test

Saturday, January 21, 2012

பங்களாதேஷ் இராணுவ சதிப் புரட்சி : ஹஸீனாவின் நாடகமா ?
  ஷேக் ஹஸீனா அரசை கவிழ்க்க முயன்றதாக தெரிவித்து சில உயர் இராணுவ அதிகாரிகளை ஷேக் ஹஸீனா அரசு கைது செய்துள்ளது.இராணுவத்தில் பணியாற்றும் தீவிர சிந்தனையை கொண்ட அதிகாரிகளின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் மஸ்ஊத் ரஸாக் டாக்காவில் தெரிவித்துள்ளார். இதனை எதிர் தரப்பினர் ஆளும் தரப்பின் நாடகம் என்று தெரிவித்துள்ளனர் .

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு இராணுவப்புரட்சி முயற்சிக்கு பிறகு இராணுவத்திற்கும், ஷேக் ஹஸீனா அரசுக்கும் இடையேயான கருத்துவேறுபாடு தீவிரமடைந்துள்ளதை இச்சம்பவம் சுட்டிக்காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதுத்தொடர்பாக இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ள தகவலில் மிகவும் மோசமான ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற சில தீவிர இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உள்ளனர். நாட்டின் வெளியே புலம் பெயர்ந்து வாழும் சில பங்களாதேஷைச் நபர்களின் தலைமையில் இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் ஜமாஅதே இஸ்லாமியின் அரசியல் தளத்தில் நீண்டகால நடவடிக்கைகள் கொண்டிருந்தபோதும் அதன் தாகத்தின் வீச்சில் பாரிய ஏற்றதாழ்வுகள் ஏற்பட்டுள்ளது . தற்போது நாட்டை ஆளும் ஹஸீனா ஆளும் தரப்பு பங்களாதேஷ் ஜமாஅதே இஸ்லாமியின் முக்கிய மூத்த உறுப்பினர்களை தூக்கு மேடை வரை கொண்டு சென்றுள்ளது.  இந்த  நடவடிக்கை மக்கள் மத்தியில் ஹஸீனாவுக்கு வெறுப்பை சம்பாதித்துள்ளது கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பங்களாதேஷ் நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து ஆதரவை பெற்றுவரும் அமைப்பாக ஹிஸ்புத் தஹ்ரீர் இயக்கம் பார்க்கப்படுகிறது பங்களாதேஷ் ஜமாஅதே இஸ்லாமி நீண்டகால வரலாற்றை கொண்டிருந்தாலும் அரசியல் தளத்தில் அதன் செல்வாக்கை ஒடுக்க தற்போதைய ஆளும்தரப்பு தவறவில்லை அதன் உறுப்பினர்கள் பலருக்கு பல்வேறு குற்றசாட்டுக்களின் பெயரில் சிறைவைப்பு தொடக்கம் மரணதண்டனை வரை என்ற ஒடுக்கு முறையை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் மறுபுறத்தில் மற்றுமொரு இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரீர் அண்மைக்காலமாக பங்களாதேஷ் நாட்டில் செல்வாக்கு பெற்று வருகிறது . அதனால் ஆளும்தரப்பு அச்சம் கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். இந்த நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்த இராணுவ சதிப் புரட்சி முயற்சியில் நாடு கடத்தப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரீர் உறுபினர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை ஹஸீனா அரசின் இராணுவத்திக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்துள்ள ஹிஸ்புத் தஹ்ரீர். ஹஸீனாவை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து ஆட்சியில் அமர்த்தியுள்ளதாவும் பாகிஸ்தான் , பங்களாதேஷ் , இந்தோனேசியா மலேசியா ஆகிய நாடுகளை கொண்ட பிராந்தியத்தில் இஸ்லாமிய கிலாபா ஏற்படுவதை தடுக்கும் நோக்கம் கருதி அமெரிக்கா ஹஸீனாவை பயன்படுத்துவதாகவும் குற்றம் சும்மதியுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஷேக் ஹஸீனா வெற்றி பெற்று பிரதமரானவுடன் நடந்த இராணுவ முறுகலில் போது ஷேக் ஹஸீனா அரசு இந்தியாவின் உதவியுடன் 74 இராணுவ வீரர்களை கொலை செய்யதுள்ளது என்ற பல மான விமர்சனம்  உண்டு .
நன்றி : www.ourummah.org

1 comment:

சிராஜ் said...

சலாம் சகோ அதிரை இக்பால்,

நம் மக்கள் சில காலங்கள் வழி தவறி என்னென்னவோ கொள்கைகளை பின்பற்றி, இப்பொழுதான் சத்திய இஸ்லாத்தின் பக்கம் திரும்ப ஆரம்பித்து உள்ளார்கள். இனி இஸ்லாமிய தேசங்கள் அனைத்திலும் இஸ்லாமிய புரட்சியை நாம் எதிர்பார்க்கலாம். 20 வருடங்களில் மிகப் பெரிய மாற்றங்கள் நிச்சயம் சகோ.

Post a Comment