test

Wednesday, December 26, 2012

குஜராத் இனப்படுகொலையை மறந்துவிடலாமா?

 சில பதிவர்கள்   நமக்கு கீழ்கண்டவாறு அறிவுரை(?) பகர்கிறார்கள்!.

அது

இனப்படுகொலையை மறந்துவிடுங்கள் . குஜராத்தின் வளர்ச்சியை பாருங்கள். அவர் வெற்றி பெற்றது அவர் குஜராத்தை வளர்ச்சியின் பாதையில் இட்டுசென்றதால்தான் என்பதை ஏற்றுகொள்ளுங்கள் என்பதாக.இது எப்படி இருக்கிறது என்றால் பெண்ணை  பலாத்காரம் செய்தவனுக்கே  ,காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் அடித்தவனுக்கே அப்பெண்களை திருமணம் செய்வித்துவிடுங்கள் என்பதுபோல் உள்ளது .

இது அதைவிட கேவலமானது . இவர்களுக்கு கொஞ்சமாகவாவது மனித தன்மை இருந்தால் இப்படியெல்லாம் எழுதியிருக்க மாட்டார்கள் . மானங்கெட்டவர்கள் .

அப்புறம் குஜராத்தின் வளர்ச்சிப்பற்றி தொண்டை கிழிய கத்துகிறார்கள் . அந்த சத்தத்தில் வறுமையில் வாடும் ஏழைகளின் அழுகை சத்தங்களை மறைக்க பார்கிறார்கள்

முதலில் குஜராத்தின் வளர்ச்சி என்பது கார்பரேட் வளர்ச்சிதான் ஒழிய அது சாதாரண மக்களின் வளர்ச்சி அல்ல.

அம்பானிகளின் முன்னேற்றம் . அங்கு எல்லா மக்களின் முன்னேற்றமாக காட்டப்படுகிறது.

அங்கு கார்பரேட் கம்பெனிகளின் வளர்ச்சியை தவிர்த்து . அங்கு ஏழை மக்களின் முன்னேற்றத்தை காண்பது அரிதான ஒன்றாகத்தான் உள்ளது.

மாநிலத்தின் மக்கள் வரிப்பணத்தை பெரும் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்துவிட்டதின் விளைவு குஜராத்தில் சில கோடிஸ்வரர்கள் உருவாக துனைப்புரிந்தார்  மோடி . உடனே முன்னேற்றம் வளர்ச்சி என்ற கூப்பாடுதான்.

அதே நேரத்தில் ஏற்கனவே ஏழையாக இருந்த மக்கள் இன்னும் மோசமான வறிய நிலைக்கு தள்ளப்பட்டனர் எனபதை இந்த பதிவர்களுக்கு தெரியாத என்ன?.

சர்வதேச உணவுக்கொள்கை ஆய்வு நிறுவனத்தின் இந்திய மாநிலங்களின் வறுமை நிலவரம் (2008)பின் வருமாறு உள்ளது .

17 பெரிய மாநிலங்களில் குஜராத் 13 ஆவது இடத்தில் உள்ளது . ஒரிசா குஜராத்தை விட ஓர் இடம் முன்னிலையில் உள்ளது .

இரத்தத் சோகையால் பாதிக்கப்படத் பெண்களின் சதவீதம் 2006இல் 55.5% சதமாகும். இது 1999இல் 46.3%  சதமாக  இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் நிறைய

நாம் இதையெல்லாம் சொன்னால் வேறு மாநிலங்களில் அவ்வாறு இல்லையா? என்று நம்மையே கேள்விகளால் அடக்கப்பார்க்கிறார்கள். அவர்கள்தானே வளர்ச்சி வளர்ச்சி என்று கூப்பாடுபோடுகிரார்கள்.

உடனே இன்னொரு பதிவர் கர்நாடாகாவில் ப.ஜ.க ஆட்சியை பிடித்தது எப்படி இனப்படுகொலையினாலா என்ற புத்திசாலிதனமாக நம்மிடம் கேள்விகளை வைக்கிறார்.

நாம் திரும்ப திரும்ப சொல்வதெல்லாம்

மோடியை நாம் எதிர்ப்பது குஜராத் இந்துத்துவத்தின் சோதனை சாலை . அந்த சோதனையில் அவர்கள் வெற்றியையும் ஈட்டிவிட்டார்கள் . அதனை பிற இடங்களுக்கு கண்டிப்பாக கொண்டு செல்ல முயல்வார்கள் . அதற்கு அவர்கள் சாதகமான  ஒரு சூழ்நிலைக்காக காத்திருக்கிறார்கள். அன்று மத்தியிலும் மாநிலத்திலும் இந்துத்துவா தான் ஆட்சியில் இருந்தது . அதுபோல ஒரு சந்தர்ப்பத்திர்காகத்தான் இந்த வெறி நாய்கள் காத்துக்கிடக்கின்றனர்.

அப்புறம் காங்கிரஸ் ஆட்சியில்தானே அதிகளவு கலவரங்கள் நடந்தன என்று இன்னொரு கேள்வியையும் வைக்கிறார்கள் மோடியின் ரசிகர்கள்.

உண்மைதான். ஆனால் அந்த கலவரங்களை நடத்தியவர்கள் யார் ? இந்துத்துவவாதிகள்தானே ?

அப்புறம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குமா ?

நிச்சயமாக இல்லை. முதலாளித்துவ கட்சிகளிடம் நியாயம் நீதி நேர்மை இவையைஎல்லாம் நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. அவர்கள் அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் செய்யவே நேரம் போதவில்லை பாவம்.

இதற்கு துணைப்போன


இவளும் பெண்தானா ?

நாம் குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை மறக்க கூடாது . அதை நெஞ்சிலே ஏந்தி இந்த பாசிசம் வேரோடும் வேரடி மண்ணோடும் அழியும்வரை போராடுவோம் .

இன்னும் இந்த பாசிசத்தை தொடர்ந்து  அம்பலப்படுத்தி வரும் கம்யூனிசம் காம்பாட் ஆசிரியர் டீஸ்டா செடல்வாட் , தெஹல்கா பத்திரிகை குழுவினர் , சஞ்சீவ் பட் ஐ .பி எஸ் . ஆகியோருக்கும் இன்னும் நிறைய உள்ளங்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.

14 comments:

jaisankar jaganathan said...

நண்பரே

கோரிமுகம்மது, கஜினி முகம்மது பண்ணாத கொலைகளா நடந்துடுச்சு இப்போ?

Adirai Iqbal said...

இனப்படுகொலைகள் யார் செய்தாலும் அதை நாம் வன்மையாக கண்டிப்போம்.
அவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிகொண்டாலும் சரியே !.
பாசிசம் அது எந்த வடிவில் வந்தாலும் அதனை முழுவதுமாக நாம் நமது எதிர்ப்புகளை பதிவு செவோம்
சதாம் ஹுசைன் ஈராக்கில் குர்து மக்களை இனவழிப்பு செய்யும்போதும் நாம் எதிர்த்தோம் . அதுபோலவே பயங்கரவாதி ஜார்ஜ் புஷ்கள் ஒட்டுமொத்த ஈராக் மக்களை இனவழிப்பு செய்ததையும் எதிர்த்தோம் . அதனை ஒபாமா விரிவுபடுத்தி செல்வதையும் எதிர்க்கிறோம்.

ஆக உங்களின் இந்த பின்னூட்டம் இனப்படுகொலைகள ஆதரிப்பதுபோல் அல்லவா தெரிகிறது.

Adirai Iqbal said...

வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களில் பீகார் 10.9 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளதாக 2005-2010 க்கான திட்டக்குழு அறிக்கை தெரிவிக்கிறது.
2001-2005 ஆம் ஆண்டு திட்டக்குழு புள்ளிவிவர அறிக்கையில் 2.9 சதவீதம் வளர்ச்சி கொண்ட மிகவும் மந்தமான மாநிலமாக அடையாளபடுத்தப்பட்டிருந்த பீகார், 2005-2010 ஆம் ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ச்சி பெற்று 10.9 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதாக இதுவரை பரப்பப்பட்டு வந்த குஜராத் 9.3 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் இருப்பதோடு, 2005-2010 ஆம் ஆண்டு வளர்ச்சியில் அதிவேகமாக கீழ்நோக்கி இறங்கும் 17 மாநிலங்களில் ஒன்றாகவும் குஜராத் இடம்பிடித்துள்ளது.

பீகார், குஜராத்தைத் தொடர்ந்து 2005-2010 ஆண்டு வளர்ச்சியில் சட்டீஸ்கர், அரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்றும் திட்டக்குழு புள்ளிவிவரம் கூறுகிறது.

2001-2005 ஆம் ஆண்டு வளர்ச்சியில் மிகவும் கடை நிலையிலிருந்த மாநிலங்கள்கூட, 2005-2010 ஆம் ஆண்டு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தைக் காட்டியுள்ள நிலையில், 2001-2005 வளர்ச்சியை ஒப்பிடுகையில் குஜராத், வளர்ச்சியில் அதிவேகமாக கீழிறங்கும் மாநிலமாக திட்டக்குழு புள்ளிவிவரம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Read more about விரைவாக வளரும் மாநிலம் பீகார்; தகரும் மாநிலம் குஜராத் - அதிர்ச்சி தகவல்! [7576] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com

Anonymous said...

//ஆக உங்களின் இந்த பின்னூட்டம் இனப்படுகொலைகள ஆதரிப்பதுபோல் அல்லவா தெரிகிறது. //

இலங்கைல கூட்டமா செத்தப்ப ஒரு "கான்" வாய திறக்கல , இப்ப ஏன்டா லபோ திபோ ன்னு கத்து ரீங்க
?

Adirai Iqbal said...

வெறும் அவதூறுகளை பரப்பிக்கொண்டிருக்காதீர்கள் .

சிங்கள இனவெறியன் இராஜ்பக்ஷேவையும் மோடியையும் ஒரே தரத்தில்தான் நாங்கள் காண்கிறோம். முஸ்லிம்களைப் போலவே இனவெறியால் பல கொடூரங்களுக்கு ஆளான எம் தமிழின சொந்தங்களுக்கு என்றும் எங்களின் ஆதரவும் ஆறுதலும் உண்டு.

உதயம் said...

குஜராத் மோடி அரசின் போலீஸ் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 20க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது.

இதில் பெரும்பாலும் முதல்வர் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர்-இ-தய்யிபா போராளிகள் மற்றும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றவர்கள் போன்ற பொய்க் கதைகளை கூறி இவ்வளவு படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த கொலைகள் எல்லாம் கடந்த 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடையே நடந்தவைகளாகும்.

2002 அக்டோபர் 22-ஆம் தேதி சமீர்கான் பத்தான் என்பவரை கொலைச் செய்து குஜராத்தின் மோடி போலீஸ் போலி என்கவுண்டர் படுகொலைகளை துவக்கி வைத்தது. ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்திய வழக்கில் சமீர் பத்தானை கத்தியால் குத்திய சம்பவத்தை நடித்துக் காட்டவேண்டும் என பொய் கூறி சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். அவ்விடத்தில் வைத்து போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து தப்பி ஓட முயன்ற பத்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற பொய்க் கதையை பரப்பினர். இதுத் தொடர்பான வழக்கு நடந்துவருகிறது.

அஹ்மதாபாத் கேலக்ஸி தியேட்டருக்கு அருகே 2003 ஜனவரி 13-ஆம் தேதி ஸாதிக் ஜமால் மெஹ்தர் என்பவரை மோடியின் போலீஸ் போலி என்கவுண்டரில் படுகொலை செய்தது. மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர் போராளி என பொய் கூறி இந்த படுகொலை நிகழ்ந்தது. ஆனால் பாவ் நகரில் ஸ்கூட்டர் வியாபாரியாக வாழ்க்கையை ஓட்டியவர்தாம் ஸாதிக் ஜமால் மெஹ்தர்.

2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், ஸீஷான் ஜோஹர், அம்ஜத் அலி ராணா ஆகியோரை மோடியின் போலீஸ் அநியாயமாக சுட்டுக் கொலைச் செய்தது. இவர்களை அஹ்மதாபாத்திற்கு வெளியே உள்ள ஒரு விவசாய பண்ணையில் வைத்து கொலைச் செய்த பிறகு போலீஸ் அஹ்மதாபாத்திற்கு அருகே உள்ள நரோடா பகுதிக்கு இறந்த உடல்களை கொண்டுவந்து அதிகாலை நான்கு மணிக்கு போலி என்கவுண்டர் நாடகத்தை அரங்கேற்றினர். இவர்களும் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர் போராளிகள் என மோடியின் போலீஸ் கூறியது.

