test

Thursday, December 13, 2012

எகிப்தின் தற்போதைய நெருக்கடிக்கு என்ன காரணம்?

கடந்த ஜூன் 2012 லிருந்து எகிப்திய அதிபராக இருப்பவர் முர்ஷி . . கடந்த மாதம் எகிப்து அதிபருக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் ஆணை ஒன்றை அவர் பிறப்பித்தார்.அதற்கு அங்குள்ள எதிர்கட்சிகள்  கடுமையான எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

அந்த சட்டம் அங்கீகரிக்கப்பட்டால் எகிப்திய அதிபருக்கு , அரசியல், இராணுவம் , நீதித்துறை ஆகியவற்றில் வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் . இதனை நீதித்துறையால் கூட கலைக்க முடியாது . 


இந்த சட்ட ஆணையானது ஷரியாவை அமல்மடுத்தும் முயற்சியின் சிறு அடியாகும் என்று முர்ஷியின் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். அனால் இவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவில்லை ,அது இதன் மூலம் சில குற்றவியல் சட்டங்களை வேண்டுமானால் அமல்படுதலாமேயன்றி வேறு எந்த ஒரு பாரிய மாற்றங்களையும் இதன் மூலம் கொண்டு வரமுடியாது . 

அதாவது முர்ஷியின் ஆதரவாளர்களின் இஸ்லாமிய அரசு அல்லது இஸ்லாமிய ஆட்சி என்பது சில இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களைகொண்ட முதலாளித்துவ அரசாகும். அதாவது முதலாளித்துவ அரசுக்கு இஸ்லாமிய முலாம் பூசுவதன் மூலம் இதுதான் இஸ்லாமிய அரசு என்று அவர்கள் நிறுவ முயல்கிறார்கள்.

உண்மையில் இஸ்லாமிய அரசியல் கொள்கை முதலாளித்துவ கொள்கைக்கு   நேர்மாற்றமானதாகும்.

ஷரியாவை எவ்வாறு அமல்படுத்துவது 


சமூகத்தில் பொதுவாக பரவியிருக்கும் கருத்தே அந்த சமூகத்தின் மேலோங்கிய கருத்தாக அமையும். அந்த பொது ஜன கருத்தானது சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக நடைப்பெறும் ஒட்டுமொத்த செயல்களை சார்ந்துள்ளது. தனி ஒருவரது சிந்தனையோ நலனோ இதில் ஆதிக்கம் செலுத்தாது. சமூகத்தின் பரவலான கருத்தான பொதுஜன கருத்து தனிமனித கருத்தை அடக்கிவிடும்.

சமூகத்தின் பொது ஜனக்கருத்து இஸ்லாத்தின் அடிப்படையில் இருப்பது அவசியம்.

முஸ் அப் பின் உமைர்(ரலி) அவர்கள் மதீனாவிலிருந்து திரும்பி நபி(ஸல்) அவர்களை சந்தித்தபோது, இஸ்லாம் அனைத்து இல்லங்களையும் சென்றடைந்துவிட்டதாக கூறினார்கள். அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக கூறவில்லை. மாறாக இஸ்லாம் மக்கள் மத்தியில் மேலோங்கி நிற்பதாகவே அறிவித்தார்கள். இந்த அடிப்படையிலே முஸ்லிம்கள் மதினாவில் பெரும்பான்மையினராக இல்லாதபோதும் நபி(ஸல்) அவர்களால் இஸ்லாமிய அரசை நிறுவ முடிந்தது.

நபி(ஸல்) அவர்கள் சமுதாயத்தோடு தொடர்பை வலுப்படுத்தி அந்த சமூகத்தின் உணர்வுகள் இஸ்லாத்தின் அடிப்படையில் இருக்கும் ஒரு நிலையை ஏற்படுத்த பாடுப்பட்டார்கள். அதன் மூலம் அல்லாஹ்(சுபு) விரும்பியவற்றை விரும்பவும், அல்லாஹ்(சுபு) வெறுப்பவற்றை வெறுக்கும்படியான ஒரு சூழலை உருவாக்கினார்கள்.

இஸ்லாம் அந்த சமூகத்தின் மேலோங்கிய சிந்தனையாக இருக்கவும் . அச்சமூகம் ஹலால்-ஹராம் அடிப்படையில் எவற்றையும் சீர்தூக்கி பார்க்குமாறும் செய்தார்கள். மதீனாவில் அது நடந்தேறியதால் அங்கே இஸ்லாமிய சமூகம் நிலைபெற்று ஓர் இஸ்லாமிய அரசு உருவாகியது.

இந்த வழி முறைகளின் மூலமே   ஒரு இஸ்லாமிய அரசை ஏற்படுத்த முடியும் . 

உங்களில் ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாக்கியது போல், இவர்களையும் நிச்சயமாக பூமியில் ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும் இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக்கொண்ட மார்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அமைதியையும், பாதுகாப்பையும் கொண்டு அவர்களுடைய பயத்தை மாற்றிவிடுவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.  (அந்நூர்:55)






2 comments:

faizeejamali said...

Jananayagam matrum pen suthanthiram endra peyaril . Egyptyia ethir katchigal communisa kolgaigalaiyum muthalalithuva kolgaigalaiyum thooki pidikkindrana . Anaal ikhvaangal idhil mutrilum verupatta sindhanai udayavargal muadhalalithuva americavin natpai mutrilum vidamal kanisamage kuraithukondu communisa china vin pal thangal naptai erpaduthugirargal. Idhan mulam mudhalalium tholilalium iraivan mun samam endra islathin nai melonga cheyya iraivain udhaviyal muyarchi seigirargal isalmiya sharia sattam egyptil thamathamagalam but allahvin udhaviyal nilaipruvadhu urudhi inshaalla .

Pebble said...

As per one of my teacher from Egypt, most of the people who oppose Morshi govt., are supporters of Hosni Mubarak...

Post a Comment