test

Friday, April 20, 2012

இலங்கையில்ஜும்ஆ பள்ளிவாசல் உடைப்பு : சிங்கள பேரினவாதிகளின் பயங்கரவாதம்


தம்புள்ள ஜும்ஆ  பள்ளிவாயல்  பேரினவாத சக்திகளால் தற்பொழுது முற்றுகை இடப்பட்டுள்ளதாகா உறுதிப்படுத்தப் பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜும்ஆவிற்கு சென்ற முஸ்லிம் சகோதரர்கள் பள்ளியினுள் இருந்து வெளிவர முடியாதவாறு பேரினவாத சக்திகளால் பள்ளிவாயல் முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் பள்ளியை நோக்கி கட்கள் வீசப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தகட்டினால்லான பள்ளியின் சிறுபகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இராணுவத்தினறும் பொலிசாரும் கடமையில் உள்ளபோதும் நிலைமை மிகவும் அச்சமாகவே உள்ளதாக அங்கே உள்ள சகோதரர்கள் தெரிவிக்கின்றனர்.
இறைவனின் இல்லமான இப்பள்ளிவாயலைப் பாதுகாப்பதற்கான பிரார்த்தனைகளில் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு தம்புள்ளையில் தொழில்நிமித்தம் வசித்துவரும் எமது சகோதரர்கள் கண்ணீருடன் எமது சமூகத்துக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
3rd Update
தற்போது கிடைக்கபெற்ற தகவல்களின்படி, தம்புள்ள ஜும்ஆ  பள்ளிவாயல் பேரினவாத சக்திகளால் உடைக்கப்பட்டுள்ளது.
முதலில் பள்ளிவாயலில் உள்ளே இருந்த முஸ்லிம்  சகோதரர்கள் பொலிசாரின் வற்புறுத்தலின் காரணமாக வெளியேற்றப்பட்டனர். அங்கே ஜும்ஆ நடைபெறவில்லை.
பின்னர் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் காவி உடை அணிந்தவர்கள் பள்ளியின் உள்ளே சென்று அங்கே இருந்த சகல பொருட்களையும் உடைத்து அளித்தனர்.
அத்தோடு பள்ளியையும் உடைத்து அளித்துள்ளதாக அங்கே இருந்து எமது சகோதரர் காத்தான்குடி இன்போவிற்கு கண்ணீருடன் தெரிவித்தார்.
அரசில் ஒட்டியுள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கு பல்வேறு தகவல்கள் இது தொடர்பாக தெரிவிக்கப் பட்டபோதும், அவர்களால் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
மேலதிக தகவல்கள் கிடைக்குமிடத்து வாசகர்களுக்காக பதிவேற்றப்படும்
4th Update
பொலிஸார், இராணுவம் வேடிக்கைபார்க்க அல்லாவின் இல்லம் உடைக்கப்பட்டது. பள்ளிவாயல் உடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சிங்கள இணையம் பிரசுரித்த படங்களை இங்கே பிரசுரிக்கின்றோம்.
நன்றி : www.kattankudi.info

5 comments:

Anonymous said...

நல்ல தகவல். நன்றி. ஜன நாயக முறையில் அவர்கள் போரிட உரிமை உள்ளது. புத்தபிக்குகள் வாழ்க.

உங்க இலங்கையில புத்தமதக்காரர்கள் மெஜாரிட்டி. அவர்களோட கோயிலுக்கு மிக அருகாமையில், பள்ளிவாயலைக் கட்டி வச்சிகிட்டு, நொட்டிக்கிட்டு இருக்காங்க முஸ்லிம்கள். உங்கள் பார்த்தாலே தெரியுது. அதை அப்புறப்படுத்த ஜன நாயக முறையில போராடுகிறார்கள் பிக்குகள். அவர்கள் செய்வது சரிதான்

முனைவர் பரமசிவம் said...

’பெயரிலி’ சொல்வதிலும் உண்மை இருக்குமோ?
இலங்கை வாழ் சகோதரர்கள் விளக்கம் தருவார்களா?

Adirai Iqbal said...

தாங்கள் பேரினவாதத்தை ஆதரிப்பதிலிருந்தே தங்களை பற்றி இலகுவாக அறிய முடிகிறது நீங்களும் ஒரு பேரினவாதிதான் . அதாவது கொடூர சங்கபரிவாரத்தினை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் .

60 ஆண்டுகள் பழமையான ஒரு மஷூதியை தற்போது அகற்ற போராட்டம் நடத்துவதாக கூறிக்கொண்டு அதனை உடைப்பது என்பது உங்களுக்கு ஜனநாயகம் என்று தோன்றினால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை

Adirai Iqbal said...

அந்த பள்ளிவாசல் உடைப்பிற்கு சிங்கள பேரினவாதிகள் சொல்லும் காரணம் அது சிங்களவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி .மேலும் அது புத்தரின் கலாசார பூமி என்பதாகும்.
ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளில் முஸ்லிம்களும் தமிழர்களும் பெரும்பானமையாக வாழும் பகுதிகளில் இன்னும் சொல்லப்போனால் புத்த மதத்தினர் அறவே வசிக்காத இடங்களிலும் சிங்களவர்கள் புத்த விகாரைகளை மைத்து வருகிறார்கள் . இது ஏன்?

VANJOOR said...

1915 ல், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது இனக்கலவரம் வெடித்தது.

கண்டியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய வேளை, தெருவில் பௌத்த பிக்குகள் குழப்பம் விளைவித்தமையே கலவரத்தை பற்ற வைத்த பொறி.

காலனிய அரசு இனக்கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது

இதே நேர‌த்தில் த‌மிழ‌ர்க‌ளின் தலைவ‌ராக‌ இருந்த‌வ‌ர்க‌ள் முஸ்லீம்க‌ளும் த‌மிழ‌ர்க‌ள் என்ற‌ ரீதியில் முஸ்லீம்க‌ளை ஆதரித்திருக்க‌ வேண்டும்.

ஆக‌க்குறைந்த‌து ந‌டுநிலையாவ‌து வ‌கித்திருக்க‌ வேண்டும்.

ஆனால் த‌மிழ‌ர்க‌ளின் த‌லைமை ஒரு பெரும் த‌வ‌றை இழைத்த‌து.

அன்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள்.

அன்றைக்கு தமிழர் தலைவராக இருந்த சேர்.பொன் இராமநாதன் சிங்களவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.

அப்பொழுது முதலாம் உலக யுத்தம் (1914-1918) நடந்து கொண்டிருந்த காலம்.

கப்பற் போக்குவரத்து என்பது மிகவும் ஆபத்ததான ஒன்றாக இருந்தது. ஆனால் ஆபத்தையும் பொருட்படுத்தாது சேர்.பொன் ராமநாதன் இங்கிலாந்து பயண‌மானார். அங்கே சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்காக‌ வாதாடினார்.

வாதாடி கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ சிங்க‌ள‌ த‌லைவ‌ர்க‌ளையும் காடைய‌ர்க‌ளையும் விடுதலையாக‌ செய்தார்.

லண்டனில் இருந்து இல‌ங்கை திரும்பிய‌ இராம‌நாத‌னை சிங்க‌ள‌வ‌ர்க‌ள் தோளில் சுமந்து சென்று ரத‌த்தில் வைத்து சிங்க‌ள‌வ‌ர்க‌ளே ர‌த‌த்தை இழுத்து அழைத்து சென்ற‌ன‌ர். .

.

Post a Comment