அதனைத் தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்ந்தது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை நரோல் க்ராஸிங்கில் இந்த போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்த்தப்பட்டது. சொஹ்ரபுத்தீன் ஷேக்கையும், அவரது மனைவி கெளஸர் பீயையும் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை படுகொலைச் செய்த அதே விவசாய பண்ணை வீட்டில் வைத்து கொலைச் செய்ததாகவும், சொஹ்ரபுத்தீன் மனைவி கெளஸர் பீயை கொலைச் செய்யும் முன்பு மோடியின் போலீஸ் மிருகங்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்பதும் பின்னர் நிரூபணமானது.

கவுஸர் பீயை கொலைச் செய்து தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த போலி என்கவுண்டர் படுகொலைக்கு சாட்சியான போலீஸ் இன்ஃபார்மர் துளசிராம் பிரஜாபதியை கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி படுகொலைச் செய்தனர்.

2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி காந்தி நகர் போலீஸ் சவுராஷ்ட்ராவை சார்ந்த ரஹீம் காஸிம் ஸம்ராவை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்தனர். 2006 மார்ச் 17-ஆம் தேதி வாத்வாவில் வைத்து நான்கு முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டு மோடியின் போலீசாரால் போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டனர். கொலைச் செய்யப்பட்டது யார் என அடையாளம் காணப்படவில்லை.

உதயம் said...

மேலே கண்டது, காவி தீவிரவாதத்தின் வேர்கள் புரையோடிய குஜராத் அரசு இயந்திரத்தையும் மீறி, வெளிவந்த சில சாம்பிள்கள். இன்னும் எத்தனையோ கொடூரங்கள் வெளியுலகிற்கு கசிய விடப்படவே இல்லை என்பதே நிஜம்.

அகில உலக அடாவடி தாதா என்று பெயரெடுத்த அமெரிக்காவே நரேந்திர மோதி விஷயத்தில் கவனமாக இருக்கிறது. மத துவேஷத்தை தன் ரத்த நாளங்களில் ஓடவிட்டு முஸ்லிம்களின் ரத்தத்தில் குளித்து வரும் ஒரு மனித குல விரோதிக்கு தனது நாட்டில் காலை கூட வைக்க அருகதையும், யோக்யதையும் இல்லை என்று விசாவை மறுக்கிறது அமெரிக்கா.

ஆனால், இரண்டாயிரம் இந்திய முஸ்லிம் சகோதரர்களை தன் கண் அசைவின் மூலம் தீர்த்துக்கட்டிய ஒரு மனித மிருகத்தை பிரதமராக்கிட துடிக்க்கிறார்கள் சிலர்.

குஜராத்தி முஸ்லிம்களின் ரத்த கவுச்சி இந்தியாவெங்கும் பரவ வேண்டுமா?

முஸ்லிம்களின் குரல்வளையில் ஏறி நின்று தான் இந்துக்களின் ஒற்றுமை பற்றி பேச வேண்டுமா?

நாலாந்தர குடிமக்களாக முஸ்லிம்களை நிர்கதியாக்கி விட்டு, எதை நோக்கி இந்தியா பயணிக்கப் போகிறது?

இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அத்துனை அநீதிகளும் "மதசார்பற்ற இந்தியா" என்ற போலி முகமூடியுடன் தானே நடந்தேறியது? போலியின் முகமே இவ்வளவு விகாரமாக இருந்தால், நிஜ முகம் எவ்வளவு கோரமாக இருக்கும்?

மோடி தண்டிக்கப்படாத வரை இந்தியாவில் நீதம் என்று ஒன்றுமில்லை.

Adirai Iqbal said...

@உதயம் அஸ்ஸலாமு அலைக்கும் சகோ !
உங்களின் தகவல்களுக்கு ஜசாக்கல்லாஹ்

உதயம் said...

