test

Tuesday, November 20, 2012

ஃ பலஸ்தீனை மீட்கும் போர்

வருடம்: 1914


பலஸ்தீன் , ஜெருசலம், பைத்துல் முகத்தஸ் , ஆகியவை துருக்கி கிலாபத்தின் கீழ் இருந்தது . ஜெருசலத்தின் முப்தியாக(கவர்னராக) ஹாஜி அமீன் ஹுசைன்  அவர்கள் இருந்தார்கள் . இவர் ஜெருசலத்தின் முப்தியாக இருந்தவர்களின் வம்சாவழியிலிருந்து வந்தவர்கள் . அல் அஹ்சர் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர்கள்.

துருக்கி கிலாபத் அரசு முதல் உலகப்போரில் கலந்துகொண்டது இந்த வருடத்தில்தான் (1914) . அப்போது முப்தி ஹாஜி ஹுசைன் அவர்கள் துருக்கி படை பிரிவு ஒன்றிற்கு தலைமையேற்க கிலாபத் அரசால் பணிக்கப்பட்டார்கள் .

அப்போது 

துருக்கிய படைகள் ரஷ்ய தூதரகத்தினுள் புகுந்தன . அங்கே ஒரு ஆவணம் . அதில் இருந்த செய்தி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம் பலஸ்தீனை ஆக்கிரமிக்க யூதர்கள் செயல்படுத்திவரும் சதித்திட்டங்களை பற்றிய உளவு ஆவணம்தான் அது.

முப்தி அவர்கள் இதனை அன்றைய துருக்கிய கலீபாவிடம் தெரிவித்தார்கள் . 

சரி ஆகவேண்டியதை கவனியுங்கள் நீங்கள் பலஸ்தீனை நோக்கி புறப்படுங்கள் என்றார் கலீபா.


முப்தி ஹாஜி அமீர் ஹுசை அவர்கள் விரைந்து ஃ பாலஸ்தீன் முஸ்லிம்களிடம் சென்றார்கள் . அந்த மக்கள் உலக வாழ்க்கையில் இரண்டற கலந்து கிடந்தார்கள் .

அந்த மக்களிடம் முப்தி அவர்கள் , இன்னும் 50 ஆண்டுகளுக்குள் உங்கள் பழத்தோட்டங்கள், வீடுகள்,இருப்பிடங்கள் அனைத்தையும் அபகரித்துக்கொள்ள யூதர்கள் திட்டம் வகுத்திருக்கின்றார்கள் . அதற்கு ஆங்கிலேயர்கள் ஒப்புதலும் தந்திருக்கின்றார்கள் . இதனை எதிர்கொள்ள எழுத்து வாருங்கள் என கேட்டார்கள் .

ஆனால் அந்த மக்களோ அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை . ஏனெனில் அந்நிலையில் யூதர்கள் ஃ பலஸ்தீனில் வெறும் 3 சதம் மட்டுமே இருந்தனர்.

 வருடம் 1930

 1914 இல் 3 சதவீதமாக இருந்த யூதர்கள் 33 சதவீதமாக உயர்ந்துபோயினர் அவர்களின் திட்டப்படி . ஹாஜி அமீன் ஹுசைன் அவர்களின் எச்சரிக்கையை மதித்து செயலாற்றி இருந்தால் யூதர்களின் ஆக்கிரமிப்பை அவர்கள் தடுத்திருக்கலாம்.

வருடம் 1937
ஹாஜி அமீன் ஹுசைன் அவர்கள் தங்களால் முயன்றதைஎல்லாம் செய்துகொண்டிருந்தார்கள் . இந்த ஆண்டில்தான் அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்.

அதன்பின் யூதர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ள இரண்டு தீவிரவாத அமைப்பை ஏற்படுத்திகொண்டார்கள்.

அவை 

1. ஹகானாக் ,

2. இர்கம் 

இந்த இரண்டு தீவிரவாத அமைப்புகளும் இரவுபொழுதில் முஸ்லிம் கிராமங்களை திடீர் தாக்குதல்கள் மூலம் அழித்தனர் . முஸ்லிம்களை பீதிவயப்படுத்தினர். அப்பாவி மண்ணின் மைந்தர்களை கொன்று குவித்தனர் . வல்லரசுகளின் உதவிகளோடு.


இப்படி படிப்படியாக வன்முறைகளின் உதவிகளின்கொண்டு கிராமங்களை கைப்பற்றினர் யூதர்கள்.

வருடம் 1947

நவம்பர் 29 1947 இல் பிரிட்டன் அமேரிக்கா ஆக்கிய நாடுகளின் உதவியோடு ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு தீர்மானத்தின் மூலம் யூதர்கள் நாடு ஒன்று உலகில் வந்தது.

யூதர்களுக்கென ஒரு நாடு உருவாக்கப்பட்டவுடன் ஐ .நா . சபையின் முதல் அதிகாரியாக ஃ பாலஸ்தீன் சென்றவர் 'கவுண்ட் போல்கி பெர்நாடி' இவரை பிடிக்கவில்லை என்று யூதர்கள் இவரை கொலை செய்துவிட்டார்கள்.
                                                                                                    (CBITTE TRUTH: SAMI HADWI)

 இவர் யூதர்களுக்கென ஒரு நாடு பிறந்ததை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

" THE JEWISH STATE WAS NOT BORN IN PEACE AS WAS HOPPED FOR IN THE   

          RESOLUTION OF NOV 29, 1947.

          BUT RATHER IN VIOLENCE AND BLOODSHED"

                                                                            ( COUNT FOLKE BERNADOTTE)

" எல்லோரும் நம்பியதை போல் யூதர்களின் நாடு அமைதியாக ஐ.நா சபையின் நவம்பர் 29, 1947 தீர்மானத்தில் பிறந்ததன்று . மாறாக அது தீவிரவாதம் , இரத்த வெறி இவற்றால் உருவாக்கப்பட்டது
                                                                             (THE ZIONIST WANT TO DOMINATE THE  
                                                                                             WORLD, BY SHYAM SUNDER)  


                                                             --------------------------------------------- தொடரும் -----------------


நன்றி : விடியல் வெள்ளி, வைகறை வெளிச்சம் , வைகறை (இலங்கை).


No comments:

Post a Comment