test

Saturday, December 22, 2012

குஜராத்தில் முஸ்லிம்களுக்கு தேனாறும் பாலாரும் ஓடுகிறதா?


சில பதிவர்கள் தங்களது பதிவுகளின் வாயிலாக சில விஷ கருத்துக்களை மக்களிடையே பரப்பி வருகிறார்கள் .

அது

மோடி குஜராத்தை  வளர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டார் என்றும், அவருக்கு எதிரான குற்றங்களை சுட்டிக்காட்ட்பவர்கள் கூட 2002 கலவரத்திற்கு பிறகு எந்த ஒரு கலவரத்தையும் சுட்டிக்காட்ட முடியாது என்றும் வீர உரை ஆற்றுகிறார்கள்.இது மக்களை திசை திருப்பும் மொள்ளமாரித்தனம். அதாவது இப்படி சொல்வதன்மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான அந்த இனப்படுகொலையை சாதாரண விடயமாக மறக்கச் செய்வதன் மூலம் அது இந்துத்துவத்தின் சோதனை சாலையா இருந்தது என்பதையும் மறக்க சொல்கிறார்கள் .
சோதனை என்பதே அதை இன்னும் மற்ற இடங்களில் செய்துபார்கத்தானே என்பதை வசதியாக மறைத்துவிடுகிறார்கள் . அதுவம் அந்த சோதனை அவருக்கு மூன்று முறை வெற்றியையும் பெற்று தந்த சோதனை வேறு .

சரி விஷயத்திற்கு வருவோம் .

மோடி 2002 கலவரத்திற்கு பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கவில்லையா .
இப்படி கேள்வி கேட்பவன் உண்மையிலே பெரும் மோசடிக்காரனாகத்தான் இருப்பான்.

ஆதாரங்களை கீழே தருகிறோம்.

இந்த பதிவர்கள் போலவே மோடியும் கடந்த காலங்களை மறந்துவிட சொல்கின்றார் . அவர் முஸ்லிம்களை பார்த்து நீங்கள் கடைந்த காலங்களை மறந்துவிடுகள் உங்களின் தேவைகளுக்கான கோரிக்கைகளை குறைத்துக்கொண்டு பெரும்பான்மை சமுதாயத்துடன் கலந்துவிடுங்கள் உங்களின் மத அடையாளங்களை கைவிடுங்கள் என்கிறார்.


கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உயிருக்கு பயந்து தங்களது சொத்துக்களை வேற்றுவிட்டு வெளியேற நினைத்தாலும் அதுக்கும் ஓர் ஆப்புவைத்தர் சட்டத்தின் மூலம் அதன்படி யாருடைய சொத்தை யாருக்கு விற்க வேண்டும் என்பதை அரசுதான் முடிவு செய்யும் . இதன் மூலம் ஒரு முஸ்லிம் அவருடைய நிலத்தை முஸ்லிம்களுக்கே விற்க வேண்டும் ஒரு தலித் அவருடைய சொத்தை ஒரு தலித்திற்கே விற்கவேண்டும் என்பதாகும் 
சற்று சிந்தித்துப்பாருங்கள் எவனாவது இந்த மனித குலத்திற்கே விரோதமான செயல்களுக்குபிறகு ஒரு முஸ்லிம் அவர்களுக்கு மத்தியில் குடியேரறுவானா?.இதன்படி சமூகத்தை மத அடிப்படையில் பிரித்துவைப்பதன் மூலம்தான் தனது ஓட்டரிசியலின் [பலத்தை தக்கவைக்க் முடிகிறது.இந்த சட்டத்தின் மூலம் அவரால் பிறிதொன்றையும் அமல்படுத்தமுடிகிறது . வர்ணாசிரம முறை படி உயர் ஜாதி , ஆதிக்க சாதி , தலித் குடியிருப்பு , முஸ்லிம் குடியிருப்பு என அவரால் பிரித்து வைக்கவும் முடிகிறது .இந்த காரனங்களால்தான் குஜராத்தை இந்துத்துவத்தின் சோதனைசாலை என்கின்றோம்.அகமதாபாத் நகரில் அகமதாபாத் பல்கலைக்கழகம் இருக்கும் இடத்தை சுற்றி சுமார் 5 கி.மீ சுற்றிய பகுதிகளில் ஒரு முஸ்லிம்கூட கிடையாது என்கிறார் அங்கு தொண்டு நிறுவனம் நடத்திவரும் சமூக சேவையாளர் அச்யுத் யக்னிக் . மேலும் அவர் கூறும்போது அகமதாபாத் நகரில் முஸ்லிம்கள் தாங்கள் விரும்பும் இடங்களில் குடியிருக்க முடியாது .அகமதாபாத் புற நகர் பகுதியான சந்த்கேடா என்ற [பகுதியில் வேறு வழியில்லாமல் அவர்கள் குடியேற வேண்டிய நிலை.அகமதாபாத் நகரில் ஓடும் சபர்மதி ஆறு அவூரை இரண்டாகக பிரிக்கிறது. ஒருபக்கம் நல்ல நவீன வசதிகள்,மின்சாரம், சாக்கடை வசதிகள் ,மருத்துவமனைகள், பல்கழைகழகங்கள் , ஓட்டல்கள் ,சிறந்த சாலைவசதி என்றும் மறுபுறம் பழமையான எந்த ஒரு வசதியிலாமல் கிடக்கிறது அங்குதான் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் . அதுமட்டுமல்ல நகரத்தின் குப்பைகளெல்லாம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில்தான் கொட்டப்படுகின்றன. இதுதான் முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதன் அடையாளாமா. மேலும் இருக்கிறது 

