test

Saturday, December 15, 2012

"இந்து "மதமா ?!-தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களா ?-பாகம் 3
பாகம் 3 


ஜாதிகள் எவ்வாறு பிறந்தன என்பதை பாகம் 2 இல்  சுருக்கமாக கண்டோம் . 

 இன்று நாம் பார்க்கும் ஆரியர் அல்லாதோர் ( தாழ்த்தபட்டவர்கள் , ஆதிக்க சாதியினர் ) அனைவரும் ஒரே இனத்தவர்களே . அவர்கள் ஒருவரை ஒருவர் என்ன ஜாதி என வினவுவது மிகவும் நகைப்புக்குரிய செயலாகும்.சரி ஆரியர்கள்தாம் இந்த சாதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கினார்கள் என்பதற்கு வேறு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா ?

ஆம். ஆரியர்கள் எங்கெல்லாம் படையெடுத்து சென்றார்களோ அங்கெல்லாம் பிறப்பின் அடிப்படையில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கினார்கள் . அப்படி ஒன்றுதான் பண்டைய ஈரான்.

நாம் பாகம் ஒன்றில் கூறியதுபோல் ஆரியர்கள்  இரான்வேஞ்சியிலிருந்து (ரஷ்யாவிலுள்ள துருக்கிஸ்தான்) ஈரானிற்கு சென்றார்கள் அங்கு நடந்ததை  பேராசிரியர் அர்த்தகார் கிறிஸ்டின் சீன்  அவர்கள் தனது 'சாசானியர் காலத்து ஈரான் என்னும் நூலில் கூறுவதை காண்போம்.


"பிறந்த குளம் செய்யும் தொழில் இவற்றின் அடிப்படையில் ஈரானிய சமூகம் பிளக்கப்பட்டது. இந்த பிளவுகளை ஓட்டவைக்கவோ இணைக்கவோ முடியாத அளவிற்கு சமூகம் சிதறிக்கிடந்தது"."ஒருவன் எந்தப் பரம்பரையில் பிறந்தானோ அந்தப்பரம்பரையின் பாரம்பரிய முறைகளைகொண்டே திருப்தி அடைந்துக்கொள்ளவேண்டும் அதற்குமேல் உயர்ந்திட அவன் முயற்சிக்க கூடாது. எந்த தொழிலை செய்வதற்காக கடவுள் அவனை படைத்திருக்கிராரோ அது தவிர வேறு தொழிலை அவன் செய்யக்கூடாது ". இது அரசியல் சட்டமாக்கப்பட்டிருந்தது .இப்பொழுது விளங்குகிறதா" மனுஸ்மிருதி " இந்த அடிப்படையில்தான் உருவாக்கி இருக்கவேண்டும். ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் இதுபோன்ற ஒன்றுதான்.தாழ்த்தப்பட்டவர்கள் எப்பொழுது இந்துக்கள் ஆக்கப்பட்டார்கள் 
1910 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்புகள் கீழ்கண்ட பிரிவுகளாக எடுக்கப்பட்டன.அவை 1. இந்துக்கள் ,2. முஸ்லிம்கள் , 3. ஆன்மீக பழங்குடிகள் 4. தாழ்த்தப்பட்டோர் அல்லது தீண்டத்தகாதவர்கள் என வகைபடுத்தப்பட்டனர்.இந்த மக்கள் தொகை கணக்கின் படி அன்று முஸ்லிம்கள் ஆறரைகோடி பேர். அன்று இந்தியாவின் மக்கள் தொகையே 25 கோடிதான். அதாவது முஸ்லிம்களின் மக்கள் தொகை 25 விழுக்காட்டிற்கும் மேல்.இதனால் அன்று முஸ்லிம்கள் தங்களுக்கு பெரும்பான்மை அந்தஸ்து கோரினார்கள். பதறிப்போன ஆரியர்கள் தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துக்கள் பட்டியலில் வேண்டா வெறுப்பாக சேர்த்து இந்துக்கள்தான் பெரும்பான்மை என நிறுவினார்கள். தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்கள் பட்டியலில் சேர்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்களை அவர்கள் இந்துக்களாக மதிக்கவில்லை . தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்களின் பாட்டியலில் சேர்க்கும்  மோசடிகள் 1800 களிலேயே நடந்துள்ளன.ஏற்கனவே கூறியுள்ளபடி 1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி பழங்குடிமக்கள் 59 சமயங்களை சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர் . இவர்களில் யாரும் ஆரிய மேலாண்மையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு அவர்களை பார்த்ததுக்கூட கிடையாது. 1901 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது யாரெல்லாம் இந்துக்கள் இல்லை என்பதற்கு கீழ்காணும் வரையறையை கடைப்பிடித்தனர்.அது 1.பிராமணர்களை தலையாக ஏற்றுக்கொள்வதில்லை 2. பிராமண புரோகிதரை வைத்தோ அல்லது இந்து பூசாரியை வைத்தோ அவர்கள் மந்திரங்களை சொல்வதில்லை .3. வேதங்களின் அதிகாரத்தன்மையை மறுத்தார்கள்.4. இந்து தெய்வங்களை வணங்கமாட்டார்கள். 5. பிராமண மதக்குருக்களை குடும்ப விசேஷங்களில் அழைத்து காரியங்களை செய்யமாட்டார்கள். 6. பிராமணர்களை குருக்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 7. இந்துக்களில் கோயில்களில் உட்பகுதிக்குள்(கருவறை) போக முடியாத நிலையில் உள்ளவர்கள் . 8.அவர்கள் பிராமணர்களை தொட்டுவிட்டால் தீட்டு ஆகிவிடும் நிலையில் உள்ளவர்கள் . 9.இறந்து போனவர்களை புதைத்து விடுபர்கள் .10. மாட்டிறைச்சி உண்பவர்கள்.

ஆதாரம்: அம்பேத்கரின் தீண்டபடதோர் வரலாறு 

மேற்கூறிய கருத்தின்படி தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பழங்குடியினர்கள் இந்து என்ற சொல்லாட்சியின் கீழ் வரமாட்டார்கள் என்பதை தெளிவாக உணரலாம்.

அப்படிஎன்றால் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இவர்களை எந்த அளவுகோலின்படி தாழ்த்தப்பட்டவர்களையும் , பழங்குடியினரையும் இந்துக்கள் பட்டியலில் சேர்த்தார்கள்.

ஆரியருடன் நடந்த போரில் வெற்றிக்கொள்ளப்பட்ட அந்த அப்பாவி திராவிடர்கள்தான் இந்த தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை தங்களை ஆதிக்கசாதிகளாக கருதிக்கொள்ளும் பிற திராவிடர்கள் உணரவேண்டும் .

                                                         இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
1 comment:

faizeejamali said...

Excellent article pls keep updating

Post a Comment