test

Tuesday, January 3, 2012

இந்திய விடுதலை போரில் பத்வாக்கள்



 ஆங்கிலேயர்கள் 1609  களில் கிழக்கிந்திய கம்பெனி என்ற கம்பெனியின் பெயரால் இந்தியாவுக்குள் நுழைந்தனர் .



அதிலிருந்து மெல்ல மெல்ல ஆட்சியில் ஊடுருவினார்கள் . இந்த பேராபத்தை உணர்ந்த மார்க்க அறிஞர் திப்புசுல்தான் ஆண்க்லேயர்களை எதிர்த்தார் .

திப்பு சுல்த்தான் அவர்கள் மே 4 ,1799 இல் வீர மரணத்தை தழுவினார்கள் ..

திப்புசுல்தான் திருக்குர் ஆணைக்கற்றுத்தேர்ந்தவர் . அதே போல் அந்தக்காலத்தில் இந்திய பெருங்கண்டத்தில் வாழ்ந்த மார்க்க மேதைகளில் தலை சிறந்தவர் ஷா வலியுல்லாஹ் திஹ்லவி அவர்கள் ஆவார்கள் .

1942 களில் அவர்கள் இந்தியாவில் நிலவி இருந்த குரூரம் நிறைந்த சமுதாய சூழல்களை பற்றி எழுதி வந்தார்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்திட வேண்டிய கட்டாயம் பற்றியும் அதில் கலந்துகொள்வது ஜிகாத் என்றும் மக்களுக்கு புரிந்திட வைத்தார் .

இவர்களுடைய எழுத்துக்களை பாமர மக்களும் படித்தவர்களும் மார்க்க தீர்ப்பாக பார்த்தார்கள் .

ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் தங்கி போராடிட வேண்டும் என அவர்கள் எழுதிய எழுத்துக்கள் அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த அனைவரையும் ஒன்றுப்போல் கொதித்தெழ செய்தது . ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஜிகாத்திற்கு கட்டியங் கூறிற்று .

1803 இல் ஆங்கிலேயர்களுக்கு நாடு அடிமை ஆகிவிட்டது என்றும் அவர்களுக்கு எதிராக ஜிகாத் seyvathu மார்க்க கடமை என்றும் முதன் முதலில் பத்வா வழங்கியவர்கள் ஷா அப்துல் அஜீஸ் திஹ்லவி அவர்கள் தாம் .

இப்படி மார்க்க தீர்ப்பை வழங்கிவிட்டு வாளாவிருந்திடவில்லை ஷா அப்துல் அஜீஸ் அவர்கள் . அதற்க்கு களத்தில் என்னென்ன செய்திட வேண்டுமோ அனைத்தையும் செத்தார்கள் .

செய்யித் அகமது ஷஹீத் அவர்களை அமீராக நியமித்து அவர்களை அந்த ஜிகாத்தை மேற்கொண்டு தொடர செய்தார்கள் .

இந்த பத்வா மார்க்க தீர்ப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் பல பகுதிகளை முற்றாக கைப்பற்றி அங்கே இஸ்லாத்தின் அடிப்படையில் வழக்குகளை தீர்த்து வைக்கும் மார்க்க அறிஞர்களை நீதிபதிகளாக நியமித்தார்கள் செய்யத்த் அஹ்மத் ஷஹீத் அவர்கள் .

வேறு சொற்களால் சொன்னால் அந்த பகுதிகளில் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டி அதிலிருந்து கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்தார்கள் செயாத் அஹ்மத் ஷஹீத் அவர்கள் .

செய்யத் அஹ்மத் ஷஹீத் அவர்களையும் அவர்கள் தலைமையில் அணிவகுத்து நின்ற முஜகித்துக்களியும் சமாளிக்க மாட்டாமல் திணறினார்கள் ஆங்கிலேயர்கள் .

உண்மையை சொன்னால் திப்புசுல்தான் ஷஹீத் அவர்களுக்கு பின் ஆங்கிலேயர்கள் கதி கலங்கினார்கள் என்று சொன்னால் செய்யத் அஹ்மத் ஷஹீத் அவர்களுக்கும் அவர்களுக்குப்பின்னால் அணிவகுத்து நின்ற முஜாகிதுகளுக்கும் தான் .

ஷா அப்துல் அஜீஸ் அவர்களின் மார்க்கத்தீர்ப்பின் முக்கிய பகுதியாக கருதப்படுவது ஆங்கிலேயர்களின் ஆட்சி முற்றாக அகற்றப்படும் வரை அவர்களுக்கு எதிராக ஜிகாத் தொடரப்பட வேண்டும் என்பதே .

இதனை பின்பற்றி செய்யத் அஹ்மத் ஷஹீத் அவர்களின் ஜிகாத் -ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போர் -அவர்களின் மரணத்திற்கு பின்னும் தொடர்ந்தது .அவர்கள் 1831 இல் வீர மரணத்தை அடைந்தார்கள் . ஆனால் அவர்களுக்கு பின்னால் அவர்களுடைய தோழர்கள் அந்த ஜிகாத்தை 1857 வரை தொடர்ந்தார்கள் . அதன் பின்னர் 1857 இல் நடைபெற்ற சிப்பாய் கலகம் - அதை தொடர்ந்து நடைப்பெற்ற போர்கள் இவற்றில் இந்த முஜாஹித்கள் கலந்தார்கள் .

