test

Saturday, February 4, 2012

பெண் விடுதலையின் அடையாளம்!-நிர்வாண உலகிலிருந்து நிக்காப் வரை !புர்கா -வை பற்றிய விவாதம் உலகில் சூடுபிடித்து வருகிறது .

புர்காவை அடிமைச் சின்னம் என்று அலட்சியமாய் பேசியவர்கள் அது கண்டு அலறுகிறார்கள் . 

ஆமாம் நிர்வாண உலகை தத்தெடுத்து கொண்டவர்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் புர்காவின் பக்கம் , இஸ்லாத்தின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள் .இந்த எண்ணிக்கை பெருகவே , இஸ்லாத்தின் எதிரிகள்  பெருகிவரும் தங்கள் ஆற்றாமையைத் தணித்திட பாய்கின்றார்கள். பதறுகிண்டார்கள். தடை செய்ய வேண்டும்   புர்காவை எனக் கூறி இயக்கம் நடத்துகின்றார்கள் .

மேலை நாட்டின் அடிச்சுவட்டை பின்பற்றிதான் இந்தியாவில் வாழும் பாசிஸ்டுகள் , இஸ்லாத்தின் மீதான  தங்கள் எதிர்ப்பையும் தாக்குதல்களையும் அமைத்துக்கொள்கின்றார்கள்.

அதனால்தான் ஆட்சியில் இருக்கும் மத்திய பிரதேசத்தில் தாடிக்குத் தடை போட்டார்கள் .

 இந்நிலையில் இந்த சோற்றாலடித்தப்பிண்டங்களுக்கும் சொல்லிடும் பெரும் பொறுப்பை நிர்வாண உலகிலிருந்து விடுபட்டு புர்காவின் கண்ணியத்திற்குள் புகுந்திருக்கும் அன்பு சகோதரிகள் சொல்லிட அணிவகுத்து வருகின்றார்கள் .

அவர்களுள் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய சாரபோக்கர் என்ற மாடல் அழகியின் அனுபவம் .அவள் சொல்கின்றாள் 

நானொரு பெண் .
அமெரிக்காவின் மையப்பகுதியில் பிறந்தவள் .

என்னைப்போன்ற பெண்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதே போல் வாழ்ந்தவள் நான் .

வாழ்க்கையின் வசந்தங்கள் அனைத்தையும் அனுபவித்திட வேண்டும் என ஆசைப்பட்டவள்.

நான் வாழ்ந்த பெருநகரில்  எல்லா சுகமும் ஒன்றாய்க் கிடைத்தது .
இவற்றையெல்லாம் இன் கைகளுக்கு எட்டிட செய்ய விற்பனைக்கு என்னுள்  ஒரு பொருள் இருந்தது . அதுதான் என் கவர்ச்சி , என் அழகு!.

இளம் வயது முதலே , நான் என் அழகில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

எண்ணுகைய வெற்றியை என் அழகால் எத்தனை பேர் கவரப்படுகின்றார்கள் என்பதை தெரிந்த கொண்டேன் அளந்தேன்.

நான் மாடல் அழகிகள் வட்டாரத்தில் மகுடங்களை சூட்டினேன் . பணமும் வந்தது. பரபரப்பான விளம்பரமும் கிடைத்தது.

வசதியான வீடொன்றை விலைக்கு வாங்கி " புளோரிடா"வில் குடியேறினேன்.

"மியாமி" என்ற அமெரிக்காவின் கடற்கரை பகுதியை  " தென்  கடற்கரை மியாமி " என்றழைப்பார்கள் .

இந்த பகுதி நான் அடிக்கடி தரிசிக்கும் பூமியாக மாறியது.

ஆமாம்! அங்கேயுள்ள ' சவுத் பீச் அகாடமி ' யின் நடிகைகளுள் ஒருத்தியாக ஆனேன். என் கவர்ச்சியும் என் நடிப்பும் ரசிகர்களை கிளு கிளுக்கச் செய்தது . எனுக்கு பணம் கொட்டியது .

