test

Tuesday, December 18, 2012

குஜராத் கலவரத்தின்போது முஸ்லிம்களை தலித் மக்கள் கொலை செய்தார்களா?- நிகழ்ந்தது என்ன?

இந்த கட்டுரை படிக்கும் முன் இதையும் கொஞ்சம் படிங்க 


பொதுவாக ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களும் இத்தகைய பிரச்சாரங்களுக்கு பலியாகிவிட்டார்களோ என்று என்னும் அளவிற்கு அந்த பிரச்சாரம் இன்று வரையிலும் கொடிகட்டி பறக்கிறது.



அது

2002 குஜராது இனப்படுகொலையை முன்னின்று நடத்தியவர்கள் தலித்கள்தாம் என்பதாகும்.இதில் சிஞ்சிற்றும் உண்மைய இல்லை. மாறாக தலித் மக்களும் ஆதிக்க சாதியினரால் குறிவைத்து கொல்லப்பட்டனர். பெண்கள் வல்லுறவு கொள்ளப்பட்டனர்.

ஏன் அவர்கள் தலித்துக்களையும் திட்டமிட்டுக் கொன்றனர். ஏனென்றால் அவர்களை பார்பனர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் இந்துக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.

தலித் மக்களும் , முஸ்லிம்களும் மாட்டிறைச்சி சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள் . இதனால் இவ்விரு இனத்தாருக்கும் எதிராக ஒன்றுப்போலவே வெறுப்பு பிரச்சாரங்களை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் மேற்கொண்டன .மேலும் பெரும்பாலான முஸ்லிம்கள் தலித்தாக இருந்து மதம் மாறியவர்களே .

இந்த பிரச்சாரம் (தலித் மக்கள் முஸ்லிம்களை கொன்றனர் என்ற பொய் பிரச்சாரம்) மேற்கொள்ளபட்டதின் உள்நோக்கம் முஸ்லிம்களுக்கும் தலித் மக்களுக்கும் ஒரு தீரா பகையை உருவாக்கத்தான். இதன் மூலம் முஸ்லிம்கள் அவர்களிடம் இஸ்லாத்தை கொண்டு செல்வதை தடுக்கலாம் என்ற நப்பாசை. முஸ்லிம்கள் இந்த மாதிரியான விடயங்களை மிகழ்வும் எச்சரிக்கையாக இருத்தல் நலம்.

சர்தார்புராவில் நிகழ்ந்த கலவரங்களை உற்று கவனிபோமேயானால் ,முஸ்லிம்களையும் தலித் மக்களையும் ஒன்று போலவே கோலாய் செய்ததை அறியலாம்.

நிலைமை இப்படி இருக்க தலித் மக்கள் முஸ்லிம்களை கொலை செய்தார்கள் என்பது எவ்வளவு கீழ்த்தரமான பிரச்சாரம்.

ஆகவே  இது முழுக்க முழுக்க பொய்யான பிரச்சாரம். இதனை இன்னும் தெளிவும்படுத்தும்விதமாக இந்த கொலைகளை செய்தவர்கள் பட்டேல்களும்,பிரஜாபதிக்களும்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment