test

Monday, February 27, 2012

செச்சன்யா : ஜோசப் ஸ்டாலின் =ஹிட்லர் :பகுதி 2

                                                       -- மு . குலாம் முகம்மது ( ஆசிரியர் : வைகறை வெளிச்சம்  )
பாகம் 1 படிக்க இங்கே சொடுக்கவும் 

பல குடும்பங்கள் பிரிந்தன .அவர்கள் மீண்டும் சேரவே முடியவில்லை .அவர்கள் குடியமர்த்தப்பட்ட இடங்களில் கடுமையான சட்டங்களை காட்டி அவர்களை அங்கேயும் தண்டித்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள் .இத்தனை கொடுமைகளுக்கும் பதிலாக வளமான வாழ்கையை வாக்களித்தார்கள் ரஷ்யர்கள். அனாலும் தாங்கள் கொண்ட இறை நம்பிக்கையில் எள்முனை அளவுகூட தளர்வைக் காட்டவில்லை செச்சன்யா முஸ்லிம்கள் . இதை ரஷ்ய வரலாற்று ஆசிரியர் அலெக்சாண்டர் சோலிங்ஸ்டின் இப்படி வர்ணித்தார்:



" உலக வரலாற்றில் ஒரு சமுதாயம் தங்களின் சொந்த இடங்களிலிருந்து பிடிங்கி வீசப்பட்டது. கொடுமையும் குரூரமும் நிறைந்த பயணங்களுக்கு  ஆட்படுத்தப்பட்டது . பயணத்தில் பெற்ற குழந்தைகளையும் பேணிவளர்த்த பெற்றோர்களையும் நல்லடக்கம்கூட செய்ய முயாமல் பிணங்களாக  தூக்கி வீசவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டது . அந்த சமுதாயத்தை இறுதியாக இறக்கிவிட்ட இடங்களிலும் அவர்களை நிம்மதியாக வாழவிடவில்லை.


சிறைச்சாலை , சிரச்சேதம் ஆகியவற்றால் அழிக்கப்பட்டது. அத்தனை கொடுமைகள், கொலைகள் இவற்றிற்கு இடையேயும் தாங்கள் கொண்ட கொள்கையை  விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தது அந்த சமுதாயம்.கொடுமைகளும் கொடூரங்களும் தங்களை தாக்கிடும் போதெல்லாம் அந்த சமுதாயம் கொள்கையில் உறுதியை காட்டியதே அல்லாமல் சிஞ்சிற்றும் விட்டுத்தரவில்லை 


இந்த நிலையிலும் தங்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தியவர்களிடம் அவர்கள் யாசிக்கும் நிலையில் பேசியது இல்லை. தங்களுடைய உணர்வில், கொள்கையில் அவர்கள் எப்போதும் உடைந்து போகவில்லை. ரஷ்யாவின் பயங்கரப்படைகள் அவர்கள் முன்னே அணிவகுத்து வந்தபோது, நெஞ்சை நிமிர்த்தி எதிர்ப்பை  காட்டினார்களே தவிர  வளைந்து கொடுத்து வாழ விரும்பவில்லை . அவர்களை தொடர்ந்து 30 வருடங்களாக கொடுமைப்படுத்திய அரசுகள் என்னென்னவோ செய்து பார்த்தன. ஆனால் அவர்கள் அந்த குரூர ஆட்சியாளர்களின் சட்டங்களை ஒரு போதும் அவர்கள் மதிக்கவில்லை.


அவர்கள் முன்னே அணிவகுத்து வந்த ராணுவங்களும் கூட அந்த சட்டங்களை மதிக்க வைக்க முடியவில்லை . அந்த சமுதாயம்தான் செச்சன்யா முஸ்லிம்கள் . வரலாற்றின் பக்கங்கள் இன்றும் அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கின்றன . வளைந்து கொடுக்காத ஒரு வரலாற்றிற்கு சொந்தக்காரர்களாய் அந்த முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் "
                        source: THE GULAG  ARCHIPELAGO 


1953 இல் கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின் இறந்தான் . அதுவரை செச்சன்யா முஸ்லிம்கள் நிம்மதியற்ற வாழ்கை அநீதி ,அவமானம் மரணம் இவற்றையே சந்தித்தார்கள். ஸ்டாலினுடைய மரணத்திற்கு பின்னர் செச்சன்யா முஸ்லிம்கள் தாங்கள் மீண்டும் தங்களுடைய சொந்த இடங்களுக்குச் சென்று குடியேற அனுமதி  அளிக்க வேண்டும் என போராட தொடங்கினார்கள் .