நான் இடைவிடாமல் உழைத்தேன் .

என் வெற்றியை கண்டபலர் என்னிடம் பாடம் பயில வந்தனர் .

நானே ஒரு பயிற்சி கூடத்தை தொடங்கினேன் . நல்ல வருமானம் . நானும் எனது மாணவியரும் அணியும் ஆடையை Dressing in little to nothing குறைந்த ஆடைகளிலிருந்து ஆடையே இல்லாத ஆடை எனலாம்.

வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சி வற்றாத நதியாக ஓடும் என எதிபார்த்தேன், ஆனால் வாழ்க்கையின் யதார்த்தம் வேறாக இருந்தது .

அழகைக் காட்டி அவனியோரை  மகிழ்விப்பதை நான் அவமானம் நிறைந்த செயலாகக் கண்டேன்.
நாட்கள் செல்ல, செல்ல இந்த அருவெறுப்பான எண்ணம் என் சிந்தனையை அதிகமாக ஆக்கிரமித்தது . என்னுள் பல மாற்றங்கள் தென்படத் தொடங்கின.

குடித்து மகிழ்ந்து கிடப்பதை தவிர்க்க சமுதாய பணிகளின் பக்கம் என் கவனத்தைத் திருப்பினேன் . மாற்று சிந்தனை மாற்று மதக் கோட்பாடுகள் என என் கவனத்தைத் திருப்பி என்னுடைய " கவர்ச்சி" வாழ்க்கையிலிருந்து விடுவித்துக் கொள்ள முயற்ச்சிகளை மேற்கொண்டேன் .

இவை எவையுமே என்னுள் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்திடவில்லை . மடி நிறைய பணம்,மனமெல்லாம் வறட்சி .

வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தெரிந்தது .

9/11

இப்படி நான் ஓர் விரக்தியை நெருங்கிக் கொண்டிருந்தது 2001 ல் .

அப்பொழுதுதான் 9/11 என்று சொல்லக்கூடிய இரட்டைகோபுரங்கள் தகர்க்கப்பட்டன .

இஸ்லாம், இஸ்லாம் என்ற பேச்சுகள் எங்கணும் எழுந்தன .நவீன சிலுவைப்போர் என்ற பேச்சும் எழுந்தது .

"இஸ்லாம் " என்ற சொல் என்னுள் ஆழமாக பதிந்தது .இஸ்லாம் என்றவுடன், பெண்களை அடிப்பது,அடிமைப்படுத்துவது.பெண்களின் மேல் ஒரு சின்ன குடிசையை போட்டு மூடி அவர்களை வெளி உலகத்திலிருந்து  துண்டித்து விடுவது, எதை எடுத்தாளும் ஹராம் ஹராம் எனக் கூறுவது, ஈவிரக்கமற்ற தீவிரவாத செயல்களில் இறங்குவது இவைதாம் எங்களுக்குப் புகட்டப் பெற்ற பாடம்.

நான் இஸ்லாத்தின் இந்தப் போதனைகளுக்கேதிராகப் போராடி பெண்களுக்கு ஒரு சிறந்த உலகை உருவாக்கித் தந்திட வேண்டும் என்ற சிந்தனை உடையவள் .

 இதற்காக சில இயக்கங்களுடன் இணைந்து போராடி இருக்கின்றேன் .

ஆனால் 9/௧௧ என் சிந்தனை ஓட்டத்தை திசை திருப்பிற்று .

ஒரு நாள் அந்த புனித நூல் என் கண்களில்பட்டது .

இந்த நூலை பற்றித்தான் என்னிடம் அடிக்கடி , வாள் கத்திப்போர் , வன்முறை , தீவிரவாதம் என்றெல்லாம் போதிக்கும் எனச் சொல்லிகொண்டிருந்தார்கள் .

அத்துணை விமர்சனத்திற்கு உள்ளான அந்த நூலை வாங்கிப் படித்தால் என்ன? என்றது என் உள்ளம்.

