test

Saturday, December 8, 2012

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிரான அவமதிப்புகள், பைத்துல் முக்கத்தஸ், பாபர் மசூதி , பர்மா கலவரங்கள் , குஜராத் கலவரங்கள் ........ தீர்வு என்ன?


 சமீப காலமாகவே முகமது நபி(ஸல்) அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் போக்கு காணப்படுகிறது . அதற்கெதிரான போராட்டங்கள் உலகம் முழுவதும் வீரியத்துடன் நடந்தாலும் எதிரிகள் சிறு வருத்தத்தைக்கூட தெரிவிக்கவில்லை. மாறாக மேலும் முஸ்லிம்களின் மனம் புண்படும்படி காரியங்களில் இறங்குகின்றனர்.   


  நமது பள்ளிவாயில்களை இடித்தார்கள் . நமது  நாடுகளை ஆக்கிரமித்தார்கள் , நமது வளங்களை கொள்ளையடித்தார்கள் கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் . குஜராத்திலும் பர்மாவிலும் நம் உம்மத்துகளை அநியாயமாக் கொன்றார்கள் , குழந்தகளையும் , கர்ப்பிணி பெண்களையும் கற்பழித்து சித்திரவதை செய்து கொன்றார்கள்    தடுக்க முடியவில்லை .  இன்னும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பொய்யான காரணங்களை கூறி மக்களை கொன்று குவித்தார்கள்.  அந்நாடுகளை ஆக்கிரமித்தார்கள். . அவர்கள் நேட்டோ என்ற கூட்டுபடைகளாக முஸ்லிம் நாடுகளை தாக்கி அழிக்கின்றார்கள். ஆனால் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களோ அமேரிக்கா ஓநாய்களின் கை பொம்மைகளாக கண்டுக்கொள்ளாமல் தனது சகோதர நாடுகளை தாக்குவதற்கு இடமும் கொடுத்து தங்களது விசுவாசத்தை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் நமக்கென்று உலகத்தலைமை  இல்லாததே காரணமாகும். அதுதான் கிலாஃபா  .

இஸ்லாத்தின் முஸ்லிம்களின் நலனை பாதுகாக்கின்ற கிலாஃபா   ரசொன்று இல்லாத நிலையில் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் , முஸ்லிம்களின் சுய மரியாதையையும்  காப்பது சாத்தியமில்லை என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும்.

கலீஃபா  முஃதசிபில்லாஹ் காலத்தில் அன்றைய ரோம பேரரசில் ஒரு முஸ்லிம் பெண்மணி மீது தகாத முறையில் நடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது . அந்த பெண்மணி கற்பழிக்கப்படவில்லை . அல்லது குஜராத்தில் நடைப்பெற்றது போன்று வயிற்றை  கிழித்து குழந்தையை வெளியே எடுத்து நெருப்பில் போட்டு பொசுக்கவில்லை . மாறாக இழிவுபடுத்த முயற்சித்தார்கள் . இதற்கு பதிலடியாக ரோம பேரரசின் வலிமையான பகுதியாக இருந்த அமூரியா மீது பெரும்படையை அனுப்பி இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்தனர் .

கிலாஃபத்தின்   இறுதிக் காலக்கட்டத்தில் , அதாவது பலகீனமான நிலையிலிருந்த கிலாபாத்தை விழுங்கி ஏப்பம் விட பிரிட்டனும் பிரான்சும் துடித்துகொண்டிருந்த நேரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது .

அது

யூதர்கள் பலஸ்தீனில் ஒரு பகுதியை விலைக்கு வாங்கி அங்கே குடியமர்வதற்கு சதித்திட்டம் தீட்டியிருந்தனர் . அதன் முதற்கட்டமாக அன்றைய முஸ்லிம் உம்மாவின் தலைவராகிய கலீபா அப்துல் ஹமீது(ரஹ்) அவர்களை சந்திக்க யூத பிரதிநிதிகள் இஸ்தான்புல் நகருக்கு சென்றார்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகின்றோம் பலஸ்தீனில் ஒரு சிறு நிலப்பரப்பையேனும்  தாருங்கள் என்று விலை பேசினார்கள்.