அத்தோடு சோவியத் அரசின் கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின் செய்தது கொடுமை என்பதை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் . நிவாரணங்களுக்கு  ஏற்பாடு செய்ய வேண்டும் என அழுத்தமாகப் போராடினார்கள் . இவர்களின் இடைவிடாத போராட்டத்தின் பயனாக 1956 இல் கம்யூனிச கட்சியின் 20 ஆவது காங்கிரஸ் -மாபெரும்  கூட்டம் சோவியத் அதிபர் குருச்சேவ் செச்சன்யா மக்களுக்கு இழைக்கப்பட்டது கொடுமைதான் என்பதை  ஒப்புக்கொண்டார்,


இந்த தவறை அவர் ஏற்றுக்கொண்டவுடன் செச்சன்யா மக்கள் தங்களுடைய சொந்த இடம் நோக்கி பயணம் செய்தார்கள். இந்தப்பயனத்தின் போது புதைக்கப்பட்ட தங்கள் சொந்தபந்தங்களின் எலும்புகளை தங்களுடன் எடுத்துவந்தார்கள். அவற்றை தங்கள் மூதாதையர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் புதைக்க வேண்டும் என விரும்பினார்கள் .


இவர்கள் செச்சன்யா வந்து சேர்ந்தபோது தங்களுடைய குடியிருப்புகள் எல்லாம் ரஷ்ய மக்களுக்கு தாரை வார்த்து தரப்பட்டிருப்பதை பார்த்தார்கள் . ஆகவே அங்கே இன்னொரு போராட்டத்தை அவர்கள் தொடங்க வேண்டியதாயிற்று .அவர்கள் அங்கு வாழ்ந்தபோது ஏற்படுத்தி வைக்கபட்டிருந்த  இஸ்லாமிய அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. இடிக்கப்பட்டைவகள் அல்லாமல் 800 பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டு கிடந்தன . 400 மார்க்க கல்லூரிகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டிருந்தன .பெரும்பாலான பள்ளிகளும் மார்க்க கல்லூரிகளும் மியூசியங்களாக மாற்றப்பட்டிருந்தன . செச்சன்யா முஸ்லிம்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்தார்கள் .


1978 க்கு பிறகுதான் அதாவது அவர்கள் நாடு கடத்தப்பட்டு 34 வருடங்களுக்கு பின்னரே அவர்களால் கௌகாஸ் பகுதில் 40 பள்ளிகளை திறக்க முடிந்தது . அதுபோது அவர்களிடம் 300 உலமாக்கள் மட்டும்தான் உயிருடன் இருந்தார்கள் .


 செச்சன்யா முஸ்லிம்களிடம்  ஒரு பழக்கம் இருந்தது அவர்கள் தங்களுடைய வரலாற்றை நினைவாற்றல் வழியாகவே பாதுகாத்து வந்தனர் . முழுமையாக வரலாறு தெரிந்த  ஒருவர் தனக்கு தெரிந்த வரலாற்றை தன்னுடைய சந்ததியிடம் ஒப்படைப்பார் . இப்படி அவர்களுடைய வரலாறும் கலாச்சாரமும் பாதுக்காக்கப்பட்டு வந்தன .


 ஆனால் சோவியத் அதிபர் கம்யூநிசதலைவர் ஜோசப் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்த வரலாற்று தடம் தடைப்பட்டது . இந்த வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் செச்சன்யா மக்கள் மீண்டும் உழைகலானார்கள் . இந்நிலையில் செச்சென்ய மக்களின் இடைவிடாத போராட்டத்தினால் அவர்களுக்குத் தன்னாட்சி உரிமை கிடைத்தது . இதனை செச்சென் இங்குஷ் தன்னாட்சி போது உடமை குடியரசு என ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசு அழைத்தது .


அதன்பிறகு அவர்கள் இன்று வரை  தங்களுடைய மறு வாழ்வை , தாவது தங்கள் வாழ்கையை புனரமைத்து கொள்ளும் பணிகளில் ஈடபட்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்கை புனரமைப்பு என்பது அவர்களை பொறுத்தவரை இஸ்லாமிய கலாச்சாரம் , பண்பாடு மற்றும் தங்களுடைய பூர்வீக  வரலாறு ஆகியவற்றை மீண்டும் கட்டி எழுப்புவதுதான் .


 செச்சன்யா முஸ்லிம்களின்  தனித்தன்மை என்னவென்றால் அவர்கள் தங்களுடைய சொந்த வாழ்கையை வளப்படுத்திட விரும்புவதை விட இஸ்லாமிய ஒழுக்கங்களையும் இஸ்லாமிய வாழ்க்கையையும் கட்டி எழுப்புவதையே அதிகமாக விரும்புகின்றார்கள் .அவர்களை பொறுத்தவரை வாழ்கையின் அனைத்து பகுதிகளை விட இறை நம்பிக்கையும் இஸ்லாமிய வாழ்கை முறையும்தான் முக்கியம் .

1991 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தான் முஜாஹிதுகளின்  கைகளில் மரண அடி வாங்கியது . ஆப்கானிஸ்தான் முஜாஹிதுகளிடம் வாங்கிய அடியில் சோவியத் ரஷ்யா சுக்கு நூறானது . யூ.எஸ்.எஸ்.ஆர். என்ற ஒருங்கிணைந்த ரஷ்யா நொறுங்கி சோவியத் போது உடமை நாடுகள் என்றழைக்கப்பட கூடிய காமன் வெல்த் நேஷன்ஸ் என்றானது .

சோவியத் ரஷ்யாவிலிருந்து எஸ்டோனியா,லித்வேனியா ,லாத்வியா,ஜார்ஜியா,உக்ரைன் ஆகிய மாநிலங்கள் விடுதலை அடைந்துவிட்டதாக அறிவித்து தனி குடியரசாயின . இவையெல்லாம் தனி அரசுகள் என்று ரஷ்ய அரசும் அங்கீகரித்தது


ஆனால் செச்சன்யாவின் எதிர்காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை .இத்தனைக்கும் செச்சன்யா, ரஷ்யர்களால் உதுமானிய பேரரசுடமிருந்து ,தனியாக பிரித்து எடுத்து ரஷ்யாவுடன்  இணைக்கப்பட்ட ஓர் இடமாகும். செச்சன்யா மற்ற மற்ற மாநிலங்களை போல் தானும் தனி குடியரசாக மாறியதாக அறிவித்தது . அதே நேரத்தில் மற்ற மாநிலங்களை போல தங்களுடைய விடுதலையையும் அங்கீகரிக்க வேண்டும் என கோரியது .


இதனை  கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட ரஷ்யா பின்னர் தனது முடிவை மாற்றிக்கொள்வதாக அறிவித்தது . டிசம்பர் 10 ஆம் நாள் 1994 ஆம் ஆண்டு சோவியத் அதிபர் போரிஸ் எல்ஸ்டின் செச்சன்யா மீது படை எடுத்தார் .படைகள் கௌகாஸ் பகுத்திக்கு பரவின விமானப்படைகள் காரணமின்றி கௌகாஸ் பகுதி மற்றும் செச்சன்யா பகுதிகளில் குறைந்த சக்தி உள்ள அணு குண்டுகளையும் கொத்து வெடி குண்டுகளையும் வீசின . ரஷ்யாவின் இந்த அடாத செயலால் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் பின மலைகளாக குவிந்தார்கள் .


தங்களுடைய தன்னாட்சியை அங்கீகரித்த ஒரு நாடே எந்த ஆயுதமும் இல்லாத தங்கள் மீது குண்டு மழைகளை பொழிவதை கண்ட முஸ்லிம்கள் நிலைகுலைந்தார்கள்.பின மலைகளாக குவிவதை தவிர வேறு வழி தெரியவில்லை .


ஆனால் அதே காலக்கட்டத்தில் ரஷ்யாவிடமிருந்து பிரிந்து போன பிற மாநிலங்களின் மீது ரஷ்யா படை எடுக்கவில்லை .குண்டு மழைகளை பொழியவில்லை . காரணம் அங்கு வாழ்பவர்கள் முஸ்லிம்கள் இல்லை . செச்சன்யா மீது குண்டு மழை பொழிந்ததற்கு காரணம் அங்கு வாழ்பவர்கள் முஸ்லிம்கள் .


ரஷ்யாவின் இந்த மிருக பலத்திற்கு எதிராக செச்சன்யா முஸ்லிம்கள் கையில் கிடைத்ததை கொண்டு போராடினார்கள் . ரஷ்ய படைகளை விரட்டி அடிப்பதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள் . ரஷ்ய படைகள் பின்வாங்கின .


1994 இல் தொடங்கிய இந்த போர் 1996 இல் முடிந்தது . பல்லாயிரக்கணக்கான் முஸ்லிம்கள் தங்களுடைய உயிரை தந்து ஷஹீதான பிறகு செச்சன்யா முஸ்லிம்கள் தங்களுடைய உடமைகளையும் வீடுகளையு இழந்த பிறகு 1996 இல் ஒரு முடிவு ஏற்பட்டது . ரஷ்ய படைகளின் தாக்குதலில் ஒரு தளர்வு ஏற்பட்டது .