வாங்கினேன் படித்தேன் அதுதான் அல்குர்ஆன் மஜீத் என்ன ஆச்சரியம் .

அதன் நடை , அது உலகையும் அதிலுள்ள இதரபடைப்புகளையும் அணுகும் முறை  இவற்றால் ஈர்க்கப்பட்டேன் நான்.

உலகைப்படைத்தவனும் ,படைக்கபட்டவற்றிற்கும் இடையே உள்ள உறவுகளை அது பார்த்திடும் விதம் ,சித்தரிக்கும்  கூர்மை இவை என்னுள் ஆழமான பாதிப்புகளை உண்டாக்கின .

ஆத்மாவையும் மனதையும் நெகிழச்செய்யும் ஒரு பெரும் பொக்கிஷமாக அல்குர்ஆனை நான் கேட்டேன் .

இனியொரு கணமும் தாமதிக்காமல் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது என முடிவு செய்தேன்.

நடைமுறை வாழ்க்கையில் இஸ்லாத்தை ஏற்று வாழும் பெண்ணாக என்னை ஆக்கிக்கொண்டேன் .நினைத்தப்படி வாழ்ந்திட வேண்டும் என்ற வேகம் என் தனி சொத்து .உடனேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் .

பெண் விடுதலை மனித உரிமைகள் , எல்லோருக்கும் எல்லாம் ,கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்ற முழக்கங்களோடு வாழ்ந்த நாட்களை விட இந்த வாழ்கை சிறந்ததாக இருந்தது ..ஒரு இலக்கை நோக்கி சென்றது வாழ்கை .

புர்கா ஒன்றை வாங்கி அணிந்தேன் .

முழுமையாக தன்னை மறைத்து கொண்ட பெண்ணாக நான் நடந்து சென்ற வீதிகளிலே நடந்து சென்றேன் .

இந்த வீதிகளில்தான்,நான்,மிகக் குறைந்த ஆடைகளை அணிந்தவளாக நடந்து சென்றேன் . அப்போது அத்தனை பேரின் கண்களும் என் அங்கங்களையே துளாவின.

உண்மையை சொன்னால் ஆபோழுது பார்வையால் மக்கள் என்னை சிறை வைத்தார்கள் .

அந்த சிறை உடைந்தது .உடைகள் என்னை மறைத்தது உள்ளங்குளிர்ந்தது.

நான் முழுமையாக விடுதலை அடைந்தேன் .

வேட்டைக்காரன் ,வீடையாடும் விலங்கை தேடி அது கிடைத்தால் அப்படி பாய்வானாவ் அதே போல் தான் என் மீது பார்வைகளை ப்பய்ச்சினார்கள் முன்னால்.

இப்போது அவர்கள் என் மீது மிகவும் கண்ணியமான பார்வைகளையே செலுத்தினார்கள் .

ஒரு நல்ல முஸ்லிமை நான் திருமணம் செய்துக்கொண்டேன் .நான் ஹிஜாபைதான் அணிந்து வந்தேன் .

அதாவது முகத்தை தவிர மீதிபகுதிகளை மறைக்கும் ஆடை (புர்கா)யைத்தான் அணிந்து வந்தேன் .

இப்போது என் கவனம் நிக்கப் மீது பாய்ந்தது . அதாவது இரண்டு கண்களை தவிர மீதிபகுதிகளை மறைக்கும் ஆடை .

என் கணவரிடம் நான் நிக்காப் அணிந்திட விரும்புகிறேன் என்றேன் .

அவர் என் என்றார் 

நான் அல்லாஹ்வின் திருப்தியை அதிகமாக பெற்ற பெண்ணாக ஆகிட விரும்புகின்றேன் என்றேன் .

அவர் சம்மதம் தெரிவித்தார் . நான் நிக்காப் அணிந்தேன் .

நான் நிக்காப் அணிந்திட தொடங்கியவுடன் கண்டன கணைகள் என்னை நோக்கி பறந்தன .

அத்தனியும் " நான் பிற்போக்குவாதிகளின் கூடத்தில் சேர்ந்துவிட்டேன். அடிமைத்தனத்தை அட்டியின்றி ஏற்றுக்கொண்டேன் "என்றே என்னை பழித்தன.

இப்படி வசைகளை பொழிந்தவர்கள் . அரசியல்வாதிகள் ,வாட்டிகன் ஏன்ற கிருஸ்தவ தலை பீடத்தை சேர்ந்த மத குருக்கள் . கட்ட்ப்பாடற்ற சுதந்திரம் வேண்டும் என்ற வாதத்தை முன் வைப்போர்,மனித உரிமை குழுக்கள் என்பவர்களாவர் .

இந்த விவகாரத்தில் மேலை நாட்டவர்களிடம் மிகவும் நயவஞ்சகம் நிறைந்த ஒரு போக்கையே கண்டேன் .

பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் அவர்கள் தாங்கள்விரும்பும் ஆடையை அணிந்திடும் உரிமையை வழங்கிட வேண்டியதுதானே ? மறுப்பதேன்?.

அல்லாமல் ஒருப்படி மேலே போய் நிக்கப் அணியும் பெண்களை வேலைகளில் சேர்க்கவும் மறுக்கின்றார்கள் .

துனிசியா,மொரோக்கோ ,எகிப்து ஆகிய கீழை நாடுகளிலும் பிரான்ஸ் ஹாலந்த் ,பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இதுவே நடக்கின்றது .

இந்த நாடுகளில் நிக்காப் அணிந்த பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை எதிரதாக வேண்டும். அதனால் நான் தொடர்ந்து பெண்களின் உரிமைக்காக போராடும் பெண்ணாக இருந்து வருகின்றேன் .

நான் இப்போது நடக்கும் பெண்களின் இயக்கத்தின் வழி பெண்கள் தாங்கள் கணவனுக்கு இயன்றமட்டும் உதவியாக இருங்கள் என உபதேசிக்கிறேன் .
பெண்கள் தங்களது குழந்தைகளை இஸ்லாம் காட்டிய வழியில் வளர்த்திட வேண்டும் என அறிவுரை பகர்கின்றோம் . இயன்ற போதெல்லாம் உதவி செய்கின்றோம் . இதன் மூலம் அந்த குழந்தைகளை இஸ்லாம் என்ற ஒளியை இருட்டில் இருப்பவர்களுக்கெல்லாம் எடுத்து செல்பவர்களாக ஆவார்கள் .

ஹிஜாபோ நிக்காபோ அணியாத பெண்களிடம் இதை அணியுங்கள் இறை நெருக்கத்தையும் , திருப்தியையும் பெறுங்கள் எனப் பிரச்சாரம் செய்கின்றோம் .

ஏனெனில் மேலை நாட்டு பெண்களுக்கு ஹிஜாபோ நிக்காபோ அணிவதால் கிடைக்கும் கண்ணியத்தை பற்றியோ உயர்வை பற்றியோ தெரியாது . அவர்களுக்கு உரிய உபதேசம் போய் சேர்ந்தால் அவர்கள் அந்த ஆடைகளை அணிகின்றார்கள் .

இன்று மேலை நாடுகளில் ஹிஜாப் அல்லது நிக்காப் அணிபவர்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுகொண்ட பெண்கள்தாம் .

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்களின் இல்லங்களில் .அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை ஏற்றுக்கொள்ளவில்லை . அதனால் அவர்கள் ஹிஜாப் அணிவதையோ , நிக்காப் அணிவதையோ ஏற்றுக்கொள்ளவில்லை முடிந்த மட்டும் தடைகளை வெட்டிப் போடுகிறார்கள் .

ஆனாலும் அந்த பெண்கள் ஹிஜாப் அணிவதையோ நிக்காப் அணிவதையோ விட்டுவிடுவதில்லை இதை அவர்கள் தாங்கள் உரிமை என பிரகடனபடுத்துகின்றார்கள் .

நேற்று வரை ஆபாசமே எனது ஆடை .

