test

Saturday, February 25, 2012

செச்சன்யா : ஜோசப் ஸ்டாலின் =ஹிட்லர் :பகுதி 1

                          -- மு . குலாம் முகம்மது ( ஆசிரியர் : வைகறை வெளிச்சம்  )

உலகில் அதிகமான இனப்படுகொலைக்கு ஆளானவர்கள் யார் தெரியுமா?

அனைவருக்கும் சட்டென்று வரும் செய்தி யூதர்கள் என்பதே . 1940 - 1945 வருடங்களில் 1,85,403 யூதர்கள் கொல்லப்பட்டதாக யூதர்கள் சொல்கிறார்கள் (இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை   -ஹேரி ஸ்டைன்).


ஆனால் உண்மையில் அதே காலக்கட்டத்தில்(1940-1945) மாபெரும் இனப்படுகொலை நடந்த இடம் செச்சன்யா . இது ரஷ்யாவில் உள்ள ஒரு பகுதி . இங்கு அழிவுக்குள்ளானவர்கள்  இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் .அழிவை ஏற்படுத்தியவர்கள் ஜோசப் ஸ்டாலின் என்பவரை தலைவராக கொண்டிருந்த ரஷ்யர்கள் அல்லது பொதுவுடைமை தத்துவம் பேசுபவர்கள் . பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 இலட்சமாகும் . கம்யூனிஸ்டுகளின் கணக்கின் படி 4,78,479 ஆகும்.
                             source: Radiance News Week 11th Feb ௨௦௦௭


இத்தனை இலட்சம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட செய்தியை , இரும்புத்திரை போட்டு மூடிவிட்டார்கள் ரஷ்யர்கள் . இந்த மாபெரும் இனச்சுத்திகரிப்பு அல்லது இனப்படுகொலை நடந்த நாள் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 . இதை உலக செச்சன்யா நாள் ( World Chechn Day)  என அழைக்கின்றார்கள்.

செச்சன்யாவில்  அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது ஜோசப் ஸ்டாலின் என்ற ரஷ்ய கம்யூனிஸ தலைவர் . திடீரென ஒரு பழியை சுமத்தினார் . அது முஸ்லிம்கள் இரண்டாவது உலக போரில் ரஷ்யாவை முற்றுகை இட வந்த ஹிட்லரின் நாசிப்படைகளுக்கு உதவி செய்தார்கள் என்பதே ஆகும் . ஆனால் உண்மையில் முஸ்லிம்கள் அப்படி எதையும் செய்யவில்லை . மாறாக , அவர்கள் இரண்டாம் உலகப்போரில் ரஷ்யப்படையுடன் இணைந்து ஹிட்லரை விரட்டி அடிக்க உதவி செய்தார்கள் .உண்மையில் ஜோசப் ஸ்டாலினுடைய கோபம் செச்சன்யா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் ஈமானில் உறுதியுடன் இருந்தார்கள் என்பதே . அவர்கள எல்லா நிலையிலும் ஸ்டாலின் போதித்த இறை மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள் என்பதுதான்.

1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரஷ்யாவினுடைய செம்படை செச்சன்யா பகுதிக்கு வந்து பல்வேறு பகுதிகளில் பரவி பறந்து நின்றது . செம்படை நாள் என்று அழைக்கப்படும் பிப்ரவரி 23 ஆம் நாள் மூளை முடுக்குகளில் இருந்த முஸ்லிம்களை எல்லாம் ஓர் இடத்தில் (Local soviet building) கூட்டத்தொடங்கினர்.
எல்லா முஸ்லிம்களும் தங்களுக்கு என்ன நடக்கபோகிறது என்பதை தெரிந்திராமல் அப்பாவிகளாய் செம்படையினர் கூட சொன்ன இடத்தில் கூடினர் .

அன்று செம்படையினர் தங்களது நாளை கொண்டாடப்போகின்றனர் , அதனை நாம் கண்டு கழிக்கப்போகின்றோம்  என்று நினைத்தே முஸ்லிம்கள் அங்கெ கூடினார்கள் . ஆனால் செம்படையினர் அங்கு தங்கள் நாளை கொண்டாடிடவில்லை . மாறாக ரஷ்யாவின் அதிகாரிகள் (The Decree of The Presidum of the Supreme Soviet) தந்த தீர்ப்பை படித்தார்கள் . அந்த தீர்ப்பில் , செச்சன்யாவை சேர்ந்த முஸ்லிம்களும் ( மக்கள் அனைவரும் ) இங்குஷ் என்ற பகுதியில் வாழ்ந்த மக்களும் ( முஸ்லிம்கள்) நாடு கடத்தப்பட வேண்டும்.காரணம் அவர்கள் ரஷ்யாவை முற்றுகை இட வந்த ஜெர்மானிய எதிரிகளுக்கு உதவி செய்தார்கள் எனக் குறிப்பிடபட்டிருந்தது .

இப்படித்தான் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் பல்வேறு பழிகள் சுமத்தப்பட்டு அரச தீவிரவாதங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் .இன்று அமெரிக்காவின் பெரிய முயற்சியின் கீழ் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் . அன்று ரஷ்யா முஸ்லிம்களை துரோகிகள் என்று தூற்றி நாடு கடத்தியது .

இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்று சொன்னால் பிப்ரவரி 23 , 1944 ம் ஆண்டு முஸ்லிம்களை துரோகிகள் என்று அழைத்த ரஷ்யாதான் , அதே மக்களை ஜெர்மானிய படைக்கு எதிராக ரஷ்ய ராணுவ படையோடு இணைந்து போராடினார்கள் என போற்றி , பாராட்டி பட்டங்களையும் பல பதக்கங்களையும் வழங்கியது. உண்மையைச் சொன்னால் சோவியத் ராணுவப்படை வீரர்கள் பெற்ற பதக்கங்களை விட , செச்சன்யா பகுதி மக்கள் வாங்கிய பதக்கங்கள் அதிகம்.
                                                                  source: World Chechenya Day Commemoration of Chechn        
                                                                              Holocaust by Dr.Habeeb Haris in Radiance

ஆனால் செச்சன்யா பகுதியிலிருந்து ரஷ்யாவின் sembadaiyodu  இணைந்து போராடிய இராணுவ வீரர்களை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை எல்லோரையும் நாடு கடத்து என்றார்கள் .

எல்லா மக்களையும் துப்பாக்கி முனையில் சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றினார்கள் . அந்த சரக்கு ரயில் பெட்டிகளில் ஆடு மாடுகள் கூட பயணம் செய்ய மாட்டா . ரயில் பெட்டிகளில் ஏற மறுத்தவர்களை அங்கேயே சுட்டு பிணமாக்கினார்கள். வோயோதிகர்கள் , நோய்வாய்ப்பட்டவர்கள் , பெண்கள் குழந்தைகள் என யாரையெல்லாம் எளிதாக ரயில் பெட்டிகளில் ஏற்ற முடியவில்லையோ அவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினார்கள் . இதற்கு பட்டவர்த்தமான அத்தாட்சியும் உண்டு . ஹைபக் (Haibakh ) என்ற மலையடிவாரத்தில் வாழ்ந்த பெண்கள் , குழந்தைகள் உட்பட சுமார் 700 பேர் அதே இடத்திலேயே கொலை செய்யப்பட்டார்கள் . இதற்கான ஆவணங்கள் இன்றைக்கும் இருக்கின்றன .

இதே போல் செச்சன்யாவின் பல மலையடிவாரங்களிலும் முஸ்லிம்கள் கொளுத்தப்பட்டார்கள் . அன்றைக்கு இருந்த அத்தாட்சிகள் அனைத்தையும் ரஷ்ய அரசு அழிக்க முயன்றாலும் இது குறித்த ஆவணங்கள் இன்றும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன . அவற்றில் ஒன்றுதான் 1944 பிப்ரவரி 29 ஆம் நாள் ரஷ்யாவின் ரகசிய படியான NKVD இன் தலைவர் 'லாவரண்டி பெரியா (Lavrenti Beria)  என்பவர் ரஷ்யாவின் சர்வதிகாரி ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் . அதில் இப்படி குறிப்பிட்டிருந்தார் :

" செச்சன்யாவில் வாழும் மக்கள் , இங்குள்ள பகுதியில் வாழும் மக்கள் ஆகியோர்களை நாம் நாடு கடத்தி , மறு குடியேற்றம் செய்தது குறித்தது இந்த கடிதம் . இந்த மறு குடியேற்றம் பிப்ரவரி 23 ஆம் நாள் தொடங்கியது . எல்லா மக்களையும் வெளியேற்றிவிட்டோம் என்றாலும் , மலைப்பகுதியில் மிக உயரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களை அப்படியே விட்டுவிட்டோம் . மொத்தத்தில் 4,78,479 பேரை நாம் மொத்தமாக சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றி அனுப்பினோம் . இதில் இங்குஷ் பகுதியை சேர்ந்த 91,250 பெரும் அடங்குவர் . 180 சிறப்பு ரயில்களில் இவர்களை அனுப்பினோம் . இதில் 159 ரயில்கள் எங்கே செல்ல வேண்டும் என்பது பற்றி தெளிவான ஆணையையும் நாம் தரவில்லை . ஆகவே இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் நமக்கு வசதியான இடங்களில் இறக்கிவிடப்படலாம் .  
                                          source: Secret letter written to Stalin by Cheif of the NKVD 


