test

Saturday, January 21, 2012

9 / 11 தாக்குதல் மறு ஆய்வு தேவை - அமெரிக்க திரைப்பட நடிகர் சார்லிஷின் கோரிக்கை .

அமெரிக்காவின் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் சார்லிஷீன் . இவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 9 / 11 என அடையாளப்படுத்தப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களின் தகர்ப்பு அமெரிக்க உளவுத்துறையின் உள்ளிருப்பு வேலை என தாம் நம்புவதாகவும் அதனால் 9 / 11 பற்றிய மறு ஆய்வு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கேட்டுக்கொண்டுள்ளார் .


9 / 11 புஷ் அரசாங்கத்தின் கையிருப்பு எனப் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார் . வெறும் அறிக்கை விடுத்துக் கொண்டிராமல் , ஒரு குறும்படம் ஒன்றையும் தயார் செய்துள்ளார் . அதற்க்கு பெயர் " அமெரிக்க அதிபருடன் 20 நிமிடங்கள் " இதை அமெரிக்க மக்கள் அதிகமாக பார்த்தார்கள் பாராட்டினார்கள் .

இந்த உற்சாகத்தால்  ஊட்டம் பெற்ற சார்லிஷீன் வீடியோக்கள் வழி அதிபர் ஒபாமாவிடம் ஒரு மறு ஆய்வுக்கு உத்தரவிடும் படி கேட்டுக்கொண்டுள்ளார் .இந்த படத்தை "you tube " வழியாகவும் பார்க்கலாம் .

" அரசாங்கம் பொய்களை தொடர்ந்து சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருக்க முடியாது . உண்மையைச் சொல்பவர்களின் வாயடைக்க , லஞ்சம் தரப்படுவது  9 / 11 விவகாரத்தில் மக்கள் உண்மையை அறிந்து வருவது அரசை  உலுக்கி இருக்கின்றது என்பதையே காட்டுகின்றது ."

இந்த படத்தை பார்க்க இங்கே click செய்யவும் 

http/www.dc.epaper.com 

நன்றி வைகரி வெளிச்சம் ( மாத இதழ் ,ஆசிரியர் : மு . குலாம் முகமது )

No comments:

Post a Comment