ஷா அப்துல் அஜீஸ் அவர்கள் வழங்கிய பத்வா மார்க்க தீர்ப்பு இத்துனை நீண்டதொருபோரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக இடறிவிட்டது .

இந்த மார்க்கத்தீர்ப்பை அப்போது இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த அத்தனை உலமா பெருமக்களும் , வரவேற்றார்கள்

அவர்களில் தலையானவர்கள்  காசினாவுல்லாஹ் பானிபட், ஷாரபியுத்தீன், ஷா அப்துல் காதிர் , ஷா இஸ்மாயில் ஷஹீத் , ஷா முஹம்மத் இஷ்ஷாக் , முப்தி இலாஹி பக்ஸ் ஆகியோராவார்கள் .

இவர்கள் அனைவரும் நாடெங்கிலும் சுற்றிவந்து பிரச்சாரங்களைச் செய்தார்கள் .அந்த பிரச்சாரங்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாத் செய்வது கட்டாயக் கடமை என்பதை வலியுறுத்தினார்கள் .


1857 இல் டெல்லியை ஆங்கிலேயர்கள் அமர்க்களப்படுத்தினார்கள் . அப்போது பல உலமாக்கள் கையெழுத்திட்ட பத்வா ஒன்று வெளியிடப்பட்டது . அப்போது இந்திய முஸ்லிம்களிடையே ஓர் அபார நம்பிக்கை இருந்தது . அது பல உலமாக்கள் இணைந்து வெளியிடும் மார்க்க தீர்ப்பு ஒன்று வெளிவந்தால் அதை அட்டியின்றி அப்படியே நிறைவேற்றிட வேண்டும் . அதில் எந்த வித கருத்து வேறுபாடும் கொண்டிருக்க கூடாது என்பதே .


இந்த பத்வா என்ற மார்க்க தீர்ப்பு பின்வரும் உலமாக்களால் கையெழுத்திட பெற்றிருந்தது . செய்யத் நசீர் ஹுசைன் ,மௌலானா ரஹ்மத்துல்லாஹ் ஹெர்வாவி, முப்தி சதுருத்தீன் , முப்தி இக்ராமுத்தீன் , மௌலானா அப்துல் கரீம் , ஷா ,அப்துல் கனி முஜத்திதி , முப்தி ரஹ்மத் அலீகான், மௌலானா இலாஹிபகஷ்.


டெல்லியை சுற்றி வாழும் முஸ்லிம்களுக்கு ஜிஹாத் பர்லுல் அய்ன் என்றும் ( கட்டாயம் நிறைவேற்றிட வேண்டிய கடமை ) டெல்லிக்கு அப்பால் வாழும் முஸ்லிம்களுக்கு பர்லுல் கிப்பாயா என்றும் இந்த மார்க்க தீர்ப்பு கூறிற்று .


மார்க்க தீர்ப்பில் கையெழுத்திட்ட உலமாக்களின் கண்ணியம் அந்தஸ்து ஆகியவற்றை கருத்தில் கொண்ட முஸ்லிம்கள் ஜிஹாத்தில் கலந்து கொண்டார்கள் . ஆயுதங்களை வாங்கிட தங்கள் உடமைகளை விற்றார்கள் .
பத்வாக்களை வழங்கியதோடு மட்டமல்லாமல் மௌலவிகளும் ஆயுதம் தாங்கி போர்க்களம் புகுந்தனர் .அவ்வாறு போர்க்களம் புகுந்தவர்களில் முக்கியமானவர்கள் , மௌலான லியாக்கத்த் அலீ, மௌலானா அஹ்மத்துல்லாஹ் பக்த்கான் , அசீமுல்லாஹ் கான் ஆகியோராவர் .
இவர்கள் காட்டிய வீரம் ,ஆங்கிலேய எதிர்ப்பு இவற்றை கண்டு ஆங்கிலேயர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .
சிப்பாய் கலகத்தை பற்றி எழுதிய ஹோம்ஸ் என்கின்ற ஆங்கிலேய வரலாற்று வல்லுநர் இப்படி குறிப்பிட்டார்
The most formidable enemy of the British in north India .
 " வட இந்தியாவில் ஆங்கிலேயர்களின் பரம் வைரி"  ( ஆதாரம் : Homes in his History of Sepoy Mutiny in India P: 539 )
 மௌலான அஹ்மத்துல்லாஹ் கான் அவர்களை இதே ஹோம்ஸ் என்பவன் இப்படி பாராட்டினான் பிறிதொரு நூலில் .
" ஒரு பெரும் லட்சியத்தை நோக்கி தன்னுடைய படைகளை நடத்தி சென்றிடும் பராகிரமசாலி போரில் நேர்மை குன்றாமல் நின்றிடும் மாமனிதன்". . அவரை பைசாபாத் மௌலவி என்றே ஆங்கிலேயர்கள் அழைத்தார்கள் .
இப்படி பத்வாக்கள் சிப்பாய் கழகத்தின் பின்னணியிலும் செயல்பட்டன
                                        
நன்றி : வைகறை வெளிச்சம் ( மாத இதழ் )

   

No comments:

Post a Comment