test

Monday, January 16, 2012

அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்?                                                                                                      -  

  ஒரு பரவலான கருத்து நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது அது  அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முஸ்லிம் நாடுளின் மீது  போர்தொடுப்பது  எண்ணெய் வளத்திற்க்காகத்தான் என்பதாகும் .


ஆனால் உண்மை  அப்படி அல்ல . வரலாறு அதை வேறு விதமாக நமக்கு கூறுகிறது . எண்ணெய் வளம் மட்டுமே காரணம் என்றால் சிலுவை போர்களே தேவைப்பட்டு இருக்காது .உண்மை  என்னவென்றால் எண்ணெய்  வளங்களை  அவர்கள் கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான  போர்களை முன்னெடுத்து செல்வதற்கு அவர்களுக்கு பொருளாதார பலம் கிடைக்கிறது .


பின்னர் ஏன்தான் அவர்கள் முஸ்லிம் நாடுகளின் மீது தொடர் போரை நிகழ்த்துகிறார்கள் ?அதுசோசலிசம் என்னும் பொதுவுடைமை சித்தாந்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் மக்கள் ஆதரவை பெருமளவில் பெற்றது  . ரஷ்யாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் கி.பி 1917  ஆம் ஆண்டு அதன் அரசு அமைக்கப்பட்டபோது  சர்வதேச அரங்கில் அது ஆதிக்கம் பெற்றது .
இந்த அரசுதான் பிற்காலத்தில் சோவியத் யூனியன் என்றழைக்கப்பட்டது .சோவியத் யூனியன் வீழ்ச்சி அடையும் வரை அது சர்வதேச அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தது . சோவியத் யூனியன் வீழ்ச்சியுற்றதும் மக்கள் பொது உடமை சித்தாந்தங்களை புறக்கணிக்க ஆரம்பித்தனர் . இதன் விளைவாக முதலாளித்துவ சித்தாந்தம் தொடர்ந்து சர்வதேச அளவில் கொள்கைகளையும் முடிவுகளையும் மேற்கொள்ள போட்டியாக வேறு எந்த சித்தாந்தமும் இல்லை என ஆயிற்று . முதலாளித்துவ சித்தாந்தத்தின் தலைவனாக அமெரிக்க இருக்கிறது .அது ஒவ்வொரு நாட்டிலும் தனது கொள்கைகளை திணிக்கிறது . அல்லது சில சாதிகளின்  மூலம் அரங்கேற்றுகிறது .சோஷலிச கொள்கைகளில் வாழ்ந்த மக்கள் அது வீழ்ச்சியுற்றதும் அதனை முற்றிலுமாக கைவிட்டு வேறு பாதைக்கு திரும்பினர் . ஆனால் முஸ்லிம் நாடுகளில் கிலாபத்துக்கு கீழ் வாழ்ந்த முஸ்லிம்கள் கிலாபத் வீழ்ச்சியுற்றாலும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக இன்னும் தொடர்து கொண்டுதான்  இருக்கிறார்கள் .முதலாளித்துவ கோட்பாட்டை உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் தவிர வேறு எங்கும் அவ்வளவு எதிர்ப்புகள் காணப்படவில்லை . ஏனென்றால் முதலாளித்துவ கோட்பாட்டை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்டதை பின்பற்றி மேற்கு ஐரோப்பாவும் அதன் வழி நடக்கும் கனடா ,ஆஸ்த்ரேலியா , நியுசிலாந்து மற்றும் ரஷ்யாவும் கிழக்கு திசை நாடுகள் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட நாடுகள்,   பொது உடமை கோட்பாட்டை துறந்துவிட்டு  முதலாளித்துவ கோட்பாட்டை தங்களது கொள்கையாக மாற்றிகொண்ட நாடுகளும் அடங்கும் . இந்தநாடுகள் முதலாளித்துவ கோட்பாட்டை எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுகொண்டார்கள் . மேலும் லத்தீன் அமெரிக்கா தூரக்கிழக்கு நாடுகள் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி இன நாடுகள் ஆகியவைகளுக்கு எந்த வித  சித்தாந்தமும் கிடையாது . முதலாளித்துவ கோட்பாட்டிற்கு அங்கு எந்த எதிர்ப்பும் வருவதற்கு வாய்ப்பே இல்லை .ஆகவே சித்தாந்தே ரீதியாக இஸ்லாமிய சமூகமே முதலாளித்துவ கோட்பாட்டை ஏற்றுகொள்ளாத நாடுகளாக உள்ளன .இந்த சமூகம் தன் வசம் இஸ்லாம் என்ற உயரிய சித்தாந்தத்தை வைத்திருக்கிறது .நாடோடி கூடங்களாக சரித்திரத்தின் மூலையில் நின்று கொண்டிருந்த அரபு இன மக்களை இஸ்லாம் எவ்வாறு பண்பு நிறைந்தவர்களாகவும் , தனித்தன்மை உடைய சமூகமாகவும் , உலகிற்கு சத்திய ஒளியை எடுத்துசென்றவர்களாகவும் உருவாக்கியதை என்பதை முதலாளித்துவ வாதிகள் நன்கு அறிவார்கள் . அந்த முஸ்லிம்களின் தலைமைத்துவம்  பலநூற்றாண்டுகள் கடந்து நின்றது . அவர்களது ஆட்சிகால்த்திலதான் நீதியும்  நேர்மையும் , பாதுகாப்பும் நல்ல பண்புகளும் செழித்து வளர்ந்தது .எனவே முஸ்லிம் சமூகம் மறுமலர்ச்சி பெற்று இந்த  உலகில் மீண்டும் தலைமைத்துவம்  பெற்றுவிடும்  என அஞ்சியே முதலாளித்துவ வாதிகள் முஸ்லிம் நாடுகளை குறி வைத்து இயங்கி கொண்டு  இருக்கிறார்கள் .மேலும் முஸ்லிம்களின் மீது காபிர்கள் ஆதிக்கம் செலுத்துவதை இஸ்லாம் தடுக்கிறது                        " அல்லாஹ் காபிர்கள் விசுவாசிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டான் . (4 :141 )எனவே  முஸ்லிம்களை முதலாளித்துவ கோட்பாட்டை ஏற்க செய்ய  வேண்டும் எனும் நோக்கத்திலேயே அவர்கள் முஸ்லிம் நாடுகளை குறிவைத்து தாக்குகிறார்கள் .

11 comments:

Anonymous said...

haa haa haa
american occupy middle east for oil only .Once the oil is over they will leave them to kill themselves.becasuse of american they dont fight each other.see iraq nigeria,begging somalia, afganistan....
Once oil is finished islam is finished.so islam=oil

Adirai Iqbal said...

முதலில் நீங்கள் நுனிப்புல் மேயாதீர்கள் . கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளேன் எண்ணெய் வளம்தான் காரணமென்றால் சிலுவை போர்களே தேவைப்பட்டிருக்காது

s.jaffer.khan said...

Salam bro! Sariyaga sonnirgal
america' & co'vuku islatin methum athan valarchin methum ulla kalpunarvinal'than muslim nadukalin methu thakutal nadathukinranar

ஹைதர் அலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பகிர்வுக்கு நன்றி சகோதரரே

ஹைதர் அலி said...

தமிழ் மண ஓட்டு போட்டு இருக்கிறேன் சகோ
முடிந்தால் நம்ம ஏரியாவுக்கு வாருங்கள்

இன்றைய பதிவு
காதியானிகள்(அஹமதியாக்கள்) யார்? புத்தக அறிமுகம்

http://valaiyukam.blogspot.com/2012/01/blog-post_17.html

வலிபோக்கன் said...

அட்டா.என்னே ஆராய்ச்சி,அமெரிக்காரன் செத்தான்

சிராஜ் said...

சலாம் அதிரை இக்பால்,

கட்டுரை பற்றிய கருத்திற்கு முன் ஒரு விஷயம். தயவு செய்து அனானிகளுக்கு பதில் சொல்லாதீர்கள். இந்த கோமாளிகளுக்கு மட்டும் பின்னூட்ட மட்டுறுத்தல் வச்சுகங்க.

சிராஜ் said...

சகோ இக்பால்,

வர்த்தக நலன் மற்றும் சித்தாந்தம் சார்ந்த போர் என்ற உங்களின் பார்வை சரியானதாகவே எனக்குப் படுகிறது. நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்.

Adirai Iqbal said...

அலைக்குமுஸ்ஸலாம் சகோ ஹைதர் அலி

Adirai Iqbal said...

// சிராஜ் said...
சலாம் அதிரை இக்பால்,

கட்டுரை பற்றிய கருத்திற்கு முன் ஒரு விஷயம். தயவு செய்து அனானிகளுக்கு பதில் சொல்லாதீர்கள். இந்த கோமாளிகளுக்கு மட்டும் பின்னூட்ட மட்டுறுத்தல் வச்சுகங்க.//

அலைக்குமுஸ்ஸலாம் சகோ சிராஜ்
தங்கள் அறிவுரைக்கு நன்றி

Riswan Adam said...

அருமையான பதிவூ.. நீங்கள் கூறியது சரியே வெறுமனே எண்ணை வளங்கள் மட்டும் இவர்களின் நோக்கமாக இருந்திருந்தால் சிலுவை யூத்தங்களின் தேவை இருந்திருக்கமாட்டாது.. வரலாற்றை சற்று படித்ததன் வாயிலாக என் கருத்து "வரலாற்று ரீதியாக முஸ்லீம்களை கிறுஸ்தவர்கள் வெற்றிகொண்டனர் என்ற வரலாற்று பதிவை நோக்கியே இந்த யூத்தம் நடக்கிறத.."

Post a Comment