test

Sunday, October 7, 2012

இந்திய சமுதாய அமைப்பில் இஸ்லாம் ஏற்படுத்திய தாக்கம் .

 இஸ்லாத்தின் வருகைக்கு முன்னால் இந்திய சமுதாய அமைப்பின் நிலை ?

 ஜாதிகளின் பெயரால் பெரும் கூட்டமான மக்களை தலையெடுக்க விடாமல் அடிமைகளாக நடத்திகொண்டிருந்தனர் வந்தேறிகளான பார்பனர்கள் .

இங்கே சமுதாயத்தில் இருந்த தொழில் பாகுபாடுகள் , ஏற்றத்தாழ்வுகள் , உயர்ந்தவர்களுக்கென ஒரு தொழில் , தாழ்த்தப்பட்டவர்களுக்கென சில தொழில்கள் எனப்பிரித்து  வைத்து அத்தொழில்களாலேயே  மக்களை ஜாதிகளாக காட்டினார்கள் .

இத்தோடு இல்லாமல் சில தொழில்கள் இழிவான தொழில்கள் என முத்திரை குத்தப்பட்டன.

இந்த இழிவான தொழில்கள் சமுதாயத்தில் இழிவாக கருதப்பட்டவர்களுக்கு அதாவது அப்படி ஆக்கப்பட்டவர்களுக்கு தரப்பட்டன.

இந்த தருணத்தில் இஸ்லாம் இங்கே வருகை தந்தபொழுது இங்கு அலாதியான தாக்கத்தை ஏற்படுத்தியது .அது இந்து சமுதாய அமைப்பில் இருந்த தீமைகளை எல்லாம் சுட்டிக்காட்டியது. ஜாதிய அமைப்பு தீண்டாமைகொடுமை இவையெல்லாம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த இந்து சமுதாய அமைப்பில் இஸ்லாத்தின் சகோதரத்துவம் ,சமத்துவம் இவையெல்லாம் ஓர் அதிசய தாக்கத்தை ஏற்படுத்திற்று.

அனைவரும் இந்து சமுதாய அமைப்பை பார்த்து ஏமாந்து நின்றபோது இஸ்லாம் சகோதரத்துவத்தை செயலில் பிரகாசிக்க செய்தது. இப்படி சொன்னவர் ஜவஹர்லால் நேரு (The Discovery of India, 1946,p.225).

சகோதரத்துவத்தால் கவரப்பட்ட இந்து சமுதாய அமைப்பில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும்  இஸ்லாத்தில் அலை அலையாக இணைய ஆரம்பித்தார்கள். ஆனால் சனாதனவாதிகளால்  ஜாதி அமைப்பில்லாத ஒரு சமுதாய அமைப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாது . 

தாழ்த்தப்பட்டவர்களும் ,பிற்படுத்தப்பட்டவர்களும் விடுதலைக்கான ஒரே மார்க்கமாக இஸ்லாத்தில் இணைவதால் அது சனாதன தர்மத்தை (?) அழித்துவிடும் என அஞ்சினார்கள் சனாதனவாதிகள்.

மேலும் இஸ்லாம் இங்கு ஒரு அரசியல் கொள்கையாக தலைஎடுத்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் அவர்கள் . ஆதலால்தான் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக அடையாளபடுத்தி, முஸ்லிம்களை எதிரிகளாக கட்டமைப்பத்தின் மூலம் தங்களது சனாதனத்தை காப்பாற்றிக்கொள்ள பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

இஸ்லாத்தின் சகோதரத்துவம் ,சமத்துவம் இதுவே இந்து சமுதாய அமைப்பில் இருந்த தாழ்த்தபட்ட மக்களை சமத்துவத்திற்காக போராட தூண்டியது.

இதனால்தான் ஈ வெ .ரா பெரியார் அவர்கள் கூட இன இழிவு ஒழிய இஸ்லாமே   தீர்வு என்று உரைத்தார்கள்.

இன்றும் என்றும் ஜாதி தீயை அணைக்க இருக்கும் ஒரே கொள்கை இஸ்லாம் மட்டுமே.

சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் 
                                                                                     

இஸ்லாம் இந்த நாட்டில் தனது ஒளியை உமிழ துவங்கியபோது சதி என்னும் உடன்கட்டை ஏறும் ஒரு பயங்கர தீமை இங்கு தலைவிரித்தாடிகொண்டிருந்தது .

முஸ்லிம்களும் ,முஸ்லிம் ஆட்சியாளர்களும் இந்தகொடுமையை களைந்திட  பல முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

கணவன் இறந்துவிட்டால் தொடர்ந்து வாழும் உரிமை பெண்ணிற்கு மறுக்கப்பட்டு வந்தது.   அவளை உயிரோடு எரிக்கும் படுபாதக செயலை மதத்தின் பெயரால் அரங்கேற்றி கொண்டிருந்தனர் கயவர்கள்.

இதற்கு எதிராக அழகிய நடைமுறை பலவற்றை மேற்கொண்டார்கள் முஸ்லிம்களும் முஸ்லிம் ஆட்சியாளர்களும். முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்களது குடும்ப பெண்களையே அனுப்பி கணவனை இழந்த பெண்களுக்கு ஆறுதலும் ஆலோசனைகளும் வழங்கி அவர்களை உடன்கட்டை ஏறும் அநீதியிலிருந்து காத்தார்கள்.

இது இங்கு வாழ்ந்த மக்களிடம் போதிய பின்விளைவுகளை ஏற்படுத்திற்று.நாளுக்கு நாள் உடன் கட்டை ஏறுவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. 

இந்த உண்மையை Francois Burnier என்ற சமூகவியாளர் தன்னுடைய முகலாய சாம்ராஜ்யம் என்னும் நூலில் கீழ்கண்டவாறு கூறுகிறார்   .

" முஸ்லிம்களின் ஆட்சி நிலைகொண்டபின் உடன்கட்டை ஏறுவோரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. காடுமிராண்டிதனமான இந்த பழக்கத்தை முறியடிக்க முஸ்லிம்கள் தங்களால் இயன்றதெல்லாம் செய்தார்கள் .அவர்கள் ஒரு சட்டத்தை இயற்றி இதனை தடுக்கவில்லை , ஏனெனில் அவர்கள் இதர மக்களில் மத அனுஷ்டானங்களில் சட்டத்தை காட்டி குறுக்கே நிற்க விரும்பவில்லை . ஆனால் அதனை சீரிய ஆலோசனை வழங்குவதன் மூலம் தடுத்தார்கள்.நீண்டகால பிரச்சாரத்திற்கு பிறகு உடன்கட்டை ஏற விரும்பும் பெண்கள் அந்த பகுதியிலுள்ள கவர்னருக்கு சொல்ல வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டார்கள் முஸ்லிம் ஆட்சியாளர்கள் . இந்த தகவல் கிடைத்தவுடன் அது அந்த பெண்ணின் விருப்பம்தானா என்று கவர்னர் உறுதி செய்வார்.( இதனால் பெண்களை அவள்  விரும்பாவிட்டாலும் பிற்போக்குவாதிகள் அவளை கட்டாயடுத்துவது தடுக்கப்பட்டது) . அந்த பெண் விரும்பினால் கூட அவளது கவனத்தை திருப்ப தங்களது பெண்களை கொண்டே அருவுரைகளை வழங்கினார்கள்."

தன பெண்களோடு வாழவும், அந்த பெண்களை வாழ வைக்கவும் வாக்குறுதிகளை வழங்கினார்கள். இதனால் முஸ்லிம் கவர்னர்களை நியமிக்கப்பட்ட இடங்களில் உடன்கட்டை ஏற்றும் செயல் மிகவும் குறைந்தது.ஆனால் முஸ்லிமல்லாத கவர்னர்கள் உள்ள இடங்களில் உடன்கட்டை ஏறும் செயல் வழக்க்கம்போலவே இருந்தது.(Francosis Burnier - Travels in Moghal Empire,1891p.306).


                            -                          -------------------------------------------------- தொடரும் 


No comments:

Post a Comment