அதற்கு கலீபா அப்துல் ஹமீது அவர்கள் கீழ்கண்டவாறு பதிலளித்தார்கள்.

அது

பாலஸ்தீன் எனது சொத்து அல்ல , முஸ்லிம் உம்மத்தின் சொத்து ஆகும். இந்த பூமிக்காக எனது சமுதாயத்தினர் அந்த மண்ணில் இரத்தத்தால் பயிரிட்டிருக்கிறார்கள். என்னுடைய உடலின் ஒரு பகுதியை துண்டித்து உங்களுக்கு தருவது எனக்கு எளிதானதே. ஆனால் பலஸ்தீனில் ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டு தர மாட்டேன். அது என் வாழ்நாளில் நடக்காது . உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். என்றார்கள்.

இதேபோன்று வரலாற்றில் இன்னொரு நிகழ்ச்சி பதிவாகியுள்ளது

அது

   1889 ல் , ஹென்றி டி போர்நியர் இவர் ஒரு கவிஞர் மற்றும் நாடகக்கலை வல்லுநர் . பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் . இவர் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு நாடகத்தை தயார் செய்தார் . அதன் தலைப்பு முஹம்மத் !


அந்நிலையில் துருக்கியிலே உதுமானிய கிலாபா நிலைகொண்டிருந்தது . அது மிகவும் பலகீனமான  நிலையில் இருந்தது . எந்த அளவிற்கு என்றால் துருக்கியை ஐரோப்பாவின் துயரம் என்று அழைக்கும் நிலையில் இருந்தது. அந்த நிலையிலும்கூட இஸ்லாமிய தலைமை காட்டிய எதிர்பால் அன்றைய பிரான்ஸ் பிரதமர் சார்லஸ் டி ப்ரிசிநெட் அந்த நாடகத்தை தடை செய்தார்.

எனவே கிலாபாத்தின் மீள்வருகையால் மட்டுமே முஸ்லிம் கண்ணியம் , பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கமுடியும்.


 கிலாஃபா என்றால் என்ன ?

இஸ்லாமிய ஆட்சி முறைக்கு இடப்பட்டுள்ள பெயர்தான் கிலாஃபா ஆகும்.  அல்லாஹ்(சுபு ) அருளியுள்ள ஷரிஆ சட்டதிட்டங்களை நடைமுறைபடுத்தி இஸ்லாத்தை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் ஏந்தி செல்கின்ற அமைப்பே கிலாஃபா ஆகும்

கிலாஃபா ஆட்சியில் மட்டுமே இஸ்லாமிய சட்டப்படி நாம் நடக்க முடியும் என்பதால் கிலாஃபா ஆட்சியில் வாழ்வது முஸ்லிம்களின் கட்டாய கடமையாகும். அதன்படி கிலாஃபா இல்லாத நிலையில் அதனை நிலை நாட்டுவதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஃபர்ளு ஆகும்.

அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே கூறுகிறான்:

அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்பு செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் ( விலகி) அவர்களுடைய மனோ இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம்.                                               (அல் மாயிதா : 46) 


அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறு எவருக்கும் ) அதிகாரம் இல்லை 
                                                                                                                                  (யூசுப்:40)


அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்பளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள் ஆவார்கள்.                                                       (அல்மாயிதா : 44)

அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்பளிக்கவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள் .                                   (அல்மாயிதா:45)

அல்லாஹ் இறக்கிவைத்தைகொண்டு யார் தீர்பளிக்கவில்லையோ அவர்கள் பாவிகள் ஆவார்கள்                                                                               (அல்மாயிதா: 47) 