சரக்கு ரயில் பெட்டிகளில் முஸ்லிம்களை ஏற்றி அந்த பெட்டிகளை சீல்  வைத்துவிட்டார்கள் . ஒரு சரக்கு ரயில் பெட்டியில் 50 பேர்தான் நிற்கமுடியும் என்றால் , அதில் 100 முதல் 150 பேர்களை ஏற்றி அடைத்தார்கள் . பெண்கள் குழந்தைகள் , வயோதிகர்கள் என்று பெட்டிக்குள் ஏறமுடியும் என்ற நிலையிலுள்ள யாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை .

அவர்களுக்கு உணவு என்று எதையும் ஏற்பாடு செயவில்லை 'டை பாய்டு ' என்ற நோய் அனைவரையும் தொற்றிக்கொண்டது . நெருக்கம் பட்டினி , நோய் இவற்றால் அந்த முஸ்லிம்கள் துடியாய் துடித்தார்கள் . பலர் பட்டிக்குலேயே மரணித்தார்கள் . ஒவ்வொரு நிறுத்தங்களிலும் பெதஈகளின் முத்திரையை சீலை உடைத்து இறந்தவர்களை எடுத்து வெளியே வீசினார்கள் .

இந்த ரயில் பெட்டி பயணம் செய்த இடங்களில் வாழ்ந்த சாதாரண மக்களிடமெல்லாம் ஒரு போய் பிரச்சாரத்தை அப்போதே செய்துவைத்தார்கள் . அது, " இந்த பெட்டிகளில் அடைத்து வெளிஎற்றப்படுவோர் அனைவரும் ரஷ்யாவின் எதிரியான ஜெர்மானிய படைகளுக்கு உதவி செய்தவர்கள் , அதனால்தான் தண்டிக்கபடுகிரார்கள் " என்பதாகும் . இதனால் வழி ந்டுகிலும் வாழ்ந்த மக்கள் யாரும் இவர்கள் பெட்டிகளிருந்து வீசிய முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யவும் முன்வரவில்லை .

தொடர்ந்து பயணம் செய்தவர்கள் எங்கேனும் இந்த ரயில் நிற்கும் . தங்களை இறக்கிவிடுவார்கள் . அங்கெ இறந்தவர்களின் சடலங்களை எடுத்து அடக்கம் செய்யலாம் என எண்ணி பிணங்களை தங்களுடனேய வைத்துக்கொள்ள முயற்ச்சிகளை மேற்கொண்டார்கள் . அதுவும் முடியவில்லை . எங்கேயும் அவர்களை இறக்கிவிடுவதாக தெரியவில்லை . இதனால் ரயில் நிற்கும் இடங்களில் அவர்களே பிணங்களை இறக்கிடவும் செய்தார்கள் . இதனால் இஸ்லாமிய முறைப்படி இறந்தவர்களை எடுத்து அடக்குவதற்கு செய்த முயற்ச்சிகள் அத்தனையும் தோற்றுப்போயின .

பல வாரங்கள் இப்படியே பயணித்த பிறகு அந்த முஸ்லிம்கள் இன்றைக்கு கஜகஸ்தான் , உஸ்பெக்கிஸ்தான் . கிரக்கிஸ்தான் , சைபீரியன் டிஜான் என்றழைக்கபட கூடிய இடங்களில் இறக்கிவிடப்பட்டார்கள் .பயணத்தின் முடிவில் மிகச் சிலரே உயிர் வாழ்ந்தனர் . இவர்களுக்கும் உணவு உறைவிடம் ஏற்பாடு செய்து தரப்படவில்லை . இதனால் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரு சேர இறந்தார்கள் . அவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்திடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள் .

                                             இன்ஷாஅல்லாஹ் அடுத்த பகுதியில் நிறைவுறும்      



6 comments:

ஹைதர் அலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

சகோதரர் குலாம் சமூகத்துக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தவர்

பகிர்வுக்கு நன்றி சகோ

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
அர அல said...

மறைக்கப்பட்ட வரலாறுகள்,படிக்கும்போது உண்மை தெரிகிறது.நன்றி சகோ

Post a Comment