test

Wednesday, February 1, 2012

"இந்து "மதமா ?!-தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களா ?-பாகம் 2

முதலாம் பாகத்தில் இந்தியாவில் குடியேறிய இனங்களை பற்றி பார்த்தோம் . அவர்கள் பின்பற்றிய மதங்கள் எவற்றிர்கும் இந்து என்ற பெயர்  வழங்கப்பட்டிருக்கவில்லை மாறாக அவர்களின் இனங்களின் பெயரிலேயே அவர்களின் மதங்கள் பின்னர் வரலாற்று ஆய்வாளர்களால் அழைக்கபெற்றது .


 ஆரியர்களின் படையெடுப்பும் சாதீய பாகுபாடுகளும் 

 சுந்தர்லால் சாகர் ஆதி இந்தியாவை குறித்த விஷயங்களில் அறிஞராக விளங்குகிறார் . இவர் " வட இந்தியாவிலுள்ள திராவிடர்கள் ஆரியர்களின் வருகைக்கு முன்னாள் தங்களுக்கிடையே ஜாதி வேற்றுமை இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள் என்கிறார் .(Sunder Lal Sagar _Hindu Culture and Caste system in India _Uppal Bokk store -delhi -p 2-5)

 ஆரியர்களின் ஆக்கிரமிப்பு நிகழும்போது இந்தியாவில் பல இனங்கள் சிதறி கிடந்தன .

கி பி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இரானிய ஆரியர்களை விட்டுப்பிரிந்து பெருமளவில் நாடோடிகளாக மாறிவிட்டவர்களே இந்தியாவிற்கு வந்த ஆரியர் இனம் .   இவர்கள் தங்களது சொந்த நாடான இரான்வேஞ்சியிலிருந்து (இது இன்று ரஷ்யாவிலுள்ள துருக்கிஸ்தான் ) புறப்பட்டு ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு வந்தார்கள் (D.P .Mishra -Studies in the proto History of India _ Orient Longman -Delhi 1971 p.98). அதே சமயம் இரானிய ஆரியர்கள் ஈரானில் நிரந்தரமாக தங்கிவிட்டனர் . இப்படி ஆரியர்கள் கிழக்கு நோக்கி புறப்பட்டு பூர்வீக குடிகளான திராவிடர்களோடு சண்டையிட்டு அவர்களை கொன்று அல்லது அவர்களை அடிமைகளாக்கி பரவினர் . இவ்வாறு மெல்ல மெல்ல சிந்து சமவெளியின் கிழக்கில் சென்று குடியேறினார்கள் . கி.மு.1400 முதல் 1000 வரையுள்ள காலத்தில் வட இந்தியாவை முழுமையும் ஆக்கிரமித்ததுகொண்டுவிட்டார்கள் .

  இந்தியாவின் மீது படையெடுத்த ஆரியர்களின் குதிரைப்படைக்கு முன்னாள் அதுவரைக்கும் குதிரையை கண்டிராத திராவிடர்கள் தோற்றுப்போனார்கள் .

அடிக்கடி பட்டணங்கள் அழிக்கப்பட்டது பற்றி ரிக்வேதத்தில் காணக்கிடைக்கிறது . யுத்த தேவன் இந்திரா " பட்டனங்களை அழிப்பவன் " என்ற பொருளில் 'புரம்தரா ' என்றழைக்கபட்டான். இதே கருத்தில் அக்னி கடவுள்களும் பட்டனங்களை தீயிட்டு அழிக்கும் வல்லமையுடைய கடவுள் என்றே அதிகமாக குறிப்பிட படுகிறது .இதிலிருந்து அதிகமான திராவிடர்களின் நகரங்களை தீயிட்டு அழித்தவர்கள் ஆரியர்கள் அறியலாம் . அதுவே தவிர்க்க இயலாத உண்மையும் கூட (A.L.Basham - A Cultural History of India). புதைபொருள் ஆராய்ச்சியாளர் மிஸ்ராவும் இக்கருத்தையே கொண்டிருக்கிறார் .

வீலர் , இவர் சிந்து சமவெளி நாகரிகத்தின் முதன்மையான ஆராய்ச்சியாளர் .இவர் கூறுவது கி.மு.1400 ல் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்துவிட்டது . மொகஞ்சதாரோவில் ஆரியர்களின் படைஎட்ப்பில் செத்து வீழ்ந்தவர்களின் எலும்புகள் புதைகபடாமாலையே கிடந்ததை புதை பொருள் ஆராய்ச்சியில் பல இடங்களில்  அகழ்ந்து கண்டுப்பிடித்தவர். இவர்கள் அதிரிகளால் வெட்டப்பட்ட இடங்களில் புதைக்கடாமல் உள்ள நிலையிலேயே எலும்பு கூடுகளாக கிடக்கின்றனர்(Hermann Geotz-Five thousand years of Indian Art-p.35) . இந்த வெற்றி ரிக் வேதத்தில் பாடல்களாக பலவற்றில் எழுதப்பட்டுள்ளது. (Rig Veda -II Mandala).

விரத்தாவை கொன்ற இந்திரா எல்லோரையும் பொடி பொடியாக நோருக்கிவிட்டான் . தாசுக்களை கொன்றவன் புஜபுல பராக்கிரமம் செய்தான்.அதன் பிறகு முப்பாது குடம் சோம ரசம் குடித்து ஒரே நேரத்தில் தன தாகம் தீர்த்துகொண்டான் . அங்குள்ள பூர்வ குடிகள் (திராவிடர்கள் ) ரிக்வேதத்தில் கருப்பு மனிதர்களாகவும் மூக்குசப்பினவர்களாகவும் வர்நிக்கப்பட்டுள்ளனர் . இந்திரனிடம் மக்கள் (ஆரியர்கள் ) இப்படி பேசுவதாக ரிக்வேதத்தில் "நாங்கள் எப்பக்கமும் தாசுக்களால் (திராவிடர்கள் ) சூழப்பட்டுள்ளோம் .அவர்கள் பலியிடுவதில்லை .அவர்ளின் சடங்குகள் வித்தியாசமாய் உள்ளன . அவர்கள் மனிதர்கள் இல்லை சத்ருக்களை அழிப்பவனே அவர்களை கொன்றுபோடு .

அநேக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும் உண்மைகள் என்னவென்றால் "கருப்பு நிற திராவிடர்கள் வெள்ளை நிற வெளிநாட்டு ஆரியர்களால் கொல்லப்பட்டனர் . அவர்களுடைய புறம் கோட்டை அல்லது பட்டன நாகரிகம் அழிக்கப்பட்டன .இவர்களில் ஆரியர்களால் கொல்லப்படாதவர்கள் அடிமைகளாக்கபட்டனர். இப்படி உத்தத்தில் ப்டிடிக்கப்பட்ட தாசுக்களை(திராவிடர்களை ) அடிமைகொண்ட செயலே நாளடைவில் இந்தியாவில் காணப்படும் அடிமைத்தலத்திற்கு அடிகோலியது (A.L.Basham -The wonder that was India -Rupa &Co.pub-New Delhi-p.153).

அடிமை கொண்ட ஆரியர்களுக்கும் அடிமையான  திராவிடர்களுக்கும் பொதுவில் நிறத்தில் காணப்பட்ட வேறுப்பாடே இந்தியாவில் உள்ள ஜாதி முறைக்கு அடிப்படியாகும் . இந்தியாவில் அடிமைமுறையில் இருந்து பிறந்ததே ஜாதி .

                                    --------------------இன்ஷா அல்லாஹ் தொடரும்---------------6 comments:

அதிரைக்காரன் said...

அஸ்ஸலாமு அலைக்கும். அப்படியே இந்தப்பதிவையும் ஒரு பார்வை பார்த்துடுங்க.

Adirai Iqbal said...

அலைக்குமுஸ்ஸலாம். கண்டிப்பாக

smart said...
This comment has been removed by a blog administrator.
அர அல said...

weldon

Adirai Iqbal said...

அர அல
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

faizeejamali said...

Superb article precious informations pls keep updating like this

Post a Comment