து ஆடும் ஒரு சில கன்றாவி பதிவர்கள் மனித நேயம் சவுதியில் மரித்துபோய்விட்டதாக் ஒப்பாரி வைக்கின்றனர்.12 comments:

nila nilavan said...

மன்னிப்பது நல்ல குணம்தான்.

ஆனால், மன்னிப்பை வெகு எளிதில் விலைக்கு வாங்கிவிட முடியும் என்பதை யோசித்து பார்த்தீர்களா?

ஒரு பெரிய கோடீஸ்வரனோ அல்லது ஒரு பெரிய போலீஸ் அதிகாரியோ ஒருவனை கொலை செய்துவிட்டார் என்று வைத்துகொள்ளுங்கள்.

கொலை செய்யப்பட்டவரின் தாய் அல்லது உறவினர்களை ரெண்டு போடு போட்டு, மன்னித்து விடுவதாக எழுதி வாங்கிகொண்டால் என்ன நீதி அங்கே இருக்கும்?

நீதிபதி, போலீஸ் அதிகாரி, மன்னர் எல்லோரும் நெருங்கிய நண்பர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் கூட்டாக சேர்ந்து மிரட்டி மன்னித்ததாக எழுதி வாங்கினால், அங்கே நீதி இருக்குமா?

இங்கே அந்த ஏழை பெண் மிரட்டப்பட்டு மன்னித்ததாக எழுதி கொடுக்கவில்லை என்பதற்கு என்ன நிரூபணம்?

-
கொல்லப்பட்டவர் அனாதை என்றால், கொலை செய்தவரை மன்னிக்க ஆள்கள் இல்லையென்றால், அவருக்கு என்ன தண்ட்னை?

-

ஒரு ஆளை விட்டு மன்னரையோ அல்லது மன்னரின் மகளையோ கொலை செய்ய ஒருவன் அனுப்புகிறான் என்று வைத்துகொள்ளுங்கள். அந்த ஆள் சாக துணிந்தவன் என்று வைத்துகொள்ளுங்கள்.

யாரை தண்டிப்பீர்கள்? கொலை செய்தவனையா அல்லது கொலை செய்ய தூண்டியவனையா?

மன்னரின் மகளை கொன்றதற்கு ரத்த பணம் கொடுக்க கொன்றவன் தயாராக இருந்தால் மறுக்கலாம். ஆனால், கொன்றவனைத்தான் கொல்லமுடியுமே தவிர, கொல்ல தூண்டியவனை கொல்ல உங்கள் சரியல்லாத சட்டத்தில் இடம் உள்ளதா?
-

மடத்தனமான சட்டங்கள்!

SriRam said...

அவ்வளவு நல்லவங்களா ? முடியல உங்கட காமடி

Adirai Iqbal said...

//ஆனால், மன்னிப்பை வெகு எளிதில் விலைக்கு வாங்கிவிட முடியும் என்பதை யோசித்து பார்த்தீர்களா?//
இங்கு அந்த பெண் எந்த ஒரு இழப்பீட்டு தொகையையும் வாங்கவில்லை .

அந்த கொலையாளி அந்த எழைத்தாயிற்கு காலம் முழுவதும் பணிவிடை செய்யப்போவதாக அறிவித்துள்ளார் .

//ஒரு பெரிய கோடீஸ்வரனோ அல்லது ஒரு பெரிய போலீஸ் அதிகாரியோ ஒருவனை கொலை செய்துவிட்டார் என்று வைத்துகொள்ளுங்கள்.

கொலை செய்யப்பட்டவரின் தாய் அல்லது உறவினர்களை ரெண்டு போடு போட்டு, மன்னித்து விடுவதாக எழுதி வாங்கிகொண்டால் என்ன நீதி அங்கே இருக்கும்?

நீதிபதி, போலீஸ் அதிகாரி, மன்னர் எல்லோரும் நெருங்கிய நண்பர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் கூட்டாக சேர்ந்து மிரட்டி மன்னித்ததாக எழுதி வாங்கினால், அங்கே நீதி இருக்குமா?

இங்கே அந்த ஏழை பெண் மிரட்டப்பட்டு மன்னித்ததாக எழுதி கொடுக்கவில்லை என்பதற்கு என்ன நிரூபணம்?//


ஷரியத் சட்டங்கள் முழுமையாக அமலில் இருக்கும் அரசில் இது போன்ற தவறுகள் நடக்கும் சாத்தியமில்லை . ஏனென்றால் ஆட்சியாளகள் அல்லாஹ்விற்கும் அவனது கட்டளைகளுக்கும் கீழ்படிந்து நடப்பவர்களாக இருப்பார்கள். அதற்கு சில உதாரணகளை கீழே தருகின்றேன் .

Adirai Iqbal said...

இணைய வேகத்தில் எதோ பிரச்சினை . அதை சரி செய்துவிட்டு தொடர்கிறேன் இன்ஷா அல்லாஹ்!

