test

Monday, October 15, 2012

டாக்டர் அம்பேத்கர் அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதிலிருந்து வழி மறித்தது யார் ? . வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

வழறிஞர் ஆர் . எஸ்  ஆதில் அவர்கள் உத்திர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற ஜாதி ஒழிந்தது நூல் வெள்யீட்டு விழாவில் ஆற்றிய உரை ( இவரை பற்றிய குறிப்புகள் பின்னர் இடம்பெறும் )


டாக்டர் மூஞ்சே ( ஆர் எஸ் எஸ்  என்ற சித்பவன் பார்ப்பன தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர்). பின்வரும்  கடிதத்தை டெல்லியிலிருந்து 1936 ஆம் ஆண்டு ஜூன் 30  ஆம் நாள் ராவ் பகதூர் எம்.பி இராஜா அவர்களுக்கு எழுதினர்.

அன்புள்ள ஐயா  எனது நண்பர்கள் சிலரிடமிருந்தும் அம்பேத்கரின் சம்மதத்துடன் ஸ்ரீமான் செத் ஜீகால் கிஷோர் பிர்லா அவர்களிடமிருந்தும் எனக்கு வந்த அவசர அழைப்புகளின் பின்னணியில் நான் 18 ஆம் தேதி பம்பாய் போக நேர்ந்தது . அங்கெ டாக்டர் அம்பேத்கர் என்னுடன் மூன்று நாள்கள் தொடர்ந்து நீண்ட நேரம் உரையாடினார். முடிவில் அவரது இந்து மதத்திற்கெதிரான கிளர்ச்சிக்கு ஓர் அமைதியான முடிவு எடுக்கப்பட்டு எழுதப்பட்டது . டாக்டர் அம்பத்கர் அதனை முழுமையாக ஒத்துக்கொண்டார்,


அந்த முடிவு பின்வருமாறு :

டாக்டர் அம்பத்கரும் அவரை பின்பற்றுபவர்களும்  இஸ்லாத்திற்கோ கிறிஸ்தவத்திற்கோ போவதை விடுத்து சீக்கிய மதத்தை தழுவுவார்களேயானால்  அத்தோடு அவர்கள் இந்துக்களோடும்  சீக்கியர்களோடும் நேர்மையோடும் அக்கரையாடும் ஒத்துழைத்து அவர்களது கலாச்சாரத்தை பிரச்சாரம் செய்திடவும் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்ட மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக நடத்தும் இயக்கத்திற்கு எதிராக செயல்படுவத்தற்கும் ஒத்துழைப்பார்கள் என்றால் இந்து மகா சபை அவர் இந்து கலாச்சாரத்திலேயே இருக்க ஒத்துகொண்டிருப்பதால் பின்வரும் விஷயங்களை எதிர்காது .

 1. ஒடுக்கப்பட்ட மக்கள் சீக்கிய மதத்தை தழுவுவது .

 2. புதிய சீக்கியர்களை பட்டியலின மக்களோடு இணைப்பது.

 3 பூனை ஒப்பந்தத்தின் அரசியல் உரிமைகளை  சீக்கியர அல்லாதவர்களும் ( பழங்குடியினரும்) புதிய சீக்யர்களுக்கு இடையே போட்டியின்றி அனுபவிப்பது ( இதனை இந்து மகா சபை எதிர்காது ).

இந்து மகா சபையின் முன் முறையாக சமர்பிக்கும் முன் நண்பர்களோடு இது குறித்து விவாதிக்க நான் இன்று அதிகாலையில்தான் டெல்லி வந்தேன் . நான் பண்டித மாளவியாவையும்  முடிந்தால் ஹெச்.ஹெச்  பாடியாலா மகாராஜாவையும் சந்திக்க முயற்சி செய்கிறேன் .

இது மிகவும் உணர்ச்சிபூர்வமான விஷயம் . ஆதலால் இது குறித்து நீங்கள் சிந்தித்து உங்கள் கருத்துக்களை எனக்கு அறிய தாருங்கள் . நாம் ஏதேனும் ஒரு முடிவு எடுக்கும் வரை இந்த விஷயங்கள் முழுக்க முழுக்க ரகசியமாகவும் தனிப்பட்ட விவகாரமாகவும் இருந்திட வேண்டும் .

இதிலிருந்து பெறப்படும் உரிமை :

 1. டாக்டர் அம்பத்கர் அவர்கள் இஸ்லாத்திற்கு அல்லது கிருஷ்தவத்த்ற்கு செல்ல தயாராக இருந்திருக்கின்றார்கள் .

 2. அவர் அவ்வாறு செல்வதை தடுக்க நரிமன் செத் ஜீலால் , கிஷோர் , பிர்லா ஆகியோர் டாக்டர் மூஞ்சேவை அனுப்பியிருக்கின்றார்கள் .

 3. இதற்கு மூன்று நாட்கள் தொடர்ந்து இடைவிடாமல் அம்பேத்கருக்கு நெருக்கடிகளை கொடுத்திருக்கின்றார்கள் . அதாவது டாக்டர் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்கள் .

 4.முடிவில் அம்பேத்கருக்கு சலுகைகளை போல சில வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் .

கடிதம் சொல்லும் நீதி 


முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்ட மக்களை இன்றைய சொல்லாட்சியில் தலீத் மக்களை இஸ்லாத்தில் இணைத்து அவர்களை முழுமையாக விடுவிக்க தாங்களால் ஆனவற்றை செய்திருக்கின்றார்கள் .


டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முயற்சியில் பயங்கர முட்டுக்கட்டைகள் போடப்படிருக்கின்றன . அவர்கள் பயங்கர நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் .

வழக்கறிஞர் ஆதில் அவர்களின் கூற்றுப்படி அம்பத்கர் அவர்கள் ஒரு சுதந்திரமான சூழ்நிலையில் விடப்பட்டிருந்தால் அவர்கள் இஸ்லாத்தை தழுவியிருப்பார்கள் .

நன்றி: வைகறை வெளிச்சம் மாத இதழ்.6 comments:

Adirai Iqbal said...

பூனா ஒப்பந்தம் : பூனா ஒப்பந்தம் என்பது இந்து(பார்ப்பன) தலைவர்களுடன் அம்பேத்கர் செய்துகொண்ட ஓர் ஒப்பந்தம் . ஆங்கில அரசிடம் அம்பேத்கர் போராடி இஸ்லாமியர்களை போல, கிறிஸ்தவர்களை போல, இந்துக்களை போல் , தீண்டப்படாத மக்களையும் ஒரு தனி அங்கமாக பாவித்து அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் . இட ஒதுக்கீடுகள் ( தனி வாக்காளர் தொகுதி ) வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டு அரசியல் உரிமைகளை பெற்றார்.

தீண்டப்படாத மக்களுக்கு ( இட ஒதுக்கீடு) அரசியல் உரிமைகள் வழங்கப்படக்கூடாது என காந்தி உண்ணாவிரதம் இருந்தார் . பெரும் நெருக்கடியை கொடுத்தார் . இதனால் தனது அரசியல் உரிமைகளை அம்பேத்கர் இழக்க நேரிட்டது . இதில் இந்துக்களுக்கும் அம்பேத்கருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம்தான் பூனா ஒப்பந்தம் . இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அம்பேத்கர் எட்டுக்கோடி மக்களின் கழுத்தை அறுக்கிறேன் என்று கையெழுத்திட்டார்.( அப்போதிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை எட்டு கோடி )

வவ்வால் said...

// கடிதத்தை டெல்லியிலிருந்து 1936 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் ராவ் பகதூர் எம்.பி இராஜா அவர்களுக்கு எழுதினர்.//

1956 இல் தான் புத்த மதம் மாறினார், 20 வருஷமா அந்தக்கடிதம் என்ன செய்தது?

1947 இல் விடுதலை ஆனப்பிறகும் அந்த கடிதம் தான் மதம் மாற விடாம தடுத்ததா? ஏன் 56 வரைக்கும் வெயிட் செய்தார்?

அம்பேத்கார் சுயமாக எடுத்த முடிவு அது , செத்தபிறகு இப்படி யார் வேண்டுமானாலும் சொல்லிக்கலாம்.

Adirai Iqbal said...

திரு வவ்வால்

வழக்கறிஞர் ஆதில் அவர்கள் பிறப்பால் ஒரு தலித் . பின்னர் புத்த மதத்தை தழுவி அதன் பிரச்சாரம் செய்பவர்களில் ஒருவராக இருந்தார் . பின்னர் அவர் இஸ்லாத்தை தழுவினார் . மேற்கொண்ட உரையில் சொல்லப்பட்ட விடயங்களுக்கான ஆதாரங்கள் 'அம்பேத்கரும் இஸ்லாமும்' என்ற ஆய்வு நூலில் வெளியிட்டுயிருக்கிறார்கள். அது இந்தி மொழியில் உள்ளது. அதனை லக்னோவை சேர்ந்த சகோதரி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொண்டிருக்கிறார் . இன்ஷா அல்லாஹ் விரைவில் அதனின் தமிழ் மொழி பெயர்ப்பினை தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட் வெளியிட உள்ளது.

Adirai Iqbal said...

அந்த சகோதரியின் பெயர் அஸ்வின் . இவர்தான் ஆதில் அவர்கள் எழுதிய "அம்பேத்கரும் இஸ்லாமும்' என்னும் ஆய்வு நூலை இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்து வருகிறார்.

Adirai Ahmad said...

அப்போதே, 'அப்துல்லாஹ் அம்பேத்கர்'என்ற பெயரைப் பெற்றிருப்பார். பாவம்! நசீபு கெட்ட மனுசன்! இருப்பினும், அவருடைய நியாயமான, நேர்மையான கருத்துகள் அழிந்துபோய்விடவில்லை.

faizeejamali said...

Ambedkar is not an icon of Islam. Islam has its own identity . Something had made him to stay away from Islam. In my point we have to analyze the root cause. the political situations, world war 1 and 2 anti Islam sentiments during that period, infiltrators into Islam in the name of alims and Muftis including into the Islamic institutions throughout the world etc

Post a Comment