மும்பை,அக்.20:

2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏராளமான முஸ்லிம்களைக் கொலை செய்து இன சுத்திகரிப்பு நடத்திய சங்கபரிவாரங்களுக்கு எதிரான வழக்குகளில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து முக்கிய பங்காற்றி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் "நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (The Citizens for Justice and Peace)" தான் இதுவரை இந்த இந்து தீவிரவாதிகளுக்கு எதிராக திரட்டிய மொத்த ஆதாரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்திய தேசத்திற்கு உலக நாடுகளின் முன்னிலையில் மாபெரும் அவமானத்தையும், தலைக் குணிவையும் ஏற்படுத்திய இந்த இன சுத்திகரிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, இதனை நடத்திய இந்து தீவிரவாத கும்பல்களுக்கு உரிய தண்டனை கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று களமிறங்கிய இந்த The Citizens for Justice and Peace அமைப்பு, தகுந்த ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதில், குற்றம் செய்த தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் பணிகளை செய்து வந்த அரசுக்கெதிராக போராடி வந்தது.தான் சேகரித்த ஆதாரங்களை உடனுக்குடன் நீதிமன்றத்தில் சமர்பித்தும் வந்தது.

ஆனால் நமது நீதிமன்றங்கள் தம்மால் முடிந்த அளவிற்கு விசாரணையை காலம் தாழ்த்தின என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயம். மற்றொரு புறம், குற்றவாளிகளுக்கெதிராக தேவைக்கு அதிகமாகவே கிடைத்த ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தட்டிக்கழித்தும், நீதி விசாரணையை காலவரையின்றி இழுத்தடித்தும் வந்தன.

இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் முன் சமர்பிக்க எங்களால் இயன்ற அளவு முயற்சிகள் செய்து வந்துள்ளோம்.

அதில் புதிய முயற்சியாக அனைத்து ஆதாரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை http://www.gujarat-riots.com/ என்ற இணைய தளத்தில் கொடுத்துளோம் என்று TCJP அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து தாங்கள் எடுத்துவரும் இதுபோன்ற முயற்சிகளால் குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கீழ்காணும் முக்கிய ஆவணங்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன:

*தேசிய மனித உரிமை கழகத்தின் (NHRC) அதிகாரப்பூர்வ அறிக்கை.

*தேசிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை.
*குஜராத் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை.

*உச்ச நீதிமன்றம் மற்றும் பிரத்தியோக விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்புகள்.

*கலவர நேரத்தில் முக்கிய தலைவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள். அதில் யார் யாருடன் பேசினர், கலவர நேரத்தில் என்னென்னவெல்லாம் பேசினார்கள் என்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரம்.

*மாநில அரசு தெரிவித்த நிவாரண பணிகள் மற்றும் புணர்நிர்மான, மறுவாழ்வுக்கான பணிகளுக்கான அறிக்கைகள்.

*முன்னாள் மாநில உளவுத்துறை தலைவர் RB ஸ்ரீகுமாரின் சட்டபூர்வ ஒப்புதல் அறிக்கைகள் (affidavits) அதன் மற்ற இணைப்புகள்

தேசிய அவமானமாகக் கருதப்படும் முஸ்லிம்களுக்கெதிரான இந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கையை குஜராத் மாநில அரசாங்கம் தான் ஆசீர்வதித்து முன்னின்று நடத்தியது என்பதற்குப் போதுமான ஆதாரம் உள்ளதா? என்று அனைவராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு, மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய எங்களின் தொடர் முயற்சி வெகு விரைவில் விடை கிடைக்கும் என்று தாங்கள் நம்புவதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

ஆனால் இந்த ஆதாரங்கள் எல்லாம் தகுந்த முறையில் விசாரிக்கப்பட்டு முறையான நீதி வழங்கப்படுமா என்பதை இப்போது நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாப்போம் என்றும் "இந்திய தேசத்தின் நீங்கா அவமானமாக நிலைபெற்றுவிட்ட இந்த கருப்பு நாட்களை நேர்மையோடு விசாரித்து நீதிவழங்க உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பிற்கு நீதியை நிலைநாட்டும் நேர்மையும் தைரியமும் உண்டா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Source: Thoothuonline

உதயம் said...

குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியை பயங்கரவாத முதலமைச்சர் என்றே அழைக்கின்றனர். இவர் தலைமையில் அரசு அமைந்த நாள் முதல், குஜராத்தில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் வசித்து வருகிறார்கள் என்ற கணக்கெடுப்பை எடுத்து வருகிறார். இதற்கு முன்னர் 1999 ல் இவரது கணக்கெடுப்பை உயர்நீதி மன்றம் தடுத்து நிறுத்தியது. சட்டத்தை மீறுவது என்பது இந்துத்துவவாதிகளுக்கு வழமையான விடயம் என்பதால் இப்போது மீண்டும் துவங்கி விட்டார்.


இப்போது, முஸ்லிம்கள் எப்படி வாழ்கிறார்கள்? எங்கெல்லாம் பரவி வாழ்கிறார்கள் என்று கண்டறிய ஒரு விசாரணை கமிஷன் அமைத்து இருக்கிறார். இதேப் போல் மற்றொரு சிறுபான்மையினமாகிய கிறிஸ்தவர்களின் கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. இதனை 1949 ம் ஆண்டிலிருந்து துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த கணக்கெடுப்புகளின் நோக்கம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இல்லாத குஜராத்தை உருவாக்குவதே. மேலும் முஸ்லிம்களின் பொருளாதர நிலை குறித்து ஆய்வு செய்யவும் மோடி பணித்துள்ளார். நிலத்தை வாங்கி விற்பவர்களின் கூட்டமைப்பு கூட, முஸ்லிம்களுக்கு நிலத்தை விற்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுபோல அரசியல் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாமல் போனது ஏன்? என்று தெரியவில்லை. குஜராத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்களையும் கணக்கெடுக்கவும் மோடி அரசு தவறவில்லை.


இதற்காக மோடி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சேத்னா என்பவரை நியமித்துள்ளார். இந்த சேத்னா, 2004 ல் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை தீ வைத்து கொளுத்திய 21 பேரை ஒட்டு மொத்தமாக விடுதலை செய்தவர்.


குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜோஹ்புராவில் எந்த அடிப்படை வசதியும் செய்திடாமல் வதைத்து வருகிறார் மோடி. இந்துத்துவா சிந்தனையின் சோதனைக் களம் என்று வருணிக்கப்படும் காந்தி மண் காவிப் புழுதியால் மறைக்கப்பட்டு வருகிறது. குஜராத் முஸ்லிம்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் சூழ்நிலையில், தங்கள் இசுலாமிய அடையாளங்களை மறைத்து இந்து பெயர்களுடன் ஜீவித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். மேலும் சங் பரிவார்கள் ஊடகங்களில், குஜராத் சிறந்த நிர்வாகியால் ஆளப்படுவதாக பீலா விடுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதுவல்ல.


ஆதாரம். தி சண்டே இண்டியன்

சிரிப்புசிங்காரம் said...

என்ன எழுதி என்னப்பா..??பொதுமக்களுக்குத் தெரியும் யாரு எப்படிபட்டவங்கன்னு...உம்முடைய பதிவும் ,சில கருத்துக்களும் மோடி பெரிய முஸ்லீம் எதிர்ப்பாளர்ன்னு கரடியா கத்துனாலும் மக்கள் தங்களுக்கு யார் வேண்டுமோ அவ்ர்களைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர்...போங்கப்பா போங்க போயி ஐந்து வருஷ்த்துக்கு தீவிரவாத முஸ்லீம்களுக்க் ஜால்ரா போட்டுகிட்டு கொடுக்குறத வாங்கிக்கோங்க....

Adirai Iqbal said...


//உம்முடைய பதிவும் ,சில கருத்துக்களும் மோடி பெரிய முஸ்லீம் எதிர்ப்பாளர்ன்னு கரடியா கத்துனாலும் மக்கள் தங்களுக்கு யார் வேண்டுமோ அவ்ர்களைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர்.//

இதைதான் நாங்களும் சொல்கிறோம் . மக்கள் மோடியை தேர்ந்தெடுத்தது முஸ்லிம் வெறுப்பு அரசியல் மூலம்தான் . அப்புறம் நீங்கள் பயங்கரவாதி மோடியின் புகழ்பாடி அவரிடம் பரிசில்களை பெறுங்கள்

Adirai Iqbal said...

பாஜக அலுவலகத்தில் ஒரு பலாத்காரம்.. அடங்காமல் தொடரும் பாலியல் கொடூரம்

டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தலைநர் போபால் அருகே பாஜக அலுவலகத்தில் வைத்து ஒரு இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மாணவி ஒருவரை ஓடும் பஸ்சில் வைத்து ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் அதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே பாஜக அலுவலகத்தில் வைத்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பரஸ்வாரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ள புகாரில், கடந்த 17-ம் தேதி மதியம் உள்ளூரில் உள்ள பரஸ்வாரா பகுதி பாஜக அலுவலகத்திற்கு நான் இன்டர்நெட் பார்க்க சென்றேன். அப்போது அங்கு வந்த எனது உறவினர் என்னை அங்கு உள்ள ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். உள்புறமாக கதவை தாழ்ப்பாள் போட்டு என்னை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். இது பற்றி வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி சென்று விட்டார். வெளியே சொன்னால் சமுதாயத்தில் அவமானமாகப் பார்ப்பார்கள் என்று நானும் மவுனமாக, இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்து விட்டேன் என்று கூறியுள்ளார். 3 பேரால் பலாத்காரம்.. 17 வயது பெண் தற்கொலை இதேபோல பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரில் 3 பேர் கொண்ட கும்பலால் 17 வயதுப் பெண் சீரழிக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியால் அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் தினசரி இதுபோன்ற கொடூரங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/28/india-woman-raped-bjp-office-167010.html

உதயம் said...

---------------- --------------------
//என்ன எழுதி என்னப்பா..??பொதுமக்களுக்குத் தெரியும் யாரு எப்படிபட்டவங்கன்னு...உம்முடைய பதிவும் ,சில கருத்துக்களும் மோடி பெரிய முஸ்லீம் எதிர்ப்பாளர்ன்னு கரடியா கத்துனாலும் மக்கள் தங்களுக்கு யார் வேண்டுமோ அவ்ர்களைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர்...போங்கப்பா போங்க போயி ஐந்து வருஷ்த்துக்கு தீவிரவாத முஸ்லீம்களுக்க் ஜால்ரா போட்டுகிட்டு கொடுக்குறத வாங்கிக்கோங்க....//- சிரிப்புசிங்காரம்.
----------------------- ---------


சிரிப்பு சிங்காரத்தை சிரிப்பாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் மிக சீரியசான விஷயத்தை சிரிப்பூட்டி நீர்த்து போக செய்யும் உத்தி என்பது இந்துத்துவ வன்மம். இது சிங்காரத்திடம் காணக்கிடைப்பதால் மோதியின் வெற்றியின் மூலம் முஸ்லிம் இன அழிப்பை எளிதில் கடந்து போக சொல்கிறார். செத்தது முஸ்லிம்கள் தானே.. என்ற எண்ணம், வெறியூட்டப்பட்டு வளர்ந்தவர்களால் தான் சொல்ல முடியும். ஒரு வெற்றியின் மூலம் கடந்த கால ரத்தக்கறைகளை துடைக்கலாம் என்பது சங்க பரிவார்களின் தந்திரம் இதைத்தான் தனது கருத்தின் மூலம் தெரிவித்து இருக்கிறார். இவரைப் போன்றவர்களின் எண்ணங்களினால் தான் கிரிமினல்கள் தேர்தல்களில் வெற்றி பெற்று தங்களது குற்ற சுவடுகளை துடைத்து விடலாம் என்ற நிலை நமது அரசியல் களங்களில் சமீபமாக அதிகரித்து வருகிறது. குற்றவாளிகள் வேட்பாளர்களாவது இவரை போன்றவர்கள் மறைமுகமாக ஆதரிப்பது போல இருக்கிறது.

மக்கள் தேர்தெடுத்து விட்டால் குற்றவாளிகளின் குற்றங்கள் மறைக்கப்பட்டு விடும் என்றால் "சட்டம் எதற்கு?? நீதி மன்றங்கள் எதற்கு?? மக்களிடம் கருத்து கேட்டு வாக்களிக்க சொல்லி குற்றவாளி யார்? நிரபராதி யார்? என்று தீர்மானிக்கலாமே?

Post a Comment