
துருக்கியை முழு சிவில் சுதந்திர முள்ள தேசமாக மாற்றும் போராட்டத்தில் மூன்றாவது தடவையாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ள துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் தலைமயிலான அரசு தொடர்ந்தும் துருக்கியின் அரசாங்கத்தின் மீதான அதிகாரம் செலுத்தும் நிலையில் இருந்து இராணுவத்தை அதன் சரியான இடத்துக்கு கொண்டு செல்லும் கட்டம் கட்டமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த அரசாங்கத்தின் நகர்வுகளின் விளைவாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் துருக்கியின் அதிமுக்கிய நான்கு இராணுவ தளபதிகள் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர் . அவர்கள் தாமாக இராஜினாமா செய்தார்கள் என்பதை விடவும் துருக்கி அரசாங்கம் அவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது என்பதுதான் சரியானது என்று துருக்கிய பத்திரிகைகள் தெரிவித்தன
இறுதி கிலாபத் என்று வர்ணிக்கப்படும் உஸ்மானியா சாம்ராஜ்யத்தின் கலீபா துருக்கியின் அன்றைய இராணுவ தளபதியாக இருந்த முஸ்தபா கமால் அதாதுர்க் என்பவனால் பதவி நீக்கப்பட்டு, கிலாபத்தும் உலகில் இருந்து 1924.03.03 அன்று அழிக்கப்பட்டது.
துருக்கியில் மீண்டும் இஸ்லாம் எழுச்சி பெறாதிருக்க மேற்கு எஜமான்களின் ஆலோசனைப்படி அன்றில் இருந்து துருக்கியில் இராணுவத்தில் கையில் கூடிய அதிகாரம் வழங்கும் சட்ட நடைமுறை இருந்து வருகின்றது. இந்த நிலையில் துருக்கி தற்போதைய இஸ்லாமிய பின்னணியை கொண்ட அரசாங்கத்துக்கும் , இராணுவத்தின் ஒரு பிரிவினருக்கும் இடையில் கடுமையான முறுகல் நிலை தொடர்கின்றது.

இது இராணுவத்திற்கும் அரசாங்கதிற்கும் இடையிலான முறுகலை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் பெரும் மக்கள் ஆதரவை பெற்று மூன்றாவது தடவையாகவும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ஆளும் தரப்பு இராணுவத்தின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக பிடிங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது .
நன்றி : ourummah.org