அடுத்த பகுதியல் விவசாயியிகளின் நிலங்கள் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்த்துவிட்டு விவசாயிகளை அடித்து விரட்டியது மற்றும் பல புள்ளி விவரங்களுடன் சந்திக்கின்றேன்.


                                                                 ...................      இன்ஷா அல்லாஹ் தொடரும் 


22 comments:

சார்வாகன் said...

சகோ அதிரை இக்பால்,

இத்னை ஒரு விவாதமாக முன்னெடுப்பதை பாராட்டுகிறென்.
எனினும் சான்றுகள் அடிப்படையில் மட்டுமே கருத்திடுவது நல்லது.

1.//அதன்படி யாருடைய சொத்தை யாருக்கு விற்க வேண்டும் என்பதை அரசுதான் முடிவு செய்யும் . இதன் மூலம் ஒரு முஸ்லிம் அவருடைய நிலத்தை முஸ்லிம்களுக்கே விற்க வேண்டும் ஒரு தலித் அவருடைய சொத்தை ஒரு தலித்திற்கே விற்கவேண்டும் என்பதாகும் //

எந்த சட்டம் ,எப்போது அமலுக்கு வந்தது? இதனை சட்டரீதியாக எதிர்க்க முடியுமே!! யாரேனும் வழக்கு தொடர்ந்தார்களா???.தரவுகள் தரவும்.

**
//மறுபுறம் பழமையான எந்த ஒரு வசதியிலாமல் கிடக்கிறது அங்குதான் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் . அதுமட்டுமல்ல நகரத்தின் குப்பைகளெல்லாம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில்தான் கொட்டப்படுகின்றன. இதுதான் முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதன் அடையாளாமா. மேலும் இருக்கிறது //
ஏழைகள் எல்லா இன,மத‌த்திலும் இருப்பார்கள். முஸ்லிம்கள் மட்டுமே இப்படி இருக்கிறார்களா?? தரவுகள் கொடுக்கவும்!!

நன்றி!!!

Adirai Iqbal said...

சகோ சார்வாகன்
இதன் ஆதாரங்களை கட்டுரையின் இறுதியில் இடம்பெற செய்கிறேன்

Anonymous said...

குறிப்பிட்ட சொத்தை குறிப்பிட்ட பிரிவினருக்கே விற்க முடியும் என்ற சட்டம் சாத்தியமா? அப்படி மாநில அரசுகள் உத்தரவிட்டால் அவற்றை முறியடிக்க முடியும் உச்ச நிதி மன்றத்தில். அடுத்து அகமதாபாத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பது உண்மையல்ல, அதே போல சந்தகோடாவில் வசிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும் என்பதும் உண்மையல்ல, சரியான ஆதாரங்களை யாம் எதிர்ப்பார்க்கின்றோம்.

உதயம் said...

சார்வாகனின் சமரசம் உலாவும் இடத்தில் நானும் சில தரவுகளை கொடுத்துள்ளேன். அதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். உங்கள் கட்டுரைக்கு அந்த தரவுகளும் உதவினால் எனக்கு மகிழ்ச்சியே.

Anonymous said...