நம்பிக்கை கொண்டவர்களே அல்லாவிற்கு கீழ்படியுங்கள். இன்னும்(அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களின் நேர்மையான அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்                                                 (அந்நிஸா : 59)

மேலும் நிராகரிப்பாளர்களில் சிலர் சிலருக்கு பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் ( முஸ்லிம்கள் கூட்டாக) இவ்வாறு செய்யாவிடில் ( உலகளாவிய இஸ்லாமிய ஆட்சித்தலைவரான கலீஃபாவின் கீழ் செயலாற்றி அல்லாஹ்வின் தீனான இஸ்லாமிய ஏகத்துவத்தை வெற்றி பெற செய்யாவிடில்) பூமியில் குழப்பமும், பெருங்கலகமும்(போர்,அநீதி,பல தெய்வ வழிப்பாடு போன்றவை )ஏற்படும்                                      (  அல்அன்ஃபால் : 73)

இஸ்லாமிய வழிமுறையிலான கிலாஃபா அரசு இல்லாவிட்டால் இறைவன் அருளியபடி தீர்ப்பளிப்பது( சட்டங்களை நிறைவேற்றுவது) நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம் ஆதலால் இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதும் அதனை நிறைவேற்றும் ஒரு கிலாஃபா அரசு இருப்பதும் அவசியமாகிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் பாதையில் பைஆ  செய்பவர் மறுமை நாளில் எந்த ஆதாரமும் தேவை இன்றி இறைவன் முன் தோன்றுவார். ஆனால் பைஆ (சத்தியபிரமாணம்) செய்யாத நிலையில் மரணிப்பவரோ ஜாஹிலிய மரணமடைபவராவர்.(அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), முஸ்லிம்)

இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள் . அவர் மூலமாகவே பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள். (அபூஹுரைரா(ரலி), முஸ்லிம்)

பனீ இஸ்ராயில் சமூகத்தாரை நபிமார்கள் ஆட்சி செலுத்திகொண்டிருந்தார்கள் . ஒரு நபி மறைந்ததும் இன்னொரு நபி அவருக்கு பதிலாக பொறுப்பு வகிப்பார். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது. கலீஃபாக்கள் உருவாவார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகப்படியாகிவிடும் எட்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் தூதரே (அது தொடர்பாக) எங்களுக்கு என்ன கட்டளை இடப்போகின்றீர்கள் எனக்கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர்களில் முதலில் யாரிடத்தில் உடன்படிக்கை செய்தீர்களோ, அவரிடத்திலேயே அதை நிறைவேற்றுங்கள். அவர்களுக்குரிய கடமையை அவர்களுக்கு செலுத்திவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ்(சுப்பு) அவர்கள் கண்ணியத்தைப்பற்றி அவர்களிடமே விசாரணை செய்வாப் என்று பதில் சொன்னார்கள்.  (அபூஹுரைரா (ரலி), புகாரி,முஸ்லிம்)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து முஸ்லிம் உம்மத்தின் நலன்களை பேணி பாதுகாக்க அல்லாஹ்(சுப்பு)விற்கு அடிபணிந்து நடக்கும் கலீஃபாக்கள் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது.

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதில் அளியுங்கள் .
                                                                                                  (அல்அன்ஃபால்: 24)

நபி(ஸல்) அவர்களின் சுன்னாவின் அடிப்படையில் முஸ்லிம்கள் செயல்பட்டு மிக விரைவில் கிலாஃபா ராஷிதா மலர்வதற்கு அலாஹ்(சுபு) பேரருள் புரிவானாக .

நன்றி:

1.http://www.khilafah.com/index.php/the-khilafah/khilafah/14641-only-the-khilafah-can-protect-the-honour-of-the-prophet-muhammad-sallallahu-alaihi-wasallam

2.http://islamicuprising.blogspot.in/2011/03/blog-post_19.html

3. கிலாஃபா ஒரே தீர்வு (Revival publications New Delhi வெளியீடு )


No comments:

Post a Comment