அந்த ஆடை என்னை , நல்ல ஒழுக்கங்களிருந்தும் .ஆன்மீக சுகங்கலிருந்து விடுதலை அடைய செய்தது .நான் நடைபிணமாக வாழ்ந்தேன் .

இன்றைய நாட்களில் நிக்கப் பெண் விடுதலையின் புதிய அடையாளம் .

(Source- Sara Bokker srae@march for justice.com )

இஸ்லாத்தை பரப்பும் தனது புதிய இயக்கத்தை "நீதிக்கான நெடும் பயணம் " என்ரழைக்கின்றார் சாரா 
                                                                           -------எம்.ஜி.எம்.------
                                                                                (வைகறை வெளிச்சம் ஆசிரியர் )

நன்றி : வைகறை வெளிச்சம் ( மாத இதழ்)15 comments:

Riyas said...

சிறப்பான பதிவு நண்பரே..

//இந்த விவகாரத்தில் மேலை நாட்டவர்களிடம் மிகவும் நயவஞ்சகம் நிறைந்த ஒரு போக்கையே கண்டேன் .
பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் அவர்கள் தாங்கள்விரும்பும் ஆடையை அணிந்திடும் உரிமையை வழங்கிட வேண்டியதுதானே ? மறுப்பதேன்?.//

சரியான கேள்வி.

VANJOOR said...

சுட்டிகளை சொடுக்கி படித்து சிந்திப்போமா?

1.>>> இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன் <<<

2. >>> ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்!-ஜெஸிலா <<<<


3. >>> இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்? <<<


4. >>>
25. "நச்"பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா?
<<<


5.>>>
24. "நச்"முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?
<<<


6. >>>
பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்
<<<


7.>>> போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு சிந்தி . எது பெண்ணுரிமை?

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிக அழகான கட்டுரை. மாஷா அல்லாஹ். பகிர்ந்ததற்கு ஜசாக்கல்லாஹ்..

ஒரே ஒரு மாற்று கருத்து மட்டும் //அவர் என் என்றார்
நான் அல்லாஹ்வின் திருப்தியை அதிகமாக பெற்ற பெண்ணாக ஆகிட விரும்புகின்றேன் என்றேன் .//

இதில் நிக்காப் அணிந்தால் இறைவானின திருப்தியை அதிகம் பெற்றவராக ஆகலாம் என்பது மாதிரியான அர்த்தம் வருகின்றது. இது தவறு. இஸ்லாம் கூறுவது ஹிஜாப் மட்டுமே. அதேநேரம், ஒரு சகோதரி தாமாக விரும்பி நிக்காப் அணிந்தால் அது அவருக்கும் இறைவனுக்குமான விஷயம். இதில் தலையிட ஒன்றுமில்லை. ஆனால், நிக்காப் அணிந்தால் இறைவனின் திருப்தியை அதிகம் பெறலாம் என்பது தவறு...

மீண்டும் ஜசாக்கல்லாஹ்...

உங்கள் பணி தொடர பிரார்த்திக்கின்றேன்..

வஸ்ஸலாம்,

நட்புடன் ஜமால் said...

மாஷா அல்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்தில் இருப்பவர்களும் இதனை விளங்கிட வல்ல ஏகன் அல்லாஹ் அருள் புரியட்டும் - ஆமின்.

ஹைதர் அலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

பகிர்வுக்கு நன்றி இது போன்ற பெண்மனிகள் மேற்குல நாட்டில் இஸ்லாத்தை தொடர்ச்சியாக ஏற்றுக் கொள்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்

பார்க்க: (புத்தகம்) பேறு பெற்ற பெண்மனிகள்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அருமயான பகிர்வு. மிக்க நன்றி சகோ.

