test

Tuesday, December 18, 2012

இளம் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் -சுஷ்மா சுவராஜ் !!!




பத்திரிகைகளில் ஒரு செய்தி :

டெல்லி ஓடும் பேருந்தில் இளம் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்க வேண்டு என்று சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார் . ராஜ்ய சபாவில் இது தொடர்பாக நடந்த விவாதத்தின்போது அமிதாபச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர்விட்டு அழுதார்.



 கண்டிப்பாக  இதில் நமக்கு எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால் அதை சொல்வதற்கு இவருக்கு என்ன அருகதை உள்ளது. ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் போன்ற வெறி நாய்களால் முஸ்லிம் பெண்களும் , தலித் பெண்களும் கற்பழிக்கப்ப்படும்போது என்ன செய்துகொண்டிருந்தார்.

குஜராத்திலே முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொல்லப்படும்போது . நரமாமிச மோடி ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு என்று சொல்லும்போது அதனை ரசித்துக்கொண்டிருந்தார்.

சாம்னாவில் பாசிஸ்ட் கிரிமினல்   பால் தாக்கரே அச்செயல்கள் (கற்பழிப்பு, கொலை) தேசப் பக்தியின் வெளிப்பாடு என எழுதும்போது அதனை மௌனமாக ஆதரித்துக்கொண்டிருந்தார் .

தெஹல்காவில் ஒவ்வொரு முஸ்லிம்களையும் எவ்வாறு கற்பழித்தோம் எப்படி கொன்றோம் என வெறி நாய்கள் பேட்டி கொடுக்கும்போது
இந்த ஜெயா பச்சன்களின் கண்ணீர்கள் வற்றி இருந்தனவா?. எங்களுக்குத்தான் தெரியும் அதன் வழியும் வேதனையும் .

நிச்சயமாக அந்த இளம் மருத்துவ மாணவியை சீரழித்தவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் .

அதேபோல் அந்த முஸ்லிம் பெண்களையும் , தலித் பெண்களையும் கற்பழித்து கொன்ற பாபு பஜ்ரங்கி போன்ற ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் போன்ற வெறி நாய்களுக்கும் மரணத்தண்டனை கிடைக்க வழி வகைகள் செய்ய வேண்டும் .

2 comments:

faizeejamali said...

Superb article

Adirai Iqbal said...


@ faizeejamali
தங்கள் வருகைக்கும் நன்றி .!

Post a Comment