I think This law is useful for Muslims. Otherwise, all Muslim properties purchased by Hindus.
I think Modi done a good job for Muslims.

faizeejamali said...

Good article perumbanmayane muslim pagudhiyil ulla arasinar pallikudathai parungal vadhanai dhan minjum

Adirai Iqbal said...

சகோ சார்வாகனார்

//கஜினி முகமதால் 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட சோமநாத் கோயில் குஜராத்தில் உள்ளது.//
இச்செய்தியை இங்கு குறிப்பிடுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் !
இந்த வெறுப்பை இந்த நூற்றாண்டு வரை கொண்டு வந்தது யார் !

ஏன் கொண்டு வந்தார்கள் ?அதில் இந்த்துத்துவாவினரின் ஆதாயங்கள் என்ன? . சற்று சிந்தியுங்கள் அதற்கும் தற்போது அவர்களின் ஆட்சி நீடிப்பதற்கும் உள்ள தொடர்பை ஒத்துக்கொள்கிறீர்களா

தமிழ் நாட்டின் பிராமண எதிர்ப்பு இதிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டது
எதை எதோடு இணைக்கிறீர்கள்

Adirai Iqbal said...

//மோடி ஒரு பிரதம வேட்பாளர் ஆகும் வாய்ப்பு உள்ள‌தால் மட்டுமே விவாதிக்கிறோம். பா.ஜ.க.வில் மோடி மட்டுமே மதவாதி போல் காட்டுவது வியப்பு அளிக்கிறது. மோடி இல்லை எனில் அத்வானி ,வேறு யார்?//
நன்றி இதுவரையிலும் ஒரு தவறான தளத்தில் (பாதையில்) விவாதித்துக்கொண்டிருக்கிறேன் என்பது புரிகிறது . நாங்கள் மோடியை மட்டுமல்ல ஒட்டுமொத்த முதலாளித்துவ இந்துத்துவத்திற்கு எதிராகத்தான் விவாதம் கொண்டு செல்லப்பட வேண்டும் என விரும்புகிறோம் . இந்துத்துவம் இல்லையென்றால் மோடி இல்லை . முஸ்லிம் எதிர்ப்பும் மனு தர்மமும்தான் இந்துத்துவத்தின் உயிர்நாடி , அந்த புள்ளியிலிருந்து நீங்கள் மோடியை நோக்குங்கள் மோடி எவ்வளவு அபாயகரமானவர் என்பது புரியும் . இவ்வாறு பார்த்தால் நீங்கள் வாஜ்பாய் , அத்வானி சுஷ்மா , மோடி இவர்களுக்கு மத்தியில் எந்த ஒரு வேறுப்பாட்டையும் காணமாட்டீர்கள் .

Anonymous said...

அடடா இன்னா பெரீஈஈய மனசுபா நம்ம நரபலி மோடிக்கு முஸ்லிம் மேல. அவா இன்னா சொல்றால்னா அவா முஸ்லிம்களுக்கு கொடுக்கும் தொந்தரவ தான்கிகினு கும்முடு போடணும். இல்லன்னா எல்லாத்தியும் விட்டுட்டு ஓடிபோயிடனும்.அதுக்கு தாம்பா இந்த சட்ட(ம்).கிரிமினல் எல்லாம் மந்திரி ஆயிட்டான்.அங்க அவன் சொல்றதுதான் சட்ட(ம்).
பாவம் சகோதர அனானி இதுகூட தெரியல
kalai

faizeejamali said...

Varalatrai thiripathe umathu panipplum . Ghazni Mahmud irudhiyagathan somanathe kovilukku vandhaar , avarathu aatchyilum padaiyilum hindhukkalum ismailikalum (shia muslims) irundhanar avar sagipputhanmai konda anbum parivum ulla kalvikku mukkyithuvam kodukka kudyia sulthanaga irunthaar avar imdhiya kovilgalin mel padai eduthathu Hindu mannargalin porulatharathai udaithu avargal aatchiyil vaalndha odukka patta makkalin nalanukku viniyogikka pattadhu rajaputharargalukidye irundha ut poosal qasim ghaznavilku vetri pra udhaviyadhu anal hindhu mannargal kovilgalai thangal sontha gazanavage payanpaduthiyadhu ghaznaviku pinnadaivai erpaduthiyadhu
Paarka: the life and times of sulthan Mahmud of ghazna
Nazim elithiyathu 1931

faizeejamali said...

Gajini mohammadai indhyiavuku varavaithathu aryiyargalin aatchimuraiyum odukkapatta makkalin sarbaage ghazna sulthanuku qasimukku eluthapatte kadidhangalumdhaan

Adirai Iqbal said...

ஒளிரும் குஜராத்தின் பொய்கள்

2002 படுகொலைகளுடன் தொடர்பற்றது எனினும் மோடியின் பிம்பத்தைக் கடந்த பத்தாண்டுகளாகக் கட்டமைக்க பயன்பட்ட பொய் எதுவென்றால், குஜராத் முன்னேறுகிறது; ஒளிர்கிறது என்பதாகும். இது 2002 இல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்று கோருபவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. இந்த கோரிக்கையை எழுப்பும் மனித உரிமை ஆர்வலர்கள் குஜராத் மக்களனைவருக்கும் எதிராக இருப்பதாக அவர்களை பழித்துப் பேச பயன்படுத்துகிறார்கள்.. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் கோரிக்கையை திசைதிருப்பும் விதமாக ‘மறப்போம் , அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்’ என்றும் பேசி வருகிறார்கள். முகாம்களை திடீரென மூடிய மோடி, ‘அனைத்தும் சரியாகி விட்டது’ என்று அறிவித்தார். அதன் பிறகு 2003 இல் ‘ஒளிரும் குஜராத் சம்மேளனம்’ எனும் கொண்டாட்டம் ஒன்றை அறிவித்தார். முதலீட்டாளர் அனைவருக்கும் பண்டைய நவாப் பாணியில் மானியங்களை வாரி வழங்கினார். இது முதலாளிகளின் பாராட்டைப் பெற வைத்ததோடு, பிரதமர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்தவும் பயன்பட்டது. குஜராத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பெரியளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் தகவல் பெறும் உரிமையின் கீழ் அதனை விசாரித்ததில், விளம்பரப்படுத்தப்பட்ட தொகையில் 25 % மட்டுமே, அதாவது மகாராஷ்டிரா, தமிழகம் அளவுக்கு மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2003 -இல் திட்டக்குழு எடுத்த கணக்கெடுப்பின்படி குஜராத்தின் 25 மாவட்டங்களில் 20 பின்தங்கிய மாவட்டங்கள் பட்டியலில் இருந்தது. அவற்றில் 6 மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் இருந்தது. சமூக வளர்ச்சிப் புள்ளி விகிதத்தில் பின்தங்கியிருப்பதோடு, சமூகத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில், 18 பெரிய மாநிலங்களில் 17வது இடத்தில் இருக்கிறது.

தன்னை நவீன குஜராத்தின் சிற்பி என்று கட்டமைத்துக் கொள்ள மோடி, மிகப்பெரிய அளவுக்கு மக்கள் தொடர்புப் பணிகளைக் கட்டவிழ்த்து விட்டார். உண்மை என்னவென்றால், குஜராத் ஏற்கெனவே தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 12 சதவிகிதத்திலிருந்து 13 சதவிகிதமாக இருந்தது. இன்று அது 11 சதவிகிதமாக, தேசிய வளர்ச்சி விகிதத்தில் சற்றே மேம்பட்ட நிலையில் இருக்கிறது.

மாநிலத்தின் கஜானாவை பெருமுதலாளிகளுக்குக் கொள்ளையடிக்கத் திறந்து விட்டதன் மூலம் குஜராத்திலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாக துணை புரிந்தார் மோடி. அதே நேரத்தில் சாதாரண மக்கள் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பபட்டனர். சர்வதேச உணவுக்கொள்கை ஆய்வு நிறுவனத்தின் ’2008 இந்திய மாநிலங்களின் வறுமை நிலவரம்’ பற்றிய அறிக்கையில் குஜராத், ஒரிசாவை விடக் கீழாக உள்ளது. 17 பெரிய மாநிலகளில் 13 வது இடத்தில், அதாவது சட்டிஸ்கார், ஜார்கண்ட், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்துக்குக் கொஞ்சம் மேலே இருக்கிறது.

ரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்களின் சதவிகிதம் 1999 இல் 46 .3 % இருந்து 2004 இல் 55 .5 ஆக உயர்ந்துள்ளது. குழந்தைகளில் 74 .5 ஆக இருந்த ரத்தசோகை சதவிகிதம் 80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2006 இல் எடுத்த மூன்றாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் இந்த உண்மைகள் காணக் கிடைக்கின்றது. மாநில காங்கிரசு கட்சியின் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா கூற்றுப்படி 16000 குஜராத்திகள் மோடியின் ஆட்சிக் காலத்தில் தற்கொலை செய்துள்ளனர் . அவர்களில் 9 ,829 பேர் தொழிலாளர்கள், 5 ,447 பேர் விவசாயிகள், 919 பேர் பண்ணை தொழிலாளர்கள்.

ஆனந்த் தெல்டும்டே [எழுத்தாளர் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர், மும்பை]

தமிழில் – சம்புகன்

நன்றி: எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி, மார்ச் 17 2012 .

thanks to www.vinavu.com

Adirai Iqbal said...

மேலும் அம்மணமாகும் மோடியின் நல்லாட்சி பரப்புரை மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கில் சென்று பார்க்கவும்
http://rsyf.wordpress.com/2011/09/18/gujarat-modi/

Adirai Iqbal said...

k.rahmanDecember 23, 2012 4:03 PM
//எதனையும் சரிபார்த்தல் நலம். இந்தியாவின் பிற மாநிலங்கள்,குஜராத் அதிக வித்தியாசம் இல்லை!!

சுட்டி பகிர்ந்தமைக்கு நன்றி. எதை வைத்து அதிக வித்தியாசம் இல்லை என்று சொல்கிறீர்கள்? India State Hunger
Index rank இல் 17 மாநிலங்களில் 13 தாக வந்திருகிறது குஜராத் . மிகவும் மோசமாக ஆலபடுவதாக சொல்லப்பட்ட 'மாயாவதியின் உ பீ குட குஜராத்தை விட
மேல் தான் இருக்கிறது. நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் போலே குஜராத் இருகிறேந்தேன்றால் பிறகு எதற்கு அதை முன்னணி மாநிலம் என்று சொல்கீறேர்கள்? ஆனால் உண்மை அதுவல்ல. குஜராத்தை விட 'பின் தங்கிய' மாநிலங்கள் நிலைமையை விட malnutrition குஜராத்தில் உள்ளது.

இது மாதிரி எந்த வாதம் எடுத்து வைத்தாலும் சப்பை கட்டு கட்டி விட்டால் எதற்கு கோத்ராவை விட்டு விட்டு மற்றதை பேசுவோம் என்கேரீர்கள்.

குஜராத் இப்போது என்று இல்லை. மோதி வரும் முன்பே தொழில் துறையிலும், entrepreneurs உருவாக்குவதிலும் முன்னோடி தான். மற்ற மாநிலங்கள் போதுமான நிதி மற்றும் திறமையான தொழில் அதிபர்கள் இருந்தும் குட ஒரு பெரிய நிறுவனம் அமைப்பதற்கு என்ன பாடு படுகிறது என்று பார்க்கிறோம். இதில் ஒரு சாதாரண பால் கூட்டுறவு ஏற்படுத்தி மிக பெரிய வெற்றி கண்டு உலகளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குஜராத். இதெலாம் நடந்தது மோதி வரும் முன்பே.

//ஆகவே வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் எடுபடுகிறது//

ஒரு வழியாக ஒத்து கொண்டீர்கள்.

Adirai Iqbal said...

உதயம்December 22, 2012 10:50 PM
கோத்ராவை எளிதில் கடந்து விட சொல்வது இந்திய மதசார்பின்மைக்கு செய்யும் துரோகம். குஜராத் என்பது இந்துத்துவாவின் சோதனை கூடம். இந்துத்துவம் என்ற இந்திய சூழ்நிலைக்கு ஒவ்வாத ஒரு சிந்தனைவாதம் அதை பரிட்சீத்துப் பார்த்த இடம் தான் குஜராத். வெற்றி இந்துத்துவாவினருக்கு;தோல்வி இந்திய மதசார்பின்மைக்கு.

Anonymous said...

வயது வந்த சிறுமிகளை மணக்கும் கொடியவர்களின் நாடு

ஒரு பதிவரின் புதிய பதிவு

பதிவுலகம் முழுவதும் டெல்லி பாலியல் பலாத்காரம் பற்றி எழுதும் போது இவர் இஸ்லாமியர்கலை காமக்கொடுரர்கலாக விமர்சனம் செய்து திசை திருப்புவார்.

இவருடைய பதிவரசியலை அம்பலபடுத்துங்கள்.

