test

Saturday, January 7, 2012

குஜராத்:வாக்குமூலம் சேகரிக்க எஸ்.ஐ.டிக்கு விருப்பமில்லை – சஞ்சீவ் பட்

sanjeev bhatt






அஹ்மதாபாத்:குஜராத் இனப் படுகொலையை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்க் குழு(எஸ்.ஐ.டி) வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் வாக்குமூலம் சேகரிக்க ஆர்வம் காட்டவில்லை என சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.



2002 பிப்ரவரி 27-ஆம் தேதி குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அழைத்த சர்ச்சைக்குரிய கூட்டம் தொடர்பாக முக்கிய சாட்சிகளிடம் விசாரிக்க எஸ்.ஐ.டி ஆர்வம் காட்டவில்லை என சஞ்சீவ் பட் எஸ்.ஐ.டியின் தலைவர் ஆர்.கே.ராகவனுக்கு எழுதிய கடிதத்தில் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இனப் படுகொலைக்கு பலியான முன்னாள் காங்கிரஸ் எம்.பி.இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி மோடியின் மீது 2006-ஆம் ஆண்டு அளித்த புகாரின் முக்கிய பகுதிகளை எஸ்.ஐ.டி வேண்டுமென்றே புறக்கணிக்கிறது என பட் குற்றம் சாட்டுகிறார்.


‘எனது வாக்குமூலத்தை பதிவுச்செய்யும் வேளையில் நான் வழக்கின் முக்கிய சாட்சிகளின் பட்டியலை எஸ்.ஐ.டிக்கு அளித்திருந்தேன்’ என பட் கூறுகிறார்.


பலம் படைத்த பிரமுகர்களான குற்றவாளிகளை பாதுகாத்து வரும் குஜராத் அரசின் நிர்பந்தங்களில் இருந்தும், ஆசை ஊட்டலில் இருந்தும் விசாரணை அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என பட் எஸ்.ஐ.டிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment