test

Sunday, June 17, 2012

ஹிஜ்ரி 1342 , ரஜப் 28 இல் என்ன நடந்தது ?

( உம்மா ( இஸ்லாமிய உலகம்) அனாதையாக்கப்பட்ட நாள் )


முஸ்லிம்களின் ஒரே தலைமையாகவும , பாதுகாப்பு அரணாகவும் விளங்கிய கிலாபா (இஸ்லாமிய ஆட்சி ) துருக்கி இஸ்தான்புல் நகரில் இஸ்லாத்தின் துரோகி முஸ்தப்பா கமால் பாஷா என்பவனால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28 ( கி.பி.1924, மார்ச் 3) இல் வீழ்த்தப்பட்டது . அன்றைய தினம் உஸ்மானியா கிலாஃபத்தின் கலீபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடு கடத்தப்பட்டார் . முஸ்லிம்களின் ஒரே தலைமை அழிக்கப்பட்டதின் காரணமாக முஸ்லிம் உம்மா அனாதையாக்கப்படதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் (U.K, France , U.S.A போன்ற நாடுகள்) தீர்மானிக்க வேண்டும் என்ற இழி நிலை உருவானது . முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24இல் லாசானில் நடைப்பெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார் ."முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முயலும் எதையும் நாம் தகர்த்தெறிய வேண்டும். கிலாபாத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றிப்பெற்றதைப்போல் உணர்வுப்பூரவமாகவோ , பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் முஸ்லிம்களிடம் ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் . இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்திவிட்டோம் . அது ஒரு போதும் மீண்டு எழுந்து வராது . ஏனெனில் அதன் உயிரோட்டமான சக்தியான கிலாபாத்தை நாம் வீழ்த்திவிட்டோம் "
(என்று கர்சன் பிரபு அறிவித்த அன்றிலிருந் இன்று வரை இவர்களுக்குள் (U.K, France ,U.S.A போன்ற நாடுகள் ) பல கருத்து வேறுப்பாடுகள் இருந்தபோதிலும் இஸ்லாமிய தலைமைத்துவம் மேலோங்காமல் இருப்பதற்கு ஒற்றுமையுடன் இன்று வரை செயபட்டுக்கொண்டிருக்கிரார்கள் .)

கிலாபாத்தை முழுமையாக அழிப்பதற்கு அன்று பிரிட்டன் முழு வீச்சில் செயல்பட்டதை அன்று உலகமே அறிந்திருந்தது . கிலாபாத்தை அழித்ததோடு மேற்குலக ஆதிக்கவாதிகள் முஸ்லிம்களின் நிலப்பகுதிகளை துண்டாடி முஸ்லிம்களுக்குள் கீழ்த்தரமான தேசியவாத மற்றும் அது போன்ற சிந்தனைகளை புகுத்தி நம்முடைய ஒற்றுமையை சிதைத்தனர் . ஒரே உம்மத்தாக விளங்கிய முஸ்லிம்களின் மீது காலனி ஆதிக்க  காபிர்களால் தேசியவாதம் என்ற இஸ்லாத்திற்கு மாற்றமான சிந்தனை திணிக்கப்பட்டு பல நாடுகளாக கூறு போடப்பட்டார்கள் . முஸ்லிம் உம்மா  மீது இஸ்லாத்திற்கு விரோதமான மக்களாட்சி முறையை ஏற்படுத்தி , அவர்கள் மீது ஜனநாயக கொடுங்கோலர்களையும் , சர்வாதிகாரிகளையும் ஏற்படுத்தினர் .

நபி(ஸல்) அவர்களால் இஸ்லாமிய அரசு மதினாவில் நிறுவப்பட்டதிலிருந்து நேர்வழிபெற்ற கலீபாக்கள் காலம் முதல் உஸ்மானியா பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924 ஆம் ஆண்டுய் மார்ச் 3) இஸ்லாத்தின் துரோகி முஸ்தபா கமால் அதா துர்கினால் வீழ்த்தப்படும் காலம் வரை கிலாபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது .உண்மையில் இஸ்லாம் அருளப்பட்ட காலத்திலிருந்தே இஸ்லாத்தின் எதிரிகளும் தோன்றிவிட்டார்கள் . முஸ்லிம்களுடன் நீண்ட காலம் போராடி தோல்வி கண்ட காபிர்கள் இனிமேலும் இவர்களுடன் போராடி வெற்றிக்கொள்ள முடியாது என்ற மனோநிலைக்கு தள்ளப்பட்டார்கள் . எனவே அவர்கள் சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தினால் மட்டுமே முஸ்லிம்களை வீழ்த்த முடியும் என்பதை உணர்ந்தார்கள் .

முஸ்லிம்களின் சிந்தனையை பலவீனப்படுத்த , கிலாபாத்தின் இறுதி கால கட்டத்தில் காணப்பட்ட பலவீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள் .இவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான தேசியவாதம் , ஜனநாயகம் விடுதலை போன்ற குஃப்பார்களின் சிந்தனைகளை முஸ்லிம்களின் மத்தியில் அதிகளவில் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சிந்தனைகளை ஆட்டம் காண வைப்பதன் மூலம் கிலாபாத்தை தகர்த்துவிடும் முயற்ச்சியில் இறங்கினார்கள் . இதனை அடைவதற்காக கிலாபா ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பி கல்வி நிறுவங்கள்  , மருத்துவமனைகள் , தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பதின் ஊடாகவும் , புத்தகங்கள் ,துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதன் ஊடாகவும் தமதுய் விஷம கருத்துகளை விதித்ததுடன் சில ரகசிய நிறுவனங்களையும் அமைத்தனர் .அவர்கள் சமூகத்தின் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள் ஊடுருவினர் .இதற்காக கல்வி நிறுவனங்களில் தமது கவனங்களை அதிகமாக செலுத்தினர் . இத்தகைய முயற்ச்சியின் பயனாக அவர்கள் அதிகமான பல்கலை கழக மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அறிவு ஜீவிகளை கவர்ந்தனர் .கிலாபாத்தின் பகுதிகளில் ஊடுருவி அதை பலவீனப்படுத்தினால் மட்டுமே தங்களால் வெற்றிபெற முடியும் என்பதால் , குறிப்பாக பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு தேசியவாதத்தையும் ,துருக்கிய தேசியவாதத்தையும் விதைப்பதற்காக பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர் .

இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் உணராத நிலையிலேயே கிலாபாத்தைன் அழிவும் நடந்தேறியது .
எவர் ஒருவர் காலையில் எழும்போது முஸ்லிம்களில் விவகாரங்களை பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் நிலையில் எழுகிராரோ அவர் நம்மை சார்ந்தவர் அல்லர் . நபிமொழி (முஸ்லிம்).


முஸ்தஃபா  கமால் அத்தாதுர்க் என்ற இங்கிலாந்தின் அடிவருடி மூலம் அதிகாரப்பூர்வமாக கிலாபா அழிக்கப்பட்ட உடனேயே முஸ்லிம் உம்மத்தின் வாழ்வியலிலிருந்து இஸ்லாம் பிரிக்கப்பட்டு , முதலாளித்துவம் திணிக்கப்பட்டது . இஸ்லாத்தின் பூமி பல தேசங்களாக பிளவுபடுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃபார்களின் பிடி வலுவடைந்தது . மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம் பெயர்தாங்கிகளை அங்கு பொம்மை ஆட்சியாளர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிக்கின்ற முயற்ச்சியில் வெற்றி கண்டனர் . மேற்குலக எஜமானர்களின் பொருத்தத்தை அடைவதற்காக முஸ்லிம் பொம்மை ஆட்சியாளர்கள் இந்த உம்மத்தை பலவந்தமாக ஒடுக்கினர் . அவர்கள் கிலாபாத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்பாடுபடுபவர்களையும் கடுமையாக ஒடுக்கினர் .

மேற்குலகின் ஏஜெண்டுகளான  இந்த பொம்மை ஆட்சியாளர்களால் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் இழிவு ஏற்பட்டது . சிரியா, ஈராக் , ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் , பாலஸ்தீன், காஷ்மீர், செச்சென்யா,கிழக்கு துர்க்கிஸ்தான் என்று உலகின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம்கள் வேட்டையாடப்படுகின்றனர் .முஸ்லிம் உலகு எல்லா நிலைகளிலும் தொடர்ந்து பின் தங்கியே உள்ளது . முஸ்லிம் உலகின் கொடுங்கோல் ஆட்சியாளர்களால் தொடர்ந்து அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரையும்  பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வருகிறார்கள் . முஸ்லிம் நாடுகளில் இன்று நடைபெற்று வரும் எழுச்சிமிகு போராட்டங்கள் கிலாபாத்திர்கான பாதையை திறந்துவிட்டுள்ளது .

முஸ்லிம்களே!

உலக அரங்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வல்லரசாக விளங்கிய இஸ்லாமிய அரசான கிலாபாத்தின் மீள் வருகையே முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு என்பதை சிந்திக்க வேண்டாமா ? இந்த ஆட்சி முறைக்கு கீழ்தான் சுமார் 1300 ஆண்டுகள் முஸ்லிம் உம்மா தங்களை அனைத்து வாழ்வியல் விவகாரங்களையும் இஸ்லாத்தின் நிழலிலேயே தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறது . கிலாபாத்தின் மூலமாக இஸ்லாமிய ஆட்சி முறை அன்றாட வாழ்வியல் விவகாரங்களில் பரிபூரணமாக அமுல்படுத்துவதன் மூலமாகவே , முதலாளித்துவ ஆட்சிமுறையின் கொடுமையை அனுபவித்துவரும் மனித குலத்திற்கு விடிவு ஏற்படும் . முஸ்லிம்கள் மீது காபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் எவ்வித சமரசமும் இன்றி முழுமையாக மறுக்கிறது . அல்லாஹ் கூறுகிறான் :-

முஃமீன்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான் .(அந்நிஸா:141)

விசுவாசிகள் , விசுவாசிகளையன்றி இறை நிராகரிப்போரை தமது பாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் .(ஆல இம்ரான்:28) 


முஸ்லிம்களே !


இஸ்லாமிய ஆட்சிமுறையான கிலாபா முஸ்லிம்களுக்கும் முழு மனித சுதாயதிற்கும் நற்பலன் அளிக்கக்கூடியது . கிலாபாத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் கண்ணியமும் கட்டிக்காக்கப்படும் ( கிலாபாத் இருந்த காலங்களில் யூதர்களும் கிருஸ்தவர்களும் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது வரலாறு கூறும் உண்மை ) . கிலாபாத்தை நிலைநாட்டுதல் என்பது முஸ்லிம்களின் ஜீவாதாரப்பிரச்சினயாக இருப்பதோடு கட்டாய கடமையாகவும் இருக்கின்றது .

" நபி(ஸல்) அவர்கள் கஃபாவை சுற்றி வரும்போது அதனை பார்த்து கூறினார்கள் , உனது (கஃபா ) சிறப்பு எத்தைகையது! உனது நறுமணமும் எத்தகையது ! ஆனால் எவனுடைய கரத்தில் இந்த முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக , ஒரு விசுவாசியின் ஒரு துளியின் இரத்தமும் , அவனது உடமைகளும் அல்லாஹ்(சுபு ) முன்னிலையில் உன்னை (கஃபா)விட புனிதமானது. நல்லதைகொண்டல்லாமல் ஒரு விசுவாசியை கருத வேண்டாம்." 

முஸ்லிம்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்ட நிலையில் , சர்வ சாதாரணமாக இன்று முஸ்லிம்களின் கண்ணியமும் பாழ்படுத்தப்ப்டுகிறது . நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள் இழிவுப்படுத்தபடுகிரார்கள் . குர் ஆணை எரிக்கும் போராட்டத்தை அமெரிக்காவில் கயவன் ஒருவன் நடத்தி இருக்கின்றான் . முஸ்லிம் உம்மத்தை கேடயமாக நின்று பாதுகாக்க கூடிய பொறுப்பு மிக்க இமாம் (கலீஃபா) இல்லாததே முஸ்லிம்கள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாகும் ..