இந்த அமைதியும் அதிக நாள் நீடிக்கவில்லை .1999 ஆம் ஆண்டு அப்போதைய ரஷ்யாவின் அதிபர் புடின் செச்சன்யா மீது மீண்டும் படை எடுப்பு நடத்தினார் .
வழக்கம் போலவே எந்த காரணமும் சொல்லவில்லை . அந்த முஸ்லிம்களை சீரழித்தார் .சின்னாபின்னாமாக்கினார் .காரணம் கேட்டபோது தீவிரவாதிகளை தேடுவதாக  கூறினார் . யார் தீவிரவாதிகள் என கேட்டபோது "ரஷ்ய அரசுக்கு எதிராக சிந்திப்பவர்கள் " எனக்கூறினார் .


செச்சன்யா முஸ்லிம்களிடம் தாங்களே அங்கீகரித்த விடுதலையையும் சுதந்திரத்தையும் மீறி அந்த மக்கள் மீது இப்படி தொடர்ந்து வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகிறார்கள் .இளைஞர்களையெல்லாம் சித்திரவதை கூடங்களுக்கு இழுத்து செல்கிறார்கள் . அந்த இளைஞர்களின் பெற்றோர்கள் பிணை பணம் செலுத்தினால் மட்டுமே அந்த இளைஞர்களை விடுவிக்கின்றார்கள் . இல்லையேல் , இளைஞர்களை தடம் தெரியாமல் ஆக்கி விடுகின்றார்கள் . இளம் பெண்களையும் இதே போல் தீவிரவாதிகள் ரஷ்ய அரசுக்கு எதிராக போராட சிந்திப்பவர்கள் எனக்கூறி சிறப்பு முகாம்களுக்கு அழைத்து செல்கின்றார்கள் ,அவர்கள் காப்பாற்றபடவேண்டும் என்றால் , அவர்கள் கற்பழிக்கப்பட கூடாதென்றால் அதற்கும் அவர்களின் பெற்றோர்கள் பிணைப்பணம் தந்தாக வேண்டும்.


செச்சன்யாவில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக உலக முஸ்லிம்கள் குரல் கொடுத்த போது , கொடுத்த சுதந்திரத்தை ஏன் பறிக்கிறீர்கள்  என ஐக்கிய நாடு சபை உட்பட அனைத்து உலக அமைப்புகளிலும் செச்சன்யா விவகாரத்தை ஒரு விவாதமாக ஆக்கியபோது ரஷ்யா ஒரு குருட்டு காரணத்தை சொன்னது . அது, செச்சன்யாவின் சுதந்திரத்தை பறிக்கவில்லை என்பதே ஆகும்.


இதை சொல்லிக்கொண்டே 2000 ஆவது ஆண்டில் தனக்கு வேண்டிய , இஸ்லாத்தை வெறுக்கின்ற , கம்யூனிஸ சிந்தனை கொண்ட அகமது கடிரோவ் என்பவரை செச்சன்யாவின் பிரதம் அமைச்சர் என ஆட்சியில் அமர்த்தியது . இவருடைய ஆட்சியை பாதுகாப்பதற்காக ரஷ்ய படைகள் அவரின் வேண்டுதலின் பேரில் செச்சன்யாவில் இருப்பதாக போய் சொன்னது ரஷ்யா.


உடனே ஐக்கிய நாடு சபை போன்ற அமைப்புகள்  கைகட்டி வாய்பொத்தி நின்றன . அகமது கடிரோவ் என்பவர் இறந்த பின் அவரது மகன் ரம்ஜான் கடிரோவ் என்பவர் ரஷ்யர்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்டார்  .ஆனாலும் செச்சன்யா முஸ்லிம்கள் ரஷ்ய படைகளுக்கு எதிரான தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள் .


ஃ பாலஸ்தீன் ,ஈராக் , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா செய்யும் கபளீகரங்களை போல்தான் செச்சன்யா,இங்குஷ் ஆகிய இடங்களில் ரஷ்யா செய்து வருகிறது . இதை எதிர்த்து அந்த மக்கள் தங்களுடைய போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள் .


இப்படி அல்லல்படும் செச்சன்யா முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் நாளாக உலக செச்சன்யா நாள் பிப்ரவரி 23 பயன்படுத்தப்பட வேண்டும் . செச்சன்யா முஸ்லிம்களின் இந்த அவலங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் முஸ்லிம்கள் எடுத்து செல்ல வேண்டும் .











No comments:

Post a Comment