ஆனால்,

///நான் ஹிஜாபைதான் அணிந்து வந்தேன் .
அதாவது முகத்தை தவிர மீதிபகுதிகளை மறைக்கும் ஆடை (புர்கா)யைத்தான் அணிந்து வந்தேன் .
இப்போது என் கவனம் நிக்கப் மீது பாய்ந்தது . அதாவது இரண்டு கண்களை தவிர மீதிபகுதிகளை மறைக்கும் ஆடை .
என் கணவரிடம் நான் நிக்காப் அணிந்திட விரும்புகிறேன் என்றேன் .
அவர் என் என்றார்
நான் அல்லாஹ்வின் திருப்தியை அதிகமாக பெற்ற பெண்ணாக ஆகிட விரும்புகின்றேன் என்றேன் .///

---இந்த இடத்தில் அல்லாஹ்வின் கட்டளைப்படி ஹிஜாப் அணிந்து, தன் சுய விருப்பப்படி நிகாப் அணியாமல் இருக்கும் பெண்கள் அல்லாஹ்வின் திருப்தியை பெற மாட்டார்கள் என்பது போல இருக்கிறது..!


//பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் அவர்கள் தாங்கள்விரும்பும் ஆடையை அணிந்திடும் உரிமையை வழங்கிட வேண்டியதுதானே ? மறுப்பதேன்?.//---இது சரியான பாயின்ட்.


அதேநேரம், ஆள் ஐடி அடையாளத்தேவைக்காக முகத்தை பார்க்க ஒரு செக்யுரிட்டி தேவைக்காக பணியிலிருக்கும் காவலர் கேட்டால் நிகாபை நீக்கித்தான் ஆக வேண்டும்.


இங்கே //..தெரியக் கூடியதைத் தவிர...அல் குரான் 24:31// என்று அல்லாஹ் அனுமதித்ததை 'காட்ட மாட்டேன்' எனும்போதுதான் எல்லா பிரச்சினையும் வருகிறது..!


'முழு முகமும் வெளியே தெரியக்கூடிது'தான் என்பது சில ஹதீஸ்களில் {முஸ்லிம் (1612), புகாரி (6228)} இருந்து விளங்கும்.

சிராஜ் said...

சகோ அதிரை இக்பால்,
அற்ப்புதமான பதிவு. நிகாப் பற்றி ஆசிக் சகோஸ் கருத்துக்களுடன் நானும் உடன் படுகிறேன்.
தொடரட்டும் உங்கள் ஆக்கப் பூர்வமான பணிகள், இன்ஷா அல்லாஹ்.

Adirai Iqbal said...

@ரியாஸ்
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Adirai Iqbal said...

@ரியாஸ்
//அற்ப்புதமான பதிவு. நிகாப் பற்றி ஆசிக் சகோஸ் கருத்துக்களுடன் நானும் உடன் படுகிறேன்.//

நானும் உடன்படுகிறேன்

Adirai Iqbal said...

@நட்புடன் ஜமால்

இன்ஷா அல்லாஹ் . தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Adirai Iqbal said...

//இங்கே //..தெரியக் கூடியதைத் தவிர...அல் குரான் 24:31// என்று அல்லாஹ் அனுமதித்ததை 'காட்ட மாட்டேன்' எனும்போதுதான் எல்லா பிரச்சினையும் வருகிறது..!


'முழு முகமும் வெளியே தெரியக்கூடிது'தான் என்பது சில ஹதீஸ்களில் {முஸ்லிம் (1612), புகாரி (6228)} இருந்து விளங்கும்.//

சகோ முஹம்மது ஆஷிக் தங்களுடைய கருத்தில் முழுவதாக நான் உடன்படுகிறேன்

Adirai Iqbal said...

சகோ ஹைதர் அலீ

அலைக்குமுஸ்ஸலாம் .

தங்களது கருத்திற்கு நன்றி

விமர்ச்சகன் said...

Excelant Article. Keep It Up iqbql..

அர அல said...

சிறப்பான பதிவு brother

JAAS said...

ஆரோக்யமான அவசியமான விவாதம்.
எல்லாம் வல்ல,எங்கும் நிறைந்து இருக்கும்,பேரருலாளன் அல்லாவின் ஆணை படி நடப்போம்.

Post a Comment