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்

" இமாம் ஒரு கேடயமாவார் . அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள் . அவர் மூலமாக பாதுகாப்பு தேடிக்கொள்வார்கள் ".


நபி(ஸல்) அவர்கள் தமக்கு பின்னர் இந்த உம்மத்தை யார் வழி நடத்த வேண்டும் என்பதை தெளிவாகவே அறிவித்து சென்றுள்ளார்கள் .

" நான் அபு ஹூரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி கூறிய நபி(ஸல்) அவர்களின் கூற்று: பனி இஸ்ராயில் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தனர் . ஒரு நபியின் மறைவுக்கு பின்னர் வேறு நபிமார்கள் தோன்றினர் . ஆனால் எனது மறைவுக்கு பின்னர் வேறு நபிமார்கள் யாரும் வரமாட்டார்கள் . அதிக எண்ணிக்கையில் கலீஃபாக்கள் தோன்றுவார்கள் .அப்போது சகாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடம் அந்த நிலையில் நாங்கள் என்ன செய்யவண்டும் ? என வினவினார்கள் அதற்கு நப(ஸல்) அவர்கள் கூறினார்கள் . முதலாமவருக்கு பைஆ செய்யுங்கள் , பின்னர் அவரை தொடர்ந்து வருபவர்களுக்கும் பைஆ செய்யங்கள் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுங்கள் . அல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் குறித்து விசாரணை செய்வான்" என்றார்கள் .

முஸ்லிம்களே!


நம் தோள்களிலே சுமத்தப்பட்டிருக்கும் இந்த மாபெரும் பொறுப்பை நிறைவேற்ற வீறு கொண்டு எழ வேண்டாமா? நாம் உறுதிப்பிரமாணம் கொண்டு ஏற்று வாங்கிய மாபெரும் அமானிதத்தை நாம் மட்டும் சுமந்து கொண்டிருந்தாள் போதுமா? அதன் பிரகாசத்தை அழைப்பு பணி  மூலம் உலகம் முழுவதும் பரப்ப இஸ்லாமிய தலைமைத்துவமான கிலாஃபா அவசியமல்லவா?முஸ்லிம்களின் வாழ்வியல் விவகாரங்களிருந்து பிரிக்கப்பட்ட இஸ்லாம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டாமா? முஸ்லிம்கள் மாத்திரமின்றி முழு மனித சமுதாயமும் இஸ்லாத்தின் நிழலின் கீழ் நிம்மதியாக வாழ

நாம் வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டாமா?  கடந்த நூற்றாண்டிலும் தற்போதும் மனித சமுதாயம் சந்தித்துள்ள மாபெரும் அழிவுகளுக்கு காரணமான மனித அறிவிலிருந்து தோன்றிய முதலாளித்துவம் என்ற சித்தாந்தம் முஸ்லிம்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதை அடியோடு அகற்றி மீண்டும் இஸ்லாமிய வாழ்கை முறைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டாமா?

முஸ்லிம்களே !


நம் பாதை சுவனத்தின் பாதையாகும் . அதன் பாதை இன்னல்கள் நிறைந்தது . அதை அடைந்து கொள்வதற்கு மாபெரும் தியாகங்கள் செவது அவசியமாகும் . சஹாபாக்கள் மற்றும் நம் முன்நூர்களின் தியாக உணர்வு நமக்கும் வர வேண்டாமா? அல்லாஹ் நமக்கு வழங்கிய இஸ்லாமிய சட்டங்கள் பூமியில் மீண்டும் நிலைநாட்டப்பட, இந்த அழைப்பு பணியில் ஈடுப்படுவோரின் அழைப்பை ஏற்றுக்கொள்வோமா?

" ஈமான் கொண்டவர்களே ! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு வாழ்வழிக்கும் காரியத்தின்பால் அழைத்தால் தற்கு நீங்கள் பதிலளியுங்கள் ".


நன்றி :www.sindhanai.org, www.islamicsystem.blogspot.com

No comments:

Post a Comment