test

Monday, October 15, 2012

இஸ்லாத்தை தழுவுங்கள் என்று அறைகூவல் விடுத்த டாக்டர் அம்பேத்கர்



இந்து மதத்தை துறந்து வேறு மதத்தை தழுவ ஒடுக்கப்பட்ட மக்கள் முயர்ச்சிக்கும்போழுது இஸ்லாம் மார்க்கத்தையே இந்த மக்கள் தழுவ வேண்டும் என்று பி.ஆர் அம்பேத்கர் அறிவுரை கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறும்போது அவர்களின் முன் எழும் முதலாவதாக கேள்வி என்னவென்றால் அவர்கள் எந்த மதத்தை தேர்வு செய்வது என்பதுதான் . அதாவது அவர்களுக்கு எந்த மார்கத்தில் பாதுகாப்பு உள்ளதோ அதைத்தான் தேர்வு செய்தல் வேண்டும்.


தற்போது நடைமுறையிலுள்ள மதங்களான இஸ்லாம் , கிறிஸ்தவம் ,சீக்கியம் ஆகிய மதங்களில் ஒன்றினை இவர்கள் தேர்வு செய்யலாம். இந்த மூன்று மதங்களுள் இஸ்லாம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் அனைத்தையும் அளிக்கும். பொருளாதார ரீதியில் இஸ்லாமியர்களிடம் உள்ள வழிவகைகள் வரையறுக்க முடியாதவையாகும். 

சமூக ரீதியில் இஸ்லாமியர்கள் இந்தியா முழுமையும் பரவியுள்ளனர். இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை தழுவுகின்ற ஒடுக்கப்பட்ட புதிய மக்களை பாதுகாத்துக்கொள்வார்கள் . அந்த புதியவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வார்கள் . அரசியல் ரீதியாக புதிதாக இஸ்லாத்தை தழுவும் மக்களுக்கு இஸ்லாமியர்கள் பெரும் அனைத்து உரிமைகளையும் பெறுவார்கள் . இஸ்லாத்தை தழுவும் மக்களுக்கு இஸ்லாமியர்கள் பிரத்தியேகமாக பெற்றுவரும் எந்தவித சட்டம் இயற்றும் உரிமைகள் போன்ற இதர உரிமைகளையும் இழக்க வேண்டியதில்லை , 

ஆதாரம்: பி.ஆர் .அம்பேத்கர் இப்படி பேசுகிறார் என்ற புத்தகம் தொகுப்பு 4 பக்கம் 296 மற்றும் 297  

No comments:

Post a Comment