ராஷித்
அபுதாபி

Anonymous said...

selfish muslim

Adirai Iqbal said...

//Anonymous said...
selfish muslim//

ஆமாம் மோடிதான் சூப்பர் ! குஜராத்தை எல்லா கார்பேட் கம்பெனிக்கும் பிரித்து கொடுக்கிறார் . என்ன ஒரு தாராளம்

Anonymous said...

என் இஸ்லாமிய சகோதரர்களே , தமிழ் நாட்டில் மட்டும் தான் மத வேறுபாடின்றி மொழியின் பெயரால் ஒன்று பட்டு வாழ்வதாக நம்புகிறேன் .அப்படி இருக்கையில் எதற்கு இந்த விவாதம் என்று எனக்கு புரியவில்லை.நாம் காவி கலாச்சாரத்தையும் இங்கு தோற்கடிதிருக்கிறோம்.நாம் இவர்களை விட்டு ஒதுங்கியிருப்பது நல்லது என நான் கருதுகிறேன் .

Anonymous said...

என் இஸ்லாமிய சகோதரர்களே , தமிழ் நாட்டில் மட்டும் தான் மத வேறுபாடின்றி மொழியின் பெயரால் ஒன்று பட்டு வாழ்வதாக நம்புகிறேன் .அப்படி இருக்கையில் எதற்கு இந்த விவாதம் என்று எனக்கு புரியவில்லை.நாம் காவி கலாச்சாரத்தையும் இங்கு தோற்கடிதிருக்கிறோம் .நாம் இவர்களை விட்டு ஒதுங்கியிருப்பது நல்லது என நான் கருதுகிறேன் .

புரட்சித் தமிழன் said...

//குறிப்பிட்ட சொத்தை குறிப்பிட்ட பிரிவினருக்கே விற்க முடியும் என்ற சட்டம் சாத்தியமா? அப்படி மாநில அரசுகள் உத்தரவிட்டால் அவற்றை முறியடிக்க முடியும் உச்ச நிதி மன்றத்தில். அடுத்து அகமதாபாத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பது உண்மையல்ல, அதே போல சந்தகோடாவில் வசிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும் என்பதும் உண்மையல்ல, சரியான ஆதாரங்களை யாம் எதிர்ப்பார்க்கின்றோம்.// தமிழ் நாட்டிலேயே ஆதி திராவிடர் மற்றும் பஞ்சமி நிலங்களை வேறு எந்த சாதிக்காரன் பணம் கொடுத்து வாங்கினாலும் அது செல்லாது.இது நில அபகரிப்பில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம். குஜராத்தில் உள்ள 70 சதவீதம் மக்கள் மாமிசம் உண்ணாதவர்கள் மாமிசம் உண்பவர்கள் அங்கு தணியாகத்தான் வசிக்கவேண்டும் இதில் அங்கு முஸ்லீம் இந்து என்ற பாடுபாடெல்லாம் இல்லை . நான் கடந்த ஒரு வருடமாக குஜராத்தில் தான் வசித்து வருகிறேன் இது வரை இறைச்சிக்கடைகளை வெளிப்படையாக எங்கும் கண்டதில்லை.என்னுடைய நிருவனம் ஒரு முஸ்லிமிணுடையதே இதில் பனிபுரிவோர் 40 சதம் முஸ்லிம்கள் அனைவரும் பா ஜா க விற்குதான் வாக்களித்துள்ளார்கள்.முஸ்லிம்களுக்கென தனியாக பாலாறும் தேனாறும் ஓடாது ஓடுகிற ஆற்றைத்தான் அனைவரும் பயன்படுத்தவேண்டும்.செளராஷ்டராவில் உள்ள முஸ்லிம் பெண்கள் யாரும் பர்தா அனிவதில்லை இங்குள்ள முஸ்லிம்கள் முற்ப்போக்கானவர்கள் அவர்கள் சொல்லட்டும் குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சி எப்படி என்று தமிழகத்தில் அமர்ந்து கற்ப்பனையில் பேசாதீர்கள்.

Adirai Iqbal said...

@ புரட்சித் தமிழன்
உங்களின் தரத்தை உங்களின் http://puratchithamizan.blogspot.in/2012/12/blog-post_6.html இந்த கட்டுரை மூலம் அறிந்தேன் .
சும்மா சொல்லக்கூடாது சாதிவெறி தலைக்குமேல் இல்லை உடம்பு முழுவதும் உள்ளது .

Post a Comment