test

Sunday, December 30, 2012

பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் தண்டனை பற்றிய கருத்தில் அருந்ததிராயும் ஊடகங்களும் .

 பிரபல சமூக ஆர்வலரும் பத்திரிக்கையாளருமான அருந்ததிராய் அவர்கள் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் பற்றி சில கருத்துக்களை கூறி வருகிறார்.

அது 

"கற்பழிப்பு அது எங்கு நடந்தாலும் என்பது கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எல்லா விஷயங்கள் போன்று  இந்த விஷயத்திலும் நம் நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது. 

குஜராத்தில் பலநூறு முஸ்லிம் பெண்களின் கற்புகள் காவி கொடியவர்களால் சூரையாடப்பட்டப்போது இந்த ஊடகங்கள் அமைதி காத்தது ஏன்?

காஷ்மீரில் அபலைப்பென்கள் இந்திய ராணுவத்தினரால் சீரழிக்கப்படும்போது அவர்களை தூக்கில் போட வேண்டும் என கோரிக்கை வைக்கப்படாதது ஏன்?

சட்டீஸ்கரில் ஆதிவாசிப் பெண் சோனி போலிசாரால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய பெண் உறுப்பு கற்களால் சேதப்படுத்தப்பட்டபோது என் இவர்கள் வாயை திறக்கவில்லை?

இப்பொழுது டெல்லியில் கற்பழிக்கப்பட்ட பெண் பேருந்திலிருந்து நிர்வாணமாக வீசப்பப்பட்டபோது நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனரே தவிர அவளுக்கு யாரும் சட்டையை கழட்டித்தர முன்வரவில்லை.


கற்பழிக்கப்பட்ட பெண் எந்த ஜாதி மதம் அல்லது இனத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் பாகுப்படில்லாமல் எதிர்க்கவேண்டும்.

இதுவே என்னுடைய  கோரிக்கை" எனக்கூறியுள்ளார்.

இந்த கருத்தினை தேசவிரோத கருத்தாக சில  ஊடகங்கள் சித்தரித்து வருவது குறிப்பிட தக்கது .

இதேபோன்ற கருத்தினை வலியுறுத்தித்தான் நாம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தோம் .  அக்கருத்தை மதவாத கருத்தாக சிலர் திரித்து எதிர் விவாதங்களும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . அக்கட்டுரையைப்படிக்க இங்கு அழுத்தவும் . மேலும் அவற்றையெல்லாம் (கற்பழிப்பு கொலை) மறந்துவிட்டு மோடியை பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்க முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டுமாம். இக்கருத்தினை எதிர்த்து நாம் எழுதிய இன்னொரு கட்டுரை இங்கு  படிக்கவும் .

இந்நிலையில் டெல்லியில் கொடூரர்களால் கற்பழிக்கப்பட்ட அந்த மாணவி இறந்துவிட்டார் என்ற செய்தி மிகவும் வருததக்கதாகும். அந்த கொடூரர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கவேண்டும் என்று கோரும் அதே நேரத்தில் குஜராத், காஷ்மீர் , சட்டீஸ்கர் பெண்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் நம்மிடம் இருக்கிறது.

6 comments:

Bala subramanian said...

காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

நன்மக்களே!
வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

-இந்தியன் குரல்

Ethicalist E said...

ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு எழுத்தாளரின் பதிவை படித்து பாருங்கள்

http://charuonline.com/blog/?p=58

Adirai Iqbal said...

தங்கள் வருகைக்கு நன்றி சகோ Ethicalist E

//ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு எழுத்தாளரின் பதிவை படித்து பாருங்கள்

http://charuonline.com/blog/?p=58//

ஆமாம் மன நோய் நிரம்பவே முற்றிப்போயுள்ளது

Anonymous said...

"குஜராத்தில் பலநூறு முஸ்லிம் பெண்களின் கற்புகள் காவி கொடியவர்களால் சூரையாடப்பட்டப்போது இந்த ஊடகங்கள் அமைதி காத்தது ஏன்?"

இதை தெரிவு செய்யப்பட்ட மௌனம் என்பார்கள். இது கண்டிக்கப்பட வேண்டியது.

"கற்பழிக்கப்பட்ட பெண் எந்த ஜாதி மதம் அல்லது இனத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் பாகுப்படில்லாமல் எதிர்க்கவேண்டும்."

இந்த கருத்து எந்த வித மாற்று கருத்துகளும் இன்றி ஏற்று கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் சிலோனில் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்ட கண்டன போராட்டம், விமர்சன போராட்டம் நடத்திய இன்னும் நடத்திக்கொண்டு இருக்கும் முஸ்லிம் பதிவர்கள்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட தமிழ் பெண்கள் விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பது ஏன் ?
(பெரும்தொகையான தமிழர்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் படுகொலை வேறு செய்யப்பட்டிருந்தனர்)

புலிகள் ஒரு முஸ்லிம் பெண்ணை கூட பாலியல் வல்லுறவு செய்யவில்லை.

Adirai Iqbal said...

//"குஜராத்தில் பலநூறு முஸ்லிம் பெண்களின் கற்புகள் காவி கொடியவர்களால் சூரையாடப்பட்டப்போது இந்த ஊடகங்கள் அமைதி காத்தது ஏன்?"

இதை தெரிவு செய்யப்பட்ட மௌனம் என்பார்கள். இது கண்டிக்கப்பட வேண்டியது.

"கற்பழிக்கப்பட்ட பெண் எந்த ஜாதி மதம் அல்லது இனத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் பாகுப்படில்லாமல் எதிர்க்கவேண்டும்."

இந்த கருத்து எந்த வித மாற்று கருத்துகளும் இன்றி ஏற்று கொள்ளப்பட வேண்டும்.//

நிச்சயமாக நானும் உடன் படுகிறேன்

//கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட தமிழ் பெண்கள் விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பது ஏன் //

எனக்கு இது புதிய தகவலாகவே உள்ளது . இது உண்மையானதாக இருந்தால் நிச்சயமாக கண்டனத்திற்கு உரியது . தயவு செய்து இதற்கான தரவுகளை தரவும்.

Anonymous said...

"எனக்கு இது புதிய தகவலாகவே உள்ளது . இது உண்மையானதாக இருந்தால் நிச்சயமாக கண்டனத்திற்கு உரியது . தயவு செய்து இதற்கான தரவுகளை தரவும்."

அல்லா மீது ஆணையாக குரான் மீது ஆணையாக உங்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது / நீங்கள் இதுவரை என்றைக்குமே கேள்வி படவில்லை என்று சொல்லுங்கள் நான் பின்பு ஆதாரங்களுடன் தொடர் கொள்கின்றேன்.

Post a Comment