Anonymous said...

please dont come to india

Anonymous said...

Why so much Saudi patriotism?
Why not show the same to India?

This is the reason why Muslims are hated all around.
You know this very well.
I have a doubt that, this is what you want.

nila nilavan said...

ஆதிரை இக்பால்,

உங்களுடைய செய்தி மாதிரி நிறைய இருக்கிறது.

http://www.arabnews.com/node/292623
அனைத்துமே உப்புசப்பு இல்லாத கேனத்தனமான சட்டங்கள்.

//ஷரியத் சட்டங்கள் முழுமையாக அமலில் இருக்கும் அரசில் இது போன்ற தவறுகள் நடக்கும் சாத்தியமில்லை . ஏனென்றால் ஆட்சியாளகள் அல்லாஹ்விற்கும் அவனது கட்டளைகளுக்கும் கீழ்படிந்து நடப்பவர்களாக இருப்பார்கள். //

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் சமூகத்தில் ஏன் கொலைகள் நடக்கின்றன?

மொகலாயர்களின் ஆட்சியிலும் நவாப்களின் ஆட்சியிலும் ஆட்சியை பிடிப்பதற்காக அப்பாவையும் சகோதரர்களையும் கொன்று ஆட்சி பீடம் ஏறி உங்களது இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படி கொலை செய்தவர்களுக்கு யார் தண்டனை கொடுத்தார்கள்? அவர்களே அரசர்கள்.

ஒருவனுக்கு ஒரே ஒரு சகோதரன். இவன் தன் சொந்த சகோதரனை கொன்றிருக்கிறான். அவனுக்கு வேறு யாரும் சொந்தங்கள் இல்லை. இவனுக்கு என்ன தண்டனை? தன்னைத்தானே மன்னித்துகொண்டுவிடுவானா?

ஒரு அப்பா தன் மகனை கொலை ஒரு ஆளை வைத்து கொலை செய்கிறார் என்று வைத்துகொள்ளுங்கள். கொலை செய்தவனை கொலை செய்யப்பட்டவனின் அப்பா என்ற முறையில் தானே மன்னித்துவிட்டார் என்று வைத்துகொள்ளுங்கள். ரொம்ப நல்லா இருக்கிறதா?

அப்பா சொத்தை தனக்கு எழுதிதரமாட்டேன் என்கிறார். அவருக்கு ஒரு தொடுப்பு இருக்கிறது. அந்த தொடுப்புக்கு சொத்தை எழுதிவைத்துவிடுவார் என்று அஞ்சி அந்த அப்பாவை கொலை செய்கிறான் ஒரு மகன். அந்த அப்பாவுக்கு இவனே ஒரே மகன்.
இவனுக்கு என்ன தண்டனை? தன்னைத்தானே மன்னித்துகொள்வானா?
சரி ஆளை வைத்து கொலை செய்துவிட்டு, கொலை செய்தவனை இவன் மன்னித்தால், நீங்கள் ஒப்புகொள்வீர்களா?

Adirai Iqbal said...

இந்த கட்டுரையின் நோக்கம் ரிசானாவின் விடயத்தில் அந்த குழந்தையின் பெற்றோர்கள் ரிசானாவை மன்னிக்காததை வைத்து சில மோடியின் ரசிகர்கள் அதாவது கூட்டு கற்பழிப்பு கொலை போன்றவற்றை மறந்துவிட்டு மோடியை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுரை(?) பகர்ந்த கும்பல் சராமாரியாக முஸ்லிம்களை சகிப்பு தன்மை அற்றவர்கள் . மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவர்கள் என்று சகட்டு மேனிக்கு எழுதி(?) தள்ளினர் . எனவே கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு நிகழ்வில் பாதிக்கப்பட்ட அந்த தாய் மன்னித்ததும் மட்டுமல்ல இழப்பீட்டுத்தொகையையும் மறுத்த விடயத்தையும் இங்கு பகிர்ந்தேன்.

இதற்கு சில அதி மேதாவிகள் இந்தியாவில் இருக்கும் என்னை இந்தியாவிற்கு வராதே என்கிறார்கள் .

அடப்பாவிகளா எல்லோரும் ஒன்று சேர்ந்து கும்மி அடிப்பார்களாம் அதற்கு பதில் கூறுவதுபோல் சில பதிவுகள் அமைந்துவிட்டால் இப்படிதான் மண்டை காய்ந்துவிடுகிறது சிலருக்கு.

ஒருவன் சம்மந்தமே இல்லாமல் . முகலாயர்கள் ஆட்சி , நவாபுகளின் ஆட்சி என்று இந்த கட்டுரைக்கு சம்மந்தமே இல்லாமல் உளறுகிறான்.

இன்ஷா அல்லாஹ் இவை எல்லாவற்றிற்கும் தனித்தனியே பதிவு போடலாம் என உள்ளேன். நேரமின்மையே அதற்கு பெரிய தடையாக உள்ளது.

Adirai Iqbal said...

//அப்பாவை கொலை செய்கிறான் ஒரு மகன். அந்த அப்பாவுக்கு இவனே ஒரே மகன்.
இவனுக்கு என்ன தண்டனை? தன்னைத்தானே மன்னித்துகொள்வானா?//

கொஞ்சமாவது சிந்தித்திருந்தால் இதுபோன்ற கேள்வியொன்றை நீங்கள் வினவி இருக்கமாட்டீர்கள். அது எப்படி ஒரு கொலை காரனுக்கு மன்னிக்கும் தகுதி வரும். எப்பொழுது ஒருவன் குற்றவாளி ஆகிவிட்டானோ அவன் அதற்கான தகுதியை இழந்துவிடுகின்றான் . அவன் தண்டனையை ஏற்றுக்கொள்வதைவிட வேறு வழி இல்லை. இன்னொன்றையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . அந்த மன்னிக்கும் செயல் எல்லா வழக்குகளுக்கும் அல்ல . வழக்கின் தன்மையை பொறுத்துதான் அமையும்.

Adirai Iqbal said...

//Why so much Saudi patriotism?
Why not show the same to India?

This is the reason why Muslims are hated all around.
You know this very well.
I have a doubt that, this is what you want.//

நான் எத்தனை கட்டுரைகள் சவுதியை ஆதரித்து எழுதி இருக்கிறேன் சொல்லுங்கள். ஒரு ஏழைத்தாயின் மன்னிக்கும் பண்பை எடுத்துக்காட்டியுள்ளேன் அவ்வளவுதான்.

UNMAIKAL said...

PART 1. இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை :

அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்


குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.
இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் , பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.

தனக்குத்தானே முரண்படுவதுதான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.

டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள்.

சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.

போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.

பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும் மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?

ஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரணதண்டனை நியாயம் என்றால், அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.குழந்தையின் உயிர், உயிர் இல்லையா?

சிறுமிக்கு தண்டனையா என்றும் இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்றும், மைனர் வயதை 14ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள்தான் கூப்பாடு போட்டார்கள்.

அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன.

இவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஆனால் பருவ வயதை அடைவதுதான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.

சவூதியில் அதுதான் சட்டமாக உள்ளதால் 17வயதுப் பெண் அந்தச் சட்டப்படி மேஜர் என்பதால் மைனர் என்ற அடிப்படையில் கருணை கோர முடியாது.

டெல்லி மாணவி பிரச்சினையில் மைனரை மேஜர் ஆக்கப்பார்க்கிறார்கள்.

சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள்.

இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

இந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா?

மிருக புத்திரன்களாக இருக்கும் எழுத்தாளர்கள், ஜோசப் பாபா பையன்கள் மற்றும் விகடக்கச்சேரி நடத்தும் கோமாளிகள் தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தை இவர்கள் பேசுவார்களா?

பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் இதைப்பார்ப்பதுதான் சரியான பார்வையாகும்.

அனைவருக்கும் சமநீதி என்பதுதான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும்.

டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.

அடுத்ததாக இதை தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.

ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பததை பேனா பிடித்தவர்கள் முடிவு செய்ய இயலாது.

எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் நட்டமும் நீதிமன்றமும்தான் அதை முடிவு செய்ய இயலும்.

CONTINUED ...

UNMAIKAL said...

PART 2. இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை :

அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்


குழந்தை கொல்லப்பட்டபோது சாட்சிகளாகவோ அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை.

விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை.

மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதி மன்ற சாட்சிகளாகவோ இருக்கவில்லை.

இது குறித்து முடிவு செய்யவேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாதபோது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவதுதான் அறிவுடையவர்களின் செயலா?

லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அதுதான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.

அஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா?

கோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப்போல் கற்பனை செய்து எழுதினால், அதை மிருகபுத்திரன்களும் விகடக் கோமாளிப் பையன்களும் ஏற்றுக் கொள்வார்களா?

இவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை, மனசாட்சியும் இல்லை, உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் அறிவற்றவர்கள் என்றுதான் நிரூபித்துள்ளார்கள்.

ஆணும் பெண்ணும் சமம் என்று எழுதிவிட்டு குற்றம் செய்வதில்மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

சவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்.

அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா?

நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம்தான். நின்றிருப்பார்கள்.

அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்படடு இருப்பார்கள்.

கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன்?

மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்துவிட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள்.

நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.

கொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று இந்த கூறு கெட்ட அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.

மன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை.

மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்டமாட்டார்கள்.

இந்தியக் குழந்தையை சவுதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்பதுதான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

மக்களை தூண்டிவிடக்கூடிய பிரச்சினை வராதவரை நடுநிலை வேஷம் போடுவார்கள்.

எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அதுபோன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


வெளியீடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/ilangai-rezaana-marana-thandanai/

Post a Comment